எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ்ப் போராளிகளுக்கு எனது வீர வணக்கம்!

ஏர் தழுவத் தடை நீங்குமென
ஏங்கி இருந்தோம்
தடை மீறி நடத்திவிட
துணிந் திருந்தோம்!

காக்கிச் சட்டை களமிறக்கி 
சட்ட திட்டம் எனப் பேசி
கொக்கிப் பிடி போட்டு விட்டு
எட்டி நின்ன கழகங்களே!

திமில் பிடிக்க வேண்டுமென
தமிழ்ப் படை திரண்டுவிட
திமிர் பிடித்த கூட்டமொன்று
தமிழன் வீரத்தைச் சீண்டியதே!

காட்டுப் பய கூட்டமென
கர்வத்தால் நினைத்தோரை
கட்டுக்கோப்புக் கூட்டத்தால் 
கலங்கடிக்க விட்டோமே!

மின்னைத் துண்டித்தாய்
விண்ணுக்கே மின் கொடுத்தோம்
இணையத்தை துண்டித்தாய் 
குமையியையே முடக்கி விட்டோம்!

அறவழிப் பாதையினால்
அகிலமே பார்க்க வைத்தோம்
மறவழி வம்சமென்று
மாற்றோரும் பேச வைத்தோம்! 

அரியுடன் மோதச் சொல்லி
ஏறுகளைக் கட்டி வைத்தாய்
சீறி நாங்கள் கூடி விட்டோம்
வரும் தடைகளைத் தகர்த்திடுவோம்!

ஒருமுறை விழித்து விட்டோம்
மறுமுறை உறங்கிடோம்
சிறு வஞ்சகம் நினைந்தாலும்
பெரும் படையெனச் சேர்ந்திடுவோம்!

ஜல்லிக்கட்டு எங்கள் முதல் அடியே
சொல்லி அடிப்போம் அதற்கு முடிவில்லையே!

வெற்றி வேல்!  வீர வேல்!

மேலும்

அருமை, வாழ்த்துக்கள் - மு.ரா. 23-Jan-2017 7:01 pm
ஒருமுறைதான் விழித்துக்கொண்டோம் ஒழித்துக்கட்டும் எண்ணங்களை ஒதுக்கிவிடுங்கள்..... இல்லையேல் திரண்டு நிற்கும் தமிழர் படை.....!! சிறப்பான பதிவு. உணர்வுப்பூரமான வாழ்த்துக்கள் .......!!! 23-Jan-2017 1:55 am

பொங்கியெழும் புத்துணர்வில்
புன்னகையே பூச்செண்டாய்
கடந்து சென்ற ஆண்டினையே
கரம் கொடுத்து அனுப்பிடுவோம்!

ஓங்கி நிற்கும் நம்பிக்கையில்
கண்கள் நிரம்பிய கனவுடனே
பிறந்துவிட்ட புத்தாண்டை
வாழ்த்தி நாமும் வரவேற்போம்!

Wish you very happy new year 2015!!!!

மேலும்

நல்ல புத்தாண்டு வரவேற்பு ..... சென்றதற்கும் கரம் கொடுத்து , வருவதற்கும் அழகிய எண்ணமுடன் வரவேற்பு . வாழ்த்துக்கள் ராஜி 08-Jan-2015 7:58 am
ஆமாம்ங்க! மீண்டும் தொடர முயற்சிக்கறேன்; உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றிங்க! ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 07-Jan-2015 9:20 pm
ஹ ஹா... ஆனால் 2014 கொடுத்த பாடங்கள்/நினைவுகளும் தங்கட்டும்!! ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே! 07-Jan-2015 9:19 pm
மிக்க நன்றிங்க! ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 07-Jan-2015 9:18 pm


மேலும்

மிக்க நன்றி தோழமையே!!! 20-Jul-2014 2:13 pm
மணக்கும் மலர்ச்சரம் ரசித்தேன் வாழ்க வளமுடன் 20-Jul-2014 2:12 pm
ஹ ஹா... மிக்க நன்றிங்க! 19-Jul-2014 7:38 pm
நல் கவி,ராகத்துடன் வாசிப்பு, கலக்குறீங்க போங்க........ அருமை ராஜி......வாழ்த்துகள்ங்க................. 19-Jul-2014 6:21 pm

பன்னிரு மாதங்கள்
பல் வகைக் கோலங்கள்
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
விஜய வருடம் முடிந்து
ஜய வருடம் பிறந்து விட்டது!

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

மேலும்


மேலே