எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" எல்லா விதிகளுக்கும் எஸ் ஆனவன் "


என் முதல் கவிதைத் தொகுதி இந்த வருட சென்னை புத்தக காட்சியில்....

பகிர்வதில் மகிழ்கிறேன் .
நன்றி எழுத்து குழுமம் , அபி / அகன் சார் , கிருஷ்ணதேவ் , சுசி , சரவணா , ஜின்னா,குமரேசன் , சர்நா , சந்தோஷ் , கலை , நிலா , 
கார்த்திகா , மகி , மேகலை ,கிருத்திகா,கௌதமி மற்றும் எல்லா நண்பர்களுக்கும் , உறுப்பினர்களுக்கும்.

நேசங்களுடன் / ராம் வசந்த் மேலும்

அருமையான விஷயம்... பல நாள் நான் தங்களிடம் சொன்னது... இது இப்போது நிறைவேற போகிறது... மிக்க மகிழ்ச்சி நண்பா... நான் எதுவுமே தங்களுக்கு செய்ய வில்லை இருப்பினும் இந்த சிறுவனையும் (என் பெயரை) மறக்காமல் சொன்னதற்கு மிக்க நன்றி நண்பரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... இன்னும் சிகரம் தொடுவீர்கள்... 30-Nov-2015 3:03 am
ராம் வசந்த், உங்களுக்கு ஆலோசனை சொல்ல அனுபவசாலிகள் நிறையப் பேர் உங்களைச் சுற்றி இருப்பார்கள். இருந்தாலும், என் மனதில் படுவதையும் சொல்ல விரும்புகிறேன்: தெரிந்தவர் ஒருவர் மூலம் தமிழக் நூலக ஆணைக் குழுவில் யாரையாவது பிடித்துத்,தமிழக அரசு நூலகங்கள் அனைத்திலும் உங்கள் நூல்கள் இருக்கும்படி வில்லுங்கள். முக்கியமான தமிழகக் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகளிலும் உங்கள் நூற்கள் இருக்கும்படி இலவசமாக அளியுங்கள். புகழ் பெற்ற தமிழக எழுத்தாளர்கள்,கவிஞர்களுக்கும் இலவசமாக அனுப்புங்கள். குறிப்பாகப் பட்டி மன்றப் பேச்சாளர்களுக்கு. தெரிந்த ப.ம. பேச்சாளர் இருந்தால், 'ராம் வசந்த் என்னும் புதுக் கவிஞர் எழுதி இருக்கிறார் பாருங்கள் ....' என்று பேச்சிற்குப் பொருத்தமான உங்கள கவிதை வரிகளைச் சொல்லச் சொல்லுங்கள். பாரதி தாசன் விருது, ஆதித்தனார் இலக்கியப் பரிசு என்று எத்தனையோ உண்டு. அவைகளைப் பெற முயற்சிக்கும் விதத்தில் உங்கள் நூலை வடிவமைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஆ.இ.பரிசிற்குப் போட்டியிடும் நூல்களுக்குப் பக்க வரையறை உண்டு. அவற்றை அறிந்து செயல்படுங்கள். நன்றி. - ராஜமாணிக்கம். 28-Nov-2015 8:26 am
எஸ் ...நன்றாக இருக்கிறது ..நன்றி! 27-Nov-2015 2:59 am
வாழ்த்துக்கள் அண்ணா.......... 26-Nov-2015 6:28 pm

------------ பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி முடிவுகள் -----------------

முதலில் அனைவருக்கும் நன்றி .இதில் முன்னெடுத்த , பங்கேற்ற , பங்களித்த , சீர் படுத்திய அனைவருக்கும் நன்றி என்ற வார்த்தை எந்த அளவிலும் கைம்மாறாக இருக்கப் போவதில்லை .ஆனால் அதன் பொருளை முழுதும் உள்ளுர்ணந்து உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் இந்த அபி வாசகர் வட்டம் தன் சிரம் தாழ்த்திய , நெஞ்சார்ந்த நன்றிகளை உங்கள் கரங்களில் சமர்ப்பிக்கிறது ...

ஏற்கனவே பல முறை சொன்னதுதான் ...திறனாய்வு இலக்கியத்திற்கு இது ஒரு சிறந்த முன்னதாரனமாய் அமைந்தது ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் யார் இந்த போட்டியின் ஐடியா கொடுத்தது எனக் க (...)

மேலும்

உண்மைதான் .... அப்படித்தான் பல படைப்புகளும் , நிகழ்வுகளும் என் பார்வையில் இருந்து தப்பி விடுகின்றன .....நன்றி 27-Jul-2015 9:08 am
இன்றுவரை இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்னும் நினைப்பில்தான் இருந்தேன். நான் அதிகமாக எண்ணம் பகுதியை பார்க்காத காரணத்தால் முடிவு அறிவிக்கப்பட்ட விஷயம் தெரியவில்லை. என்றாலும் முடிவை கட்டுரைபகுதியிலேயே வெளியிட்டிருந்தால் பொருத்தமாகவும் எல்லோரும் அறியக்கூடியதுமாக இருந்திருக்கும் .இன்னும்கூட பலர் என்போல முடிவு அறிவிக்கப்படவில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கக்கூடும். என்றாலும் தரப்படுத்தலின் மூலம் எனது கட்டுரைக்கு முதலிடம் கிடைத்ததில் மகிழும் நான் ஏனைய போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள் கூறிக்கொள்ளும் அதேவேளை போட்டியை திறம்பட நடத்தி முடித்த குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன் 27-Jul-2015 1:41 am
மிக்க நன்றி தோழரே இன்றுதான் போட்டி முடிவைப்பற்றி தேடிப்பார்த்தேன் முதல் பரிசே எனக்கு என்பதில் மகிழ்ச்சி என்றாலும். போட்டி முடிவுகளை எண்ணம் பகுதியில் சேர்க்காமல் அதற்குரிய பகுதியில் சேர்த்திருந்தால் எல்லோரும் அறிந்துகொள்ள எதுவாயிருந்துக்க்மல்லவா? 27-Jul-2015 1:31 am
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 04-Jul-2015 2:05 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

வணக்கம் நண்பர்களே
சில தவிர்க்க முடியாத காரனங்களால் ( மாத இறுதி பணிகள் ) , போட்டி முடிவுக்கு இன்னும் ஒரு நாள் அவகாசம் வேண்டும் .
பொருத்தருள வேண்டுகிறோம் .

நாளை அறிவிக்கப்படும் முடிவுகள் .
தாமதத்திற்கு மன்னிக்கவும் .

அன்புடன்
==========
அபி வாசகர் வட்டம்

மேலும்

அந்த முடிவுகளில் இருந்து ஒரு நல்ல தொடக்கமும் நாளை அறிவிக்கப்படலாம் ....... 01-Jul-2015 9:51 pm
Ok Bro.. but. I expect fair commitments too. 01-Jul-2015 6:04 pm
No issues. Take your time. 01-Jul-2015 5:07 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள்- திறனாய்வு போட்டி

வணக்கம் நணபர்களே ...
போட்டியில் எழுதி ,திறனாய்வு திறன்களை செய்தமைக்கு , பகிர்ந்தமைக்கு , கற்பித்தமைக்கு மிக்க நன்றி கலந்து கொண்ட அன்பு உள்ளங்கள் அத்துனை பேருக்கும்.

முன்னெடுத்தவர்களுக்கும் , ஆதரவு தந்த தோழமைகளுக்கும் , போட்டியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் , நடுவர்களுக்கும் , நடத்த உதவி புரிந்தவர்களுக்கும் , வாய்ப்பு அளித்த தளத்திற்கும் , கருத்து பகிர்ந்தவர்களுக்கும் , இடித்து உரைத்தவர்களுக்கும் .. என எல்லோருக்கும் நன்றியை நன்றியோடு நவில்கிறது அபி வாசகர் வட்டம்.

தேர்வுகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன.

முடிவுகள் விரைவில் ...

நே (...)

மேலும்

முடிவுகளோடு தளத்தில் மீண்டும் ராம்வசந்த் அவர்களின் எழுத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்.. 27-Jun-2015 3:00 pm
தொடரட்டும் உங்கள் தொண்டுப் பயணம் ... வாழ்க வளமுடன் 26-Jun-2015 1:13 pm

வணக்கம் நண்பர்களே
" பொள்ளாச்சி அபி கதைகள் திறனாய்வு போட்டி "...
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .

போட்டியில் இன்னும் சிலர் பங்கேற்க விழைந்த காரணத்தினால் போட்டி நடுவர்களின் / வாசகர் வட்ட இசைவோடு இன்னும் இரண்டு நாட்கள் நீட்டிக்க படுகிறது .அதாவது 16/06/2015 ( ஜூன் 16 , 2015 ) இரவு பனிரெண்டு மணி வரை படைப்புகளை பதிக்கலாம் என்பதை மகிழ்வோடு தெரிவிக்கிறோம் .

இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.

இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்க (...)

மேலும்

மரியாதைக்குரிய சகோதரரே , நான் எழுதிய சில கவிதைகளுக்கு (?) அலங்காரம் செய்து , எனக்கு அங்கீகாரம் தந்தவர் அபி சார். என்னுடைய குருவாகவே மனதார அவரை கொண்டாடி மகிழ்கிறேன்.... கதையோடு வாசிப்பவரை ஒன்ற வைக்கும் லாவகம் , அதனுடன் இந்த சமூகதிர்க்கான செய்தியும் பொதிந்து தருவது அழகு....இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்....கொண்டாடலாம்...... ஆனால் திறன் ஆய்வு செய்யும் அளவுக்கு இந்த சின்னவளுக்கு அறிவும் , திறமையும் , அனுபவமும் எது? அது ஒரு குருக்கு செய்யும் மரியாதை ஆகாதே என்றே விலகி நிற்கிறேன்....என்னை தயை கூர்ந்து மன்னித்து பொறுக்கவும் .... நன்றி அண்ணா அண்ட் அபி சார் 15-Jun-2015 6:47 pm
அட, ராமா! ராமா! ராமா! ... என்ன வசந்த்? என் புத்திதான் உங்களுக்கு நன்றாகத் தெரியுமே?! இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டால், நான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருப்பேனா? .... பரிசுக்கு அருகதையில்லை என்றால், அறிவிப்பே தேவையில்லையே! கமுக்கமாய் இருந்து காரியத்தை நடத்திக்கொண்டு போயிருக்கலாமே! இப்பொழுது எனக்குத்தான் சங்கடமாக இருக்கிறது, உங்களையும் சங்கடப்படுத்தி விட்டேனோ என்று! சரி, பன்னிரண்டு மணிக்குப் பிறகு, அந்தச் சிலரும் யாரென்று பார்த்துவிட்டே தூங்குகிறேன்! இதைத்தான் ரசாபாசம் என்பது. ரசம் + ஆபாசம். 14-Jun-2015 11:24 pm
// இது ஒன்றும் பெரிய கொலைக் குற்றம் கிடையாது. // அங்கதான் நிக்கறிங்க நீங்க ... // இருந்தாலும், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். // நிச்சயம் ..ஏனெனில் ..உங்களுக்கே தெரியும் . நான் இங்கு எழுதிக் கொண்டிருக்கும் கடைசி நாட்கள் இவை . அது கூட இந்த போட்டி குறித்து மட்டுமே . நன்றி ஐயா . its a Small World .. hope & wish we meet some time , some day , some place . Many thanks . 14-Jun-2015 10:53 pm
நமக்காகத்தான் சட்டம். ஆனால், சட்டத்தைப் போட்டபின்பு, சட்டத்திற்காக நாம். சரிதானே? ... நாமே நாம் போட்ட சட்டத்தை மதிக்கவில்லை என்றால் ...... இது ஒன்றும் பெரிய கொலைக் குற்றம் கிடையாது. இருந்தாலும், இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி. 14-Jun-2015 10:37 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி

வணக்கம் நண்பர்களே ..
இதுவரை 56 படைப்புகள் வந்திருக்கிறது .பெரும்பாலும் ஒரு கவிதைக்கான தளத்தில் இத்துனை கட்டுரைகள் வந்திருப்பதே மகிழ்ச்சி தரும் விஷயம்.

அதுவும் திறனாய்வு குறித்த படைப்புகள் எனும் போது இரட்டிப்பு மகிழ்ச்சி .

அதுவும் சிறுகதை வாசிப்பு ..அதுவும் அபி கதைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம் .

சற்று நேரம் முன்பு ஆதியின் ( ஆதவன் தீட்சண்யா ) கவிதை ஒன்றை இங்கே கண்டேன் .அவர் வரிகளையே கடன் வாங்கி சொல்கிறேன் ..ஜெயமோகன்கள் தாரசுகள் தூக்கி விட்ட தமிழ் இலக்கிய கடைகளில் இந்த கடனை வாங்குவது அவசியமாகவும் படுகிறது .
.
// இலக்கியத்தின் மீது (...)

மேலும்

அட .இது என்ன கேள்வி. எழுதுங்க செந்தேள் ... நன்றி . 13-Jun-2015 11:06 am
ஐயா ...இது சமீபத்தில் ஜெயமோகன் சுஜாதா இலக்கியவாதி இல்லை என்றிருந்தார் ..அதன் தொடர்ச்சியே அந்த குறிப்பிட்ட கருத்து ...அவர் ஏன் சொன்னார் என்பது ஜெயமோகனை படிப்பவர்களுக்கு / அறிந்தவர்களுக்கு தெரியும் . போட்டியின் நடுவர் குழுவில் நானில்லை . ( நான் இருப்பினும் நடுநிலை நிச்சயமாக காப்பற்றப்படும் .ஏனெனில் போட்டி நடுவர்களின் முதல் அடிப்படையே அதுவாக இருக்க வேண்டும் .இருக்கும் . இதுவரை கடந்த ஆறு மாதங்களில் இங்கு நான்கு போட்டிகளில் ஏதோ ஒரு கட்ட நடுவர் பொறுப்பை ஏற்றிருக்கிறேன் ..சமீபத்தில் நடுநிலைமையை நீங்கள் பாராட்டிய போட்டி உட்பட. இந்த போட்டியிலும் நடுநிலைமை கையாளப்படும் .காப்பற்றப்படும். வாசகர் வட்டம் சார்பாக நான் உறுதி அளிக்கிறேன் ஐயா . 13-Jun-2015 10:44 am
அனே எனக் இத்து தெரிய்வெஇல்லை நனும் ஓன்னு எலுதவா. 13-Jun-2015 9:40 am
மேற்கண்ட உங்கள் மேற்கோள் இப்பொழுது நீங்கள் சொல்லியிருக்கத் தேவையில்லை என்றே எனக்குப் படுகிறது. ஏனெனில், அந்த மேற்கோளே தேர்வுக்கு உங்கள் அளவுகோலாய் இருக்கலாம் என்ற எண்ணத்தை ஊட்டுகிறதே! 13-Jun-2015 9:17 am

வணக்கம் நண்பர்களே
" பொள்ளாச்சி அபி கதைகள் திறனாய்வு போட்டி "...
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .

இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.

இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்கள்
ஆவலுடன்
அபி வாசகர் வட்டம்
............................................................................................................................................................................................................................... (...)

மேலும்

இது ஒரு நல்ல தொடக்கம்... அனைவரும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறேன்... 09-Jun-2015 11:58 pm
நன்றி தேவ் ... 09-Jun-2015 10:36 pm
ஒன்றே ஒன்றுதான் எழுதியுள்ளேன் இதுவரை ..... இன்னொன்றும் முயற்சிக்கிறேன் .... 09-Jun-2015 8:33 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி .

கீழே தோழர் நிலா சூரியன் கருத்தை பதிக்கிறேன் .இது கதைகளின் இணைப்புகளுக்கும் உதவும் ...பயன் படுத்திக் கொள்ளவும் .நன்றி .
..................................................................................................................................................................................
மிக அருமையான தகவல்,

கண்வழியாகப் பாய்ந்தத் தேன் மனதிற்குள் இறங்கி அமுதமாய் இனிக்கிறது. அண்ணன் அபி அவர்கள், இந்த உலகம் அறியப்பட வேண்டியவர். அதற்கு இந்தப் திறனாய்வுப் பட்டியும் ஒரு வழிகாட்டளாகவே இருக்குமென்று நினைக்கின்றேன்.

அண்ணன் அபி அவர்கள் ஒ (...)

மேலும்

அடப் போங்க ராம் ......அப்போ வரமாட்டேன்னு சொல்லாம சொல்றீங்க சீக்கிரம் வந்து கிளிகளின் கூட்டுக்குள்ளே அடுத்த பாகத்தை எழுதுங்க ..... 07-Jun-2015 3:37 pm
ஐயோ ..தேவ் . பிடிவாதம் என்பதெல்லாம் இல்லை.நான் அவ்வளவு பெரிய ஆளும் இல்லை . இந்த மாதிரி முயற்சிகளின் போது தளத்திற்கு நிச்சயம் வருவேன் .. நன்றி . 07-Jun-2015 12:03 pm
கண்ணிதான் தோழரே .. கண்ணிவெடி , கண்ணி வைத்து பிடித்தான் என்பதெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்... நன்றி . 06-Jun-2015 8:35 am
இன்னுமொரு கண்ணியா அல்லது இன்னுமொரு கன்னியா தோழரே... 05-Jun-2015 8:34 pm

வணக்கம் நண்பர்களே
" பொள்ளாச்சி அபி கதைகள் திறனாய்வு போட்டி "...
போட்டியின் முழு விவரங்கள் போட்டி பகுதியில் காண்க .

இளையவர் , மூத்தோர் ,தளத்தில் புதியவர் , தெரிந்தவர் , அறிந்தவர் , ஆடவர் , பெண்டிர் , மாணவர் என எல்லோரும் எழுத வேண்டி விரும்பி விண்ணப்பிக்கிறோம்.

இது ஒரு கற்றலும் , கற்பித்தலுக்குமான உங்கள் பெரிய பங்களிப்பு ...
தொடருங்கள்
ஆவலுடன்
அபி வாசகர் வட்டம்
............................................................................................................................................................................................................................... (...)

மேலும்

நண்பர்களே

எல்லோருக்கும் பொள்ளாச்சி அபி சிறுகதைகள் - திறனாய்வு போட்டி பற்றிய மின்னஞ்சல் வந்திருக்கும் தளத்தில் இருந்து .அவர்களின் இந்த உயரிய பணிக்கு நன்றி தெரிவித்து கொள்ளும் வேளையில்
போட்டி திறனாய்வுக்கான கதைகளின் இணைப்புகள் பற்றிய என் எண்ணம் தளத்தின் " எண்ணம் " பகுதியில் மேல் புறத்தில் இருக்கிறது .போட்டி முடியும் வரை அது அங்கேதான் இருக்கும் .

பங்கேற்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள நல்லதொரு / எளியதொரு வாய்ப்பை அளித்த தளத்தாருக்கு நன்றி .
வாருங்கள் ..எழுதுங்கள் .
பயன் அளிப்போம் .பயன் பெறுவோம் .
நன்றி .

மேலும்

மேலும்...

மேலே