எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கடின உழைப்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள கடினம் அவசியமில்லை. ஆனால் கடின உழைப்பின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதை நாம் நன்கு உணர வேண்டும். வெறும் கைகளில் காற்றை அடித்தால் சத்தம் வருமா? அப்படி என்றால், இலக்கு என்ன, அதை எப்படி அணுக வேண்டும், அதற்கு வேண்டிய சாதனங்கள் யாது என்பதை அறிந்து தெரிந்து கொள்ளாமல் வெறும் கையில் முழம் போடுவது எந்த ஒரு பூ மாலையோ பூவின் மணம் நிச்சயமாக கிடைக்காது.
மனிதர்கள் தோற்றத்தில் அவ்வளவு நிறங்கள் என்றால், அவர்களின் உள்ளத்தில் , அடாடா,எத்தனை எத்தனை வண்ணங்கள்! . ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட வித்தியாசமான மனம். இந்த மனம் என்னும் மாயப் பொருள் எங்கே என்று கூட கண்டு பிடிக்க முடியாது. ஆனால் அந்த மனதால் ஒருவருக்கு முடியாதது ஒன்றும் இல்லை. அதே மனதால் பலருக்கு நன்மையாக முடிந்தது ஏதும் இல்லை. ஏனெனில் மனம் ஒரு நிலையான திடமான மலைப் பாறை அல்ல. தெளிவான நீர் ஓடை அல்ல. ஒரு குரங்கு போல் தான் அதன் சுபாவம். அது தற்போது என்ன நினைக்கிறது என்பது கூட நமக்கு தெரியாது, அதைக் கூர்ந்து கவனிக்காமல் இருந்தால். மனதை வென்றவர் வாழ்க்கையை வென்றவர் ஆவார். நமக்கு தெரிந்த வரையில் அல்லது தெரிவிக்கப்பட்ட வரையில் மனதை தன் அடிமையாக்கி அதனை ஆண்டு அதனால் உயரிய அன்பு அமைதி ஆனந்தம் கண்டவரை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நம்மில் பலரும் மனதிற்கு அடிமைகள் தான். சரி அடிமையாகவே இருந்து விட்டுப் போவோம். ஆனால் கொத்தடிமை போல வாழ வேண்டாமே. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நம் மனசாட்சியை கவனித்து அது சொல்வதை மனது கேட்கும்படி செய்தாலே நம்முள் தூய அன்பு பரவி நமக்கு எவ்வளவோ உயர்ந்த அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுக்கும். ஆனால் இதற்கு மிகவும் இன்றியமையாதது , நமக்கு நன்கு தெரிந்த உண்மை தான், அதாவது நேர்மையான முயற்சி.
இந்த உலகில் எதற்கு பிறக்கிறோம்? மாற்றங்கள் பல அடைந்து இறுதியில் இறப்பதற்கு. உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இயற்கையாக நிகழ்பவை. மிகவும் சிறிதான குழந்தை வடிவில் பிறந்து , உயரம் அதிகரித்து, உடல் உறுப்புகளின் நீளம் மற்றும் கனம் (மண்டை கனமும் தான்) அதிகரித்து பின்னர் வயதான பின் இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து நிறைவாக உயிர் பிரிகையில் பட்டு சுட்டுவிடுகிறது. இருக்கும் இந்த இடைவெளியில் இந்த உடலை பேணி பாதுகாப்பதே ஒரு பெரிய ப்ராஜெக்ட். சிலருக்கு அதிக செலவு இல்லாமலே இந்த ப்ராஜெக்ட் நல்ல நடக்கும். வேறு பலருக்கு செலவுகள் வந்த வண்ணம் இருக்கும் ஆனால் ப்ராஜெக்ட் ரொம்ப வீக்கா தான் இருக்கும்.
புன்னகைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒளிந்து கொண்டு இருப்பது தான் அமைதி. நண்பர்கள் அதிகம் இருப்பின் புன்னகை அதிக அளவில் புரிய வாய்ப்பு உள்ளது. தனிமையில் தன்னை கூர்ந்து கவனித்து தியானம் செய்திடில் அமைதி பெற வாய்ப்பு உள்ளது. புன்னகை ஒருவரை அமைதியைத் தாண்டி உள்ள மகிழ்ச்சிக்கு நேரடியாக கூட்டிச் செல்லும். ஆனால் அது நீடித்து நிலைக்காது. தனிமையில் தியானம் செய்தால் அமைதி கிட்டும். அது அப்போதைக்கு மகிழ்ச்சியை அளிக்கும். எப்போதும் இல்லை. உண்மை மகிழ்ச்சி கிடைக்க ஒரே ஒரு வழிதான். அது அன்பு கொண்டு அன்பு காட்டி அன்பைப் பொழிகையில். வேறு என்ன செய்தாலும் புன்னகை புரியலாம், அமைதி காணலாம். ஆனால் உண்மை (...)
சாப்பிடுவதை கட்டுப்படுத்தலாம், ஆத்திர படுவதை கட்டுப்படுத்தலாம், ஆசை படுவதையும் கட்டுப்படுத்தலாம் ஆனால் மனதில் எண்ணங்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துதல் என்பது இயலாத காரியம் என்றே கூறலாம். மூக்கு துவாரங்கள் எதற்கு? மூச்சை உள்வாங்கி வெளிவிடத்தானே! நாக்கு எதற்கு? நாம் உண்ணும் உணவின் சுவையை நுகர்வதற்காகத்தானே! கால்கள் எதற்கு? நாம் விரும்பும் பாதையில் நடக்கத்தானே! காது எதற்கு? வெளியில் நடக்கும் அனைத்துவிதமான சத்தங்களையும் கேட்கத்தானே! அப்படி இருக்கையில் மனம் என்பது எண்ணத்தின் வண்ணங்களை , பல கோணங்களில், பல கோணல்களில் எண்ணி, ஆராய்ந்து, மனதளவில் உழன்று திரிந்து விழுந்து புரண்டு குழப்பி குதறி தலையை பிய்த்துக்கொள்ளத்தானே!
ஆக்கம் எப்போதும் அறிவைத் தருமா, கூற முடியாது. ஊக்கம் எப்போதும் உயர்வு தருமா, சொல்ல முடியாது. ஆனால் ஊக்கம் பலரை செயலில் ஈடுபடச் செய்யும். ஊக்கம் என்பது ஒரு மிக அவசியமான தினசரி மல்டி விட்டமின் மாத்திரை ஆகும். இன்னும் சொல்லபோனால் ஆக்கம் பலருக்கு வண்டி ஓடத் தேவைப்படும் பெட்ரோல் போன்றது
நன்கு தின்பதற்கு குறைச்சல் இல்லை
பசியை ஓரளவுக்கு அடக்க முடியும். மூச்சை கூட சில நொடிகள் அடக்க முடியும். ஆனால் கோபத்தை அடக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு நான் வேறு பலருடைய அனுபவங்களை சுட்டிக் காட்ட தேவையில்லை. சாட்சாத் நானே மிகவும் சிறந்த உதாரணம். அறுபது வருடங்களாக இவ்வுலகில் வாசம் புரிந்த பின்பும் , தியானம் , விழிப்புணர்வு இவை போன்ற அரிய பயிற்சிகள் செய்துவரினும், இன்றும் கூட, என் மீது கோபம் கொள்ளாமல் என்னை கட்டி அணைத்து என்னை வழி நடத்தி செல்கிறது, கோபம் என்கிற இந்த செல்லப் ( பொல்லாத) பிசாசு. உடல் உபாதைகள் காரணமா, உடல் அயர்ச்சி காரணமா, என்னை நானே முழுவதும் புரிந்து கொள்ளாத நிலை காரணமா, தெரியவில்லை. கோபத்தில் என் தொண்டை அதிகமாக சத்தம் இடும் நாதம் கேட்கையில், அந்த நேரத்தில் நான் மிகவும் இயற்கையான முறையில் தான் செயல்படுகிறேன் என்று என்னையே நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும், அந்த நிகழ்வுகளுக்கு பிறகு மனம் படும் வேதனை.. ஏராளம்...ஏராளம். இன்று காலை நான் 'இனி கோபத்தில் கூட ஒருவரைஇரைந்து பேசக்கூடாது "என்று உறுதி கொள்கிறேன். இந்த மாதிரி உறுதி மொழியை எவ்வளவு நாட்கள், வாரங்கள், வருடங்களாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்(கொண்றிருக்கிறேன்)..? இந்த ஒரு மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் நான் ஒவ்வொரு முறையும் வெட்கி தலை குனிகிறேன்.