எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்னும் பயிற்சி வேண்டுமோ??

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
சத்தமின்றி அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
அழுத்தமின்றி மென்மையாய் முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
கட்டித்தழுவாமல் 
அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
எண்ணிக்கை குறைவாய் 
அவளை முத்தமிட!!

முயலும்போதெல்லாம்
தோற்றேப் போகிறேன் -
செல்லம் கொஞ்சாமல் 
அவளை முத்தமிட!!

எத்தனை விதமாய் 
முத்தமிட்டும் 
சேய்யவளுக்கு தாயின் 
தவிப்பு புரிவதில்லை..

அதுசரி!!
மொத்த அன்பையும்
ஒற்றை முத்தத்தில் 
கொட்டிவிட முயலும் 
என் பேராசை தான்
எத்தனைப் பெரியது !!

ஹா ஹா ஹா!!

-ரியாதமி

மேலும்

அற்புதம் அற்புதம் மிகவும் அருமையான கவிதை அதிலும் இறுதி வரிகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. நல்ல படைப்பு தொடர்ந்து வாசகர்களுக்கு இது போன்ற படைப்புகளை கொடுங்கள் 07-Feb-2019 4:24 pm

இந்த முயற்சி வெல்வதற்காக அல்ல!! என்னை மெருகேற்றிக் கொள்வதாகவே நினைக்கிறேன்..


பார்த்து, தங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே..  

மேலும்

நேர்த்தியான ஓவியங்கள்.... 23-Sep-2015 4:17 pm
தோழி, நன்றாக உள்ளது. 23-Sep-2015 11:35 am

மேலே