எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலர் கலரா ஆடைகளை
அவங்கவுங்க உடுத்தும் போது
கடந்து போக மனசில்லாம
சிலாகித்து பார்த்திருப்பேன்

தோழியெல்லாம் கூட்டம் கூடி
கும்மி அடிச்சு ஆடுனது
சந்தி எல்லாம் போகும் போது
சிந்தையிலே வந்து போகும்

விளையாட்டு வயசுல
ஒன்னுமே புரிபடல
இப்ப, விளையாட ஆளில்லாம
அழுகை மட்டும் விளையாடுது

கூட நின்ன பொன்னெல்லாம்
இடுப்பு வலி பார்த்துருச்சி
என் தாவணி இன்னும் மட்டும்
சேலை ஆக வழியில்ல

பொறப்பு மேல கோபப்பட
ஆர்ப்பரிக்கும் மனசுக்கு
பொறுப்பில்லாத கடவுள் கிட்ட
நீதி கேட்க போகப் போறேன்

 தட்சணைக்கே வழியில்லாம
விழி பிதுங்கி நிக்குறப்போ
வரதட்சணை எப்ப கைசேர?
நா எப்ப கரை சேர?

மேலும்

ஏளனம் காட்டும் 

 கேவலமாய் பேசும் 
 லாயக்கி இல்லையென கண்டபடி சொல்லும்   
முயற்சி வீண் எனச் சொல்லி, 
 பொறுமை வெறுமை என பொத்தி நகைக்கும், 

 ஊக்குவிக்காது ஊசி குத்தி நரம்பேத்தும் .   
 கண்ணீர் முட்ட வைக்கும் 
 தலையில் குட்டி சீர் குலைக்கும்   

 வலி பொறு 
 தடை அறு 
 பணியாமல் முயல் 
 துணிந்து எழு     
 முட்டி மோதி உஷ்னம் ஏற்றி 
 இன்னும் இன்னும் முயன்று முன்னேறு 
 ஜெயித்தே ஆக வேண்டும் 
 அதுவரை விடாதே 

சிரிக்கும் உலகம் கை தட்டும் 
 உன் சொல்லை உதாசீன படுத்திய மனிதர்கள் 
வேதம் என்பர்      

மேலும்

நன்றி அருள் ஜீவா அவர்களே 28-Oct-2019 11:09 am
நல்ல பதிவு. விடாமுயற்சிக்கான பதிவு. 25-Oct-2019 1:48 pm

ஏளனம் செய்து பார்த்தாய் 

 ஏசி வீசி பார்த்தாய் 
 முதுகுத் தண்டின் மையப் பகுதியில் 
 மூர்க்கமாய் குத்திப் பார்த்தாய்   

 முகம் முறைத்து அகம் கடித்தாய், 
 அணை இழுத்து எனை தடுத்தாய்,   

 நண்பன் என்றாய் 
 நம்பினேன் 
 உடன்பிறந்தவன் என்றாய் 
 நம்பினேன் 
 நல்லவன் என்றாய் 
 நம்பினேன் 
ஒப்பற்ற மனிதன் என்றாய் 
 நம்பினேன் 
 உடன் வருவேன் 
 கடன் தருவேன் என்றாய் 
 அதையும் அதையும் அடித்து நம்பினேன்   

 அடி வாங்கினாலும் மறுநொடி எழுவேன் 
 துரோகம் புரிய யுகம் தேவை   
 இருந்தும் புரிந்தேன் 
 இரும்பாய் எழுந்தேன்   

 நான் வீழ்வேன் என நினைத்தாயோ???         

மேலும்

இது மாறுமா???

இதம் கூடுமா???
இன்பமும் துன்பமும் நிரந்தரம் 
இலை எனில்இத்துன்பம்
இத்துடன் முடியுமாஇல்லை, 
இன்னலின்
இலக்கியங்கள்
இனியும் தொடருமா?
இக்கேள்வி பதில் தேட
இக்கணம் 
இந்நாளில்
இலக்கணம் சரியென
இவ்வேளை உணருமா?
இனியது 
இனியும் பொறுக்காமல்
இயக்கம் தொடர்ந்திட
இவனை இணையுமா?
இதழ் திறந்து
இப்பூமி இதயம் காட்டிட
இறுக்கம் பின்னி
இடறி கிடக்குது
இந்நாள்;
இடர்கள்
இனியளவும்
இயங்காமல் 
இத்துடன் அடைந்திட
இருப்பது எந்நாள்?????????????

மேலும்

இருக்க
நிற்க, நடக்க
கை கால் ஆயுதமாகி
புதிய உலக
புதிய மனித
மானுடம் மனதில் ஏந்தி
ஆசுவாச நேரமின்றி
அங்குமிங்கும்
அயர்ச்சி நடை போடும்
உட்கார்ந்தாலும்
நாளையும் , நாளையையும்  
பொழுதெல்லாம் நோண்டும்,
சொந்தம் இங்கொன்றும் அங்கொன்றுமாய்
சிதறி கிடந்தாலும்
சிதறல்கள் சேர நேரம் பிடிக்காது,
நேரம் எடுக்காது,
சிந்தனை சிக்கிக் கிடக்கும்
கடிவாளமிட்ட குதிரை போல்,
காலம் எண்ணி கால்கள் முடங்கும்.
காதல் கூட
கவனிக்க ஆள் இன்றி
கவலை நிலையில் மல்லாந்து படுக்கும்,
அப்படியே காதல் கொண்டாலும்
பாதியில் பறந்தோடும்
பந்தம் சிறகருந்து
ரெக்கை இறகாகும்.
பணம் குறிக்கோளாகும்
மனம் குறிவைத்து பேசும்
தினம் அதன் போக்கில்
முள் சுற்றி நேரம் கழியும்.
நாளோ வருடமோ
எது கழிந்ததாலும்
அதோடு சேர்த்து
எந்திர மனிதமும்
பயணித்து கழிகிறது......

மேலும்

அழகே!
உன் மொழி கேட்பதை
செவி செவி சாய்க்காமல்
விழி விழி பேசுதே...

இதயம்,
தேன் கரும்பாகுதே
உன் நினைவேந்தியே
உள் எறும்பூருதே
.......

மேலும்

  மனிதனை மனிதனே மரணிக்கச் செய்து,
புனிதன் தானென தனைத் தானே புகழ்வது,
அற்பமானதுஅழுக்கானது...

பிறந்தது வாழவாழ்ந்து சிறக்க,
முட்டையின் குஞ்சுகள்மூக்குத்தி பறக்க!
பச்சிளம் குழந்தையும்,
பாலூட்டும் தாய்மையைம்,
உச்சியின் உள்ளுக்குள் உருகி சுமக்கும் தந்தையும்,
செய்ததென்ன குற்றம்?
செய்யாத தவற்றிற்குதண்டனையா சட்டம்?

இறை இரக்கம் காட்டென்கிறது;
இரக்கமே இறையைக்காட்டுகின்றது!

கடவுளேகடவுளை காப்பாற்று!  
.............

மேலும்


மேலே