எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விடுமுறை

அடிக்கடி தேய்ந்து, வளர்ந்து
அயர்ந்து போன
அம்புலி உனக்கு
அமாவாசை
அன்று " விடுமுறையோ "

சேதுராமன் சங்கர்

மேலும்

பறவைகள் விதைப்போட்டு வளர்த்த
பசுமை காடுகள்
பாலைவனமாயிற்றே
பாரில் நீரில்லையே?
பாரில் நீரில்லை என்று
யார் சொன்னது?
பார் கண்களிலே

சங்கர் சேதுராமன்

மேலும்

மீசை

வெள்ளிமுடிகள்
வெளிச்சம் காட்ட
களை எடுப்புகளை
கையாண்டேன்
கருமை கட்சியிலிருந்து
அனைவரும் தாவினர்
வெண்மை கட்சிக்கு
கத்தரிக்கோல் வேலையில்
களைத்து போனேன்
களை பயிர்கள்
கழனி முழுவதும்
களைகளை
கதிராக்கும்
கரு "மை" வித்தைக்கு என்
கருத்து உடன்படவில்லை
கலப்பையான கத்தி கொண்டு
களைகள் விலக்க
முனைந்த போதுதான்
கண்டுக்கொண்டேன்
கைப்பிடித்தவளுக்கு
கடுகு அளவுக்கூட
உடன்பாடு இல்லை என்று
களையெடுக்கும்
முற்படும் போதல்லாம்
கடுகு வெடிக்கும் அவள் முகத்தில்
ஆசைக்காதலுக்கு
மீசையும் ஒரு காரணமோ!!
அலுத்து விட்டாளோ
அவள் முகத்தில் கடுகு வெடிப்பதில்லை
ஆனாலும் எனக்கு இன்னும்
அச்சம்தான்
அறுவடை செய்யும் போது

சேதுராமன் சங்கர்

மேலும்

வாடுவதற்கு முன்
வாசத்தையும்
வண்டிற்கு தேனையும்
வழங்கி விட்டு போகும்
மலர்களே
மனிதர்கள் நாங்கள்
மனமில்லை உன் போன்று
மதி ஆறு இருந்தும்.

சங்கர் சேதுராமன்

மேலும்

பச்சிளம் பயணம்


கருவாகி
கால மாத பத்து
கணக்கில் உருவாகி
கருவறை
கதவு திறந்து
படுத்தே பயண பட்டு
பச்சிளமாய் வந்தேன்
இப்பாருக்கு

தொடர் கொடியை
துண்டித்த பின்
துக்கம் தாளவில்லை
அழுது உணர்த்தினேன்
அதுவே எனது பாஷை
அப்போது

தொட்டிலாய் ஒரு மடி
தொடர்ச்சியாய் வந்ததும்
துண்டித்த சோகம் மறந்து
பால்கொடியை 
பற்றி கொண்டு
படரத் தொடங்கினேன்

பால் உண்பதும்
படுத்துறங்குவதும் என்
பகுத்தறிவுக்கு எட்டிய
ஒரேப்பணி

பால்கண்ணம்
பலூனாக உப்பியது
படுத்து கொண்டே
பயிற்சி கை,கால் உதைத்து

பக்கவாட்டில் சாய முயன்று
பலமுறை தோல்வி
பலன் கிட்டியது ஒரு நாள்
முதன் முதலில் என்
முதுகு வான் பார்த்தது

நீரா வேண்டும்?
நிலத்தில்
நீந்தியே தூரம் கடந்தேன்.

நிமிர்ந்த தண்டுவடம்
நீந்தவதற்கு தடை விதித்தது

தண்டுவடம் நிமிர்ந்தாலும்
தடுமாற்றம் கால்களில்

கை பற்றினேன் நடைவண்டி
கால் ஓட்டத்தில்
உயர்ந்து நின்றேன் ஒரு படி.


சங்கர் சேதுராமன்

மேலும்


மேலே