எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மைவிழியில் கவிஎழுதி -மாமா
நினைவாலே தூதுவிட்டேன்
வம்பிலேதான் மாட்டிக்கிட்டு -மாமா
ஊரு முன்னே குனிஞ்சு நின்றேன்

ஐயனாரு தோப்புபக்கம் -மாமா
கள்ளு குடிக்க போனதென்ன
கண்சிவந்து வந்ததென்ன -மாமா
கடுங்கோபம் ஆனதென்ன? 

ஜிமிக்கி கம்மல் தொங்கலிலே -கள்ளம் வைச்ச- மாமா
ஐயனாரு தோப்பினிலே 
ஏலம் வைச்சே ஏனோ

சந்தன மேனிபோல -மாமா
அலைந்தாடும் மாரு மேல
வீணாசைப் பட்டதென்ன
பெண்ணாசை சுட்டதென்ன?

ஆசைக்கு உனை நினைத்தேன் -மாமா
அழகுக்கொரு கொண்டையிட்டு
ஆடிமல்லி சரமிட்டு-மாமா
ஆசை தொட்டில் ஆடகண்டேன்

தஞ்சாவூர் தண்டிகையில் -மாமா
வாக்கபட்டு போகையிலே
கும்பக்கோணம் தாசிப்பொண்ண -
கூட்டிவந்த கோலமென

ஆத்திலே தலைமுழுகி -
காரைகுடி பட்டுடுத்தி மாமா
ஏலேலோ பாடயிலே
இழுக்குதையா என் மனசு

சேலை பறக்குதடி -
மாராப்பு  மூலையிலே
பக்கத்திலே நீ இருந்து 
பதற வைத்து அணைத்ததென்ன

கைவளையல் ரெண்டும்மின்ன
மோகப்பூ மஞ்சள் மின்ன
முகமுங்கூட மின்னுதடி.
முத்தம்மா மின்னலிலே

காளைநல்ல கறுப்பழகன்
கண்ணாடி மேனியிலே
சூடுவச்ச கள்ளழகன் -
  ஆட வைச்சு. சுத்துதடி ஆசை தொட்டில் ராட்டிணமாம்

பூத்தமலர்  மூடாதடி -
பூவில்வண்டு ஏறாதாடி
கன்னிவந்து சேராவிட்டால் -
கதவடைக்க முடியாதடி

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே