எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னுடைய குழந்தைப் பருவத்தில் நான் வளர்த்த முதல் செடி 

பட்டு ரோசா செடி.

மேலும்

செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தாமல் இயற்கை வண்ணங்களில் விளைந்த கோலம்.

மேலும்

நம்மால் முடிந்த வரை விதைத்து செல்வோம் நல் எண்ணங்களையும்.

மேலும்

நல்ல காரியம் இயற்கை அன்னை அருள் ஆசி உங்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன் பாராட்டுக்கள் தொடரட்டும் உம் தொண்டுகள் . நன்றி 24-Jan-2016 3:42 pm

                                  பொங்கல் கும்மி


கும்மியடி பெண்ணே கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி

உண்ண நமக்கு உணவு தரும்
இயற்கை அன்னைக்காக கும்மியடி
உணவுப்பயிரை வளர்க்க ஒளியை தரும்
கதிரவனுக்கு கும்மியடி  (கும்மியடி)

பயிரை வளர்க்கும் விவசாயமக்கள்
வளர்ச்சி அடைய கும்மியடி
தமிழர் திருநாளாம் பொங்கலிலே
மகிழ்ச்சி பொங்க கும்மியடி (கும்மியடி)

தாய்க்கு தாயாம் வள்ளல் பசுக்கள்
தாம் பெருக கும்மியடி
உலகுக்கே பாடம் சொன்ன
வள்ளுவனுக்கொரு கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி


மேலும்

இனிதான நாளில் மிகவும் மகிழ்ச்சி பொங்க கும்மியடி , வாழ்த்துக்கள் சுமித்ரா 15-Jan-2016 8:28 am

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

நான் புள்ளி வைத்து வரைந்த கோலம்.

மேலும்

ஆழகான ஓவியம் உங்களுக்கு முன் கூட்டியே இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் 09-Jan-2016 8:07 pm


கம்பர் கவிதை.எனக்கு பகிரத் தெரியவில்லை.

வண்ணம்

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ண லேஉன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்!

மேலும்


சிறந்த கவிதையின் இலக்கணம்.படித்ததில் பிடித்தது


கவிதையை கவி+விதை+ கதை என்று பிரித்தால்...கவிஞன் எழுதும் கவிதை அதன் கருத்து (கதை) நம் மனதில் விதை போல் பதியவேண்டும். கவிதையின் இலக்கணம் இதுவே..

மேலும்

கல்வியில்லாப் பெண்கள் களர் நிலம்
அந்நிலத்தில் புல் வேண்டுமானால் விளையலாம்
நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை.

நண்பர்களே இந்த வரிகள் யாருடைய வரிகள் எனக்கு கூறவும்.

மேலும்

பாரதிதாசனோ ? 13-Jul-2015 8:49 pm

உம்மை காக்க எம்மை கண்ணாய் காத்திடுங்கள் என்கிறதோ..?

மேலும்

வஞ்ச மனம் வருத்தம் கொள்ளாது.

மேலும்

மேலும்...

மேலே