எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மென்மையானது 

எதுவென்று 
எழுதி பார்த்தேன் இப்படியாய்..   

மிதமாய் வந்து வருடும் காற்றா? 
வானில் மிதந்து வரும் வெண்ணிலவா? 
கொஞ்சமே பனி போர்த்திய குளிர் இரவா? 
இதமான குளிருக்கு வெந்நீர் குளியலா?   

முதல் மழையின் சின்ன தூறலா? 
நீர் வீழ்ச்சியில் சிதறிய சாரலா? 
காற்றுக்கு கொடியின் தலையாட்டா? 
மலர்ந்தும் மலராத பூவின் மொட்டா?   

எது மென்மை?   

தாலாட்டும் (இளைய) ராஜாவின் பாடல் மெட்டா? 
தமிழாடும் கண்ணதாசன் பாட்டா? 
இனிய இரவின் இசைபொழுதா? 
கொஞ்சும் மனைவியின் கிள்ளலா?   

விதையில் இருந்து எழும் தளிரா? 
குதித்தோடும் மானின் துள்ளலா? 
மயில் இறகின் மெல்லிய வருடலா? 
துறவி அருளிய தலைதொடலா?   

ஏது மென்மை?   

எது மென்மை.. எது மென்மை.. 
எழுதி பார்த்தேன் – என் 
பிஞ்சு குழந்தை தவழ்ந்துவந்து 
காகிதம் மேல் விழுந்தாள்.. 
பிஞ்சு பாதம் பதிக்கையிலே 
காகிதம் கசங்கவில்லை – புரிந்தது   
எது மென்மை...      

மேலும்

நன்றி தங்கள் கருத்துக்கு... 16-Sep-2018 7:35 pm
// பிஞ்சு குழந்தை தவழ்ந்துவந்து காகிதம் மேல் விழுந்தாள்.. பிஞ்சு பாதம் பதிக்கையிலே காகிதம் கசங்கவில்லை – புரிந்தது எது மென்மை... // ஆம் சுமக்கின்றேன் இவளை பதின்ம வருடங்களிலும் என்றும் சுமக்காத சுகமாக ~ இப்படிக்கு கருவறை அற்றவன் ~ 16-Sep-2018 6:36 pm

இயற்கையின் நீதி  

மன்னர்கள் வந்தும் போயும் 
நூற்றாண்டுகள் கழிந்தும்….ஒரு 
மாற்றமும் இல்லை டி.ஏன்.ஏக்களில்!! 
கட்டளைக்கு கட்டுண்டு இட்ட 
வேலையை செய்யத் தெரியும்... 
எதையும் ஏனென்று கேட்டதில்லை 
கூட்டி கழித்து பார்த்ததில்லை... 
ஒட்டிகிடந்த வயிறும் பத்தடி வீடும் 
படிக்க வழி செய்ததில்லை 
இருள் படிந்த மூளையில் வெளிச்சத்தின் 
கீற்று விழவில்லை!!!   

தேவையெனில் தன்னை மாற்றிக் கொள்ளுமாம்   
உலகம்... இயற்கையின் விதி!! 
நீரில் வசித்தவை நிலத்தில் ஊர்ந்ததும் 
குட்டைகள் நெட்டையாவதும் 
கருப்பு நிறம் வெளுப்பதும் 
உலகம் தன்னை மாற்றி கொண்டது...   

தலை சொறிதல் நீக்கின்... 
நெற்றிச்சுருக்கங்கள் டி.என்.ஏக்களை 
திருத்தி அமைக்கும்.... 
கனவுகளும் கேள்விகளும் 
தொடர்ந்திருந்தால் 
சில ஆண்டுகள் கழித்து.... 
இடுப்பில் கட்டிய துணி தலைப்பாகையாகும்!!   

கனவு காணுங்கள்!! கேள்வி கேளுங்கள்!! 
தேவையெனில் மாற்றி கொள்ளும் 
உலகம்... இது இயற்கையின் நீதி!!      

மேலும்


மேலே