எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ...

மேலும்

படித்ததில் பிடித்தது ...
அனைவரையும்  அன்புடன் அழைக்கிறேன் ....
*******************************
கண்ணன் பாட்டு ...
***************
இறைவனுக்கு இப்பாடல்யை  பாடுவதற்காக.....
(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் -  மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர:  - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
----------------------- 
(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
----------------------- 

(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
----------------------- 

மேலும்

மிக்க நன்றி ஐயா ... 23-Dec-2015 2:58 pm
மார்கழிக் காலையில் இனிய இசைப்பாடல்.வல்லாபாச் சாரியாரின் மதுர கீதத்தை தமிழில் அழகாகத் தந்திருக்கிறீர்கள் 7) கோபீ மதுரா லீலா மதுரா---ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! கோபி என்பதை தமிழிலும் கோபி என்றும் கோபியர் என்றும்தான் கவிஞர்களும் எழுதுவார்கள். கண்னாதாசனும் கோபியர் கொஞ்சும் ரமணா என்றுதான் எழுதினர். கோபிக்கு ஆய்ச்சி என்ற மொழி பெயர்ப்பு அழகு சிறப்பு. ஆட்டம் என்பதிற்குப் பதில் ஆடல் என்பது இன்னும் பொருந்தும் பின் வரும் கூடலுடன் இயந்து ஒலிக்கும். மார்கழிக் காலை பனித் தென்றலுடன் மதுர கீத தெய்வீகத் தென்றல் இனிதே இனிதே . வாழ்த்துக்கள் தெய்வீகக் கவிப்பிரிய மஹாலக்ஷ்மி ஸ்ரீமதி அன்புடன்,கவின் சாரலன் 21-Dec-2015 9:01 am

காலத்தை போல அழியாது என் அன்மாவின் பயணம்
வானததின் நீறத்தை போல என் மனதின் எண்ண்ம் .

மேலும்


மேலே