எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திசை

தேடித்தேடி
செறிந்தவை
மாறி
நாடிநாடி
நாடி
நொறுங்கியது.

ஒருவர்
ஒருவராகவே
இருந்தவரை
ஒருவர்
ஒருவருடன்.

ஒருவர்
பலராக
முயன்றபோது
ஒருவர்
பலருடன்.

-எழில்
16 02 2023

மேலும்

திசை

தேடித்தேடி
செறிந்தவை
மாறி
நாடிநாடி
நாடி
நொறுங்கியது.

ஒருவர்
ஒருவராகவே
இருந்தவரை
ஒருவர்
ஒருவருடன்.

ஒருவர்
பலராக
முயன்றபோது
ஒருவர்
பலருடன்.

-எழில்
16 02 2023

மேலும்

நமக்கு
வருடத்திற்கொரு 
முறை தான் வரும்
வசந்தம்.

இளசுகளுக்கு
வருடம்
முழுதும்
வசந்தமே.

-எழில்
14 02  2023

மேலும்

கரை

கரும்பலகைகள்
கைவிட்டாலும்
கைவிடாத
கால்நடைகளை
இளம்காலைப்
பொழுதில்
கரையேற்றும்
இளங்காளை.

-எழில்
14 02 2023

மேலும்

அன்று
நன்செய் என்றாலும்
புன்செய் என்றாலும்
பண்படுத்திட
புண்பட்டு
நிலமாண்ட
உழவன்
இன்று
நிலமற்று
கூடாகிப்போனாலும்
எஞ்சிய
கோவணத்துடன்
தரணியை
தரிசில்
சுமப்பவன்
இவன்
மட்டுமே.

-எழில்
14 02 2023

மேலும்

திராவிடர்களா தமிழர்களா எது சரி? 
பெரியாரின் பதில் என்ன? 

திராவிடர்’ என்பதற்கு மாறாக, ‘தமிழர்கள்’ என்று ஏன் வழங்கக்கூடாது என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர்கள் என்று சொன்னாலே பார்ப்பனர்கள், நாங்களும் தமிழர்கள்தாம் என்று கூறி அதில் சேர்ந்துகொள்கிறார்கள். நாங்களும் தமிழ்நாட்டில் பிறக்கிறோம்; வளர்கிறோம்; தமிழே பேசுகிறோம்; தமிழ்நாட்டிலே இருக்கிறோம். அப்படியிருக்க எப்படி எங்களைத் தமிழர் அல்லர் என்று நீங்கள் கூற முடியும்? என்று கேட்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழர் என்பது தமிழ்ப் (திராவிட) பண்புள்ள மக்களுக்கு உரிய பெயராக இருந்திருக்கக் கூடுமானால், இன்று அது மொழிப் பெயராக மாறிவிட்டிருப்பதால், அம்மொழியைப் பேசும் ஆரியப் பண்புடைய மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன்வந்துவிடுகிறார்கள். அதோடு, ஆரியப் பண்பை நம்மீது சுமத்த அந்தச் சேர்க்கையைப் பயன்படுத்திவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில், நான் தமிழன் எனச் சொல்லிக்கொள்ள ஒப்புகிறேன். ஆனால் எல்லா கன்னடர்களும், மலையாளிகளும், ஆந்திராக்காரர்களும் அப்படி தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள ஒப்பமாட்டார்கள். எனவேதான் (அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து) திராவிடச் சமூகத்தின் உறுப்பினர்கள் நாம்; நம் நாடு ‘திராவிட நாடு’ என்று வரையறுத்துக் கொள்வதில் இவர்களுக்கு மறுப்பு இருக்காது. அது நன்மை பயக்கும்’’ என்றார் பெரியார்.

-எழில்
14 02 2023

மேலும்


மேலே