எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Geeths - எண்ணம் (public)
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

  இப்போதும் அப்படித்தான் நீ கவிதையில் சொன்னப்படியே...இறந்து போனாயா எனதருமை நா. முத்துக்குமாரா.. ?


நா.முத்துக்குமாரின் கவிதை:.

மரணம் பற்றிய வதந்தி
--------------------------------------- 
திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்.

எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
"இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்!  

மேலும்

நினைவு மீட்டல்
ஒரு வருடத்திற்கு முன்பு, 
இதே தேதியில் ’எழுத்து’ தளத்தில் நானெழுதிய கவிதை. 


  புறக்கணிப்பு விடுதி
 புறக்கணிப்பு விடுதி - சந்தோஷ்
நிறமற்ற கோப்பையொன்றில்
சிவப்புநிறத் திரவம்
ஊற்றப்பட்டிருந்தது.
(ரெட் ஒயின் எனவும்
பெயரிட்டுக்கொள்ளவும் )
அதிலென் தனிமையினை
நனைத்துக்கொண்டிருந்தப்போது
ரவிவர்மன் ஒவியத்திலுள்ள
அந்தப் பேரழகி
என் பின்னங்கழுத்தினை
இறுக இறுகப்பிடித்து
அவளின் மார்பகபிரதேசத்தில்
ஒடவிட்டுக்கொண்டிருந்தாள்.

இருவிதமான போதைகளுக்கு
மத்தியில்
தெளிவில்லாமல்
தெளிவாகி ஓடியதெனது
ஆசைப்புரவியினை
நடுநிசி நாய்கள்
வழ் வள் என குரைத்து
திசைத்திருப்பிவிட
ஓவிய பேரழகி மீண்டும்
சுவற்றுப்படமாகி
ஏமாற்றிவிட்டாள்.
.
எரிச்சல் மேலோங்கி
என் ஆழ்மனப் பேராசைகள்
குமுறிய பேரலையென
ஆவேச சிகரெட் ஒன்றினை எரித்து
தானாகவே அமைதியாக அணைந்தது.

வடகிழக்குத் தென்றலொன்று
என் தனிமைச் சாளரத்தை
முட்டி மோதி
தட்டிக் கத்தியது.

அட......என்ன இது மாயை?
இந்த நினைவுப் பேய்களின்
தொந்தரவு தாளமுடியவில்லையென
மீண்டுமொரு
நிறமற்ற கோப்பையில்
நிறமுள்ள மதுவை
ஊற்றி நிரப்பி
இதழில் கவ்வி கவ்வி
இரவை போதையாக்கி
விடியலில் தெளிவுற்றப்போதுதான்
எனக்குத் தெளிந்தது
நேற்று....
நான் யாருமற்ற
புறக்கணிப்பு விடுதியில்
தனிமைத்தனலில்
ஏக்கத்தின் கோப்பைக்குள்
சாம்பலாகினேன் என.......!


**

-இரா.சந்தோஷ் குமார்  

மேலும்

கடந்த மாதம் ஜூன்  30 தேதியோடு இந்த “எழுத்து “ இணையத்தளத்தில் இணைந்து மூன்று ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ளேன். மூன்று வருடங்களில் நிறைய எழுதி பழகி இருக்கிறேன்.  நிறைவான படைப்புகளை படைத்திருக்கிறேன். . நிறைய தோழர்களையும்.. நிறைய ஆசான்களையும்.. இலக்கிய  புலமை வாய்ந்தவர்களையும் பெற்று இருக்கிறேன். கூடவே    நிறைய மனகசப்புகளையும் அடைந்து இருக்கிறேன்.  நிறைய பக்குவங்களை பெற்று இருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு வரை இருந்த தோழர்களில் பலரும் இப்போது தளத்தில் எழுதுவதில்லை. நானும் கூட அதிக அளவில் படைப்புகளை பதிவு செய்ய இயலவில்லை. முன்பு இருந்த ஆரவாரம்.. பரபரப்பான இயக்கம், விமர்சன போர்கள், போட்டிகள் என எதுவும்  இப்போது இல்லை என்றாலும்.. எழுத்து தளத்தில் இன்னும் நான் மனநிறைவாக எழுதவே விரும்புகிறேன்.  உண்மையில் எழுத்து  அழகிய தமிழ் சொர்க்கம் தான் எனக்கு இப்போதும் எப்போதும். 


நன்றி ..! அனைவருக்கும்.. நன்றி..! 


-அன்பு நட்புடன்,
இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

கேள்வி-பதில் பகுதியில் விளக்கம் இருக்கிறது நண்பரே. அல்லது எழுத்துக்கு விடுகை அனுப்பி கேளுங்கள். அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. 05-Jul-2016 9:32 pm
வாழ்த்துக்கள் தோழரே ..... 05-Jul-2016 3:50 pm
நான் இந்த இணையத்திற்குள் புதிதாக இணைத்துள்ளேன். நான் ஓரளவு கவிதை எழுதுவேன். எனது கவிதையை எப்படி பதிவேற்றம் செய்வது என தெரியவில்லை. எனவே தாங்கள் எனக்கு உதவி செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 05-Jul-2016 3:50 pm
நன்றி தோழா..! 04-Jul-2016 11:19 pm

  மீன் பிடிக்கச் சென்றான்
கருவாடாய் திரும்புகிறான்.

--

வானம் நீந்துகிறது
தெப்பக் குளத்தில்..!

--
ஒரு பிணத்திற்கு
அஞ்சலி செலுத்துகிறது
நாளைய பிணங்கள்..!

--
வாழ்க்கை என்பது
மரணத்திற்கான தடம்..!

--
முடியாது என்று
ஒன்று உண்டு தம்பி..!
உன் நிழலில்
நீ நிற்க முடியாது

.--
**
இரா.சந்தோஷ் குமார்.  

மேலும்

அற்புதமான படைப்பு........ 08-Jun-2016 9:51 pm
தத்துவ முத்துச் சிதறல். அருமை நண்பரே. 08-Jun-2016 5:35 pm

எழுத்து நண்பர்கள் எல்லாரும் ஜனநாயக கடமையாற்றிவிட்டீர்களா ??..
நாமெல்லாம் கவிஞர்கள் , எழுத்தாளர்களுன்னு சொல்லிக்றோம்./ சொல்றாங்க
. எல்லாருக்கும் முன்னாடி நாம முன்மாதிரியா இருக்கனும் தானே.. ? 

  கடமை ஆற்றியவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆற்றாதவர்கள்...  தயவுசெய்து

வாக்குச்சாவடிக்கு... போங்க. மழை வந்தாலும்.. வெயில் அடிச்சாலும் பரவாயில்லை... குடை பிடித்தாவது வாக்களிக்க போங்க... ப்ளீஸ்...


--

இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

  நோட்டா எனும் எதிர்ப்பு குரல். 

 'நோட்டா' (NOTA-None Of The Above)  பட்டன், வாக்குப்பதிவு எந்திரத்தில், கடைசி வேட்பாளர் பெயருக்குக் கீழே பொருத்தப்பட்டிருக்கும்.அதாவது வாக்களிக்கும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நான் வெறுக்கிறேன் என பொருள்படக்கூடிய பொத்தானை அழுத்தி.. வாக்கு பதிவு செய்து.. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் வழங்கிய உரிமை.
ஒரு தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்களை மட்டுமல்ல.. ஒரு மாநில தேர்தல் களத்திலிருக்கும் எந்த ஒரு கட்சிகளையும் அதன் கொள்கை மற்றும் செயல்களை விரும்பாத ஒருவர் தனது எதிர்ப்புக் குரலை ஜனநாயக ரீதியாக.. சட்ட ரீதியாக  பதிவு செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பு. இந்த வாய்ப்பு எவ்வாறு  தேவையற்றதாக கருத முடியும்.நோட்டா-விற்கு வாக்களிப்பது எவ்வாறு பொறுப்பற்ற செயலாக இருக்கும். ? 

நோட்டா வாக்குகளை விட குறைந்த அளவு வாக்குகளை பெறும் வேட்பாளர்களில் எவர் அதிக வாக்குகளை பெற்றாரோ அவர் வெற்றி பெறுவதாக தேர்தல் ஆணையத்தின் விதி சொல்லப்பட்டாலும். எதிர்காலத்தில் தன்னெழுச்சியாக மக்கள்  நோட்டா வாக்கு மூலம் 100 சதவீதம் நோட்டா வாக்குகளை பதிவு செய்யும் புரட்சி நிகழ்ந்தால்...? ஏன் நிகழக்கூடாது. தற்போது இருக்கும் அரசியல் வாதிகளின் அராஜகம் , கொள்கையற்ற கூட்டணி, சந்தர்ப்பவாதம்.. போன்றவற்றால் வெறுப்புணர்ச்சி அடையும் மக்களின் மனநிலை தொடந்தால் நிச்சயம் நடக்கும் ஒருநாள். 
நோட்டா அறிமுகப்படுத்திய போதே... வாக்காளர்கள் தங்களது எதிர்ப்புக்குரலை வாக்கு எந்திரத்தின் மூலம் காட்டினார்கள்.  சமீபத்திய உதாரணமாக குறிப்பிட வேண்டுமென்றால் 2014 ம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில்.., தமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியது. தற்போது நடைப்பெறும் சட்டசபை தேர்தலுக்கான கருத்து கணிப்புகளிலும் நோட்டா வாக்குகள் 5  முதல் 19 சதவீதத்தில் பதிவாகும் என்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இது  ஒரு மாநில அல்லது தேசிய கட்சிக்கு கிடைக்ககூடிய வாக்கு எண்ணிக்கை.  இந்த சதவீதங்களை  கண்டு.. அரசியல் கட்சிகள் அச்சமடைய வேண்டும். இந்த நோட்டா வாக்கு சதவீதங்கள் தங்கள் கட்சிக்கு கிடைக்க  வேண்டுமெனில்.. நேர்மையான.. ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வேண்டுமெனும் பொறுப்பும் கடமையுணர்வும் வளரும். இந்த நோட்டா சதவீதங்களால் தோல்விப்பெறும் கட்சிகளும் சரி.. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி.. தங்கள் தவறுகளை திருத்தி அல்லது முடியாத பட்சத்தில் அரசியலிருந்து ஒதுங்கி,... நல்லவர்களுக்கு , இளைஞர்களுக்கு அரசியலில் வழிவிட நிர்பந்திக்கப்படுவார்கள்.  ஆக நோட்டா வாக்கு என்பது ஜனநாயக ரீதியாக வாக்காளர்கள் கொடுக்கக்கூடிய எச்சரிக்கை மணி. 
நோட்டா வாக்கு பொறுப்பற்ற செயலாக இருப்பதாக எண்ணினால், எந்த வாக்காளனும் மெனக்கெட்டு வெயிலில்  காத்திருந்து வரிசையில் நின்று வாக்களிக்க முன்வரமாட்டார்கள் . பொறுப்போடு. தன் எதிர்ப்பை பதிவு செய்ய முன்வருகிறான். அரசியலில் மாற்றம் வரவேண்டும். பணநாயகம் மாண்டு.. ஜனநாயகம் புத்துணர்வு பெற வேண்டுமென. தேசப்பக்தியோடு... கடமையாற்றுகிறான். இது எவ்வாறு தேவையற்றதாக இருக்கமுடியும். 

நோட்டா என்பது வெறும் சொல் அல்ல. வெறும் வெறுப்புணர்வுக்கான பொத்தான் அல்ல.. ஆயுதம்.. வாக்காளனின் ஆயுதம்.. எதிர்ப்புக்குரல் பதிவு செய்ய கிடைத்த பொக்கிஷம். நோட்டாவினால் சாக்கடை அரசியல்.. புனித நதியாக மாறும். மாற்றம் நிகழக்கூடிய காலம் வெகுதூரம் இல்லை. வெகு அருகிலும் இல்லை. ஆனால் மாற்றத்தை நிகழ்த்தக்கூடிய சக்தி நோட்டாவிற்கு உண்டு.. உண்டு.... உண்டு..!

-இரா.சந்தோஷ் குமார்.  

மேலும்

முதலில் வாக்கு பதிவு செய்யுங்கள்.பின்பு நாக்கு கடித்து அரசியல்வாதிகளை விமர்சிக்கலாம்.

வாக்கு செலுத்தாமல் அரசியல்வாதி மீது தாக்குதல் தொடுக்கும் யோக்கியதை
நம்மில் யாருக்குமில்லை. 

உப்பு இல்லா பண்டம் குப்பையில்தானிருக்கும். !
நம் வாக்கு இல்லா அரசியல் சாக்கடையில் தான் ஊறிக்கிடக்கும் .!


- இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

கவிதை தொக்கு- இல்


தோழர் கவிஜியின் புறக்கணித்தலின் நவீனம்.

இரா. சந்தோஷ் குமாரின் நெருப்பு புரவி

ஆகிய கவிதைகள் அணி வகுத்துள்ளன. 

இதற்கு முன் சுவை ஊட்டிய தோழர்களின் கவிதை பட்டியலுக்கு இங்கே சொடுக்கவும்.


கவிதை தொக்கு-இல் பங்கேற்க விருப்பமுள்ள கவிஞர்கள் தோழர் கவிஜியை தனி விடுகையில் தொடர்புக் கொண்டு விபரம் அறியலாம். 

நன்றி !

-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

கவிதை தொக்கு.  தொடரில் அண்மைச் சுவை ஊட்டியது தோழர் புனிதா வேளாங்கண்ணி. 

கவிதை தொக்கு-7 வாசித்து ரசனையாடுங்கள்.


மேலும்,
 கவிதை தொக்கு தொடரில் எழுத ஆர்வமுள்ள தோழர்கள்.. தோழர் கவிஜியை தொடர்பு கொள்ளவும். 
-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

மேலும்...
மேலே