எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மானிடம் நோக்கி....! 1
 
மாண்புமிகு மனித குலத்துக்குள் 
மறைபொருளாய் மௌனிக்கப்பட்ட 
மனிதாபிமானத் தேடல்களில்  
எனக்கான இடைவெளிகளை நிரப்பியவாறு 
என் பயணம் சூழலின் சூழ்நிலைகளை கடந்து செல்கிறது...!
 
சுவாசிக்கத்தெரிந்த ஜீவனெல்லாம் 
மறைமுகமாய் மறந்துகொண்டிருக்கும்
பழமை வாதங்களை 
தூசுதட்டி துகிலுரிய வைக்க நான் முயற்சிக்கவில்லை .....!
 
அவரவர் தியாகங்களுக்கும்,
தேவைகளுக்கும் தீர்ப்புச்சொல்ல
மனச்சாட்சியே மறைபொதிந்த நீதிமன்றம்
இதில் சாட்சி சொல்லவும் தகுதி அற்ற உறவுகள் நாம் 
ஆதலால்  
புத்திசொல்லி பொழுதுகளை வீணடிக்க விரும்பவில்லை....!  
 
இது எனக்கான பாதை என்பதால் 
திட்டமிடலுக்குள் தீப்பிடிக்கும் போதும் 
வரட்டு கௌரவங்களை இறக்கிவிட்டே செல்கிறேன் 
இயங்கியல் என் திசைகளை மாற்றலாம் 
சேருமிடத்தை  நானே தீர்மானித்துக் கொண்டதால் 
தூரம் என்னால் துரத்துப்பட்டுக் கொண்டே இருக்கும் ..!
 
அகிம்சை போதிக்க ஆயிரம் பேர் இருப்பினும்
இன்னும்  பாவப்பொதிகளோடு இறந்துகொண்டிருக்கும்
இதயம் அற்றவர்களின் நிழல்களை கூட மிதிக்காதீர்கள். 
நாளை நீங்களும்  உயிர்களைப் பிழியலாம்...!
 
இயற்கையோடு  வாழப்பழகிய ஆதிகால மனிதன்
இயந்திரமாய் போன இன்றைய சூழலுக்கு 
பொருத்தம் இல்லை ஆனால்
ஓரளவு மனிதனாய் வாழ்ந்து மறைந்துவிட்டான் 
கூர்ப்பியல் கொள்கைக்குள் நாகரிகம் வளர்ச்சிகண்டபோது
ஆடையால் மூடி அங்கத்தை மறைத்தான் 
ஆத்வாவையும் சேர்த்தே மறைத்தது நவீனம்...!
 
மூளைக்குள் மூலதனம் 
அடர்த்தியாய் அகலக்கால் பதிக்க 
கண்டுபிடிப்பும், கணனியுகமும் 
காற்றுக்கும் விலையை கொடுத்தது 
ஏறிக்கொண்டான் எல்லாவற்றிலும் 
இறக்கிவிட்டான் மானிட விழுமியங்களை.....!

தொடரும் ....!

பாவலர் வீ .சீராளன் 

மேலும்

நட்பின் சாரல்கள் !
---------------------------

ஒவ்வோர் கனவையும் உன்னதம் ஆக்கும் 
உன்றன் நட்பின் உயிர்மை - விடியல் 
அவ்வோர் நினைவையும் அகத்தில் நிறைக்கும்
அனிச்சம் பூவின் மகிமை !

பூவில் வரைந்த ஓவியம் போல்'எழில் 
புன்னகை காட்டும் புருவம் - தமிழ் 
பாவில் வடித்த பண்ணிசை போல்'எழில் 
பண்பினை ஊட்டும் உருவம் !

வேதம் சொல்லும் விழிகள் இரண்டும் 
வெட்சிப் பூக்களின் தாது - அழகுக் 
காதில் ஜொலிக்கும் கம்மல்கள் இரண்டும் 
கைக்கிளைக் கிள்ளையின் தூது !

படத்தில் காணும் பாவை இவளும் 
பாடும் கம்பன் கவிதான் - மனத் 
தடத்தில் நாணும் பூவை இவளும் 
தங்கத் தருவின் கனிதான் ! 

நித்தம் ஓர்கவி நெஞ்சில் எழுதிடும் 
நினைவுகள் தந்தவள் நீதான் - அதைச் 
சத்தம் இன்றியே சரணப் பாடிடும் 
சந்தக் குயிலும் நீதான் !

செவ்விதழ் சிந்திய செந்தேன் புன்னகை 
செத்தும் மாறா ஓவியம் - உன்னைச் 
செதுக்கும் விரல்கள் சிந்தும் வியர்வையால் 
செழுங்கவி எழுதினால் காவியம் !

எத்தனை பிறவிகள் எடுத்தும் உயிரில் 
இருந்திடும் உந்தன் அன்பு - உடல் 
செத்தும் அழியா சுகந்தம் காக்கும்
சுடலையில் எந்தன் என்பு !

பாவலர் ,வீ. சீராளன் 

மேலும்

அழகான இனிமையாய படைப்பு.... 16-Nov-2015 7:29 pm
வணக்கம் சுசிந்திரன் ! தங்கள் இனிய கருத்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ...மன்னிக்கவும் மூவசை கொண்ட ஒரு சிந்தும் எழுதினேன் அதில் ஒரு பாடல் இங்கே வந்துவிட்டது அதுதான் சந்தம் மாறிவிட்டது ...இதோ அதனை அழித்து விட்டேன் நன்றி ! 08-Nov-2015 1:22 am
தங்கள் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 08-Nov-2015 1:20 am
மிக்க நன்றி ,,,,,இது தமிழ் அருவி ஐயா அருந்துங்கள் 08-Nov-2015 1:19 am

மேலே