எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Hiox நிறுவனத்துக்கு  மனமார்ந்த நல்வாழ்த்துகள் !!!

மேலும்

ஆம் ! 17-Nov-2017 8:18 pm
ஓ,பிறந்தநாளா ? 17-Nov-2017 7:25 pm
எதற்காம்? 17-Nov-2017 7:23 pm

  செம்மொழித் தமிழ்.....!!!

```````````````````````````````````````
உலக மொழிகள்:
````````````````````````````
உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.“எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே” என்று வள்ளலார் அருள்கிறார்.
செம்மொழிகள்:
`````````````````````````
திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல்:டாக்டர் கிரௌல், “ தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று மொழிந்து இன்புற்றார்.
தமிழின் தொன்மை:
```````````````````````````````````
உலகில் பழமையான நிலபகுதியான “குமரிக்கண்டத்தில்” தமிழ் தோன்றியதாக “தண்டியலங்கார” மேற்கோள் செய்யுள் கூறுகிறது.
“ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி 
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் 
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது 
தன்னே ரிலாத தமிழ்”
தமிழின் மேன்மை:
````````````````````````````````
தமிழ் மெல்லோசை மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.
தமிழ் மொழியின் தாய்மை:
```````````````````````````````````````````
பெற்றோரை குறிக்கும் “அம்மை, அப்பன்” என்னும் குமரிநாட்டுத்(நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.
தமிழ் மொழியின் தூய்மை:
````````````````````````````````````````````
“தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்” என்று கூறினார் கால்டுவெல்.
தமிழ் மொழியின் செம்மை:
````````````````````````````````````````````
மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், “செந்தமிழ்” எனப்பட்டது.
தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி:
````````````````````````````````````````````````````````````
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” - தொல்காப்பியம்தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.தமிழ் மொழியின் இலக்கண நிறைவு:எல்லா மொழிகளும் “எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும்” கூறுகிறது. அதனையும் “அகம், புறம்” என இருவகையாகப் பகுத்துள்ளது.
தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு:
``````````````````````````````````````````````````````
“கலிப்பா” முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.
தமிழ் மொழியின் அணிச் சிறப்பு:
`````````````````````````````````````````````````````
புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க “உவமை, உருவகம்” முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்தி பாடல்களை இயற்றியுள்ளார்கள்.  

மேலும்

சகோதரியே , வணக்கம். தங்கள் கவிதைகள் கட்டுரைகள் எனக்கு முதுமைக்கு காலத்தில் ஆறுதலாய் இருந்தது கவிதை நயம் கண்டு தினமும் தங்கள் இலக்கிய படைப்புகளை மீண்டும் படித்தேன் தமிழ் அன்னை தங்களுக்கு துணை இருக்க பிரார்த்திக்கிறேன் 20-Sep-2016 3:08 am
வாழ்த்துக்கள் 29-Apr-2016 7:20 am
வாழ்த்துக்கள் அம்மா 28-Apr-2016 11:01 am
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் 27-Apr-2016 6:58 am

அவள் விகடனில் வெளியான ஒரு பக்கக் கதையைப் படிக்க .......


மேலும்

மிக்க நன்றி ! 09-Apr-2016 6:41 pm
வாழ்த்துகள் 09-Apr-2016 1:10 am
மிக்க நன்றி தோழி! 08-Apr-2016 10:17 pm
தோழிக்கு வாழ்த்துக்கள்..! 08-Apr-2016 2:26 pm

நான் எழுதிய குறட்பாக்களை மருத்துவர் கன்னியப்பன் ஐயா அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து PoemHunter.com -ல் பதிந்துள்ளார்கள் .

அழகான மொழிபெயர்ப்பு ...!!
கூடவே என் படைப்பையும் பதிவிட்டுள்ளார்கள் என் பெயருடன் .
அதுமட்டுமல்ல .... பதில் கருத்தில் என்னைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள் ....!!
இவர்களைப் போன்ற சான்றோர்களிடம் திருடி படைப்பைப் போடுபவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் ...!!

சிரம் தாழ்ந்த நன்றி ஐயா !

Couplets On Youthful Pleasantries! - Poem by Dr.V.K. கன்னியப்பன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
In the pubertal age, pimple crops up 
beautifully over crystal glassy face! 1

Compared to the sweetness of the teen girl's lips 
which speak pleasingly, fruit will lose its sweetness! 2

By seeing the coniferous bud unfurling, 
Write poems and accumulate! 3

Lotus shall bloom with the arising rays of sun; 
O' sun! arise! You are my support! 4

Sweet elating youthful thoughts, 
Will it come ripened hereafter? 5

With shivering chillness, get into the pond, 
Plunge and take bath with rejoice! 6

Subject! predicate! Arise to write 
and learn everything beautifully! 7

Pray the cow tied in the yard 
as and after you get up in the morning! 8

Climbing up the steps and imploring the God, 
read the lessons energetically! 9

When you see the atrocity, arouse with anger, 
Offer the severe punishment! 10 

Ref: குறட்பா வித்தகம் by சியாமளா ராஜசேகர், Chennai. 

These couplet poems 'Couplets on youthful pleasantries! ' are the translation by me of 10 Tamil couplets of Poet.siyaamaLa raajasEkar of Chennai.

குறட்பா வித்தகம்

பருவ வயதில் பளிங்கு முகத்தில் 
அரும்பு மழகாய்ப் பரு.1

கனிவாய்ப் பழகிடும் கன்னி யிதழின் 
இனிப்பினில் தோற்கும் கனி.2

குவிந்த அரும்பும் விரிந்திடக் கண்டு 
கவிதை யெழுதிக் குவி.3

கதிரின் வரவில் கமலம் மலரும் 
உதித்திடு நீயே கதி! 4

இனிமை ததும்பும் இளமை நினைவு 
கனிந்து வருமோ இனி? 5

குளிரும் நடுக்கக் குளத்தி லிறங்கிக் 
களிப்புற முங்கிக் குளி.6

எழுவாய் பயனிலை யாவு மழகாய் 
எழுதிப் பழக எழு.7

தொழுவத்தில் கட்டி யிருக்கும் பசுவை 
எழுந்ததும் கண்டு தொழு.8

படியேறிச் சென்று பகவானை வேண்டித் 
துடிப்புடன் பாடம் படி.9

கொடுமையைக் கண்டால் கொதித்துக் கிளர்ந்து 
கடுந்தண்ட னையைக் கொடு.10 - சியாமளா ராஜசேகர்


குறட்பா வித்தகம்: முதற்சொல் முடிவில் 
[இந்த உத்தியில் முதற்சீரில் வரும் சொல் ஈற்றுச் சீர்களில் வேறு பொருளில் வரும்.]

மேலும்

கவிதைத் திருட்டு சம்பந்தமாக 'குருஜி' என்ற சிறுகதை இன்று பதிந்துள்ளேன் நேரம் இருப்பின் பார்க்கவும். 22-Dec-2015 1:58 pm
மிகவும் நன்றி முரளி சார்! ஐயா அவர்கள் வெண்பாக்களைக் கூட அழகாய் மொழி மாற்றம் செய்துவிடுவார்கள்! இதில் என் வெண்பாக்கள் சிலதும் அடங்கும் . 22-Dec-2015 1:46 pm
மிகவும் நன்றி ! 22-Dec-2015 1:43 pm
மிக்க நன்றி சாந்தி ! 22-Dec-2015 1:42 pm

11- வது ஆண்டு  விழாவைக் கொண்டாடும் ஹயாக்ஸ் நிறுவனத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !  மென்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் !

மேலும்

வாழ்த்துக்கள் தோழமையே ..! 29-Dec-2015 1:01 pm
பாராட்டுக்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நன்றி. 29-Dec-2015 12:40 am
வாழ்த்துக்கள். 18-Nov-2015 6:04 pm
வாழ்த்துக்கள்! 17-Nov-2015 11:23 pm

நான்மறை போற்றும் நாயகா வாழ்க 
நால்வரும் பாடிய நாதனே வாழ்க 
நாற்கவி பேசிடும் நாதமே வாழ்க 
நாதாந்த சோதியின் நல்லொளி வாழ்க ....!!!


மேலும்

வாழ்க வாழ்க வளர்க வளர்க உம கவிதை குறைவிலா மங்கலக் குணத்தன் ஆதலின் நிறைமலம் அநாதியின் நீங்கி நிற்றலின் அறைகுவர் சிவனென அறிவின் மேலவர் 09-Sep-2015 6:47 pm

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு ( அவள் அப்படித்தான் )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை உணர்ந்து கொண்டேன் . என் அபிமான படைப்பாளிகளுள் ஒருவரான பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளை திறனாய்வு செய்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன் . நிறைய நாள்கள் இருக்கின்றனவே நாளை பார்த்துக் கொள்ளலாம் , நாளை பார்த்துக் கொள்ளலாம் என்றே நாட்களை நகர்த்தி விட்டேன் . இன்று கடைசி நாளில் ஒன்றாவது சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன் .

பொள்ளாச்சி அபி அவர்களின் பரிசு பெற்ற சிறுகதையான " அவள் அப்படித்தான் " என்ற சிறுகதை என் மனதைத் தொட்ட சிறுகதையாகும் . ஒரு சிறுகதையை சிறப்பாக காட்சிப் படுத்தும் சாதுர்யம் பொள்ளாச்சி அபிக்கு கை வந்த கலையாகும் . சாமான்ய மக்களின் வாழ்வியல் அவலங்களை அலசி தீர்வு காண்பதில் அவருக்கு நிகர் அவரே . அடித்தட்டு மக்களின் அபிலாசைகளையும் , ஏக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுவதில் கைதேர்ந்தவர் .

பொழுது போக்காக மட்டுமில்லாமல் சமூக அக்கறை , சமூக விழிப்புணர்வூட்டுவதாக அமைந்திருக்கும் . " அவள் அப்படித்தான் " என்ற இக்கதையும் இதற்கு விதிவிலக்கல்ல .

<< “ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?” >>

இந்த முதல் வரியைப் படித்ததுமே காமாட்சி என்ற பெண்ணின் மேல் கெட்ட எண்ணமே உண்டானது . மிகவும் கொடூரமானவள் என்றே நினைக்கத் தோன்றியது . மருத்துவமனையில் அவளைப் பாத்துவிட்டு வந்த பெண்மணிகள் ஏன் அப்படி பேசிக்கொள்ளவேண்டும் என்று மனம் பலவாறாய் கணக்குப் போட்டது .

கோபாலுவுக்கு முதன் முதலாய் ஆத்தா மனம் விட்டு பேசிய காட்சி சித்திரமாய்த் தெரிய .....
அக்காட்சி வாசிப்போர் மனத்திரையிலும் நிழற்படமாய் ஓடியது . கிடா வெட்டி , கீறி , சுத்தப்படுத்தி தோலைக்கிழித்து எடுத்து பக்குவமாய் அதை விற்பனைக்கு மாட்டி வைக்கும் லாவகத்தை வெகு அழகாய் காட்டியுள்ளார் ஆசிரியர்.

இரக்கம் மிகுந்த பெண்கள் இப்படி உயிர்களைக் கொல்வார்களா என்று கோபாலின் மனதில் ஓடிய சந்தேகத்திற்கு காமாட்சி சொன்ன விளக்கம் மனதை தைத்தது . பெற்று , வளர்த்து ஆளாக்கிய பிள்ளை மனைவி வந்தபின் பெற்றவளைப் புறக்கணித்தால் என்ன பாடுபடும் என்பதை அவள் வார்த்தைகள் பிரதி பலித்தன . " எனக்கு கொள்ளி போடக் கூட அவன் வரக்கூடாதுடா ..."
என்று ஒரு தாய் சொன்னால் அந்த உள்ளம் பட்ட வேதனையை வார்த்தைகளால் சொல்லவும் வேண்டுமோ ....? ஆனால் சமுதாயத்தில் இப்படி பட்ட பிள்ளைகள் இருக்கத்தான் செய்கின்றனர் .

யாரிடமும் கையேந்தாமல் , தன கையே தனக்குதவி என்று உழைத்து தன வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொண்டு , தன்னிடம் பரிவு காட்டிய கோபாலுவையும் ஆதரவாய் பார்த்துக் கொண்ட தாயுள்ளம் போற்றக்குரியது . ஆனால் அவனிடமும் தப்பு செய்தால் தண்டிப்பேன் என்று திட்டவட்டமாகக் கூறும் அவளின் இயல்பு ....யாரிடமும் கறாராய் இருக்கும் மனநிலை ...அதேசமயம் மீதியானவற்றை அக்கம் பக்கத்தார்க்கு இனாமாய் கொடுக்கும் கருணையுள்ளம் ,
வாடிக்கையாளரிடம் பேசும் சாதுர்யம் என எல்லாமே அழகாய் சுட்டியுள்ளார் கதாசிரியர் .

முதல் வாடிக்கையாளர் வந்துவிட்டார்.“பை கொண்டு வந்திருக்கீங்கல்லே.,” ஆத்தாவிடம் இறைச்சி வாங்குபவர்கள் நிச்சயம் பை கொண்டு வரவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
படிக்காத பெண்மணியை இருந்தாலும் என்ன ஒரு விழிப்புணர்வு ! நெகிழிப் பை தவிர்க்க வேண்டும் என்பதில் எவ்வளவு கவனம் ...?

இறுகிய மனமுள்ளவளாய் சித்தரிக்கப்பட்டாலும் அந்தப் பாலையிலும் பாலூறும் உள்ளம் கண்டு மனம் நெகிழ்ந்தது .

“தம்பி..ஆத்தா இருக்குற வீட்டையும்,பேங்க்லே இருக்கற ரெண்டு லட்ச ரூபாயை யும் உம்பேர்லே ஆத்தா எழுதி வெச்சிருக்கு..!”
என்று சொன்னபோது அதலாம் எனக்கு எதுக்கு ? ஆபரேசனுக்கு பயன் படுத்திக்குங்க என்று சொன்ன கோபாலின் உள்ளம் விசாலமானது .
பாசத்துக்கு ஏங்கி அது கிடைக்காத பட்சத்தில் ஆதரவாய் இருந்த பிள்ளைக்கு தன சேமிப்பை எழுதி வைத்த காமாட்சியின் அன்பு புனிதமானது . அவள் உடல் உறுப்புகள் அத்தனையும் தானம் செய்ய முன்பே எழுதிக் கொடுத்த காமாட்சி மதிப்பில் உயர்ந்துவிட்டாள் .

சிலரை நாம் தவறாகப் புரிந்து வைத்திருப்போம் . ஆனால் அவர்களோ பண்பின் சிகரமாய் இருப்பார்கள் . பலா வெளியில் கரடுமுரடாய் தோன்றினாலும் உள்ளே சுளை தித்திப்பதில்லையா அதுபோல் அவள் அப்படித்தான் .... !!

கதைக்களத்தைக் கண்முன் காட்டுவதிலும் , கதை படிக்கிறோம் என்ற உணர்வு ஏற்படாமல்
கதா பாத்திரங்களோடு ஒன்ற வைத்துவிடும் தனித்தன்மை பொள்ளாச்சி அபிக்கு உண்டு .
சிறுகதை வானில் பூரண நிலவாய் உலா வர வாழ்த்துக்கள் !மேலும்

ஓஹோ ...அப்படியாப்பா ....?? இது எனக்குத் தெரியாமல் போச்சே ....!! பன்னிரண்டு மணிக்குள் பதிவு செய்துவிட வேண்டுமென பகீரதப் பிரயத்தனம் செய்தேன் .... பலனில்லை ....!! கவிதையில் பதிந்துப் பார்த்தேன் ; சிறுகதைப் பகுதியில் பதிந்துப் பார்த்தேன் ; கட்டுரையில் பதிந்துப் பார்த்தேன் ; ஒன்றும் நடக்கவில்லை . நொந்து விட்டேன் . முடிவில் எண்ணத்தில் பதிந்து விட்டேன் . போட்டிக்காக அல்ல . என் அபிமான எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் வாசகர் வட்டம் ஆர்வமுடன் நடத்துவதில் என் பங்கும் அணுவளவேணும் இருக்க வேண்டும் என்ற ஆவலினால் ! ஆனால் என் முயற்சி பலிக்கவில்லை . அதனால் இங்கு பதிவிட்டு திருப்தி பட்டுக் கொண்டேன் . இப்போதுதான் உன் மூலம் விடை கிடைத்து விட்டதே .... அங்கேயும் பதிந்து விடுவேன் . மிக்க நன்றிப்பா ....!! 15-Jun-2015 7:04 pm
செய்தல் =செய்தால் 15-Jun-2015 4:40 pm
ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...? // இவ்வரிக்கு முன்னும் பின்னும் இருக்கும் greater then மற்றும் small then குறிகள் வெப்சைட் உருவாக்க html கோடிங் க்கு பயன்படும் குறிகள் .இக்குறிகள் படைப்பு மற்றும் கருத்து பகுதியில் அனுமதிப்பது இல்லை . அது நீக்கி பதிவு செய்தல் பதிவாகும் அம்மா . 15-Jun-2015 4:40 pm
காலம் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை உணர்ந்து கொண்டேன் . // ஆமாம் அக்கா.. சனி அன்று தான் அபி அய்யாவின் 10 சிறுகதைகளையும் வாசித்து கருத்து பதிந்தேன்.. மறு நாள் எழுதலாம் என்றால் அதற்குள் தளம் வர முடியவில்லை.. காலம் யாருக்காவும் காத்திருக்காது தான்.. எனினும் அய்யாவின் 10 சிறுகதைகளையும் வாசித்து கற்றுக் கொள்ள முடிந்ததே மனம் நிம்மதியாக உள்ளது.. ராம் வசந்த் அண்ணாவுக்கும் என் நன்றிகள்..! -------------------------------------------------------------------------- வாழ்த்துக்கள் அக்கா..! 15-Jun-2015 9:29 am

நான் பொள்ளாச்சி அபி சிறுகதைக்கு திறனாய்வு எழுதிப் பதிந்தால் பதிவாகவில்லை . முக்கால் மணிநேரப் போராட்டம் . விட்டுவிட்டேன் . ஏனென்று தெரியவில்லை .
"கவிதையில் HTML பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது எழுத்து விதிமுறைக்கு எதிரானது .
கவிதை சமர்ப்பிக்கப்படவில்லை." எத்தனை முறை முயன்றும் இப்படித்தான் வருகிறது . ஏன் இப்படியென்று புரியவில்லை . கடைசி நேரத்தில் எழுதினால் இப்படித்தான் ஆகுமோ ....??

மேலும்

ஆம், கடைசி நேர அவசரத்தில் இப்படி நடக்கலாம்..... நாளை காலை முயற்சி செய்யுங்கள். 15-Jun-2015 12:59 am

வண்ண வடக்கொளி வானத்தில் வட்டமிட்டுக்
கண்ணைக் கவரும் கலைநிகழ்ச்சி ! - அண்ணாந்துப்
பார்த்து ரசித்திட பாரிலுள் ளோருள்ளம்
ஈர்த்திடுங் காட்சி இனிது .

மேலும்

தமிழினிது தவழ் குழவியின் மொழியினிது அலையினிது ஆலைகரும்பினிது அதனினும் இனிது அருமை அக்காவின் வெண்பா இனிது 21-Mar-2015 12:11 pm
படமினிது பாட்டினிது (Vivek )பாரதியின் பதிலினிது 21-Mar-2015 12:11 pm
வடக்கின் ஒளியினிது வானும் இனிது அடடா அதைவிட அம்மா - படத்தோடு உங்கள் கவியினிது உம்பிள்ளை சொல்கிறேன் தங்கக் கவியேஎன் தாய் எழிலாய்க் கவிகள் எழுதிடும் தாயே பொழிலாய்க் கவிகள் பொழிவாய் - அழியாத யாப்பை அளந்தேதான் யாத்திடுவாய் காவியம் பூப்பேன் உனதருளால் பூத்து 21-Mar-2015 11:47 am

உத்தர வின்றிமேகம் உள்நுழையா மல்தடுக்க
பத்திரமாய் மூடிப் பதுங்கிடும் - சத்தமின்றி
கூடார மிட்டுக் குளிர்க்கம்ப ளம்போர்த்தி
ஆடாமல் தூங்கும் மலை .

மேலும்

தூங்கும் மலை... மிகவும் அருமை ! தூங்கும் சூரியன்...இரவு ( அற்புதம் அன்றோ !) (தூம யோனிகள்...மேகங்கள் வர யார் உத்தரவு ம் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. இயற்கை தான்தோன்றிகள் ! கனைகடல் விட்ட ஏப்ப ஆவியோ மேகங்கள் ! ) 14-Mar-2015 11:52 am
மேலும்...

மேலே