எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 இந்த தளத்தில் கட்டுரைத் தொடராக வெளி வந்த எனது படைப்புக்கு விருது. இதனை எழுத்து தளத்திற்கு காணிக்கை ஆகுகிறேன்.படைப்பின் இலக்கிய விருது - 2016 : முடிவுகள் அறிவிப்பு
------------------------------------------------------------------------------

அன்புள்ளம் கொண்ட தோழர் தோழமைகள் அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கங்கள்...

நமது படைப்பு குழுமம் இப்போது அடுத்தகட்ட நகர்த்தலுக்கு உயர்ந்து ஒவ்வொரு வருடமும் தமிழில் சிறந்த இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சிறந்த இலக்கியத்துக்கான விருது கொடுத்து கவுரவிக்க திட்டமிட்டு இருந்தது. அதன்படி அறிவிப்பு செய்து நூல் வெளியிட்ட படைப்பாளிகளை தங்களது நூல்களை அனுப்ப சொல்லி இருந்தோம். விதிமுறைகளுக்குட்பட்டு இருந்த நூல்களை நம் குழுவின் தனி ஆய்வுக்குழு வந்த அனைத்து நூல்களையும் ஆய்வு செய்து அதில் சிறந்த நூல்களை தேர்வு செய்து அளித்து இருக்கிறார்கள்.

படைப்பின் இலக்கிய விருது - 2016 ன் முடிவுகள் இதோ.

சிறந்த படைப்புகள்:
~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதை: உமை பற்குணரஞ்சன்--> கனவோடு புதைந்தவர்கள்
சிறுகதை : பொள்ளாச்சி அபி-->எங்கேயும் எப்போதும்
வாழ்வியல்/புதினம் : கட்டாரி-->முதுகெலும்பி
கட்டுரை: தா.ஜோசப் ஜூலியஸ்-->ஆட்டிப்படைக்கும் சிந்தனைகள்

மேலே தேர்வான நான்கு படைப்பாளிகளுக்கும் விருது+ 3000 ரூபாய் பணம்+சான்றிதழ் + பொன்னாடை அளித்து நமது ஆண்டுவிழாவில் சிறப்பிக்கப்படும்.

சிறந்த படைப்புகள்:(சிறப்பு பரிசு)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதை: கா.ந கல்யாணசுந்தரம்--> மனசெல்லாம்
சிறுகதை : தேவா சுப்பையா-->படைப்புகள் விற்பனைக்கு
நாவல்: ஆண்டோ கால்பட் --> ஒற்று
கட்டுரை: த பார்த்திபன் --> மார்க்சின் மூலதனம்

மேலே தேர்வான நான்கு படைப்பாளிகளுக்கும் விருது+சான்றிதழ் + பொன்னாடை அளித்து நமது ஆண்டுவிழாவில் சிறப்பிக்கப்படும்.

இப்பெருமைமிகு விருது தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் படைப்பு குழுமத்தின் சார்பாகவும் உங்களின் சார்பாகவும் வாழ்த்துகளைக் கூறி பாராட்டி மகிழ்கிறோம்.

இவ்விருது இனி ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படும். இன்னும் கூட உங்களின் ஆதரவு கரங்களின் வலிமைக்கேற்ப அடுத்தாண்டு இதற்கான பரிசுத்தொகையை மிக அதிகமாக்கப்படும். அது படைப்பாளிகளுக்கு பயன்பெறும் வகையில் கொடுக்கப்படும்.

இப்படி நாம் மேற்கொள்ள காரணம் வளரும் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை வெறும் எழுத்துகளாக மட்டுமே வைத்துக்கொண்டு இருக்காமல் அதை ஆவணப்படுத்தும் வகையில் நூல் வெளியிட ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்டதே...

படைப்பு - சமூகத்தின் இணைப்பு என்பது எல்லா வகையிலும் எடுத்தாளப்படும் என்பதை இன்னும் பல நிகழ்வுகள் இது போல உங்களுக்காக காத்திருக்கிறது.

விழாவுக்கு தயாராகுங்கள்...

வாழ்த்துக்கள்...

வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.

மேலும்

தங்கள் படைப்பு .ஆட்டிப்படைக்கும் சிந்தனைகள் விருது தேர்வில் வெற்றிபெற்றமைக்கு பாராட்டுக்கள் . என் குடும்பத்தினர் சார்பிலும் இலக்கிய நண்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் 29-Aug-2017 5:38 am
மிக்க நன்றி 24-Aug-2017 11:46 am
மிக்க நன்றி 24-Aug-2017 11:45 am
மிக்க நன்றி 24-Aug-2017 11:44 am

  திருக்குறளும் திருமந்திரமும் ஆய்வுக் கட்டுரைத் தொடர்  ....ஆதரவு   வேண்டுகிறேன் !


திருவள்ளுவரைப் போலவே திருமூலரும் சமஸ்கிருதம் பயின்றவர். திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருவந்தாதி 26 ஆம் பாடலில் திருமூலர் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களும் நிரம்பப் பெற்ற தமிழ்மறைகளை, வடமொழி வேதங்களாய்த் தழுவி, “தமிழாகமம்” எனப் போற்றப்படும் திருமந்திரப் பனுவலை இயற்றினர் என்று கூறுவதால், இவரது வடமொழிப் புலமையும் வேதங்களைப் புரிந்து கொண்ட பாண்மையும் விளங்கும். 
இறைவனால் அருளிச் செய்யப்பட்ட ஆகமங்கள் தமிழிலும் வடமொழியிலும் ஒப்ப அமைந்து இருந்ததோடு, இறைவனியல்பை உலக மாந்தர் உணர்ந்து உய்தி பெறும் வண்ணம் தமிழிலும் வடமொழியிலும் இறை நூலாகிய அருள் நூல்களை அமைத்திருந்தனர்..  

மேலும்

மிக்க நன்றி . தொடர்ந்து ஆதரவு தாருங்கள். 27-May-2016 1:01 pm
மிக்க நன்றி . தொடர்ந்து ஆதரவு தாருங்கள். 27-May-2016 1:01 pm
தங்கள் படைப்பு போற்றுதற்குரியது தொடரட்டும் உமது .தமிழ் இலக்கியப் படைப்புகள் நன்றி 25-May-2016 5:05 pm
திருமூலநாயனார் அருளிய திருமந்திரமாலை : அறம் பேசப்படுகிறது . தத்துவம் பேசப்படுகிறது சமயம் பேசப்படுகிறது . வாழ்வுக்கு வழிகாட்டியாக கொள்ளலாம் . தங்கள் படைப்பு போற்றுmizhதற்குரியது தொடரட்டும் உமது .தமிழ் இலக்கியப் படைப்புகள் நன்றி . . 25-May-2016 5:04 pm

  இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி ஆய்ந்தொ மெனில் அதனை 

மதுரையில் இறைவனே தலைமைப் புலவனாக இருந்து சங்கத் தமிழை வளர்த்தார் 

என்பதால் மண்ணுலகில் உள்ள எல்லா மொழிகளிலும் உயர்ந்த மொழி எனச் சொல்லும் 

திருவிளையாடல் புராணத்தில். 

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து 

பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை 

மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் 

எண்ணிடப்பட கிடந்ததா எண்ணவும் படுமோ 

(86. திருவிளையாடற்புராணம், மதுரக் காண்டம்) 

என்பது பரஞ்சோதி முனிவர் வாக்கு. 

தமிழை, அருந்தமிழ், உரைபெறுதமிழ், தண்டமிழ், தீந்தமிழ், பசுந்தமிழ், பாரொடுதிசை பரவிய 

தமிழ், முத்தமிழ், வேதத்தமிழ் என்றெல்லாம் கூறிய அவர், 

அதனுடன் நில்லாமல், தமிழின் சுவையை திருச் செவியால் கேட்டுத் திளைக்கவுமே 

இறைவன் இரத்தின சபை, பொன்னம்பலம், வெள்ளிமன்று, தாமிர சபை, சித்திர சபை என்று 

திருவாலங்காடு தொடங்கித் தில்லை, மதுரை, திருனெல்வேலி, திருக்குற்றாலம் என்றுள்ள 

தலங்களில் உள்ள சபைகளில் தெற்கு நோக்கித் திரு நடனம் ஆடுகிறான். தெற்கில், சந்தன 

மணம் வீசும் தென்றல் காற்றை மடுக்கவும் என்பதை, 

“கடுக்க வின்பெறு கண்டனும் தெந்திசை நோக்கி 

அடுக்க வந்துவந் தாடுவான்; ஆடலின் இளைப்பு 

விடுக்க ஆரமென் கால்திரு முகத்திடை வீசி 

மடுக்க வும்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ? . 

(88. திருவிளையாடற்புராணம், மதுரைக் காண்டம்) கூறுகிறது. 

இவ்வாறு ”தொன்மை மிக்க உலக மொழிகள் அனைத்திலும் தமிழே, தொன்மை, மென்மை, 

தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இயன்மை, வியன்மை, வளமை, இளமை என்னும் 

பல்வகைச் சிறப்புகளைக் கொண்டது” என்று மொழி்ஞாயிறு ஞா. தேவ நேயப் பாவாணர் 

தமிழின் சிறப்புகளை விளக்கியுள்ளார். இப்படிப் பத்து வகை ‘மை’ யுங்கொண்ட நம் தமிழ், 

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு, எனப் பாரதியாரால் 

போற்றப்பட்டு வந்த தமிழ் ”இனி மெல்ல சாகும்” என்று அவரே வருத்தமுடன் கூறும் 

அளவுக்கு வளர்ச்சி அடையாமல் தேய்ந்து கொண்டு இருக்கிறது. 

“அரசியல் மொழியாக அரசாங்க மொழியாக, வரிசையுறு சட்ட மன்ற மொழியாக, வையமறி 

மொழியதாகத்” தமிழ்மொழி இருக்க வேண்டும் என்று தமிழியக்கத்தில் பாவேந்தர் 

பாரதிதாசன் வலியுறுத்தினார். ஆனல், அவரே,”தமிழ் நாட்டுத் தெருக்களில்தான் தமிழே 

இல்லை” என்று ஆதங்கப்பட்டது இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது. 

உலகில், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என மூன்று மிகச் சிறிய நாடுகளில் 

மட்டும் பேசப்பட்டு வந்த ஆங்கிலம், உலகப் பொது மொழியாக இன்று திகழ்கிறது. 

உண்மையில் ஏழு கோடி மக்களால் பேசப்பட்டு வந்த தமிழ் இன்று இரண்டு கோடிக்கும் 

குறைவானவர்களால் பேசப்பட்டு வருகிறது என்பது தாய் மொழியின் முக்கியத்துவத்தை 

தமிழர்கள் அறவே மதிக்காத பாங்கினையே படம் பிடித்துக் காட்டுகிறது. 

”செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்று தேச 

ஒற்றுமைக்கனவு கண்ட பாரதியின் கனவினை பொய்யாக்கும் வண்ணம், காங்கிரஸ் அரசால் 

கட்டாய இந்திப்பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் 

‘தனித் தமிழ் நாடு’ கோரிக்கை தந்தை பெரியாரால் முன் வைக்கப்பட்டது. 

பார்ப்பனரல்லாதாரை இழிவாகக் கருதும் சாதி அமைப்பும், பெண்ணை ஆணுக்கு 

அடிமைப்படுத்தும் நடைமுறையில் உள்ள திருமணச் சடங்கும், பழந்தமிழருக்கு 

அயலானவை என பழந்தமிழ் இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு பெரியாரால் 

வாதிக்கப்பட்டது.என்றாலும் இந்தி திணிப்பு இன்றளவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

தமிழரும் இந்தியை தன் மயமாக்கிக் கொண்டு தாய்த் தமிழுக்கு அது இழைக்கப்படும் 

துரோகம் என்பது தெரியாமல் பெரும் பதவி மோகத்தில் உலவி வருகின்றனர். 

மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது. அதை யாராலும் தடுக்க இயலாது. ஆயினும், மாற்றம் 

வரலாற்றில் தன்னிச்சையாக நிகழ்வதில்லை. ஒருமுகப்பட்ட மனித முயற்சியை, 

தலையீட்டை அது வேண்டுகிறது மனிதனைப் போலவே மனித சமுதாயமும் மாற வல்லது. 

நம் தமிழ் சமுதாயம் மாறுவத்யற்குக் காரணம், அது யாரைச் சாந்து இருக்கிறதோ அந்த 

சார்புதான் காரணம். தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழ் சமுதாயம் இன்று ஆங்கில 

மொழி மோகத்தில் தன்னையே மாற்றிக் கொண்டுள்ளது.. 

நம்மைப் பெற்றது தமிழ், வளர்த்தது தமிழ், தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ் 

என்பதால், தாய் மொழியில் கல்வியை வளர்த்தல் யாவர்க்கும் இனிதே பயக்கும் ஆனால், 

.தமிழக இளைஞர்கள் தமிழ் படிப்பதற்குப் பதில் ஆங்கில வழி கல்வியில் பள்ளிப் படிப்பும், 

பட்டப்படிப்பு படிக்கும் போது, ஃபிரென்சு, ஜெர்மன், ஹிந்தி, சமஸ்கிருதம், உருது போன்ற 

ஏதேனும் பிற மொழிகளைத் தேர்வு செய்து நிறைய மதிப்பெண்களையும் பெறுகின்றனர்.. 

ஆனால். ஹாங்காங்கில், இளம் பொறியாளர்கள் தங்கள் தாய் மொழியான சீன மொழியில் 

சிந்தித்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொள்கின்றனர். அதனால் சிந்தனையில் தெளிவு 

இருக்கிறது. மொழி மாற்றத்தில்தான் குறை இருக்கிறது. அதனையும், பயிற்சி மூலம் 

மேம்படுத்திக் கொள்கிறார்கள். தமிழக பொறியாளர்களோ தாய் மொழியில் சிந்திக்க 

முடியாமல், தாம் படித்த ஆங்கிலத்திலும் சிந்திக்க இயலாமல், இந்த இயலாமை காரணமாக 

ஆங்கிலத்தில் மனதில் படுவதை சொல்லவும் முடியாமல் விழிக்கும் நிலையே 

பெரும்பான்மையாக உள்ளது. தாய்மொழிக் கல்வியின் மகத்துவத்தை உலகெங்கிலும் உள்ள 

கல்வியாளர்கள் சொல்லி வருகினறனர். ஆயினும் தமிழ் நாட்டுப் பெற்றோர் காதுகளில் 

அவை விழுவதில்லை. தம் மகனோ மகளோ எப்பாடு பட்டாவது மருத்துவர் அல்லது பொறியியல் பட்டம் பெற்றால் போதுமென நினைக்கும் அப்பாவித் தமிழர், தாய்மொழி அல்லாத பிற மொழியாகிய 

ஆங்கிலத்தில் பயிலும்போது, புரிந்தும் புரியாமலும், எழுதத் தெரிந்தும் தெரியாமலும், திக்கித் 

திணறி ஒரு வழியாக கல்வியாண்டுகள் கழிந்த பின்னர் எப்படியோ தேர்ச்சி அடைந்து் 

விடுகின்றனர். பின்னர் வேலைக்கு செல்ல நினைந்து, உலக மயமாகி விட்ட இன்றைய 

சூழல் அமைவில், மேலை நாட்டு குழுமங்கட்கு இங்கிருந்து பணி புரியும் நிறுவனங்களில் 

ஆங்கில மொழி அறிவு பற்றாக்குறையால் திணறுகின்னர், பேசும் திறன் இன்றி, உச்சரிப்பும் 

தமிழ் கலந்ததாய் இருப்பதால் நிராகரிக்கப்பட்டு மீண்டும், வெட்கப்பட்டு, விவசாயமோ, பிற 

குடும்ப தொழிலோ செய்யத் திரும்பும் அவல நிலைதான், இன்று விவசாயிகள் மற்றும் இதர 

தொழிலாளிகள் தற்கொலை செய்வதற்கு காரணிகளாய் அமைந்து இருப்பது மறைமுகமான 

உண்மை. 

தமிழ் வளர்க்கும் வழிவகைகள் பற்றி சிந்தித்தோம் என்றால். முதலில், தனியார் மயமாகும் 

தொடக்கக் கல்விக்கு தடை செய்து, தமிழில் நம் பிள்ளைகள் பயின்ற பின்னரே, இரண்டாம் 

மொழியாக ஆங்கிலம் முதலிய பிற மொழிகளை பயிலும் வகையில் தொடக்கக் கல்விக் 

கூடங்கள் அனைத்து பஞ்சாயத்துப் பரப்பினிலும் நிறுவிடலாம். 

நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வி பயில்வதை நிறுத்த பள்ளிக் கல்வியுடன், 

உயர்கல்வியும், தமிழ்வழி பயின்றிட போதிய கல்விக்கூடங்கள், உயர்கல்வி கல்லூரிகள், 

பல்கலைக்கழகங்கள் என்பதோடு, தமிழ் வெறும் “கலை” என்ற பெருந்தலைப்பின் கீழ் 

அடக்கப்படாமல், அறிவுசார் மொழியியல் என பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப் 

படவேண்டும். 

தமிழ் படித்தால் கிணற்றுத் தவளையாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை 

மாற்றிட, ஆங்கில மொழியில் உள்ள தொழில் நுட்ப அறிவியல் நுட்ப நூல்களை எல்லாம், 

உரிய வித்தகரைக் கொண்டு மொழியாக்கம் செய்து தமிழில் படிக்க ஏதுவாக வழி 

அமைத்துக் கொடுக்க வேண்டும் இவ்வாறான அறிவியல் நூல்களின் மொழியாக்கத்தின்போது 

சொல் பஞ்சம் ஏற்பட்டால், வடமொழி பதங்களை தயங்காமல் பயன்படுத்தலாம். இதற்காக 

படைக்கப்படும் நூல்கள் செய்யுள் நடையினைக் கைவிட்டு, உரை நடையினைக் கைக் 

கொள்ளலாம்.. 

முனைவர் முத்தையா அண்ணாமலை பாஸ்டன் நகரில் வாழ்ந்து வருபவர் “எழில்” என்ற 

பெயரில் ஒரு கணினி மொழியை உருவாக்கியுள்ளார். ஓர் ஆங்கிலச் சொல்கூட 

உபயோகிக்காமல் தமிழ் மட்டுமே அறிந்தவர் கூட பயன்படுத்த முடியும் வகையில் அது 

அமைந்து உள்ளது. இதனை தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாட்டிற்கு அரசே பரிந்துரை 

செய்யலாம்.. 

1577 இல் இலக்கண விளக்கம் எனும் தமிழ் நூல் தரங்கம்பாடியில் வெளிவந்தது. 

அதன்பின்னர் நான்கு நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே தமிழ் நூல்கள் அச்சேறின. அதன் 

பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியாச பாரதம் எனும் தமிழ் நூல் 

வெளியிட ராமனுசாச்சாரியார் பட்ட கட்டங்களும், தமிழ்ப்பாடல் நூல்கள் வெளியிட 24% 

வட்டியில் ஒரு 20000/- ரூபாய் கடனாக பாரதியார் கேட்டும் காலணா கூட ஒருவரும் 

கொடுக்க முன் வராத நிலையில்தான் தமிழின்பால் தமிழ் மக்களின் ஈடுபாடு இருந்து 

வந்துள்ளது. 

பழந்தமிழ் நூல்;களைப் பரவலாக அச்சிட்டு குறைந்த விலையில் வெளியிடுவதுடன், 

புதுமை நூல்கள பல படைக்க வழிகோல வேண்டும். தமிழ் நூல் படைப்போர்க்கு ஆதரவும், 

அச்சிடும் பதிப்பகத்தாருக்கு, அரசு மானியமும் அளித்து, தமிழை மென்மேலும் வளர்க்கலாம். 

இதற்காக, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அரசு நூலகத் துறையின் ஒருங்கிணைந்த 

திட்டங்களை அரசு மேற்கொள்ளலாம். 

வலுமிக்க சமூக மாற்றத்தை உருவாக்க சாத்தியம் கொண்ட தமிழ் திரைப்படங்களை 

நல்லதொரு தமிழ் ஊடகமாகக் கொண்டு தமிழ் மன்னர்களின் ஆட்சிக் கால நிகழ்வுகள், 

புலவர்களின் அனுபவங்கள், அப்பர் சுந்தரர், திருநாவுக்கரசர் போன்ற தமிழ் சித்தர்களின் 

வாழ்க்கை வரலாறுகளை தமிழ் மணம் வீசும் வகையில் தயாரித்து, தொலைக் 

காட்சிகளிலும் ஒளிபரப்பலாம். 

தமிழார்வம் கொண்ட ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்களாக மூன்று 

நூல்களை தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுநாதன் அவர்கள் சொல்வார். அவை பகவத் கீதை, 

திருவாசகம், திருக்குறள் 

இறைவன் பக்தனுக்குச் சொன்ன நூல் பகவத் கீதை 

பக்தன் இறைவனுக்குச் சொன்ன நூல் திருவாசகம் 

மனிதன் மனிதனுக்குச் சொன்ன நூல் திருக்குறள். 

இம் மூன்று நூல்களையும் தமிழர் எல்லா நாட்களிலும் ஒரு சில மணித் துளியாகவாவது படிக்க 

வேண்டும்.. .இதற்காக, இலவச கணினி, இலவச சைக்கிள் போன்ற திட்டங்களுடன், இந்த 

நூல்களையும் பள்ளிப் படிப்பு முடிக்கும் மாணவர்கட்கு அரசு இலவசமாக அளிக்கலாம். 

தமிழர் என்றும் பக்தி மனம் கொண்டவர்கள் என்பதால், இந்த பக்தி மணம் வீசும் 

வகையில், தமிழில் கீர்த்தனைகள் எழுதி ஆலயங்களில் வழிபாடுகள் செய்ய வைக்கலாம். 

காலம் காலமாகக் காத்து வரும் தமிழ் மரபுகளைக் காக்கும் வகையில் தெய்வத் தமிழ் 

இலக்கியங்களில் பயிற்சி பெற்று வழிபாடு செய்யப் புண்ணிய பலன்கள் விளையும்.. 

திராவிட இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு ஊட்டம் அளித்ததில் தனித் தமிழ் இயக்கம் 

மேலோங்கியது. இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்குவது தவிர்க்க 

முடியாத சமூகச் சடங்கானது. இதனை 1971 இல் திராவிட முன்னேற்ற கழக அரசு அரச 

கட்டளை ஆக்கியது. ”சத்தியமேவ ஜெயதே” என்ற உபநிடத வாக்கியம், தமிழ் நாட்டரசின் 

“வாய்மையே வெல்லும்” என தமிழ் முழக்கமாகியுள்ளது. 

தமிழுக்குப் பொது எதிரி ஆங்கிலம் அல்ல. தாய் மொழியை தக்க வைக்க அரசுகள் 

திண்டாடுகின்றன. இந்த நிலையில், மத்தியில் உள்ள இந்திய அரசும் இந்தியை வளர்க்க 

திட்டம் தீட்டி அமலாக்க முயல்கிறது. இதற்கேற்ப தமிழ் வளர்க்கவும் தமிழக அரசு 

திட்டங்கள் தீட்ட வேண்டும். 

, ஆண்டுதோறும் ஃபிப்ருவரி 21 ஆம் நாள் தாய்மொழி திருநாளை சிறப்பாகக் கொண்டாடுதல், 

தமிழ் இலக்கிய பீடம் என ஒரு உயரிய விருதினைத் தோற்றுவித்து, அரசியல் கட்சியில் 

ஜாலரா போடுபவர்கள் அல்லாமல் உண்மையான தமிழ் அறிஞர்களின், கவிதைகள், மொழி 

இலக்கணம், நுண் கலைகள், அகராதி, பாடல் இலக்கியம், கல்வெட்டு ஆராய்ச்சி இயல், 

இயற்பியல், வேதியியல், கணிதவியல், பொறியியல்,வானவியல்தொழில் நுட்பவியல் 

ஆகியவற்றில் சிறந்த நூல் தமிழில் படைப்போர்க்கு வழங்கலாம்., 

செம்மொழி என காது கிழிய மேடைகளில் அலங்காரமாக பேசுவதை நிறுத்தி விட்டு, 

செம்மொழியின் வளர்ச்சிக்கு நம்மாலான சேவையை செய்வது, ஈங்கொருவர்க்கு தமிழ் 

பயிற்றுவிப்பதே ஆகும்.இதனை ஒவ்வொரு தமிழரும் தம் கடமையாகக் கொள்ள வேண்டும். 

அத்துடன், இலக்கியப் பண்பாட்டு இதழ்கள் வெளியிட்டு, அதிலும், நல்ல தமிழ் படைப்புகளை 

விளம்பரம் செய்து படிக்க வைத்து, தமிழ் கலாசாரத்தை, பண்பாட்டை பேணி வளர்த்தல், 

புதிய நூல்கள பற்றியல் தகவல்கள் வெளியிடலாம். , எழுத்தாளர்களுடைய உரையாடல்கள், 

பதிப்புலக செய்திகள் ஆகியவற்றை வெகுசன ஊடகங்கள அளிக்கும் இடங்கள் குறைவாக 

இருப்பதால், மாற்று ஊடகம் அவசியமாகிறது. 

முன்னோர் மொழிபொருளே அன்றி யவர் மொழியும் 

பொன்னே போற் போற்றுவம் என்பதற்கு” 

எனும் தொல்காப்பிய சூத்திரப்படி, முன்னர் இருந்த செய்யுள்கள், நூல்கள் ஆகியவற்றில் 

இருந்து பின்னவர் தமது படைப்பாக அவற்றை பொன்னே போல் போற்றி எழுதி வரும் 

இலக்கியத் திருட்டு பற்றியும் தமிழ் மக்கள் அறியும் வண்ணம் செய்து, தமிழ் படைப்புகட்கு 

காப்புரிமை வழங்குவதை கட்டாயமாக்கி, படைப்பளர்களை கொளரவிக்க வேண்டும். 

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை என தமி்ழகத்தி்ல் மாநகராட்சியுள்ள நகரங்களில், துறை 

சார்ந்த வல்லுனர்களை அழைத்து, தமிழ் மீது மிக்க ஆர்வம் உள்ள இளைஞர்களை, அவர்கல் 

தமிழில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கில் கொண்டு, இளம் எழுத்தாளர்கட்கு, கவிதை, 

கட்டுரைப் பயிற்சியும், தமிழ்ப் பேச்சாளர்கட்கு, பேச்சுப் பயிற்சியும் குறைந்த பட்சம் ஒரு 

வார காலம் அளிக்கலாம். இதற்காகும் செலவுகளை அரசே மேற்கொள்ளலாம் 

அரசு செலவில், மொழி பெயர்ப்புப் பணிகள், ஆட்சி மொழி கருத்தரங்குகள், ஆட்சி மொழி 

பயில் அரங்குகள், ஆட்சி சொல் அகராதி், சிறப்புச் சொல் அகராதி வெளியிடுதல், சொல் 

வங்கி தயாரித்தல், தமிழ் இயல் இசை நாடக துறை நூல்களுக்கு விருதுகள் பன்னாட்டு 

அளவில் தோற்றுவித்து அளித்தல்ஆகிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். 

தமிழக தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்டு வரும் ஆட்சித் தமிழ் நூல் அடிப்படையில், 

ஆட்சி மொழி வரலாறு, ஆட்சி மொழிச் சட்டம், ஆட்சி மொழி செயலாக்கம் தொடர்பாக 

அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பணியாளர்களுக்கு புத்தாக்கப் பயற்சி அளிக்கலாம். 

அத்துடன் ஆட்சி மொழிக் கருத்தரங்கம் என அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் 

நடத்தலாம். 

வெளி நாட்டில் உள்ள அரிய தமிழ் நூல்கள், தமிழகத்தில் கிடைக்கப் பெறாதவை 

எவையென அடையாளங் கண்டு அவற்றை, வெளி நாட்டு நூலகங்களில் இருந்து மின் 

எண்மத்தில் பதிவு செய்து, நூலாக வெளியிடும் பணியினையும், தமிழக அரசு 

மேற்கொள்ளலாம். 

தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித் துறக்கு என தனி ஒரு சிறப்பு வலை தளம் அமைத்து, 

துறையின் வளர்ச்சித் திட்டங்கள், பொதுமக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், ஒளிவ்ய் 

மறைவற்ற வகையில், முழு விவரங்களுடன் பதிவு செய்தும், புதிய கருத்துக்கள், 

வளர்ச்சிக்கான வழிமுறைகளையும் பின்னூட்டங்களையும் எவர் வேண்டுமாயினும் 

அளிக்கும் வகையில் வசதியுடன் அந்த வலைத் தளத்தை உருவாக்கலாம். 

கமில் சுவலபில் போன்ற வெளி நாட்டு அறிஞர்கள் பார்வையில், தமிழ் மொழி வரலாறு, 

மற்றும் சிறப்புக் கருத்துக்கள் குறித்த அனைத்து தகவல்களையும் திரட்டி, தமிழ் மற்றும் 

ஆங்கிலம் ஆகிய நூல்களாக, அரசு செலவில் வெளியிடலாம். 

தமிழில் கல்வியியல் பட்டங்கள் அளிப்பதும், தமிழ் சங்க பூங்கா என்ற பெயரில், சங்க மரம் 

செடி கொடி வகைகளை இனக் கண்டு வளர்த்து தமிழ் மக்களுக்கு அவை இடம் பெறும் 

பாடலையும் சுட்டி படிக்கும் அளவில் பலகைகள் செய்து வைத்து பேணுதல் ஆகியவை 

தமிழின் பெருமையை நிலை நிறுத்துவதுடன், வளர்ச்சிக்கும் பெரிதும் உதவிடும்.  

மேலும்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. வாருங்கள் சந்திக்க ஆவலாய் உள்ளேன் 20-Apr-2016 1:22 pm
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. 20-Apr-2016 1:22 pm
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. 20-Apr-2016 1:22 pm
நன்றி அய்யா. தொலைநோக்குப் பார்வை கொண்டு எழுதப்பட்ட படைப்பு. இதை செயலாக்க உங்களைப் போன்ற அறிஞர்கள்தான் வழிவகை வகுக்க வேண்டும். என்றும் எப்போதும் அதற்காக உழைக்க எங்களைப் போன்றோர் தயாராக இருக்கிறோம். 19-Apr-2016 8:10 am

ஹயாக்ஸ்நிறுவனத்தின் 11வது ஆண்டு நிறைவுக் கட்டுரைப் போட்டிக்கான சிறப்புப் பரிசுக்குநன்றி. (தா. ஜோ. ஜூலியஸ் )


 தரிசாகக் கிடக்குமோ 
பரிசுபெறா கவிதைகள் 
அரிசினத்தால் அவற்றை 
எரிநெருப்பில் இடுவோமோ!!! 

 என்ற ஆதங்கத்தில் இருந்த எனக்கு கடந்த வெள்ளிக் கிழமை, ஒரு அழகிய கப்பில், எழுத்து.கொம் என சிறப்புப்பரிசு ஒன்று எனது வின் ஞானம் என்ற கவிதையின்முதல் மூன்று கண்ணிகளை பதித்து ஹயாக்ஸ்நிறுவனத்தினர் அனுப்பி உள்ளனர். எதிர்பாராத முத்தம் போல் எதிர்பாராமல் கிடைத்த இந்ததளத்தில் நான் பெறும் முதல் பரிசு இது..  இந்தஎழுத்து தளத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனதுகவிதையினை பரிசுக்குரிய கவிதையாக தேர்வு செய்த தேர்வுக் குழுவுக்கும் மிக்க நன்றி.முக நூலில் என் மகள் இந்த பரிசுக் கிண்ணத்தை பதிவு செய்துள்ளார்.அவருக்கும் நன்றி. 

மேலும்

மிக்க நன்றி 27-Jan-2016 1:13 pm
மிக்க நன்றி 27-Jan-2016 1:13 pm
மிக்க நன்றி 27-Jan-2016 1:13 pm
மிக்க நன்றி 27-Jan-2016 1:13 pm

இன்று பிறந்த நாள் காணும் திருமிகு. கந்ததாசன் (சு. ஐயப்பன்) அவர்கட்கு நீண்ட ஆயுளும் நல்வாழ்வும் அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து வாழ்த்துவோம் 

மேலும்

மிக்க நன்றி அம்மா 31-Oct-2015 5:00 pm
நன்றி ஐயா 31-Oct-2015 4:59 pm
நன்றி அய்யா 31-Oct-2015 4:59 pm
நன்றி ஐயா 31-Oct-2015 4:58 pm

இன்று பிறந்த நாள் காணும் திருமிகு.( சு. ஐயப்பன், )கந்த தாசன்  நாம் அனைவரும் நீடூழி வாழ பிரார்த்தனை செய்து வாழ்த்துவோம் 

மேலும்

பெண்ணியம் பேசுவோர்
மன்னிக்கவும். ஏனெனில்,
நகை நகையாய் போட்ட அவளும்
ஒரு நகையும் போடாத அவனும்
ஒருசேர நிற்கையிலே
என்ன ஒரு சோடிப் பொருத்தம்
என்றுதான் சொல்லுகிறார்.
அப்படி ஆயின்
பெண்ணை விட ஆண்தானே அழகு.

மேலும்

ஜோடி பொருத்தம் அவர்கள் அணிந்திருக்கும் பொன்னகையால் அல்லாமல் இருவரின் புன்னகையாலும் வரலாம் அல்லவா ? 01-Aug-2015 3:33 pm
மன்னித்து விடுங்கள் தான் தான் அல்ல ஆண் தான் அழகு . 01-Aug-2015 2:19 pm
ஹ்ம்ம் கண்டிப்பாக தான் தான் அழகு . (அவள் சோடித்திருக்காவிட்டால் சோடியாகி இருக்க மாட்டாள் என்பது வேற கதை ) ஐயா நான் பெண்ணிய வாதி இல்லவே இல்லை . வெறும் கண்ணியவாதி தான் . ஹி ஹி.....கயல் ஓடு ஓடு . 01-Aug-2015 2:18 pm
நான் இந்த பக்கம் வரவும் இல்லை இந்த எண்ணத்தை படிக்கவும் இல்லை ... 01-Aug-2015 2:02 pm

”தனி மனிதனாக ஒருவன் உலகையே நேசிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆடுத்து இருப்பவனை மட்டும் நேசித்தால் கூடப் போதுமானது!.”

---புனித அன்னை தெரசா.

மேலும்

அருமையான எண்ணம். .... 26-Aug-2014 4:47 pm

”நீங்கள் செய்யும் தவறு கூட புனிதமாகும்......
அந்தத் தவறை நீங்கள் ஒப்புக் கொண்டால்!
--புனித அன்னை தெரசா.

மேலும்

அழகோ அழகு....தவறை உணர்பவனே மனிதன் 26-Aug-2014 4:48 pm

மேலே