எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை பயணம் ......

முகயிதழ் தழுவும் விரல்என  வருடும்   முதலில்

கல் சிகள்  வருடும் நகம்என  நெருடும்   முடிவில்
.....என் கவிதை பயணம்


னிதம் பிளவுபட மதம் 
 
இவன்  பிரிந்துபோக இறைவன்

கட்டிப்போட கட்டுப்பாடுகள் 

பிறரைச்சாரா கலாச்சாரம்

அன்பை அழிக்கும் பண்பாடு 

ஒற்றுமையை எரிக்க சாதீ

நட்பை முறிக்கும் நாகரிகம்..

இவற்றிற்கிடையில்

இனிமையாய் தொடங்கிய என் கவிதை பயணம் 

இத்தனையும் கடக்கும்போது வன்முறையாய் மாறிப்போகிறது...


மென்மை திளைக்கும் பூந்தமிழில் 

வன்மை நிறைந்த வார்த்தைகளும் உண்டு ....

மேலும்

இந்தியா மதம் சார்ந்த நாடுதான்
மதசார்பற்ற நாடு அல்ல

மதங்களையும் கடவுளையும் பின்பற்றி 
மதசார்பற்ற நாடென்பது முறையல்ல

மதசார்பற்ற எனும் சொல்லுக்கே அர்த்தம் மாறிப்போகிறது .

மதங்களை கடந்த ஒற்றுமை வேண்டாம்

மதங்களை களைந்த  இந்தியா வேண்டும்

வேற்றுமையில் ஒற்றுமை வேண்டாம் ....


மேலும்

அரசியல் சூது காரணமாக மதம் நம்மை தொற்றிக்கொண்டது. முன்னோர்கள் எதிர்த்து இருக்க வேண்டும். தவறிவிட்டது. மதப்பழி விழுந்து நிறைய வருடம் போய் விட்டது. ஆனால் இந்தியா மத சார்பற்ற நாடு என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. 04-May-2018 3:54 pm

கன்னி தமிழே தண்ணீருக்குள்....... 
பன்னி கூட்டங்கள் என் ஊருக்குள்... 
எத்தனை  வேறுபாடுகள் எம் சமூகத்தில் 
தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்ல இயலவில்லை இந்நேரத்தில்..... 
எம் ஆதி தமிழ் இனமே இருப்பிடமற்று அலறும் வேளையில் 

இங்கு 
இவர்களுக்கு மட்டும் எப்படி அருவியாய் கவிதை எழுத சிந்தனை தெளிவாகிப்போனது.. 

நாட்கள் கடந்து நம்பிக்கை நழுவிக்கொண்டு நாநீர் படாமல் நடுவீதியில் என் குடும்பங்கள்.. 

இங்கு 
நாய்களை அலங்கரித்து நடுவீதியை வழிமறித்து 
நாடக கூட்டங்களின் 
நாட்டை விற்கும் அரங்கேற்றத்திற்கு 
ஒத்திகை ஓட்டு சேகரிப்பு... 

இதற் மேல் எழுத தமிழே தடுமாறி அழுகிறது 

மேலும்

அருமை கோபமும் அழகு. கோபம் கொள் இல்லையேல் இந்த கயவர்கள் நம்மை இரையாக்கிவிடுவார்கள்.. 04-May-2018 3:32 pm

சாதி முக்கியம்
சாதி அடையாளம்...................................................... . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . .  

சாதியை கொண்டாடும் 
எந்த ஒரு அற்பனும் 
தமிழனின் கலாச்சாரம் பண்பாட்டை
 பேச தகுதி அற்றவன்தான். 

இன்று, 
எம் தமிழ் கலாச்சாரமும் பண்பாடும் சிதைவுற்று போனதற்கு காரணமே
 இந்த 
சாதிய கூட்டம்தான். 
ஒன்றிணைந்த எம் மரபில் 
சாதிய நஞ்சினை கலந்து பிரிவினை செய்து விட்டு ஒவ்வொருவனுக்கும் தனி குலத்தொழில், வாழ்வுமுறை, சாதிப்பெயர், வேறுபட்ட பழக்கவழக்கம், வெவ்வேறு கலாச்சாரத்தை புகுத்திவிட்டு,
ஒவ்வொருவனையும் அடித்து கொள்ளச்செய்துவிட்டு பல நூற்றாண்டுகளாய் பல்வேறு பண்பாடு தோன்ற காரணமே எங்கிருந்தோ வந்து இன்று பண்பாடு பேசும்   
இந்த 
சாதிய நாய் கூட்டம்தான்,.... 


ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவடபடாமல் சற்று சிந்திக்க வேண்டும். 
நம் தமிழ் பல்லாயிரம் வருட பாரம்பரியம் கொண்டதென்று சொல்கிறோம். 
நம் மொழி தோன்றியபோது எத்தனை மனிதன் வாழ்ந்திருப்பான். 
இன்றைய மக்கள்தொகை வளர்ச்சியினை அப்படியே பின்னோக்கி கழித்து பாருங்கள். 
ஒரு சிறு கூட்டம்தான் இன்று இவ்வளவு வளர்ந்திருக்கிறது. 
இதில் சாதி எப்போது தோன்றியது
 ஒரு வேளை சாதியும் மதமும் அப்போதே தோன்றியிருந்தால்
 இன்று சாதியின் எண்ணிக்கையை எண்ண முடியாதல்லவா. 

சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் இனத்தில் புகுந்த நயவஞ்சக கூட்டம் இறுகிய இத்தமிழ் சமூகத்தினை சாதியால் வெவேறாக பிரித்து மோதிக்கொள்ள செய்து தனது இனத்தை நிலைநிறுத்தி கொண்டது. 
அந்த ஈன சமூகம்தான் இன்று சாதியை வீதிகளாய் பிரித்து வைத்துள்ளது. 
சாதி வீழ்ந்து விட்டால் தமிழினம் ஒன்றிணைந்து மிகப்பெரும்   வலிமை அடைந்துவிடும். 
இதில் உண்மை இல்லையா? 

வெவ்வேறு சாதிக்காரன் தொட்டுக்கொண்டல் அவர்கள் இறந்து போவதில்லை. அவன் வீடு இடிந்து போவதில்லை. ஒரு சாதிக்காரனின் கால் பட்ட நெல்தான் இன்னொரு சாதிக்காரனின் சாப்பாட்டில் உள்ளது அதனால் தீட்டுப்பட்டு அவன் மாண்டு போவதில்லை. 

ஆனால் இது நடந்துவிட்டால்  இன்று வரை சாதிய தீயில் குளிர் காயும்  அந்த நாறிய சமூகம் நடுங்கியே செத்துப்போகும் இதுதான்  உண்மை.


இதை விட்டு விட்டு
 சாதி உயர்ந்தது பரம்பரியமானது வரலாறு கொண்டது என்று அந்த அற்பர்களின் சூழ்ச்சி வார்த்தைகளை பற்றிக்கொண்டு வீழ்ந்து விடாதீர்கள்.
 
சாதியும் மதமும் உன் கலாச்சாரம் இல்லை
தமிழுணர்வை மிஞ்சிய வீரமும் இல்லை
 
தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க இயலாதவனே 
சாதியை அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்கிறான்

உலகறியவேண்டிய நல்ல தலைவர்களின் வரலாறுகூட சாதிக்கூட்டத்தால் வீதியின் பெயர்பலகையோடு முடிந்துபோகிறது

மேலும்

குறள் 1331:

செல்லும் வழிதவற தடுப்பது உறவு 
நெறிப்படுத்தி கொடுப்பது நட்பு


பொருள்:

நாம் விரும்பி ஏற்று செல்லும் வழி தவறான பாதையென அறிந்தால் அதனை உடனே தடுத்து உன்னை  காக்க துடிப்பது உறவுகள் ..
தவறான வழியெனினும் நீ விரும்பி விட்டாய் என்பதற்காக அதை சரிப்படுத்தி கொடுப்பது நட்பு.



மேலும்



செதுக்கப்பட்ட கற்சிலையின் சில்லுகளாய் 

 நான் சிதறிப்போவதால்தான் 

நீ உருவம் பெறுகிறாய்...

 நான்இங்கு  காலடியில்

 நீயோ   கருவறையில்   

மேலும்

உறவுகள் செறிந்த நட்பு கூட சாதிக்காற்றில் உதிர்ந்துதான் போகிறது . 

மேலும்


மேலே