எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

27.1.2016 மாவட்ட அளவிலான கவிதை ,கட்டுரை,பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.ஈரோடு மாவட்ட அளவில் கவிதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றேன்.அடுத்தகட்டமாக,சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி 4.2.16 அன்று காயிதே மில்லத் மகளிர் கலைக்கல்லூரிக்குச் சென்றேன்...பரிசேதும் பெறவில்லை ..வருத்தமும் இல்லை ...பங்கேற்புச் சான்றிதழ் தரப்பட்டது...சென்னையில் எனக்கு தங்குவதற்கு விடுதி ஏற்பாடு செய்து தந்த ஜின்னா அண்ணாவிற்கு மிக்க நன்றி ... தமிழுக்காகவும், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எந்த அரசாங்கத்தையும் நாம் பாராட்டுவதில் தவறில்லை..இந்த கணத்தில் நான் தமிழக கல்வித்துறையைப் பாராட்டுகிறேன்...அதே சமயத்தில்,கவிஞனாக நான் சொல்வது என்னவெனில்,அவ்வைக்கு பரிசில்தந்த எந்த அரசரும் பரிசுப்பொருட்களில் அந்த அரசரின்  உருவப்படம் பொறித்து சான்றிதழோ,பரிசுப்பொருளோ தரவில்லை என்று நினைக்கிறேன் ...அதுபோல,இனிவரும் அரசு தந்தால் எல்லோருக்கும் முகச்சுழிவில்லாத மகிழ்ச்சி ஏற்படும் என நம்புகிறேன்..


நன்றி 
ப(து)ணிவுடன்,
 திருமூர்த்தி

மேலும்

நன்றி நட்பே ! 08-Feb-2016 1:30 pm
வாழ்த்துகள் தோழரே .. 08-Feb-2016 1:51 am

27.1.2016 மாவட்ட அளவிலான கவிதை ,கட்டுரை,பேச்சுப்போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.ஈரோடு மாவட்ட அளவில் கவிதைப்போட்டியில் முதற்பரிசு பெற்றேன்.அடுத்தகட்டமாக,சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டி 4.2.16 அன்று காயிதே மில்லத் மகளிர் கலைக்கல்லூரிக்குச் சென்றேன்...பரிசேதும் பெறவில்லை ..வருத்தமும் இல்லை ...பங்கேற்புச் சான்றிதழ் தரப்பட்டது...சென்னையில் எனக்கு தங்குவதற்கு விடுதி ஏற்பாடு செய்து தந்த ஜின்னா அண்ணாவிற்கு மிக்க நன்றி ... தமிழுக்காகவும், படைப்பாளிகளை ஊக்குவிக்கும் எந்த அரசாங்கத்தையும் நாம் பாராட்டுவதில் தவறில்லை..இந்த கணத்தில் நான் தமிழக கல்வித்துறையைப் பாராட்டுகிறேன்...அதே சமயத்தில்,கவிஞனாக நான் சொல்வது என்னவெனில்,அவ்வைக்கு பரிசில்தந்த எந்த அரசரும் பரிசுப்பொருட்களில் அந்த அரசரின்  உருவப்படம் பொறித்து சான்றிதழோ,பரிசுப்பொருளோ தரவில்லை என்று நினைக்கிறேன் ...அதுபோல,இனிவரும் அரசு தந்தால் எல்லோருக்கும் முகச்சுழிவில்லாத மகிழ்ச்சி ஏற்படும் என நம்புகிறேன்..


நன்றி 
ப(து)ணிவுடன்,
 திருமூர்த்தி

மேலும்

மனமார்ந்த வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்... 09-Feb-2016 1:22 pm
ஆம் நட்பே.....மிக்க நன்றி நட்பே.... 09-Feb-2016 9:18 am
வாழ்த்துக்கள் திருமூர்த்தி.. 08-Feb-2016 6:02 pm
வாழ்த்துகள்! 08-Feb-2016 5:35 pm

என்னுடைய குழந்தைப் புகைப்படம் ...எனது செல்லப்பெயர் ஆனந்த்..வீட்டில்....உறவினர்கள்,நண்பர்கள்..,எங்கள் ஊர் மக்கள் எல்லோருக்குமே என்னை ஆனந்த் என்றால்தான் தெரியும்...பள்ளி கல்லூரியில் மட்டுமே எனது பெயர் திருமூர்த்தி ...எனக்கு ஆனந்த் எனற பெயர்தான் மிகவும் பிடிக்கும் ..நன்றாக ஞாபகம் இருக்கிறது ..கோபிசெட்டிபாளையம் புகைப்படக் கடையில் அப்பா இருக்கையில் அமர்ந்துகொண்டு என்னை பக்கத்தில் நிற்கவைத்து படம் எடுக்கச் சொன்னார் ..ஆனால் நான் அடம்பிடித்து தூக்கிகொள்ளச் சொன்னேன்...பிடிவாதத்தோடு அழுததால் எனது ஆசைப்படியேஅவர் தூக்கிக்கொண்டு படம் எடுத்தார் ..பாருங்கள்,அழுத முகத்தோடு எனது உதடுகள் எவ்வளவு பிதுங்கி உள்ளது என்று ...


இந்தப் புகைப்படம் எனது பழைய புத்தகங்களை தூசிதட்டி தூய்மைப் படுத்தும்போது நினைவின் அச்சில் மீண்டும் பதிப்பேறியது ....இந்த போகிப்பண்டிகையில் மலர்ந்தது எனது மழலை கனவுகள் ...

அப்பாவுக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் விருப்பம் ..அதனால்தான் என்னை இப்படி அழகாக சீவி சிங்காரித்து இருக்கிறார் ... இந்த கணம் நான் ஏதோ ஒன்றை அவரிடமிருந்து இழந்து விட்டதாக மனது உறுத்துகிறது ...

நன்றி ...

வாழ்வின் ரசனைப் பயணத்தில் ..
திருமூர்த்தி 

மேலும்

நன்றி நட்பே ..! 21-Jan-2016 11:35 am
அழகான.....படம்....ஆனந்த்...... 19-Jan-2016 8:00 pm
நன்றி தோழமையே ..! 19-Jan-2016 7:52 pm
சோ cute த அண்ணா புட்டு புட்டு நு அழகா இருக்கேங்க 18-Jan-2016 12:19 pm

நவீன எழுத்துலகில் சாதனை படைத்து வரும் நாஞ்சில் நாடன் என்னும் எழுத்தாளரின் நேர்காணல்கள் புத்தகம் அண்மையில் வெளியாகி உள்ளது...அவரைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் வாங்கிப் படிக்க...


நன்றி
இப்படிக்கு ,
திருமூர்த்தி 

மேலும்

கோ+வில்=கோவில் 
"கோ" என்பது ஒரு உயர்ந்த அல்லது இறைவன் அல்லது  தொலைதூரத்தில் இருந்து பார்க்கும் ஒரு இடம்  அல்லது மற்றவைகளில் இருந்து வேறுபட்ட ஒன்று என பல அர்த்தங்கள் உள்ளது.
"வில்" என்பது இல்லத்தை  குறிக்கிறது. ஆகா கோவில் என்பது அரசன் வாழ்ந்த இடம்  அல்லது அரசனின் இல்லம் என  கூறலாம்.
கோ என்ற தமிழ் சொல் வேறு வார்த்தைகளோடு இணைத்து தரும் அர்த்தங்களை முதலில் காண்போம்.
1. கோ+மான் = கோமான்  - உயர்ந்த ஒருவன் 
அரசன் மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஒரு நபர் .அதாவது மற்றவர்களை விட மேலானவன் .
2. கோ+அரி  = கோடரி- மேலே உயர்த்தி அரிதல்  
கோடரியை மரத்தை வெட்டும்பொழுது மேலே உயர்த்தி வெட்டுகிறோம்.
3. கோள் = கிரகம் - வானத்தில் தொலைவில்/உயர்ந்த இடத்தில்  இருக்கும் ஒன்று.
4. கோல் = ஆட்சி செய்யும் அதிகாரம்  உள்ளவன். அதாவது குடிமக்களை விட மேலானவன் என்ற பொருள்.
5. கோடி = ஒரு பெரிய தொகை.

ஆக, கோ என்பது உயர்ந்த ஒன்றை குறிக்கும் சொல்லாக அமைந்துள்ளது.

கோவில்கள் கட்டப்பட்டவிதம்:

கோவிலை சுற்றி மண்டபங்கள், குளம், பல சன்னதிகள், பெரிய நுழைவாயில், பெரிய மதில் சுவர்கள்  மற்றும் சுரங்கப்பாதை  உள்ளது.
இவற்றில் பெரிய மதில் சுவர்களும், சுரங்கப்பாதைகளும் கோவிலுக்கு எதற்க்கு? என ஆராய்ந்து பார்த்தால் மதில் சுவர்கலும் பெரியக் கதவுகளும் எதிரி நாட்டு மன்னன் போரிட வந்தால் எளிதில் நுழைந்து விட கூடாது என்பதற்காக கட்டப்பட்டுள்ளது என்பது புரியும். 
மேலும் கர்ப்பகிரகத்தை சுற்றி இருக்கும் மண்டபம் அந்த காலத்தில் வியாபாரம் செய்ய அல்லது எதிரி நாட்டினர் தாக்க வந்தால் அலல்து இயற்க்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டால்  நாட்டின் குடிமக்கள் பாதுகாப்பாக இருக்க கட்டப்பட்டிருக்கலாம். 
சுரங்கப்பாதைகள் எதிரி நாட்டினர் நுழைந்து விட்டால் அரச குடும்பத்தினர், வீரர்கள்  மற்றும் நாட்டின் குடிமக்கள் தப்பிவிட அமைக்கப்பட்டிருக்கலாம். இவைகளை கொண்டு உற்றுநோக்கினால் கோவில்கள்  இறைவனை வழிபடும் இடம் மட்டும் அல்ல அது அரசன் வாழ்ந்த இடமாகவும் இருக்கலாம். அப்படி பார்த்தால் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை இன்றும் இருக்கிறது!!!




(இந்த செய்தியை கவிஞன் பதிப்பகம் என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டு பகிர்கிறேன்....)

நன்றி
இப்படிக்கு,
திருமூர்த்தி

மேலும்

மன்னிக்கவும் ...நண்பர்களே ..!

முகநூலில் வானமே எல்லை என்னும் பக்கத்தில் எனது பசி என்னும் கவிதை

வேறொருவரால் பதியப்பட்டது..நண்பர் ஒருவர் எனது கவிதையிலே கருத்து தெரிவித்தார்/

நான் உடனே சென்று பார்த்து, நீங்கள் சொன்னதுபோலவே நானும் கோபத்தோடு பேசியதால்

அழிக்கப்பட்டது .

ஆத்திரத்தில் தளத்தை விமர்சனம் செய்துவிட்டேன் .சொல் அழியாது என்பதை அறிவேன் .

ஆனால் ,என்னை நீங்கள் மன்னிப்பீர்கள் என நம்புகிறேன் .

நான் பேசியதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.

நீங்கள் சொன்னதுபோல,என்னால் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமளவு வல்லமையோ

பின்புலபலமோ இல்லை.நானே ஏதோ எண்ணங்களை வண்ணங்களை குவித்து அதனை

நான் பயிலும் கல்லூரிக்கு அன்பளிப்பாய்,நான் படித்ததன் அடையாளமாய் தந்துவிட்டு

வரலாமென்ற ஆசையில் இருக்கிறேன்.

மீண்டும் ஒருமுறை மன்னிப்புக்கூறி விடைபெறுகிறேன்..


நன்றி

இப்படிக்கு,

திருமூர்த்தி

மேலும்

மீண்டும் வாருங்கள் நட்பே. எனக்கு இரண்டு முறை நடந்துள்ளது நட்பே. நண்பர் ஒருவர் சொல்லிதான் பார்த்தேன். அதிலும் ஒரு கொடுமை முகநூலில் நண்பராகவும் இருக்கிறார் எனது படைப்பையும் சமர்பிகிறார். அவரிடம் இது என்னுடைய் படைப்பு என்று சொல்லிவிட்டு அவரையும் நீக்கிவிட்டேன். யார் மீது எப்படி கொவபடுவது எனக்கு தெரியவில்லை நட்பே விட்டுவிட்டேன். அன்புடன் முதல்பூ..... 01-Jan-2016 10:45 pm
வருத்தம் வேண்டாம் நண்பரே ..உங்கள் உணர்வுகளை கள்ளம் கபடின்றி வெளிப்படுத்தினீர்கள்..அவ்வளவுதான் ..இனி நிதானமாகவே அணுகுதலின் வழிகள் பின்பற்றி உயர்வீர்கள் ..வாழ்த்துக்கள் 21-Dec-2015 4:57 am

வணக்கம்

இந்த தளத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒருகவிதையை இன்னொரு தளத்தில் இன்னொரு நபரின்பெயரோடு copy செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது?
பலபேருடைய கவிதைகள் திருடபட்டிருக்கலாம்! அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை..! இன்று என் கவிதை திருடப்பட்டுள்ளது...ஒரு தாய் தன குழந்தையைப் பெற்றெடுக்க,படும் அவஸ்தையை ஒரு கவிஞன் அடைகிறான் என்பது உண்மை.. என்னால் பிரசவிக்கப்பட்ட என் கவிக்குழந்தையை திருடுவது என்பதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை...ஆதலால்,இந்தத் தளத்தில் எழுதினால்தான் நான் எழுத்தாளன் என்று நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை...நான் நிறைய கனவுகளோடு வளர்ந்து கொண்டிருப்பவன்,இப்படி திருடும் வக்கிரமா புத்தி எதற்கு..?இனிமேல் எனது படைப்புகளை வெளியடப்போவதில்லை...நண்பர்களின் படைப்பை வாசித்து கருத்துகள் மட்டுமேதரப்போகிறேன்...இது என் தனிப்பட்ட முடிவு...நாளைக்கு உங்களுக்கும்நேரலாம்..! அப்பொழுதுதான் அந்த வலி உணரமுடியும் என்று நினைக்கிறேன்..!இன்று என் கன்னத்தில் விழுந்த அடி உங்களுக்கும் பிரதிபலிக்கலாம் ..உசார்..நல்ல படைப்பாளியை  உயிரோடு குழிதோண்டி புதைக்கிறது. எழுத்து தளம்.இது என்னை மட்டும் சொல்லவில்லை.அப்படி எடுத்துக்கொண்டாலும் அது நிஜம் ..!நண்பர்களே..,கொஞ்சம் சிந்தியுங்கள்...பத்து வருடமாக சிறுகச் சிறுகச் சேமித்துவைத்த பணத்தை ஒருநொடியில் கொள்ளை அடித்தால் எப்படி இருக்கும்? பணம் போனால் சம்பாதிக்கலாம்...சிந்தனை போனால் சிந்திக்கலாம்..!உங்களுடைய உரிமை போனால் ..? சிந்திக்கவும் ...??????
எழுத்து தளம் காப்பி செய்ய முடியாத அளவிற்கு கவிதை,கதை பக்கங்களை மாற்றலாம் என்று நினைக்கிறேன்...அப்படிச் செய்தால் நான் நிச்சயம் எழுதுவேன்..
நன்றி

மேலும்

BRAVO ஜின்னா சிறப்பான யோசனைகள் அறிவுரைகள் இதை கவித் திருட்டுக்கு எதிரான நடவடிக்கை என்று மேலும் சில பரிந்துரைகளுடன் எண்ணத்தில் பதிவிடவும் . பலருக்கும் பயன் படும் வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 20-Dec-2015 4:50 pm
இராசேந்திரன் இது பற்றி கீழே சிறப்பாக விளக்கியுள்ளார் RASENTHIRAN EFFECT : ஜின்னா இது பற்றி கீழே சிறப்பாக விளக்கியுள்ளார் JINNAA EFFECT : -----என்று படிக்கவும் ---கவின் " " 20-Dec-2015 4:41 pm
வேறு தளம் என்றால் அதன் பெயர் என்ன ? முக நூலா ? தனி வலைப்பூ அல்லது BLOG ஆ பார்த்ததும் நிச்சயம் கோபம் வந்திருக்கும் . உங்கள் அளவில் நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ? இராசேந்திரன் இது பற்றி கீழே சிறப்பாக விளக்கியுள்ளார் RASENTHIRAN EFFECT : "கூகுளில் தேடி பார்ப்பேன் அது எழுத்து தளம் மட்டும் காட்டினால் அது திருடப் படவில்லை என நினைப்பேன்... மாறாக அது முக நூலையும் காட்டினால் உடனே அந்த லிங்கில் சென்று யார் பதிவிட்டார்களோ அவர்களை வசை பாடி விட்டு வந்து விடுவேன்... அப்படியும் அவர்கள் அதை நீக்க வில்லை என்றால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போகிறேன் என கூறிவிட்டு வருவேன் பிறகு அவர்கள் அதை பல சமயங்களில் நீக்கி உள்ளார்கள்... மேலும் எனது எழுத்து தல லிங்கையும் அங்கே பதிவு சேது விட்டு வருவேன்... ========================================================================== அவர்களில் பல பெரும் திருடியவர்களை திட்டி தீர்ப்பார்கள்.. " ---இது கச்சிதமான முதல் நடவடிக்கை . இது மாதிரி ஏதாவது செய்தீர்களா ? "இன்னும் ஏன் காப்பி பேஸ்ட் வசதியை தடுத்தாலும் கூட அதை பார்த்து டைப் பண்ண அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது.... " ----இதற்கு என்ன சொல்கிறீர்கள் ? சட்டப் படி இதை எப்படி டீல் செய்வது ? யோசிப்போம் யதார்த்தமான பிரச்சினைகளுக்கு உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விடுவது தீர்வாகாது. ----அன்புடன், கவின் சாரலன் 20-Dec-2015 4:36 pm
தோழருக்கு வணக்கம்... தங்களின் கோபம் புரிகிறது... இதை தடுக்க சட்டப் படிதான் நடவடிக்கை தேவை... அதை தவிர்த்து தளத்தை குறை சொல்வதில் எந்த பயனும் இல்லை... ஏனெனில் திருடுவோர் திருடிக் கொண்டுதான் இருப்பார்கள்... இன்னும் ஏன் காப்பி பேஸ்ட் வசதியை தடுத்தாலும் கூட அதை பார்த்து டைப் பண்ண அவனுக்கு எவ்வளவு நேரம் ஆகி விட போகிறது.... ஆகவே திருடும் கூட்டம் திருடிக் கொண்டுதான் இருக்கும்... அதற்கு தக்க பதிலடி அவர்கள் பக்கத்திற்கு சென்று தரவேண்டும்... என்னுடைய பல கவிதைகள் முக நூலில் வேறு பெயருடன் வந்து கொண்டிருக்கிறது நான் எப்போதும் ஒரு படைப்பை எழுதி விட்டு சிறிது காலம் கழித்து அதில் உள்ள சில வரிகளை கூகுளில் தேடி பார்ப்பேன் அது எழுத்து தளம் மட்டும் காட்டினால் அது திருடப் படவில்லை என நினைப்பேன்... மாறாக அது முக நூலையும் காட்டினால் உடனே அந்த லிங்கில் சென்று யார் பதிவிட்டார்களோ அவர்களை வசை பாடி விட்டு வந்து விடுவேன்... மேலும் எனது எழுத்து தல லிங்கையும் அங்கே பதிவு சேது விட்டு வருவேன்... அவர்களில் பல பெரும் திருடியவர்களை திட்டி தீர்ப்பார்கள்... அப்படியும் அவர்கள் அதை நீக்க வில்லை என்றால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த போகிறேன் என கூறிவிட்டு வருவேன் பிறகு அவர்கள் அதை பல சமயங்களில் நீக்கி உள்ளார்கள்... எனது படைப்புகள் சுமார் பத்துக்கும் மேற்பட்டவைகள் இப்படி திருடப் பட்டு பிற பிளாக்குகளிலும் முகநூலிலும் இருக்கிறது... உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.... தோழர் ராம் வசந்தின் கவிதை ஒன்றை திருடி ஆனந்த விகடனுக்கே அனுப்பி அது இரு வாரங்களுக்கு முன் பிரசுரமே ஆகி விட்டது... பிறகு ராம் வசந்த் விகடனை அணுகி கேட்டதால் அவர்கள் மன்னிப்பு கேட்டது தனி கதை... இப்படி விகடனாலாயே முடியாத போது மற்றவர்களை நாம் என்ன செய்ய முடியும்... முடிந்த வரை சட்டத்தின் முன்தான் நிறுத்த வேண்டும்... தங்களின் கோபமும் ஆதங்கமும் புரிகிறது... ஆனாலும் ஒரு போது தளத்தில் என்ன வார்த்தைகளை நாம் பதிவு செய்கிறோம் என்பதில் கொஞ்சம் கவனம் தேவை தோழரே... வாழ்த்துக்கள் தோழரே... வருத்தம் வேண்டாம்... 20-Dec-2015 2:44 pm

நெடுநேரமாய்ப் பொழிகிறது இந்த மழை..!
ஜன்னல் கம்பிகள் இல்லாத என்வீடு
இப்பொழுது மிகவும் எனக்குப் பிடித்திருக்கிறது..!

கதவுகள் இல்லாத முன்வாசலில்
கோணிக்கதவு தொங்கவிட்டிருந்தான் என் தம்பி!

மெதுமெதுவாய்த் தூறும் மழைப் பூக்கள்
கோணிக்கதவில் உதிர்ந்து கொண்டிருந்தது..!

காய்ச்சலுடன் எழுந்தேன்..!
அந்தப் பூக்களின் இதழ்களை சற்று
கையில் நிரப்பி முகம் கழுவினேன்..!

பிரத்தியேகமாய்...
முக்கியமாக எனக்குள் மாற்றம் நிகழும்போதோ!
அளவுக்குமீறிய சந்தோசத்தை அடையும்போதோ!
சந்தனக்கலர் சட்டையை அணிவது எனது வழக்கம்..

அணிந்தேன்..


மணி 4pm
பேருந்துவர இன்னும் பதினைந்து நிமிடங்கள்
இருந்தன..

எனது கிராமம் மிகவும் என்னை ரசித்தது
காய்ச்சலில் பைத்தியக்காரன் மழையில் நனைந்துகொண்டிருக்கிறான்
என்று...

சில நேரங்களில் மட்டும்தான் கவிஞனால்
கட்டுப்படுத்தமுடியாமல் தனது வெளிப்பாடுகளை
அவிழ்த்து வைக்கமுடிகிறது..!

அதை அவிழ்க்கும்வரை அவனுக்குள் ஏற்படும்
தவிப்பை ஒரு பிரசவப் பெண்ணால் மட்டுமே உணரமுடியும்
என்று எனக்குத் தோன்றுகிறது...!

இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தேன் .

பேருந்து வந்தது..ஏறினேன்..கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையம் வந்தடைந்தேன்.
நேராக நான் எப்பொழுதுமே வந்துசெல்லும் இன்டர்நெட் கடைக்கு வந்தேன்...

இப்பொழுதுதான் நான் எழுதப்போவது தொடங்கப்போகிறது..!
விமர்சனம் செய்பவர்கள் சற்று செவியை பட்டைதீட்டி வைத்துக்கொள்ளவும்..!

நான் கவிதை எழுதி பெரிய கவிராஜன் ஆகவெல்லாம் நினைக்கவில்லை.
ஆனால்,இப்பொழுது நினைக்கிறேன்..!
காரணம்
என்னுடைய மப்பூடு என்னும் கவிதையை தொலைந்துபோன வானவில்
புத்தகத்தில் இடம்பெறச் செய்ததுதான்
ஏதோ கிறுக்கிக்கொண்டிருகிறேன் என்றுமட்டும்
நான் எப்போது சொல்லமாட்டேன்.
பாரதியைப்போல ஒரு சாதனை படைக்க வேண்டும்
கவிதை என்பது படிப்பறிவில்லாத அறிவாளிக்கும் புரியும்படி இயல்பாக அழகாக இருக்கவேண்டும்
என்கிற நோக்கத்தில் எழுத ஆரம்பித்தேன்..புத்தகங்கள் படிக்கப் படிக்க
மொழியின்மீது ஈடுபாடு வந்துவிட்டது. அட...!
நான் சொல்லவந்ததை மறந்துவிட்டேன் நண்பர்களே..!


18.10.15 என்று நினைக்கிறேன்...எனது மண்ணின் பெருமகன் ஈரோடு தமிழன்பன்
அய்யா அவர்களின் பிறந்தநாள் விழாவில்....

கலந்துகொள்ள எனக்கு விருப்பம்.ஆனால்,விடிந்தால் கல்லூரி..இன்னும் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் சென்றுகொண்டிருக்கிறேன்.விடுப்பு எடுக்க கூடாது என்பது எனது சின்னவயதில் இருந்து எனக்குள் இருக்கும் ஆசை...யோசித்தேன்,

அகன் அய்யாவிற்கு மின்னஞ்சல் அனுப்பினேன்."வாலிபோல தாடி வெச்ச அகன் அய்யா ..! என்னால் விழாவில் கலந்துகொள்ள இயலாது எனக்கு ஒரு புத்தகம் மட்டும் அனுப்பிவையுங்கள் என்று முகவரி அனுப்பினேன்."என்றேன்.

பதிலுக்கு அவரும் குசும்புக்கார மூர்த்தி நிச்சயம் அனுப்புகிறேன் என்று பதில் தெரிவித்தார்.

ஓரிரு நாட்கள் கழித்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது.
திறந்து படித்தேன்."தம்பி ! சென்னை விழாவில் நீ கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும்!
இல்லையென்றால், நான் உன்னுடன் கதைக்க மாட்டேன்" என்று பணிவாகக் கட்டளை இட்டது.

நானும்..."நீங்களே சொல்லி விட்டீர்கள்! நிச்சயம் நான் செல்வேன்" என்றேன்! பதில் மின்னஞ்சலில்...

சென்னை செல்லவேண்டும்..ஏற்கனவே,இரண்டுமுறை நான்கண்டு பழக்கப்பட்ட மண் தான்...!
அதனால்,கால்வாசி தெரியும் சென்னையின் குணம்...

முதலில் பணம் வேண்டும்...அப்பாவிடம் நான்தான் கேட்பதே இல்லையே..!
என்னசெய்வது யோசித்தேன்..!
கைபேசியில்,அதிகப்பைசா வைத்துக்கொள்ளகூடிய புத்திசாலியல்ல நான்..
ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் என் தோழி நந்தினிக்கு...
என்னோடு இளங்கலை படித்துமுடித்து தற்போது வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறாள்.

"பணம் ஆயிரம் ரூபாய் வேண்டும்..சென்னை செல்வதற்கு என்றேன்..!"
இதற்கு முன்பு..! என்னை விழாவில் கலந்துகொள்ளச் சொன்ன அந்த கனடாவைச் சேர்ந்த என் உயிருக்கு நெருக்கமான அக்காவிடமே கேட்கலாம் என்றிருந்தேன்.
ஆனால்,மனதிற்குள் ஒரு மின்னல் அடித்தது.
போதும்...இதற்கு முன்பே,நான் மூன்று முறை பணம் வாங்கிட்டேன்,இனிமேல் கேட்பது நல்லதல்ல..பிறகு,கல்லூரிக்கட்டணம் கட்டமுடியாத தருணத்தில் கேட்கமுடியாமல் போய்விடும் என்று கேட்கவில்லை.

நந்தினி பணம் தந்து அனுப்பினாள்.பெற்றுக்கொண்டேன்...
மதியம் இருக்கும்...ஒரு 1.30 மணி ...ஜின்னா என்னைத் தொடர்புகொண்டு எப்போது வருகிறீர்கள் என்றார்.நான் சொன்னேன்"17.10.15 அன்று இரவு கிளம்பி 18 காலை வந்துவிடுவோம் அய்யா"என்றேன்.

அவரும் சரிவந்து என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.தங்கும் விடுதிக்கு தலைக்கு 500 ஆகும் என்றார்..அய்யா அவ்வளவா ..! நாங்கள் சென்னை வந்து அப்படியே சென்னையை சுற்றிபார்த்துவிட்டு விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறோம் என்றேன்.அதற்கு சிரித்துக்கொண்டே ...தம்பி..!நீங்க வாங்க பேசிக்கலாம் ..பணத்தப்பத்தி  கவலைப்படாதிங்க...ஷேர் பண்டிக்கலாம் என்றார்...

நானும் சரி என்கிறவாக்கில் ம்ம்ம்ம் என்றேன்...

17.10.15 இரவு ஈரோடு ரயில் நிலையம் அடைந்தோம்.மணி ஒன்பது...
நான்,நண்பர்கள் தனசேகர்,கார்த்தி மூன்றுபேரும் இரவு ஏற்காடு விரிவுரையில் ஏறினோம்.ரயில் எடுக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தது...மூவருக்கும் பசி...நேரமாகிவிட்டது என்கிற வேகத்தில் சாலையோர கையேந்தி பவனில் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு வந்தோம்...

இருந்தாலும், மூவரும் ஆளுக்கொரு புத்தகம் எடுத்து பரிமாறிக்கொண்டு புசித்தோம்.
ரயில் காவிரி ஆற்றைக்கடக்கும்போது எனக்குள் ஒரு இன்பம் ... என் மண்ணின் தேவதை அல்லவா அவள்...இரவு வெளிச்சத்தில் அமைதியாக தூங்காமல் தூங்கிக்கொண்டிருந்தாள்..


பல ஸ்டேஷன் தாண்டியபிறகு நாங்கள் மூவரும் தூங்கிவிட்டோம்.
சென்னைவரும் அரைமணிநேரத்திற்கு முன்பு நான் விழித்துக்கொண்டேன்.

சென்னை வந்தது.
கார்த்தியை எழுப்பினோம்.
ரயில்விட்டு இறங்கினோம்...ஒரு சோம்பல் நடைபோட்டு ரயில்நிலையம் முன்பு வந்தோம்...சாலையைக்கடந்தோம் ...


பலகதைகளைப் பேசிக்கொண்டே மெரினாவிற்கு நடக்க ஆரம்பித்தோம்.
மணி 5.15 என்று நினைக்கிறேன் நான் பாத்தபோது..

மெரினாவிற்கு நடந்தே சென்றடைந்தோம்...
முதலில் அண்ணா நினைவகத்திற்குள் நுழைந்து ராமச்சந்திரன் நினைவகம் வழியே வந்து காவல்காரரிடம் மாட்டிக்கொண்டோம்  ..பிறகு ,அதைப் பொருட்படுத்தாமல் "போங்க தம்பிகளா" என்றார்.கடற்கரைக்குள் ஆறு மணிக்கு மேல்தான் செல்லவேண்டுமென்று காவல்துறை அதிகாரி கட்டளை இட்டார்.

அப்படியே நடந்து நேராக சென்று .... கடற்கரைக்குள் நுழைந்தோம்,வயதானவர்கள்...இளையவர்கள் எல்லோரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தனர்.அதிகாலை புலர பூத்தது கடலுக்குளிருந்து.  கடலலைகளில் தனசேகர் விளையாடினான்...எனக்கும் பிடிக்கும் ,ஆனால், பிசுபிசுப்பு ஏற்படும் குளிக்கவேண்டும் என்பதால்,தொட்டுப்பார்க்க வில்லை...

பிறகு,மெரினாவின் கடற்கரை உணவுச் சாலையில் காலை உணவு சாப்பிட்டோம்...

....................................................................................................................
மன்னிக்கவும் ,,,,,,மீதத்தை அடுத்த முறை இணையம் வரும்போது  பதிவு செய்கிறேன்...பயில் அறுபது ரூபாய்தான் உள்ளது...வீடு செல்ல ஒரு ஐந்து ரூபாய் உள்ளது...இது போதும்....

.............................................................................................................................................................................................................
24.11.15

காலை உணவை முடித்துவிட்டு என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தோம்...
அகன் அய்யாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு
ஜின்னாவிற்கு அழைத்தோம்..!போனை எடுக்கவில்லை.
தூங்கிவிட்டார்போல அய்யா ...
வேறு யாருடைய என்னாவது அனுப்புங்கள் என்றோம்..!

அனுப்பினார்..!

பொள்ளாச்சி அபி அய்யா அவர்களின் எண்ணை...

அவருடன் பேசினோம்...அவர் விரைவாக கிளம்பி வாருங்கள் தம்பி என்றார்.
நான் விடுதிக்கட்டணம் எவ்வளவு அய்யா என்றேன்..
தம்பி தெரியவில்லை...ஜின்னாவிடம் தான் எல்லாம் கேட்கவேண்டும் என்றார்..

சரிங்க அய்யா என்று நான் வைத்துவிட்டேன்.

பிறகு மூவரும் அண்ணா நினைவிடப் பூங்காவினுள்
சென்று ஒரு மரத்தடி நிழலில் உறங்கினோம்....ரயிலில் வந்த களிப்பு எங்களை கட்டிப்போட்டது
சிறிதுநேரம் தூங்கினோம்...அந்த இடத்திற்கு சொந்தமான வெயில் எங்களை வேறு இடம் 
பார்க்கச் சொல்லியது...

ஒரே அசதியாக இருந்தது..
அவ்வளவு வசதியாகப் படவில்லை  எனக்கு..
என் மனதிற்குள் ....நண்பர்களை இப்படி அழைத்துவந்துவிட்டு 
அவஸ்தைப்பட வைக்கிறோமே என்றகவலை எனக்குள் ஏற்பட்டது.
ஆனால்,அவர்கள் என் நிலைமையை புரிந்து வைத்திருந்தார்கள்...அதுவுமில்லாமல்...
அவர்கள் என்னைபோன்றே வாழப் பழகியவர்கள்...குடும்ப சூழலும் அப்படித்தான்...

ஒன்பது மணிக்கு பஸ் பிடித்து செண்டரல் சென்று பழைய புத்தக கடையில்
புத்தகங்கள் வாங்கினோம்...கார்த்தி அவருடைய படிப்பு தொடர்பான
biochemistry புத்தகம் வாங்கினார்..நானும் தனசேகரும் இணைந்து UGC NET ENG.LIT க்கு உண்டான ஒரு புத்தகத்தை வாங்கினோம்...


பலமுறை போன் செய்தும் எடுக்காத ஜின்னாவை நினைத்து கடுப்புடனேயே மீண்டும் 
கடையாக என்று போன் செய்தேன்...எடுக்கவில்லை ..!
நண்பர்களை ஒருமுறை பார்த்தேன்..!
சிரித்தார்கள்...மீண்டும் இன்னொருமுறை அழைத்தேன்...!

அழைப்பை ஆசை அஜித் எடுத்துபபேசினார்...
ஜின்னா குளியலறையில் இருப்பதாகச் சொன்னார்..பிறகு  முகவரி கேட்டு..
ஒரு ஆட்டோ பிடித்து சென்றோம்...
விடுதிக்கு அருகில் சென்று மீண்டும் அழைத்தோம் !
ஜின்னா பேசினார்..தம்பி அங்கேயே சற்று நில்லுங்கள்..நாங்கள் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.வாருங்கள் நீங்களும் சாப்பிடலாம் என்றார்...நாங்கள்
காலை 7 மணிக்கே  சாப்பிடுவிட்டோம் அய்யா...
நீங்கள் சீக்கிரமாக வாருங்கள் என்றேன்...
சரி என்று வைத்து விட்டார்...



கிட்டத்தட்ட ஒரு 45 நிமிஷம் காத்திருப்போம்...வரவில்லை..
பொறுமையும் வெறுமையும் எங்களை கொலை செய்ய ஆரம்பித்தது...
பக்கத்தில் உள்ள பெட்டி கடைக்கு சென்று கடலை மிட்டாய்,பிஸ்கட் வாங்கி சாப்பிட்டோம்...


சாப்பிட்டுமுடித்து பேசிக்கொண்டிருந்தபோது...
ஒருவர் போன் பேசிக்கொண்டே வந்தார்...
இன்னொருவர் மற்றும் சிலர் நடந்துவந்தனர்...
இவர்களாகத் தான் இருக்கவேண்டும் என்று கருதினேன்.

ஜின்னா அண்ணா போனை துண்டித்துவிட்டு..
என்னுடைய எண்ணினை தேடிக்கொண்டிருந்தார்...
கிட்டத்தட்ட  எனக்கும் அவருக்கும் ஒரு
பதினைந்து அடி தூரமிருக்கும்...
நான் கணித்தது சரியே..!

என்னுடைய கைபேசி அதிர்ந்தது..
துண்டித்துவிட்டு...நீங்கதானா ஜின்னா என்றேன்..!
ஆமாம் ...வாங்க..! வாங்க..! என்று அழைத்துக்கொண்டு
அறையில் உள்ளவர்களையும்...
உடன் வந்தவர்களையும் அறிமுகம் செய்தனர்..

நான் அறைக்குள் சென்றவுடன் முதல்  வேளையாக
குளிக்கச் சென்றேன்...
நண்பர்கள் இருவரும் தொலைக்காட்சியில் 
செய்தகள் பார்த்துக்கொண்டிருந்தனர்...

அவர்கள் இருவரும் நடிகர் சங்கத் தேர்தல் குறித்தும்..
விஷால்  தாக்கப்பட்டது குறித்தும் பேசிக்கொண்டிருப்பது
குளித்துக்கொண்டிருக்கும்போது எனக்குக் கேட்டது..


நானும் குளித்துக்கொண்டு வந்தேன்..பிறகு அவர்கள்..
சற்று பேசலாம் என்று பக்கத்துக்கு அறைக்கு சென்றேன்..
எல்லோருமே அங்கேதான் இருந்தார்கள்..
எல்லோருடனும் படம் எடுத்துக்கொண்டது எனக்கு மிகவும் மகிழ்வைத் தந்தது.

பிறகு எல்லோரும் ஊடல் கொண்டோம்..
எல்லோரையும் எனக்குக் கொஞ்சம் தெரியும்...நான் எழுத்தில் மற்றவர்களுடைய 
படைப்பிற்கு கருத்து தெரிவிக்கவரும்போது பார்த்திருக்கிறேன்..
ஆனால்,அவர்கள் எவருக்குமே என்னைத் தெரியவில்லை..
புதிய முகமாகவே பார்த்தார்கள்..
அது எனக்கு  மிக மிக பிடித்தது...

மதிய உணவு உண்ணச் சென்றோம்..
அந்த உணவகத்தின் பெயர் அன்பு பவன் என்று நினைக்கிறேன்..
சரியாக தெரியவில்லை ..ஆனால்,அன்பு என்றுதான் ஆரம்பிக்கும்...

ஜின்னா மிகவும் எங்களைக் கவனித்துக்கொண்டார்..
சாப்பிடும்முன்னேயே...!
எவ்வளவு வேண்டுமோ சாப்பிடுங்கள் என்றார்..ஆனால்,
விலைப்பட்டியலைப் பார்த்ததும்....ஜின்னாவிடம் ....
அண்ணா நாங்கள் ஜூஸ் சாப்பிட்டுக்கொள்கிறோம் என்றேன்..
அவரோ...!
அட ..உக்காருங்க தம்பி என்று அவர்கள் என்னென்ன 
சாப்பிட்டனரோ அதையே எங்களுக்கும் வாங்கித் தந்தனர்..
பிறகு கணக்கைக்கூட எங்களுக்கும் அவரே தந்தார்..

பிறகு,அறைக்கு வந்து..
ஒரு குட்டித் தூக்கம்..

விழா நடைபெறும் இடத்திற்கு ஜின்னா
மற்றும் எல்லோரும் சென்றார்கள்...ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்..
நான் ஏதோ ஒரு கவிதை எழுதி இருந்தேன்..அதன் தழுவலுடன்
கருணாநிதி அவர்கள் இன்னொருகவிதை எழுதி இருந்தார்..அதை நான்'
வாசித்துவிட்டு சரிங்க சாமியோ என்க்கிண்டல் செய்திருந்தேன்...
அதற்கு அவர் பதிலாக எனது கவிதைப்பக்கத்தை அனுப்பி படிக்கச் சொன்னார்...!
சாப்பிடச் செல்லும்போது அதை நினைவு கூர்ந்து என்னிடம் சொல்லி...அந்த திருமூர்த்தி
நீங்க தானா என்றார்..

பிறகு,நாங்கள் ஒரு ஆட்டோவைப்பிடித்து கவிக்கோ அரங்கம் சென்றோம்...!
வரவேற்பறையில் அழகாக வரவேற்றனர்..தமிழ் பண்பாடோடு..

சியாமளா அவர்கள் இன்னும் என் கண்களில் உள்ளார்..
அவர்களோடு சிறிதுநேரம் பேசினேன்...

பழனிகுமார் அய்யாவைச் சந்தித்து பேசினேன்...

தமிழன்பன் அய்யாவைப் பார்த்ததும் பக்கத்தில் நின்று டீ சாப்பஈடுக்கொண்டே பேசினோம்..
நாங்கள் மூவரும் ஈரோட்டை சேந்தவர்கள் என்று சொன்னோம்..
ஊர் பெயரை கேட்டார்..
சொன்னோம்...புன்னைகை செய்தார்...


விழாவில் எதுகை மோனகையாக கவிதை வாசித்தது அழகாக இருந்து..

விழா எப்பொழுது முடியும் என்று எங்களுக்குள் தோன்றியது..
நான் கண்டிப்பாக காலை கல்லூரி சென்றே ஆகவேண்டும் என்ற முடிவில் 
இருந்தேன்...

மெதுவாக எழுந்து அகன் அய்யாவைச் சந்தித்து விஷயத்தை சொன்னேன்...
ஆனால்,அந்தத் தாத்தா "புத்தகங்கள் எல்லாம் கட்டுப் பிரிக்காமல் உள்ளது தம்பி ..!
விழா முடிந்த பின்னரே எடுக்க முடியும்..அதுவரை பொறுத்திரு என்று தெரிவித்தார்..!"

நானும் கடுப்புடன் வந்து அமர்ந்தேன்...
போகப்போக என் நண்பர்களுக்குப் பசி வாட்ட..
எனக்கு சங்கட்டம் தொற்றிக்கொண்டது...


மீண்டுமொருமுறை,எழுந்துசென்று
அய்யா...என்றேன்..
அவர் தனி அறைக்குள் அழைத்துச் சென்றார்...
நான் சரி புத்தகம் தருவார் என்று நினைத்தேன்..
1000 ரூபாய் பணம் எடுத்து நீட்டினார்..
அய்யா ..!இது என்ன?
நான் இது கேட்கவில்லை...
தெரியும்பா ..!பிடி..என்று 
என் பாக்கெட்டில் திணித்தார்..

சோகத்துடன் வந்து மீண்டும் அமர்ந்து கொண்டேன்...

சேகுவாரா,விவேக் பாரதி,குமரேஷ் கிருஷ்ணன்,ஆசை அஜீத்...எல்லோருடனும் நன்றாக பேசினேன்...
இப்போது என்னை அவர்களுக்கு ஞாபகம் உள்ளதா என்று தெரியவில்லை.

எப்படியோ விழா முடிந்தது..
புத்தகம் பெற்று வந்தோம்..

கடைசியாக ஒன்று..!
புதிய கோடங்கி என்னும் ரவிக்குமார் அவர்களிடம் நான் சில விசயங்களைத் தெரிந்து கொண்டேன்...
திரையில் மிகப்பெறும் கவிமான் பற்றி...அது பாதி நம்பத் தகுந்ததாகப்பட்டது எனக்கு.


ஜின்னா..,அகன் அய்யா..,சியாமளா, என எல்லோருடனும் இருந்து விடை பெற்று 
அவசர அவசரமாக சென்டரல் சென்று நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி ரயில் பிடித்து
அடித்துப்பிடித்து ஆளுக்கொரு இடம்பிடித்து தூங்கிக்கொண்டே சொந்த மண் வந்தடைந்தோம்..

அந்த ஆயிரம் ரூபாய் வாங்கிய விஷயத்தை நண்பர்களிடம் சொல்லவில்லை..
அந்த ஆயிரம் ரூபாயை நான் கடனாக வங்கியதை அடைக்கப் பயன்பட்டது எனக்கு.

பிறகு வீடு சென்று குளித்துப் புறப்பட்டு,வேகமாக ஓடிச்சென்று..

கல்லூரிப்பேருந்து பிடித்து கல்லூரியை அடைந்தேன்..
கல்லூரி உணவகத்தில் இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டு முதல் மணி அடிக்கும்போது 
தமிழ் துறைக்கு  சென்று  விசயத்தை சொன்னேன்..

கொடுத்த நான்கு புத்தகத்தில்
ஒன்றை அன்பளிப்பாக தந்தேன்...

மதியம் எனை கல்லூரி முதவரிடம் அழைத்துச் சென்றார்கள்.
அவரும் என்னை வாழ்த்தினார்..
நன்றாக எழுத்து கல்லூரியின் சார்பில் உன்னுடைய புத்தகத்தை 
வெளியிட நான் முன்மொழிகிறேன் என்றேன்...

நன்றி சொல்லி..

கல்லூரிக்கு நான் சேர்த்த முதல் பெருமை இதுவென 
திருப்தியோடு வகுப்பறைக்குச் சென்றேன்..
.................................................................................................................................................................................................
ப(து)ணிவுடன்,
திருமூர்த்தி 

மேலும்

மிக்க நன்றி மனோ ஜி 03-Dec-2015 11:22 am
தபிகள் = தம்பிகள் 01-Dec-2015 5:24 pm
இந்த மாதிரிதான் எனக்கு எழுத வர மாட்ட்டிக்குது திருமூர்த்தி.... பொறாமையாக அழகான பதிவு... நடந்தவை எல்லாம் கண்முன் விரிகிறது.. அன்று அவ்வளவு அமைதியாக இருந்ததன் காரணம் புரிகிறது... இன்றூ இவ்வளவு பேசுவத்ற்கும் காரணம் விளங்கிவிட்டது... நெகிழ்ச்சியான பதிவு... ஜின்னா அண்ணா எல்லோரையும் தபிகள் போல நன்றாகப் பார்த்துக் கொண்டார்.... 01-Dec-2015 5:23 pm
நன்றி அண்ணா...! 01-Dec-2015 9:14 am

Eluthu Ennamநெஞ்சில் ஊறுகின்ற
இந்த இரவு...

பேருந்தில் 
இதயத்தை நனைத்த 
கவிஞர் வாலியின் பாடல்..

காதலை உருக்கி
பாடலைப் பருகிவந்து
பகிர்கிறேன் இந்தப் பாடலை...

**********************************************************************************************************


தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட

அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா
எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா
ஓ… மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்
ஓ… கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்
சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா…
அன்பே வா…
உயிரே வா…
அன்பே வா…
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
காதல் பார்வைகள் எல்லாமே அழகு
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்
காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்
ஓ… உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
ஓ… என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
இரு உயிர்கள் என்பதே கிடையாது
இதில் உனது எனது எனப் பிரிவேது
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா…
அன்பே வா…
உயிரே வா…
அன்பே வா…
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி
துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
ஓ…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
ஓ…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
ஓ…

மேலும்

இதை விட அழகான உவமைகள் , எதுகை , மோனைகள் இருக்குமா என வியக்க வைக்கின்றன வாலியின் வரிகள் . 02-Oct-2015 7:30 pm
வாலியின் தமிழ் இல்லை என்றால் பாடலும் காலியாகிருக்கும் நானும் அவரை மானசீகமாய் கொண்டவன் தான் 02-Oct-2015 6:46 am

நான் முதல் முதலாக ஒரு சிறுகதை எழுதியுள்ளேன் ...நன்றாகப் படித்து கருத்தும் பகிர்வும்...பிடித்திருந்தால் புள்ளியும் தாருங்கள்....
http://eluthu.com/kavithai/258576.html

மேலும்

மேலும்...

மேலே