எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வீட்டில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய விளக்குப்பாடல்

வீட்டில் விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட ’பாடலை’ ஆறு முறை கூறி, ஒவ்வொரு முறையும் விளக்கிற்கு பூ போட்டு, பூமியைத் தொட்டு வணங்கி வழிபட எல்லா சுகங்களும் கிட்டும்! 


' தீப ஜோதியானவளே நமஸ்காரம் 
திருவாகி வந்தவளே நமஸ்காரம் 
ஆபத்பாந்தவியே நமஸ்காரம் 
அனுதினமும் காத்திடுவாய் நமஸ்காரம்’

மேலும்

காரத்தைக் குறைத்து இனிப்பைக் கூட்டுவோமா...? தீபஒளி யானவளே வணக்கம்! திருவாகி வந்தவளே வணக்கம்! ஆபத்தில் காப்பவளே வணக்கம்! அனுதினமும் காத்திடுவாய் வணக்கம்! தமிழ் இனிக்கிறதா...? இன்னும் தனித் தமிழாக்கலாம்...! 26-Nov-2015 7:04 pm

கார்த்திகை தீபம் ஏற்றும்போது பாட வேண்டிய பாடல்
துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை, 
அன்பர்தமை வாவென்று அழைக்கும் மலை. 
தன்பகத்தைக் காட்டும் மலை தன்னைக் 
கருத்தில் உறும் அன்பர் இடம் 
வாட்டுமலை அண்ணாமலை.’ 


பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும், தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே. இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

மேலும்

பாலாஜியின் ஹைக்கூ துளிகள் - மழை

"வெப்ப சலனம் வெளிவந்தாலும்
 மண்மகள் உடல் முழுக்க மணக்கிறதே !"
          - மழை முத்தமிட்ட வேளையில் .

"சாலையோர மரங்களுக்கு செந்நிற
 சாயமிடும் புழுதிக்காற்று - பொன்னிற 
 பசுமையை துளைத்த மரங்களின் புலம்பல்."
               - சலவை செய்ய வருமா மழை.

"மழை நின்ற பின்னும் சலசலப்பு 
  கோடையில் உயிர்விட்ட  ஓடைகள் 
  மறுபிறவி கிடைத்ததன்   மகிழ்ச்சி குரல். "
                         -மழையின் மழலைகள்.

"ஊட்டச்சத்து குறைந்த  புன்செய் தாய் பெற்ற
  பிள்ளைகளுக்கு பருவத்தே பாலூட்டும் செவிலித்தாய்."
                                    - மழையின் வளர்ப்பு மக்கள்.

"விவசாய பெருமக்கள் புரியும் தவத்திற்கு 
   வடகிழக்கு  பருவக்காற்று அளித்த வரம்."
                     - காலத்தே பெய்யும் மழை.
                                                                             - K.B.பாலாஜி

மேலும்

ஏ... யப்பா! துளி ரொம்பப் பெரிய துளியா இருக்கே...! 23-Nov-2015 1:22 pm

மேலே