எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வான வில் வண்ணம் கண்டு 

வனப்புறு எண்ணம் கொண்டு 

தேனெனத்  தமிழை உண்டு 

திளைக்குதே  எழுத்து   வண்டு 

மேலும்

மிக்க நன்றி ஐயா... 06-Sep-2015 11:24 pm
ஓவியமும் கவிதையும் இயற்கை அன்னையின் பரிசாக உள்ளது. இதுபோல் பல படைப்புகள் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் நன்றி 06-Sep-2015 6:47 pm
நன்றி சர்பான். 05-Sep-2015 6:47 pm
நன்றி பழனி சார்.... 05-Sep-2015 6:46 pm




மனம் எனும்
காட்டில் பூத்து
மறைந்திடும்
எண்ணப் பூக்கள்
தினம்
ஒரு வண்ணம் காட்டும்
தேடிடத்
தொலைந்து போகும் .
நிறங்களில்
நிலைத்து நிற்கும்
நேர்த்தியாய்
ஒன்றைக் கொய்து
வளம் தரும்
மையில் தோய்த்து
வார்த்தையாய்
வழி நடாத்தி
திறம்படத்
தாளில் தீட்ட
தேர்ந்திட்ட
படிமம் சேர்த்து
உளம் பல
கவரச் செய்ய
உருவக அணிகள் சூட்டி
நயம் பட வடித்த
பாட்டில்
நல் இசைச்
சந்தம்
சேர்த்து
வளம் கொடு குரல்
இசைக்க
வரம் ஒன்று
கிடைக்க வேண்டும்...

மேலும்

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பில்லாத சமுதாயம்
உலகத்துக்கு ஒரு புதுமை..
பாரத சமுதாயம் வாழ்கவே!!

எழுத்துத் தள நட்புக்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்...
கூடவே கீழுள்ள இணைப்பிலுள்ள புரட்சிக் கவிஞர் பாரதி பாடலை O .S அருண் அவர்களின் குரலில் ஒரு தடவை கேட்டுச் செல்லுங்கள் ...
https://www.youtube.com/watch?v=roMLxJVmb_s

மேலும்

சாராய கங்கையில்
சதா நீராடி
பாராயணம் பண்ணும்
பக்த கோ(கு )டிகளே
உமைக் காக்க
நீராகாரம் இன்றி
நீண்ட வழி
சென்றுவிட்ட
நீதியின் சுடர் பற்றி
தீராராத
வெறி கொண்டு
திடமான
கொள்கையுடன் ஊர்
ஊராகப் பற்றி
எரிகிறது
ஒரு நெருப்பு..

மேலும்

உண்மை...நன்றி அருண் வாலி.. 06-Aug-2015 7:07 pm
உண்மைதான்...நன்றி ஐயா... 06-Aug-2015 7:07 pm
நன்றி ஐயா.. 06-Aug-2015 7:06 pm
அந்த நெருப்பை அணைக்க யூகம் அமைத்துவிட்டார் தங்க தாரகை "ஊழல் ராணி" .. எங்கும் தடியடி ..!!! 04-Aug-2015 5:54 pm

ஏழையாய்ப் பிறந்திட்டாலும்
ஏணியாய் உயர்ந்து நிற்க
நாளிதழ் கொடுத்துக் கற்று
நாட்டினை உயர வைத்து
எளிமையே உருவம் கொண்டு
இலட்சியம் இமையம் தொட்டு
பழமையையை மதித்து நின்று
பைந்தமிழ் கவிஞனாகி
குறளினை உலகமெல்லாம்
குறையின்றி ஒலிக்கச் செய்து-தமிழன்
புகழினை விண்ணில் சேர்த்த
பார் போற்றிடும் மேதையாகி
அறமது தவறிடாது
அரசியல் ஆட்சி நின்று
நெறிமுறை வழுவா நெஞ்சில்
நேர்மையை நிலை நிறுத்தி
மதங்களைக் கடந்து நின்று
மக்களின் தலைவனாகி
இல்லறம் துறந்து நின்று -எம்
இதயத்தில் வாழ்ந்து என்றும்
வல்லமை எமக்களித்து
வான் வரை உயர்ந்து நின்ற
அனலது தீண்டா அந்த
அக்கி (...)

மேலும்

வேதியலின் விந்தைகள் ...

எரியுறு
அமிலம்
ஒன்றும்
கொதியுறு
காரம்
ஒன்றும்
இயல்புறு
முறையில்கூடி
இணைந்து
சீர் வடிவம்
பெற்று
திரை கடல்
ஊறும் உப்பாய்
தீங்குறாத்
தன்மை பெற்று
சுவை தர
உணவில்
சேர்ந்து
தன சிறப்பினை
உரைக்கும்
நாவில்....

மேலும்

தங்கள் ஊக்கம் தரும் கருத்துக்களுக்கும் மனமுவந்த பாராட்டுக்கும் நன்றி ஐயா.. 12-Oct-2015 8:02 am
வேதியல் தமிழ் கவிதை மலர் இன்னும் பூக்கட்டும் மணம் பரவட்டும். வேதியல் ஆய்வு மேற்கொண்டு வேதியல் புதிர்கள் பல கவிதைகளாக மலர வாழ்த்துகள். 10-Oct-2015 3:19 pm
நன்றி ஐயா.. 09-Oct-2015 7:08 pm
பாராட்டுக்கள் 09-Oct-2015 6:06 am

மறையுறு
மையம் பற்றி
மாறிடாத்
தூரம் சார்ந்து
செறிவுறு
நெறிகள் செப்பி
செம்மையாய்
அசையும் செய்யுள்
தொலையுறு பரிதி
காலும்
தீர்ந்திடா
ஒளியின் கீற்றாய்
நலிவுறு இருளை
நீக்கி
நாளெல்லாம்
வாழுமன்றோ...

மேலும்

தங்களது ஆமோதிக்கும் கருத்துக்கு மிக்க நன்றி! 13-Jun-2015 9:14 am
நானும் கூடத்தான் கிருஷ்ண தேவ் ..இலக்கியக் கடலுள் ஓர் சருகாய் ...இன்னும் கற்க ஆவல் .. 12-Jun-2015 11:27 pm
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றிகள் கருணா சார் .. அருமையான பா ..கடவுள் வழிபாட்டினால் எந்த இடரும் நீங்கும் என்பது என் நம்பிக்கையும் கூட.. 12-Jun-2015 11:25 pm
தாய்மொழியின் சிறப்புணர்ந்து செய்யும் நல்லதொரு செய்யுள் நாளும் வாழும் எனப் புரிந்தேன்..ஆர்வத்தினால் இக்கவி சார்ந்து முயற்சித்தேன் இப்படி: அசைவுறு ஐயம் பற்றி நீங்கிடா போதம் ஆய்ந்து திருவுரு அடிகள் தொழுதிட வெம்மையாய் தகிக்கும் துயரும் தொலைவது உறுதி நாளும் ஓய்ந்திடா விதியின் தாக்கம் நயமுறு சிந்தை ஓங்கி நாதனால் தீருமன்றோ! 12-Jun-2015 1:12 pm

எழுத்துத் தள நட்புக்களுக்கு .... உங்களால் முடிந்த சிறு உதவி இவர்கள் வாழ்வை மாற்றலாம் ... சிறு துளி பெரு வெள்ளம் ...



விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம், மூங்கில்துரைப்பட்டு கிராமத்தில் மேட்டூர் வடக்கு தெருவில் வசிக்கும் மஹபூப்கான் மனைவி சர்தார்னி
இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்.
1.வாஹித்கான் வயது-21 படிப்பு 10, 2.அம்ஜத்கான் வயது-18 படிப்பு 7, 3.சாரூக்கான் வயது-15 படிப்பு 6, இம்மூன்று குழைந்தைகளுக்கும் கடந்த 7 ஆண்டு காலமாக ஒன்றின் பின் ஒன்றாக மூவருக்கும் தொடர்ந்து பக்கவாதம் நோய் தாக்கி படுத்த படுக்கையாக இருப்பதினால் மருத்துவ சிகிச்சை செய்ய இயலாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு க (...)

மேலும்

உண்மைதான் ராஜமாணிக்கம் சார் .... 11-Jun-2015 12:02 am
நன்றி சந்தோஷ் .. 11-Jun-2015 12:00 am
நிச்சயமாக ..! 10-Jun-2015 9:46 pm
பணவுதவியெல்லாம் தற்காலிக நிவாரணமே; அத்தோடு, நிரந்தர உதவிக்கும் இறைவனிடம் கையேந்துவோம். கைநெகிழ்ந் தேகிய குடும்பத் தலைவரும் திரும்பி வரட்டும். 10-Jun-2015 9:39 pm

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா....

https://www.youtube.com/watch?v=2dpnbkBZFrE
காலத்தால் அழியாத கானத்தின் சாயலில் இன்னொன்று
கண்கள் இரண்டால் தேடிய அதே ராகம்
https://www.youtube.com/watch?v=5GFug7895K8

மேலும்

அழகிய கானம்
ஒன்று
அபூர்வ
ராகத்தில்
ஆரம்பித்து
ஆனந்த ராகமாய்
பயணித்து
அற்புத ராக
சங்கமங்களின்
ராகமாலிகையாகி
அதிசய ராகமாகிறது

இங்கே அந்த அதிசய ராகம்....

https://www.youtube.com/watch?v=H5nFSVMxK20

மேலும்

மேலும்...

மேலே