எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவ்வுலகில்
பிறக்கும் ஒவ்வொருத்தனுக்கும்
ஒவ்வொரு உணவுப் பருக்கையில்
உரிமையுண்டு .

பசித்தவனுக்கு உணவைப் போராடி
வாங்கிக்கொடுப்பது
கம்யூனிஸம்.
பசித்தவனுக்கு உணவை அடித்துப்பிடுங்கி
வாங்கிக்கொடுப்பது
மாவோயிசம் .

இரண்டுமே ஒன்றுதான்
உணர்வோம்.
உரிமையினை
மீட்டுக்கொடுக்கும் வழிவேறு.

-வியன்.

மேலும்

எனது விபரங்களை தெரிவிக்க விரும்பவில்லை. கலை மற்றும் எழுத்து உலகில் வயதுகளை விட படைப்புகளே திறன்களே அதிகம் விசாரிக்கப்படும்/ பார்க்கப்படும் தோழர். என்னை பொருத்தமட்டில் எழுதுகோலேந்தியவர்களிடம் பாலினம் அறிந்து திறமைச்சோதிப்பதே தவறு என்பேன். கேட்டதற்காக சொல்கிறேன். இளமைக் குறும்புகளை சுயத்திறனாய்வு செய்யக்கூடிய நாற்பதின் பாதையில் என் வயது பயணிக்கிறது. 27-May-2015 4:30 pm
தங்களின் வயதென்ன அறிந்து கொள்ளலாமா தோழர் வியன் அவர்களே ..மூத்தவரோ என்ற எண்ணம் எனக்குள்,,,,ஆகவே 27-May-2015 2:56 pm
நுண்மையான விளக்கம் ...........! ஒரு மேல்ல்ய கோட்டுக்கு இந்தப்பக்கம் கம்யூனிசம் கோட்டுக்கு அந்தப்பக்கம் மார்க்க்சியம் என்று வைத்துக் கொள்கிறேன் ... விளக்கத்துக்கு நன்றி 25-May-2015 8:37 pm
மார்க்சியம் என்பது விஞ்ஞான பூர்வமான கம்யூனிசம். பின் நவீனத்துவத்திற்கும் முந்தைய பலமிக்க சிந்தனைக்கொள்கையுடையது தோழா. கம்யூனிசம் மார்க்சியம் இரட்டை குழல் துப்பாக்கியே. விரிவாக சொல்வதென்றால் கம்யூனிசம் = தீர்வை தேடுவது மார்க்சியம் - தீர்வை முன் வைப்பது. நன்றி தோழரே. 25-May-2015 8:14 pm

மணம் தந்து மரணமாகும்
ஊதுபத்தி
ஒளித்தந்து உருகிவிடும்
மெழுகுவர்த்தி

இவ்வரிசையில்,
குற்றவாளி விடுவித்து
குற்ற உணர்ச்சியில்
தற்கொலையாகிறதாம்
நீதி .
ஆம் நீதியும்


-வியன்.

மேலும்

நெஞ்சம் வெடித்து நீதி சிதறி சாகும் நிலை என்று மாறுமோ ...மனுநீதி ஆட்சி மலராதோ மக்கள் மனம் குளிராதோ ??ஏக்கமே மிஞ்சுகிறது 27-May-2015 3:00 pm

திரைப்படங்களில் ஊழலை ஒழிக்கிறேன் , லஞ்சம் ஒழிக்கிறேன் , சமுதாயம் வளம் பெற வேண்டும் என அனல் கக்கி வசனம் பேசும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் 96 இல் ‘ ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது ‘என ஆருடம் தெரிவித்தார்.

ஆனால் நேற்றோ , ஊழல் வழக்கில் சிக்கி நீதிமன்ற தீர்ப்பில் விடுதலையாகி , இன்னும் முடியா பல சர்ச்சைகளுக்கு சொந்தம் கொண்டாடும் செல்வி ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மிகுந்த மகிழ்வோடு பங்கேற்கிறார் என்றால் என்ன அர்த்தம்.. தமிழகம் காப்பாற்றப்பட வேண்டுமெனும் எண்ணமா ?

நடிகர்களே.. அரசியலில் அரைக்குறையாக பேசி பேசி மக்களை குழப்பாதீர். (...)

மேலும்

வியன் சார் ..... அரசியல்வாதிகளே தமது நிலைப்பாடுகளை கொள்கைகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல மாற்றிக்கொள்ளும்போது நடிகர் எம்மாத்திரம் ? 24-May-2015 10:06 pm
நடிகர்கள் நடிக்கத்தான் லாயக்கு. கொடுக்கும் பணத்திற்கும் ஏற்றார் போல் நடிப்பார்கள், சிங்க் சக் அடிப்பார்கள். மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள்? இவர்கள் நடத்தும் Engg College, Scholl களில் ஏழைகளுக்கா இலவச கல்வி வசதியா அளிக்கிறார்கள், பணம் நன்கொடை பெற்று பணக்காரர்களின் பிள்ளைகளுக்குதான். இவர்களை தலைக்கு மேல் தூக்கி வைத்து, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் அப்பாவி ரசிகர்கள் தான் பாவப்பட்டவர்கள். 24-May-2015 6:26 pm
அதே மூளைதானே.. அதே பகுத்தறிவுதானே அவருக்கு இருக்கிறது. 24-May-2015 5:10 pm
அது 1996 .....இது 2015 .......! 24-May-2015 4:59 pm

அன்புத் தோழர் ராம் வசந்த் மீண்டும் எழுத்து தளத்தில் வலம் வர வேண்டும். பல படைப்புகளை தர வேண்டும். தன்னலமற்ற அவரின் பங்களிப்பு தேவை.

எதுவாகினும், புறந்தள்ளி வாருங்கள் தோழர் ராம் வசந்த் அவர்களே.

மேலும்

ராம் வசந்த் தளத்தில் இருந்து போனதில் வருந்துகிற படைப்பாளிகள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியொன்றை அவரே வெளியிடுவார் விரைவில் என்று என் உள்மனதில் தோன்றுகிறது ..ராம்..இத்தனை மென்மையான மனதா உங்களுக்கு ..இங்கே அது தேவையில்லை என்று அவரிடம் பேச வாய்ப்புள்ளவர்கள் யாராவது சொல்லுங்களேன்..! 24-May-2015 8:45 pm
எதிர்ப்பார்ப்பதே நம் பலவீனம் தோழா. 24-May-2015 4:52 pm
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் தங்களது இந்த எண்ணத்தில் நீங்களும் நானும் மட்டுமே உரையாடிக் கொண்டிருக்கப் போகிறோம் ..... 24-May-2015 4:49 pm
மிகவும் ஏற்கத்தக்கது தங்கள் கருத்து ..........! ஆனால் நல்ல படைப்பாளிகளுகாகக் குரல் கொடுப்பவர்களும் தங்களைப் போன்ற மிகக்குறைவான ஒரு சிலர்தான் ....! அதுதான் வருத்தமாக இருக்கிறது ...! 24-May-2015 4:48 pm

தோழர்களுக்கு வணக்கம். !

பதிவு / எண்ணம் என்கிற பெயரில் கண்டப்படி தப்பு தவறுமாக தமிழ் மொழியை கொலை செய்யாதீர். தயவு செய்து .. தயவு செய்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

தப்பு தப்பாய் வீம்புக்கு
மொழியை களங்கப்படுத்தமாட்டான்.
உப்பு போட்டு சாப்பிடும் தமிழன்.

வேண்டுமென்றே எழுத்துகளை தப்பு தப்பாக தட்டச்சு செய்து.. தனக்கு ஒன்றும் தெரியாத போல நடிக்க வேண்டாமே.

புனைப்பெயரோ.. போலி பெயரோ... இயற்பெயரோ . எதுவோ ஒன்று அதில் நற்கருத்துகளையும். நல்ல நல்ல படைப்புக்களை வாரி வழங்க வாரீர் தோழர்களே.

வெறுமனே பொறாமைக்குப்பைகளை அள்ளி வீசி வீசி என்ன சாதிக்கப்போகிறீர்கள் ??

குறிப்பு. : இந்த வியன் எ (...)

மேலும்

அரை மணி நேரத்திற்குள் முடிந்த பதவியேற்பு நிகழ்ச்சி.
ஒட்டுமொத்தமாக அமைச்சக பெருமக்கள் பதவியேற்ற வினோதம்,
சூப்பர் ஸ்டார் பதவியேற்பில் பங்கேற்ற பெருமிதம்.


இவையாவும் வரலாற்றுச் சாதனையாக பேசப்படும் ஊடகங்களில்.
5 வது முறையாக முதலமைச்சாராக பதவியேற்ற ஜெ.ஜெயலலிதா ..அவர்கள். திரு. கருணாநிதியின் சாதனையை சமன் செய்தார்.

பி.கு மீண்டும் ஒருமுறை மேல்முறையிட்டில் பதவி இழந்து மீண்டும் விடுதலையாகி மீண்டும் பதவியேற்றால் கலைஞரின் சாதனை முறியடிக்க வாய்ப்பு.
மேலும்

மானங்கெட்ட மனிதர்களை மக்களை என் சொல்ல்வது....?? 23-May-2015 11:51 pm

முடிந்தவரை தளத்தில் கருத்து மோதலில் ஈடுப்படக்கூடாது என்றே இருக்கிறேன்.

எழுத்துபிழைகள் சுட்டிக்காட்டி சொல்வது விமர்சனம் ஆகாது. சரிதானே.

சரி விமர்சனம் செய்வோர் கீழ்கண்ட எனது கருத்தையும் ஆமோதிப்பார்களா என தெரிய வில்லை.

அதாகப்பட்டது,

வசன நடை என்றதொரு கவிநடையும் இருக்கிறது. கவிதையின் பரிணாமம் புதுக்கவிதை என்பதையும் தாண்டி வேறு களத்தில் சென்றுக்கொண்டிருக்கிறது. கருத்துச்செறிவிலும் . சொல்லும் நயத்திலும் படைப்பு வாசிக்கும் வாசகரின் சிந்தனை கிளர்ச்சியுற்று ஒரு கண நொடியில் நிமிரும் பரவசம் ..
(ஆனந்த விகடன் இதழில் வெளியாகும் கவிதைகள் இவ்வகையிலிருக்கும் )

இதுதான் இன்றைய நவீன வடிவக் கவ (...)

மேலும்

மன்னிக்கவும் இங்கேயும் எழுத்துப் பிழை வந்துவிட்டது ...... தன்கள் = தங்கள் தளம் பின்னூட்டங்களைத் திருத்தவும் வழிவகை செய்யவேண்டும் ..... 21-May-2015 10:58 pm
வசனநடை கவிதைக்கு தன்கள் கொடுத்த விளக்கம் அற்புதம் வியன் ....... 21-May-2015 10:57 pm

பகுத்தறிவு என்றால் எவ்வாறு என்று அறிவோம் தோழர்களே .

மேலும்

அறிவில் இரண்டு வகை உண்டு ........ஒன்று பகுப்பறிவு ....இன்னொன்று தொகுப்பறிவு.....முன்னது குவி சிந்தனை ......பின்னது விரி சிந்தனை .... நான் ரெண்டும்கெட்டான் சிந்தனைக்காரன் 21-May-2015 11:01 pm

கல்விமுறையென்பது
நல்ல
கல்வி யென்பது
கேள்விக்கேட்டு
பதில் எழுதுவது அல்ல.

மாணவர்களிடம்
கேள்விகளை எழு வைத்து
பதில் ஆராய வைப்பது.

மதிப்பெண்களில்
குதிரைப்பந்தயம் நடக்கிறது நாட்டிலே.
அடடா..
முதலில் வந்தவரெல்லாம் புத்திசாலியாம்
இறுதியில் போனவரெல்லாம் முட்டாளாம்.

மாறாதோ.. இந்நிலை
இழிநிலை
கல்விநிலை
மாறாதோ................!!!


-வியன்

மேலும்

சந்தப்பா விருத்தப்பா கலிப்பா வெண்பா
தாழிசைப்பா கொச்சகப்பாத் தனிப் பாவுக்கும்
விந்தை யப்பாவாகிய கிரந்தப் பாவும்
வெல்லப் பாவது போல விகடப் பாவும்
எந்தப்பா வுரைத்திடினும் ஒரு பேறில்லா
ஏதப்பா விக்குநின திணைப் பாதத்தைக்
கந்தப்பா முருகப்பா போரூர் வாழ்வே
கையப்பா மெய்யப்பா காட்டப் பாவே.


**

இப்பாடல் பாடிய புலவர் யாரென்று அறிய முடியவில்லை. தெரிந்தவர் அறியத்தாருங்கள்.

மேலும்

நன்றி தோழர். விக்கிப்பீடியாவில் அனைத்து பாடலும் உள்ளது தோழர் யாழ்வேந்தனும் சொன்னத் தகவலும் இதுவே. தங்களின் ஆர்வத்திற்கும் உதவிக்கும் மனமார்ந்த நன்றி. 20-May-2015 8:57 pm
விருத்தம் பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை பாடல் 11 தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 147 முதல் 150 பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன் கூகுள் தந்த தகவல். சென்று பார்த்தால் இது போல் 11 பாடல்கள் உள்ளன. 20-May-2015 7:49 pm
மேலும்...

மேலே