எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மழை" வந்த நாள் அதனில் ..
மழை போலவே நானும் உனை பார்க்க வந்த நேரம் அதனில்
மழை என்னவோ" இடி" அதனை துணைக்கு அழைத்து வந்த நேரம் அதனில்
இடி என்னவோ "இருளை" கவ்விக்கொண்ட நேரம் அதனில்..
ஒரு கவிதை எழுத தோன்றிற்று
நிச்சயமாய் "தழுவல்" கவிதை அன்று..

இன்னொரு முறை "மழை" இடி" இருள்"  சேர்ந்தே வரட்டும்
தழுவி பின்னர் கவிதை எழுதலாம்

மேலும்

வண்ணத்துபூச்சியை தொட்டால் வண்ணம் ஒட்டிகொள்வதைபோல

உன்னை தொட்டுபார்த்து
உன் அழகு எனக்கும் ஒட்டிக்கொள்ளுமா என பார்த்தால்
ஒட்டவில்லை...
ஒருவேளை கட்டிக்கொண்டால் ஒட்டுமோ என்னவோ

மேலும்

ரோஜாவின் மீதான
பனித்துளியின்  வாழ்வதனை..உன்
பால் வண்ண முகத்தழகில்..
பருவம் வந்த நாள் முதலாய்..இன்னும்
பார்த்து கொண்டே தான் இருக்கிறேன்
முகப்" பருக்களாய்"



மேலும்

தென்றலோடு  தேன் கலந்து ..அதில் ஒரு  முத்தமிட்டு..
அனுப்பிடல் வேண்டும் ..ஆனால்..என் வேண்டுதல் என்னவோ
அது உன் "இதழ்களை" மட்டும்தான் தீண்ட வேண்டும்...

மொட்டு மல்லிகை குவியலில் ஒரு முத்தமிட்டு அனுப்பிடல் வேண்டும்
என் வேண்டுதல் என்னவோ அது உன் "கூந்தலில் "ஒய்யாரமாய் அமர்ந்து கொள்ளல் வேண்டும்..

இன்னும் நிறையவே வேண்டும்தான் ..

இறுதிவரை  என் இதயம் அது
உன்னில் மட்டும்தான் வாழவேண்டும்


மேலும்

ஒரு கவிதை எழுக வேண்டும்....

       உன் இதழ் வரிகளில்... 
என் முத்தங்களால்...!!

மேலும்

பேரழகிகள்..
அழகிகள்..
தேவதைகள்..
என்றெல்லாம்..
பன்மையில்..சொல்ல இயலவில்லை..
எனை பொறுத்தவரை
 ஒருமைதான்
 ஒருத்திதான்
அது

"நீ"

மேலும்

முதன் முறையாய் உனை..பார்த்த அக்கணம்..
ஒரு கவிதை எனக்குள் தோன்றிற்று...
"இவ்வளவு பேரழகில் ஒரு பெண்ணா?-
இவ்வரி மட்டுமே இன்னும் ஞாபகம் இருக்கிறது...
அடுத்து அடுத்து அத்தனை வரியும்
இப்படிதான் எழுதி இருப்பேன் என்று நினைக்கிறேன்..

மேலும்

பிப்ரவரி'9-
ஆம் தேதி மறைத்து வைத்த காதலை
மனம் திறந்து சொல்லிவிட்டு போய் விட்டாய்...
நான் ஒரு முட்டாள் நீ சென்றபிறகு தான் நாட்காட்டி பார்த்தேன்
அன்று" HUG DAY ''என்று..
அதை கொண்டாட தான் நீ வந்து இருக்கிறாய் என்பதை அறியாமல்..

மேலும்

வலப்பக்கம் அகன்ற சாலை இருந்தும் ..
இடப்பக்கம் குறுகிய சாலை வழியே..
அவ்வப்போது வந்து செல்கிறாய்..ஓ
இடப்பக்கம்தானோ
இதயபக்கமானவன்
இருக்கிறான்
என்பதாலா...

மேலும்

அக்கம் பக்கம் பார்க்காதே, ஆளைக் கண்டு மிரளாதே” என்று ‘நீதிக்குப் பின் பாசம்’ திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு எம்.ஜி.ஆர். சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்ததைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. 01-Mar-2017 2:18 pm

உனக்கென ஒவ்வரு...கவிதை எழுதி முடித்தபின்
முற்றுப்புள்ளி வைப்பதில்லை...
தொடர்புள்ளிதான்..
உன்னுடனான காதலும்..
உனக்கென கவிதையும்...
முடிவதில் ..என்றும் எனக்கு விருப்பம் இல்லை ..யாதலால்...

மேலும்

மேலும்...

மேலே