எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மரணம் குறித்து பயம் ஒன்றுமில்லை... பயமெல்லாம் மீள்வதின் பிறகான வாழ்தலை நினைத்து தான்!!

மேலும்

நீங்கள் பிய்த்தெடுத்த இறகைக் கொண்டே அப்பட்டாம்பூச்சிக்கு ஒரு சிறகு வரைகிறீர்கள்...பின் இரக்கப்பட்டு கொடுத்ததாய் பிதற்றுகிறீர்கள்!!

மேலும்

இன்றைய பேருந்து பயணத்தில் கண்ட ஓர் நிகழ்வு உங்கள் வாசிப்பிற்கு...அநேகமாய் அந்த பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கலாம்.யாரயோ கவனித்தவள் போல் நெரிசலில் முன்னேறி வந்தாள். முன் இருக்கையில் அமர்ந்திருந்த தோராயமாக ஒரு 45 வயது மதிக்கத்தக்க பெண்மணியை கண்டு புன்னகைத்து "மிஸ்!எப்படி இருக்கீங்க?" பதிலாக ஒற்றை புன்னகை வந்தது. பிறகு தான் படிக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு குறித்து கூறி விட்டு தன் நிறுத்தம் வந்ததும் இறங்கி சென்று விட்டாள்.பின் அந்த ஆசிரியையின் அருகில் இருந்த தன் சக தோழியுடனான் உரையாடல் இதோ:"உங்கக்கிட்ட படிச்ச பொன்னுங்களா?""ஆமாங்க.கொஞ்சமாச்சு மரியாதை இருக்கா பாருங்க...என்னய பாத்து எப்ப (...)

மேலும்

கட்டிட பொறியியல் முடிச்சு 3 மாசமா வேலை தேடி அலஞ்சு ஏதோ ஒரு வேலையும் கெடச்சு முதல் நாள் வேலைக்கு போறேன் வாழ்த்துமா ன்னு அம்மாக்கிட்ட கேக்கறேன்.மத்தியானத்துக்கு புளிசாதம் வெச்சுருக்கேன்.மிச்சம் கிச்சம் வெச்சுட்டு வந்தா அடி பின்னிருவேன்னு சொல்றாங்க!!இந்த அம்மாக்களே இப்படி தான்!!!

மேலும்

அடுத்தவங்களோட உலகம் அதுல வாழ்தலோட வலி நாம அனுமானிக்கிற அளவு தான் இருக்கும்னு நெனைக்கிறத விடவும் ஆக சிறந்த முட்டாள்தனம் எதுவும் இல்லை.

மேலும்

ஒரு ஹீரோ சார் இருக்காரு... அவரு நடுரோட்டுல சும்மா 20 பேர(தட் வில்லன் க்ரூப்ப்ப்பூ) சும்மா அடிச்சு பின்னிடுராரு...போலீசு எப்பவும் போல நம்ம ஹீரோ சார புடுச்சுட்டு போய் அடிக்குது.?! கதவு தொரந்து இருக்கும் போது அடிக்காத நம்ம ஹீரோ சார் கதவ சாத்துனவொடனே அவங்க எல்லாரயும் அடிச்சு ஒதச்சு கதவ ஒடச்சு வெளி ய வராரு...இதயும் இங்க ஒரு கும்பல் பாத்துக்கிட்டு இருக்கு... அட கொடுமையே...ரிமோட்ட எங்க டா வெச்சிங்க...யேங்க எனக்கு மட்டும் இப்படியெல்லா நடக்குது???!!

மேலும்

அப்பாடா! திருப்தி :) 25-May-2015 10:03 am
ஐயோ! எதுக்குங்க வம்பு? நாம ஏதோ நம்ம வேதனைய சொல்லி பொலம்ப போக வில்லன் ரேஞ்சுக்கு நம்மலயும் நெனைக்க இன்னொரு க்ரூப்ப்பு இங்கயும் வந்துட போகுது!?!? 25-May-2015 10:01 am
வேட்டைக்காரன் விஜய் படத்தைச் சொல்கிறீர்களோ ? 24-May-2015 10:49 pm
புலி உறும்புது இடி இடிக்குது ... எல்லோர் வீடுகளிலும் இதே இரும்பல் தான் 24-May-2015 10:29 pm

சில்லுனு காலை நேர காத்து...ஒரு நீண்ட பயணத்திற்கு கிடைத்து விட்ட ஜன்னலோர இருக்கை... பக்கதுல ஒரு குட்டி பாப்பா...சில்லரையை சரியா எண்ணி குடுத்துட்ட நடத்துனர்...வழி எல்லாம் பச்சை பசேல்...மென்மையான பாட்டு...இதுக்கு மேல என்னங்க வேணும்??? (பால் விளம்பரம் மாதிரி தெரிஞ்சா கண்டுக்காதீங்க)!

போகிற போக்கில் ஒரு காலை வணக்கம்!!!

மேலும்

கிளம்பிட்டேன்!! :) 20-May-2015 11:15 am
ம்ம்ம்ம் 50 ரூபாய்க்கே நம்ம ஊரு கண்டக்டரு சில்லர குடுக்க மாட்டாங்க.இன்னிக்கு நெஜமாவே அருமையான நாள் தான். 500 ரூபாய்க்கு திட்டு வாங்காம சில்லர மட்டும் வாங்கிட்டேன்!!! :) 20-May-2015 11:14 am
சில்லறை கொடுத்த நடத்துனர் !!! அருமையான காளை 20-May-2015 10:56 am
ஹா ஹா ,.....கிளம்புங்கள் ...... 20-May-2015 7:32 am

உலகிலேயே அதிக அளவிலான பாலியல் வன்முறை குறித்த வழக்குகள் பதியப்படும் ஆசிய நாடு இந்தியா! (நான் பெண்ணியம் பேசலைங்கோ...சும்மா ஒரு தகவல்...)

மேலும்

எந்தவொரு சோம்பலான நாளையும் அழகானதாய் துவக்கிவைத்திட இளையராஜா அவர்களின் ஒரே ஒரு வா வெண்ணிலா போதுமானதாக இருக்கிறது!!

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி! 19-May-2015 11:18 am
மறுக்களவோ மறைக்கவோ மறக்கவோ முடியாத தகவல் !! 19-May-2015 10:59 am

பல நேர அழ நினைத்தல்களில் ஆறுதல்கள் அவசியப்படுதல்களாய் இருப்பதில்லை ...வேண்டியதென்னவோ சில நிமிட அழ விடுதல்கள் மட்டும் தான் !!

மேலும்

மேலும்...

மேலே