எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் நண்பரின் 50 வயது பிறந்த நாளை ஒட்டி பாடிய வாழ்த்து ...

மேலும்

நன்றி அம்மா ...சும்மா கிறுக்கல் தான்...நிறுத்தி நிதானமாக எழுதினால் இன்னும் கொஞ்சம் அழகாய் இருக்கும் ..அடுத்த முறை முயற்சிக்கிறேன் 10-Nov-2014 3:18 pm
வாழ்த்தும் , கையெழுத்தும் அழகு !! 10-Nov-2014 3:16 pm



என் கவிதையை இசைப் பாடலாக மாற்றி இருக்கிறார் ஜெய்லானி காதிர் என்ற மலேசியா பாடகர்

மேலும்

அருமை அண்ணா...நான் மெட்டுக்குவெழுதி பழக்கமில்லை ...இருந்தாலும் முயற்சிக்கிறேன்..நன்றி 29-Oct-2014 11:11 am
தீனு -நூறு --தகவல் சரிதான் தோழரே.. இந்தப் பாடல் இன்னொரு மெட்டுக்கும் பொருந்துகிறது என்பது நல்ல விஷயம்.வாழ்த்துக்கள்.! அப்புறம் எனக்கு மிகவும் பிடித்த பாடலான "பாலைவனம் தாண்டிப் போகலாமே நாம்-புவி போற்றும் மதீனா நகராளும் நபியை நாம்... அன்போடு சென்று காணலாம் பண்போடு சென்று காணலாம்.."----- இந்த மெட்டில் உங்கள் பாடல் ஏதாவது உண்டா.? இருந்தால் பதிந்து வையுங்கள்..அடுத்து வரும்போது கேட்டு மகிழ்கிறேன்.! அந்த மெட்டுக்கு நான் எழுதிய பாடல் ஒன்றும் உண்டு. "நாட்டு மக்களே கொஞ்சம் நின்று கேளுங்கள்.. சொல்வதெல்லாம் உண்மையென்று நம்பிக் கேளுங்கள் நாட்டு நடப்பு இன்னதென்று.. நமது கஷ்டம் என்னவென்று.. -[ நாட்டு ] மலைகள் எல்லாம் பிளந்திட்டோம் பாறைகள் எல்லாம் உடைத்திட்டோம்.. காடுகள் எல்லாம் அளித்திட்டோம்.. கழனி நிறைய சேர்த்திட்டோம்.. இருந்தும் உங்கள் வாழ்விலே -பஞ்சம் ஆட்டி வைக்குதே .. காரணங்கள் என்னவென்று நினைத்திடுங்கள் கொஞ்சமே..! [2] -[நாட்டு ] உணவைத் தந்த உழவனே .. உயிரும் உன்னால் வாழுதே.. மானம் காக்கத் துணிகளை நெய்து தந்த நண்பனே.. சுரண்டல்காரன் பிழைக்கவே வழியமைத்த ராஜ்ஜியம் இல்லாமல் உலகிலே அழித்திடுவோம் முதலிலே..[2]- [நாட்டு ] ரொம்ப வருஷம் முந்தியே தெருவிலே பிரச்சாரத்திற்க்காகப் போகும்போது.போற ஏரியாலே இருக்குற மக்களைப் பொருத்து அப்பப்ப வார்த்தைகளை மாற்றிப் போட்டுப் பாடுவோம். இப்ப பலவரிகள் மறந்து போச்சு...! எல்லாம் நினைவில் இருந்து பாடியதுதான். இது இங்கே பதிவாக இருக்கட்டும். .மீண்டும் பேசுவோம்..ஹூஹும் ....... மீண்டும் பாடுவோம்.! அன்புடன் பொள்ளாச்சி அபி 28-Oct-2014 9:59 pm
நல்ல முயற்சி! நல்ல இசைப் பாட்டு! அல்லாமா செய்கு மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (வலி) அவர்கள் இயற்றிய ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ் மெட்டில் உங்கள் வரிகள் இனிமை! வாழ்த்துக்கள்.! 25-Oct-2014 9:53 am
ஆஹா இனிமை இனிமை. 24-Oct-2014 5:39 pm

முக்கிய அறிவிப்பு !!!

என் தம்பி விவேக்பாரதிய யாராவது பாத்தீங்களா?...பார்த்தால் தெரியபடுத்தவும்...தக்க சன்மானம் அவனிடமே வாங்கிக் கொள்ளவும்...

மேலும்

ஹிஹிஹி.... 16-Oct-2014 10:52 am
சன்மானம் முக்கியம் அமைச்சரே... இது கூட தெரியாதா ??? பணம் பணம் பணம் no money no money no honey ஹாஹா 16-Oct-2014 10:51 am
ஆக மொத்தம் சன்மானம் கெடச்சா சரி....அப்டி தானே?... 16-Oct-2014 9:16 am
ஒஹ்...அதை மறந்தே விட்டேன் மா..படிக்கட்டும்,படிக்கட்டும்...ஆண்டு இறுதி தேர்வு வேலையாக இருக்கும் போல ... 16-Oct-2014 9:15 am

எத்தனை 6 கள்?

33333333333333333333388888888888888888888888333333333333333333388888888888
88888888888888333333333333333388888888888888888883333333333333388888888888
88888888888886333333333333333333333333333336888888888888888888833333333388
88888888888888888888888888888888888888888833333333888888888838688888888888
86888888888888888883333333333333333333338888888888888888388888888886888888
33333333338888888888688888888888888888888888888888888888333333333333333333
88888888888888888888888888888863333333333333333333333333338888888888888888

மேலும்

ஆண்கள் பேரறிஞர் என்றும்,பெண்கள் அண்ணா என்றும்,ஊரார் துரை என்றும் அழைப்பார்களோ?... 15-Oct-2014 8:55 am
அனுபவம் சகோ.. பொதுவாக பெண்களே என்னை "அண்ணா" என்று அழைப்பார்கள். படைக்கு அஞ்சாதவன் என்றாலும் தம்பிகள் அதிகம் இல்லை எனக்கு. சகோதரி சாந்தியும் இடையில் பதில் அளித்ததால் வந்த குழப்பம் வேறு. 14-Oct-2014 5:21 pm
சகோதரியா..../!?...நிச்சயம் கண் செக் அப் செய்யுங்கள் அண்ணா... 14-Oct-2014 5:06 pm
காப்பி செய்து பேஸ்ட் செய்யும் பொழுது கடைசி இரண்டு வரிகளை விட்டு விட்டதே... (நாம் சென்று முள்ளை குத்திக்கொண்டாலும், "முள் குத்திவிட்டது" என்று சொல்வதில்லையா சகோதரி. 14-Oct-2014 4:33 pm

மேலும்

ஆம் ஐயா சில நேரம்,சில புகுந்து விடுகின்றன 28-Sep-2014 10:09 pm
ஹஹ்ஹஹஹா... " கப்புன்னு" ல்லாம் இல்லை ஐயா... " குபீர்ன்னு "...... 27-Sep-2014 9:42 pm
தமிழ் நடையில் இடையே பேச்சுத்தமிழ் வருதல் பல்லிடைக்கல் போல...!!! பற்றைநமில் =பற்றை நம்மில் ???? 27-Sep-2014 9:23 pm
ஷர்வணா..இதுதான் மலேசிய பெட்ரோலா..'கப்புன்னு' புடிச்சிக்குது.. 27-Sep-2014 9:20 pm

மோனை

ஒரு சீரின் முதலெழுத்து பின்வரும் சீர்களுடைய முதலெழுத்துக்களுடன் ஒன்றி வருது மோனை ஆகும்.
மோனை எழுத்துக்கள்

நேரடியாகவே ஒன்றி வரும் எழுத்துக்களைத் தவிர்த்து (அகரம்-அன்னை, குடை-குழை முதலியன போல), கீழ்க்கானும் எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று மோனை ஆகும்.



அ - ஆ - ஐ - ஔ

இ - ஈ - எ - ஏ

உ - ஊ - ஒ -ஓ

ஞ - ந

ம - வ

த - ச



வலை - மனை - மோனை

ஞாயிறு - நான் - மோனை

கலை - காளை - மோனை

எதுகை

ஒரு சீரின் இரண்டாமெழுத்து பின்வரும் சீர்களுடைய இரண்டாமெழுத்துக்களுடன் ஒன்றி வருது எதுகை ஆகும். இரண்டாம் எழுத்து பொருந்தும் அதே நேரத்தில், இரு சொற்களுடைய முதலெழுத்துக்களின் மாத்தி (...)

மேலும்

நன்று, தொடருங்கள். 15-Sep-2014 10:11 pm

எளிய வெண்பா இலக்கணம் ....


ஈற்றடியின் ஈற்றுச்சீரைத் தவிர்த்து ஈரசைச்சீர்களும் காய்ச்சீர்களும் மட்டுமே பயின்று வருதல் வேண்டும் .

வெண்டளைகள் மட்டுமே பயின்று வருதல் வேண்டும்

ஈற்றடி மூன்று சீர்களும் ஏனைய அடிகள் நான்கு சீர்களும் கொண்டிருத்தல் வேண்டும்

ஈற்றடியின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு ஆகியவற்றுள் இருத்தல் வேண்டும்

மேலும்

அருமை தோழரே...... இவற்றை எல்லாம் அறிய வேண்டும் என்ற எண்ணம் மனதில் பல நாள்களாய் உள்ளது மனதில்..... மேலும் பல விளக்கங்களையும் எண்ணங்களையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்... இவற்றை எளிதில் அறிய எந்தந்த நூல்களை படிக்கலாம் ,எவ்வாறு படிக்கலாம் என கூறினால் உதவியாக இருக்கும்,....... பள்ளியில் பயிலும்போதே இதை படிதிருக்கலாம் ஆனால் அப்போது தோன்றவில்லை தோன்றினாலும் மதிப்பெண்கள் தானே அப்போது அனைவருக்கும் முக்கியம்... 15-Sep-2014 6:49 pm
தெரிந்தவரை சொல்கிறேன்...எந்த சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்..சேர்ந்தே கற்ப்போம்...செழிப்படைவோம்... 15-Sep-2014 1:53 pm
வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே...இங்கே நான் கூறி இருப்பது மிகவும் அடிப்படையும் ஆழமுமான இலக்கணம் ,இதை புரிந்து கொண்டால் ஓசை நயம் இயற்கையாகவே அமைந்து விடும்...வெண்பா கைவந்தால் ,மற்ற பாக்கள் மிகவும் எளிதாக பாடி விடலாம் ..சிலருக்கு இயற்கையில் ஓசை ஞானம் இருக்கும்...உங்களைப் போல...நிறைய கவிதைகளை வாசிப்பதாலும்,இசை பாடல்களை கேட்பதாலும் கூட நல்ல கவிதை வளம் மனதில் நிறையும்..அதை செப்பனிடவே இந்த யாப்பு எனும் கருவியை நம் முன்னோர் கண்டறிந்தனர்... 15-Sep-2014 1:51 pm
உங்களுடைய விளக்கங்களும் உதாரணங்களும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது அடிக்கடி இவ்வாறான தமிழ் விளக்கங்களைக் கூறிக்கொண்டே இருங்கள் நன்றி....... 15-Sep-2014 1:40 pm

ஒரு சிந்தனையில் மூழ்கிய நான் வெளிவர முடியாமல் தவிக்கிறேன்,உலகம் என்னை பிரமிக்க வைத்தாலும், உண்மை என்னை பயமுறுத்துகிறது .... அழிவு தான் முடிவென்றால் ஆக்கம் எதற்கு?
அறிவினால் முடியாதென்றால் இந்த அறிவும் எதற்கு?..பணத்தினால் எல்லாம் முடியும் என்றால் பணக்காரன் மரணம் எதற்கு?...பணமின்றி எதுவும் முடியாதென்றால் ஏழைகள் வாழ்வது எதற்கு?..இறைவா !தெளிவு கொடு!

மேலும்

வெறுமை....மட்டுமே நிரம்பி இருக்கிறது! 21-Sep-2014 1:00 pm
தேடலும்...! தொலைதலும்....!! ஒருவன் தொலைத்ததை... இன்னொருவன் தொடர... அவனுக்கு கிடைக்கப் பிஎற்றதாகி இருக்கிறது அது.. ஒருவன் தொலைத்து விட்டபடியால் மீண்டுமொன்றை தேடிப் பயணிக்கிறான்.. ஆமாம்... அது... எது...?? 15-Sep-2014 3:26 pm
நண்பா, அருமையான கேள்வி கேட்டுள்ளீர்கள், இந்தக் கேள்விக்கான விடை எனக்கும் தெரியவில்லை. மேலும், கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்றே குழப்பமாக இருக்கிறது. கொஞ்சம் சிந்தித்தால் கடவுள் இல்லைதான் என்றும் தோன்றுகிறது, அப்படித் தோன்றுவதை நினைத்து சூனியம் நிறைந்து பயமாகவும் இருக்கிறது. 15-Sep-2014 6:11 am
மேலும்...

மேலே