எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லோருக்கும் வணக்கம், 
 எல்லாரும் எப்படி இருக்கீங்க….? தளத்திற்கு வந்து உங்கள் எல்லோரையும் பார்த்து உங்கள் பதிவுகளைப் படித்து மகிழ்வதற்கு தற்பொழுது நேரம் கிடைப்பது கடினமாகிவிட்டது; இருந்தாலும் அவ்வப்போது வந்து சில பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்களின் பதிவுகள் தரம் இன்னும் சற்று சிறப்பாக இருந்தால் மிகவும் மகிழ்வேன்.
 சரி,  அதெல்லாம் இருக்கட்டும் நம் தளத்தில் இருக்கும் எழுத்தாளர்களில் நிறைய பேர் சென்னையை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் அல்லது சென்னையில் வேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள் எனவே நாம் அனைவரும் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.. மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது…. உங்களில் சிலருக்கு  இந்த எண்ணம் இருந்திருக்கலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில் சற்று கடினம் என்று கருதி கைவிட்டு இருப்பீர்கள்.
 சென்னையில் இருக்கும் நமது தளத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு இடத்தில் நேரில் சந்திக்க சூழல் அமைந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது விருப்பம்... உங்களில் விருப்பமுள்ளவர்கள் இதன் கீழ் பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். ஒருவேளை பலரின்  விருப்பம் இதுவாக இருப்பின் நாம் எல்லோரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்கான சூழலை உருவாக்கித் தருமாறு நம் தள நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கலாம்…

சென்னையில் இருக்கும் நம் தளத்தின் எழுத்தாளர்கள் எல்லோரும் நேரில் சந்திக்கலாமா…? வாருங்கள்.

மேலும்

சென்னையில எங்க இருக்கீங்க...? 29-Aug-2019 5:13 pm
சந்திக்கலாமே 28-Aug-2019 7:58 pm

எல்லோருக்கும் வணக்கம்,

சில மாதங்கள் கழித்து தளத்திற்கு வருகிறேன், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு ஏனோ முன்புபோல தளத்தில் வந்து படைப்புகளை படித்து கருத்திட்டு படைப்பின் தன்மை சுவைத்து மகிழ விருப்பம் ஏற்படுவது இல்லை; அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

என்ன காரணமாயிருக்கலாம் என சில நாள் என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்....

புதிய எழுத்தாளர்கள் பலர் கவிதை என்ற பெயரில் ஏதோ சினிமா வசனம் போல் எழுதுவதை ரசிக்க முடியாத நிலையா..?

அல்லது முன்பு நாள்தோறும் தங்கள் படைப்புகளை பதிவிட்டு வந்த படைப்பாளிகள் தற்பொழுது ஊக்கம் குறைந்து படைப்புகளை பதிவது குறைந்துவிட்டதால் எனக்கு விருப்பம் ஏற்படவில்லையா....? 

அல்லது தளத்தின் செயல்பாடுகளில் உள்ள குறையை தளத்தின் நிர்வாகிகள் சரி செய்யாமல் தளத்தில் உறுப்பினர்களை அலட்சியப்படுத்தினால் இந்த நிலையா..? 

என்று எனக்கு தெரியவில்லை நான் அவர்களிடம் பல மாதங்களுக்கு முன்பே எனது வேண்டுகோளை வைத்துவிட்டேன் அஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் புகார் அளித்தேன் ஆயினும் எந்த ஒரு முன்னேற்றமும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை இதில் எது காரணமாயிருக்கும் இன்னும் என் மனதிற்குள்ளே பல்வேறு குழப்பங்கள்.

வருகின்ற படைப்பாளிகள் நல்ல படைப்புகளை படித்து ரசித்து சுவைத்து மகிழும் படியான படைப்புகளை படைத்து வருகின்ற வாசகர்களுக்கு கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கவிதை என்ற பெயரில் ஏதோ  கிறுக்கல்களை கிறுக்கி பதிவிடும் படைப்பாளிகள் தங்களை தாங்களே ஆய்வு செய்து தங்களின் படைப்புகளை சரி செய்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

மற்ற வாசகர்கள் பலரும் தளத்திற்கு வருவதை தவிர்த்து வருகின்றார்கள் அவர்களுக்கு என்ன வசதி குறைவு ஏற்பட்டு இருக்கிறது என்பதை பின்னூட்டமாக தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி 

என்றும் அன்புடன் 
அருண்குமார்

மேலும்

எனது மனதில் தோன்றியதையே சகோதரர் ஆரோ அவர்களும் கேட்டு இருக்கிறீர்கள். முன்பு போல பதிவுகள் இட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலு‌ம் நம் படைப்பிற்கு மற்றவர்கள் தரும் கருத்துக்கள் கொண்டே பிழைகளையும் குறைகளையும் சரிசெய்ய முடியும். புதிய யோசனைகளும் யுக்திகளும் பிறக்கும். வெகு நாட்களாக தளத்தில் வருவதும் பிறர் கவிதைகள் படிப்பது வெளியேறி விடுவது, இதுவே என் வேலையாக இருந்தது. நான் ஒன்றும் கம்பனோ பாரதியோ அல்ல, ஆயினும் கவிதையின் தரம் படிக்கும் போது நமக்கும் புதிய கற்பனைகளை தூண்ட வேண்டும் என்பதே என் கருத்து. 13-Feb-2019 3:03 pm
உங்கள் சுவை பற்றி சிறு கோடிட்டுக் காட்டுகள் . முயன்று பார்க்கிறேன் . 13-Feb-2019 2:23 pm
"எழுத்துத் தளத்திற்கு வருவதை நாட்கடனாக வைத்திருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். உங்களின் பதிவுகளை விரும்பும் சுவைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு எப்பொழுதும் மகிழ்ச்சியே" ----இளைய தோழமையின் இக்கருத்தில் எனக்கும் மகிழ்ச்சி 13-Feb-2019 2:20 pm
உங்களிடத்து தான் கேட்கிறேன் எங்கே எனக்கான சுவையான பதிவுகள்....? 13-Feb-2019 12:32 pm

நமது படைப்புகளை புத்தகமாக வெளியிடலாம் வாருங்கள்

எல்லோருக்கும் வணக்கம்,
         நான் இன்று சொல்லப்போகும் தகவலானது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் நம்மில் பலருக்கு தெரியாத இந்த அற்புதமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். தமிழ் மீது  மிகுந்த பற்று கொண்ட தமிழ் அன்பர்கள் பலர் சேர்ந்து ஒரு வலை தளத்தை நடத்தி வருகின்றனர்; தமிழ் விரும்பிகளுக்கான தேடலின் விடையாக அவர்கள் நடத்திவரும் வலைதளம் அமைகிறது.

     அந்த வலைதளத்தில் நாம் விரும்பி படிக்க வகைவகையான நல்ல தமிழ்  நூல்கள் விலை இல்லாமல் கிடைக்கின்றன. அவர்களின் அற்புதமான முயற்சிக்கு தமிழ்  தாயின் குழந்தையான என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும். இதை நான் நமது எழுத்து தளத்தில் பதிவதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் நமக்கு தேவையான ஒரு வாய்ப்பையும் அளிக்கின்றார்கள்.

   நம்மில் பலருக்கு நமது படைப்புகளை புத்தகமாக வெளியிட விருப்பம் இருக்கும் அப்படி இருந்தும் அதற்கான பொருட் செலவினால்  அந்த முயற்சியை பலர் கை விட்டிருப்போம். அந்த உள்ள ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் நல்ல வாய்ப்பு தருகிறார்கள், அதாவது நமது படைப்பினை விலையில்லா காப்பு  உரிமத்தின் கணினி வழி படிக்கும் மின்புத்தகமாக வெளியிடுகின்றனர், அதற்காக அவர்கள் எந்த ஒரு பணமும் பெறுவதில்லை. நாம் நாமாக முன்வந்து நமது படைப்புகளை அவர்களுக்கு அனுப்பினாலே போதும் அவற்றை கையடக்கக் கருவிகளில் படிக்கும் வகையில் கணிப்பொறியில் படிக்கும் வகையில் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளில் படிக்கும் வகையிலும் அமைத்து அதனை தரவிறக்குவதற்கான வசதியும் செய்து கொடுக்கின்றனர்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நமது தளத்தில் இருக்கும் நல்ல எழுத்தாளர்கள் தங்கள் படைப்பினை புத்தக வடிவில் வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகத்தில் உங்களின் இருக்கையை பதிவு செய்து கொள்ளுங்கள்; இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பல நல்ல எழுத்தாளர்கள் மென்மேலும் வளர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்; நன்றி. 

வலைதளத்தின் பெயர்.
freetamilebooks.com

இந்த வலைதளத்தில் சென்று அவர்களை தொடர்பு கொள்ளும் வழி வகைகளை தெரிந்து கொண்டு, அவர்களை தொடர்புகொண்டு உங்கள் பதிவுகளை வெளியிடுங்கள்.

மேலும்

தகவலுக்கு நன்றி 26-Nov-2018 7:58 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இன்றைக்கு நான் சொல்லப்போவது மிகவும் முக்கியமான ஒன்று..... நமது எழுத்து தளத்தில் தற்போழுது பதிவேற்றப்படும் படைப்புகளின் எண்னிக்கை அதிகமாய் இருக்கின்றது. அதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியே...... ஆனால் அந்தப்படைப்புகளை படிக்க ஆள் இல்லையோ...... என்று தோன்றும் அளவிற்கு நாம் நடந்துகொள்கின்றோம்....... பல நல்ல படைப்பாளிகள் எழுதுவதை நிறுத்திவிட்டதைப்போல காண்கிறது... இதற்க்கெல்லாம் காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது எனக்கு ஒன்றுமட்டுமே தென்படுகின்றது..... நம் எல்லோருக்கும்..... பதிவிடுவதில் இருக்கும் ஆர்வம் கருத்திடுவதில்லை...... படித்து கருத்திடப்படாத  படைப்புகளும் பிறந்தும் பேசாத குழந்தையும் மலர்ந்தும் வாசம் வீசாத மலர்களும்..... வீணே......


பல வரிகளில் படைப்புகளை பதிவிடும் நமக்கு.... ஓரிரு வரிகளில் ஒரு படைப்பாளியின் பதிவிற்கு கருத்திடுவதில்  நாட்டமில்லை...... நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்களின் படைப்புகளுக்கு எந்த பதில் கருத்தும் வராத தருணங்களில் எவ்வளவு துன்ப படுகின்றிர்கள்..... அதே துன்பமும் ஏக்கமும் ஏன் மற்ற படைப்பாளிகளுக்கு வரும் (இருக்கும்) என்று நாம் எண்ணுவதில்லை....... 

நானும் ஒரு கட்டத்தில் இப்படித்தான் என் படைப்புகளை எல்லோரும்  படித்து கருத்திடவேண்டும் என்று விரும்பினேன் தவிர நான் யார் பதிவிற்கும் கருத்திடுவதில்லை..... அப்படியிருந்த பொழுதுதான் ஏதோஒரு வசனம் " நீ என்ன விரும்புகின்றாயோ... அதை மற்றவர்களுக்கும் செய்......" என்று படித்தேன்.... அன்றிலிருந்து நான் மற்றவர்களின் படைப்பிற்கு.... கருத்திட்ட ஆரம்பித்தேன்  அவர்களிடம் இருந்து நல்ல பதிலும் வந்ததது. இப்பொழுது எனக்கு பதிவிட நேரமில்லை..... என்றுசொல்லுமளவிற்கு கருத்திட்டு மகிழ்கின்றேன்.... ஏன் என் பழைய பதிவிற்கும் சிலர் கருத்திட்டு மகிழ்வித்தனர்.... என்னவோ.... என் கருத்தை சொல்லிவிட்டேன்..... இதற்க்கு அடுத்தது உங்களின் கையில்தான் இருக்கின்றது....  உங்களின்  இந்தசெயகையால் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்திய படைப்பாளிகள் அனைவரும் திரும்பி எழுதவேண்டும் என்பது என் அவா....

பதிவிடும் அளவிற்கு.... மற்றவர்களின் படைப்புகளுக்கு கருத்திடுங்கள்................ 

எழுத்துலகம் உங்களின் கருத்துக்களால் ஒளிரட்டும்....


இந்த பதிவிற்கு கருத்துக்கள் வருமா என்பதே தெரியாது................?!!?☺

மேலும்

எனது பதிவு தேர்வானதே தாங்கள்; சொல்லித்தான் தெரியும்..... இந்த தேர்விற்கு காரணமான எழுத்துலகில் எனது பதிவை பார்த்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் கருத்துகளால் மற்றவரை மகிழ்வித்து சிறந்த படைப்பாளிகளை உருவ்பாக்கிட வேண்டுகின்றேன். 31-Aug-2018 5:09 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் :--தங்கள் எண்ணம் படைப்பு தேர்வானத்திற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கிய பயணம் போற்றுதற்குரிய தங்கள் எண்ணமும் நம் எழுத்து தளம் குடும்பத்தினரின் கருத்துக்களும் வரவேற்கிறேன் 28-Aug-2018 8:24 pm
சுடரின் அடியில் ஒளிந்திருக்கும் உண்மையை அருமையாக உரைத்தீர்கள் தோழரே.... 22-Aug-2018 7:59 am
என் மன ஆசையை புரிந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சி, மற்றவர்களின் படைப்புகளுக்கும் கருத்திட்டு மகிழ்வியுங்கள். 21-Aug-2018 11:43 am

நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்:


தமிழன் என்று எல்லோரும் மார்தட்டிக்கொண்டு திரிகிறோம். இது நமக்காக; நம்மை நாமே ஆய்ந்தறிந்து திருத்திக்கொள்வதற்காய்.... இந்த பதிவு; 

தமிழன்- தமிழ்(மொழி) - தங்கிலீஷ்(பேசும் மொழி)

இது தான் நமது  இன்றய நிலைமை. நம்மில் சிலர் ஆங்கிலம் தவிர்த்து பேசினால் அது தமிழாகிவிடும் என்றநினைப்பில் பேசிக்கொண்டிருக்கினறோம்.  அப்படியல்ல நாம் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும்  பேச்சுவழக்கில் பெரும்பாலும் ஆங்கிலமும் வடமொழி சொற்களுமே. அவற்றை நீக்கி பார்த்தோமானால்  தமிழ் 20 % கூட இல்லை எனவே தமிழை தெரிந்து பேசுவோம். 

ஏன் ? இந்த பதிவை படித்தபின்னும் சிலர் இதை கருத்தில் கொள்ள மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் நமது இன்றய தமிழ் பற்று இருக்கிறது. இப்படியே போனால் தமிழ் மெல்ல செத்ததாய் சொல்லமுடியாது. நாம் கொல்ல செத்ததாய் தான் சொல்ல வேண்டியிருக்கும். ஆம் இதே நிலை நீடித்தால் "தமிழ் நாம் கொன்றதால் தான் சாகும் "


இங்கிலீஸ் பேசுனாலும் தமிழனடா.... னு சொல்லிக்கிட்டு திரியாறோம் 

இங்கிலீஸ் பேசுனா எப்படி தமிழனாவான்..........????

இதற்க்கு இருக்கேனும் விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.....


வட சொல் நீக்கி தமிழ் பேச நினைக்கும் நல்ல தமிழருக்காக.... 

மேலும்

Kandipaga vittu kuduka matten....tamil engirunthalum thedi thedi padipen.. 27-Jun-2018 4:05 pm
மிக்க மகிழ்ச்சி, உங்களின் தமிழ் பற்று மிகவும் போற்றுதலுக்குரியது. எந்த நிலையிலும் உங்களின் தாய் மொழி பற்றை விட்டுக்கொடுக்காதிர்கள். உங்களின் கருத்திற்கு தலை தாழ்ந்து வணங்குகிறேன். 27-Jun-2018 12:08 pm
மிகவும் சிறந்த பதிவு.. நான் பெங்களூருவில் பனி புரிகிறேன் ...எங்கள் ஆஃபீஸ்ல் ஆங்கிலம், கன்னடம் தன நிறய பேசுவார்கள்... தமிழ் நான் ..ஒரு சிலர் இருக்கின்றனர் . ஆனால் அவர்கள் ஆங்கிலம் தான் பேசுவார்கள்..என்னிடம் பேசினால் கூட ..ஆனால் நான் திருப்பி தமிழ் தான் பேசுவேன் பிறகு அவர்களே தமிழ் பேசுவார்கள்.. நான் எப்போதும் என் தாய் மொழியை விட்டு கொடுக்கமாட்டேன்.. 27-Jun-2018 11:39 am
மிகவும் நண்றிகலந்த வணக்கங்கள். 28-Feb-2018 2:20 pm

மேலே