எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனக்காய் எழுதிய கடிதம் ஒன்று இருக்கிறது
அதில்
அன்புடன் தோழிக்கு
என்று தொடங்கியிருக்கும்
நன்றிக்கு பக்கத்தில்
உற்று பார்த்தால் நான் குனிந்து நிற்பது தெரியும்
அந்த கடிதத்தில்
அவை மட்டுமே இருக்கும்
மீதி காகிதம் முழுக்க
சில துரோகங்களும்
சில வன்மமும்
என் காதலும்
கண்ணீர் துளிகளால்
இட்டு நிறைந்திருக்கும்
கண்களால் காணாதே
நினைவுகளில் புரட்டு
அந்த காகிதத்தில் போதிமர
வாசம் வீசும்...

மேலும்

என் மனதை
யாரோடு
பகிர்ந்துகொள்வதென
தெரியாமல்
யாருமில்லாமல் தான்
ஒருகோப்பை மதுவோடும்
சிறு புகைத்துண்டோடும்
கொஞ்சம் எழுத்தோடும்
மன்றாடிக்கொண்டிருக்கிறேன்...

மேலும்

வீட்டில் அடிக்கடி
சப்பாத்தி தான்
வேறெதும் செய்யத்தெரியாமலில்லை
சுகர்பேசன்ட் யாருமில்லை
காரணம் எனக்கு அது பிடிக்குமென்பதால்...

மேலும்

பருப்பு தண்ணியில்
ஞாயிறு மிதக்கிறது

கறியென்றால்
சாதி மெதிக்கிறது

மதம் மனிதனை
மூத்திரம் நக்கசொல்கிறது

குடிக்க நீர்கூட இல்லை
மொக்கெங்கும் சாராயக்கடை

நிலம் முதல் நீட்வரை
உயிரையே பறிக்கிறது

உரிமையென பேசினால்
வீட்டுக்காரனே பைத்தியமென்கிறான்

அம்பேத் பெரியார் மார்க்ஸ் எல்லாம்
நூலக புழுதியில் மங்கி கிடக்கு

மனுவும் பழைய கதையும்
தெருவை மேல் கீழென பிரித்துவைத்திருக்கு

ஆடு மாடாய் உழைக்கும்
எம்மக்கள் மனிதராய் எப்போது மதிக்கபோகிறார்களோ

தூய்மை தூய்மையென குப்பைத்தொட்டி
இழுக்கும் அவலம் எப்போது தொலையுமோ

படிப்பு விளையாட்டு உரிமை உணவு
அரசியல் இப்படி எதுவும் நுகராத

எம்மக்களை எப்போ (...)

மேலும்

மரம்
நிழல் தரும்
மழை தரும்
காற்று தரும்
எல்லாம் தருமென
தெரிந்தும்
அதை வெட்டி
காசாக்கி
மழைக்கும்
நிழலுக்கும்
சுத்த காற்றுக்கும்
பஞ்சம் வந்த காலம்
நம் சாபக்காலம்....

மேலும்

எல்லோருக்கும்
வறுமை கோடு தான்
எனக்கு மட்டும்
வட்டமாய் சதுரமாய்
சத்தமாய் முக்கோணமாய்
வானம் தெரியும் அளவுக்கு
விட்டமும் வறுமையின் வாயும்...

மேலும்

கருப்பு நிலாகாரிக்கு
நாவல்பழ விழி பஞ்சுமிட்டாய் கன்னம் ஞாயிறு உதடு சிற்பி செய்த மூக்கு...

மேலும்

மனைவிக்கு
தாலிமட்டுமல்ல
கோவிலும்
கட்டலாம்...

மேலும்

எழுதாமல்
இருந்திருந்தால்
என்றோ
நான்
இறந்திருப்பேன்...

மேலும்

இது சாதி இந்தியா தான்
இது சாதிய சமூகம் தான்
இவர்கள் சாதிய மனிதர்கள் தான்

இவர்களுடைய கௌரவம் சாதி தான்
இவங்க கடவுள் சாதிய கடவுள் தான்
இவங்க கல்வி சாதிய கல்விதான்
இவங்க பெருமை சாதி தான்

சாதி தான் வீடு
சாதி தான் தொழில்
சாதி தான் அடையாளம்
சாதி தான் மாடு
சாதிக்காக தான் இவர்கள்
சாதி தான் பணம்
இது சாதி இந்தியா தான்

பணமில்லாது
உணவில்லாது
பிச்சையெடுப்பினும்
சாதி எனும் திமிர்
இவர்களை விட்டு போகாது...

தன் மலத்திலும்
சாதி பார்த்து
இந்த மலம் என் சாதி
உனை கீழே போடமாட்டேன்
உணவு தட்டில் போட்டு
பாதுகாப்பேன்
என சொல்லமறுப்பதேன் சாதியவாதிகளே...

கனவன் கொலைப்பட்டான்
இவள் வெட்டப்பட்டாள்
சா (...)

மேலும்

மேலும்...

மேலே