எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து நண்பர்கள் அனைவர்க்கும் வணக்கம்,
        நான் இன்று காலை எனது அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ஒரு பாட்டி என்னிடம் ஒரு ரூபாய் கேட்டார் நான் என் பையினுள் தேடுவதை பார்த்து இல்லை என்றால் விட்டுவிடு நீ செல் என்றார் நான் என் கையில் அகப்பட்ட பத்து ரூபாயை அவரிடம் கொடுத்தேன் அப்போது அவர் முகத்தில் ஏற்பட்ட புன்னகை என் மனதிலும் இதழிலும் ஒட்டிக்கொண்டது. இந்த நொடி வரை அதே புன்னகையோடு தான் இருக்கிறேன். புன்னகையோடு சேர்ந்து சிறு நெருடலும் எண்ணில் தோன்றி விட்டது. அது யாதெனில் அவரின் புன்னகையால் எண்ணில் உதித்த இன்பம் ஏன் அவர் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு ஏற்படவில்லை , ஒரு வேளை ஏற்பட்டு இருந்தால் அவர் ஏன் இப்படி தெருவில் நிற்க போகிறார்?
   
            இதே போல் நிறைய அனுபவம் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது வயதானவர்களை பாரமாய் நினைக்கும் பிள்ளைகளை நினைத்து நொந்துகொள்வதா இல்லை இப்படி அனாதையாக்கப்பட்ட வயதானவர்களுக்காக வருத்தப்படுவதா?   உதவுவதில் இன்பம் கிடைத்தாலும் அவர்களின் நிலை நம்மை வருத்தப்பட தான் வைக்கிறது .

மேலும்

காட்சிகள் யாவும் பார்ப்பவனை பொறுத்தே அமைகிறது,   காட்சிகள் எப்போது நம் மன மாற்றத்தின் சாட்சியாக மாறுமோ அப்போது தான் சமூகம் மலரும்.
 

மேலும்


மேலே