எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய மருந்தாளுநர்களின் நிலை - தற்போது ஒருவன் D.Pharm முடித்து விட்டு வெளி வருகிறான் என்று வைத்து கொள்வோம் , அவனின் தற்போதைய தேவை ஒரு வேலை , அந்த வேலை எளிதாக கிடைத்து விடும் 8000 சம்பளத்தில் . ரூம் , சாப்பாடு , இன்னபிற அத்தியாவசிய செலவுகளுக்கு சென்னையில் உள்ள ஒருவர் செலவு செய்ய தற்போதைய நிலையில் எட்டாயிரம் தேவைப்படுகிறது . அந்த சம்பளத்தில் ஒருவன் வேலை பார்த்து அவனின் குடும்பத்தை கவனிக்க முடியாமல் போகிறது . தற்போது முடித்தவனுக்கு இந்த நிலை . ஐந்து, ஆறு வருடம் அனுபவம் உள்ள ஒருவர் மருந்தகம் வைக்க நினைப்பது சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமமாய் போய்விட்டது . எங்கு திரும்பினாலும் அப்பல்லோ ,
மெட் பிளஸ் 15% to 20% வரை தள்ளுபடி விலையில் கூவி விற்காத குறையாய் விற்கிறது இந்நிறுவன மருந்தகங்கள் . அதையும் மீறி மருந்தகம் வைத்தோமானால் மெத்த படித்த அதிமேதாவிகள் முதலில் கேட்கும் கேள்வியே discount இல்லையா என்பதே ,. இவர்கள் எல்லாம் இலவசங்கள் கொண்டே வாழ்வை ஓட்ட பழகி கொண்ட நல்-உள்ளங்கள் . இலவசங்களை வாங்கி தானே இன்றைய தமிழகம் செயலிழந்து உள்ளது . பேச்சளவில் மட்டும் அதை பற்றி பேசி விட்டு ஏன் எங்கு சென்றாலும் முதலில் discount - ஐ மட்டுமே எதிர்பார்க்கிறீர்கள் , அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை நிரப்ப அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை , கண்டும் காணாமல் இருக்கிறது , மக்களை நம்பி மருந்தகம் வைத்தால் அப்பல்லோ , மெட்-பிளஸ் - ன் தள்ளுபடி விற்பனையால் எம்போன்றோர் வீதிக்கு வரும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் . தமிழ்நாட்டில் உள்ள மொத்த மருந்து கடைகளில் முக்கால் வாசி கடைகளில் மருந்தாளுநர்களே இருப்பதில்லை , மக்களுக்கு அதை பற்றிய தெளிவு இல்லை , இதனை அரசாங்கம் முறையாக நடைமுறை படுத்தினால் கூட போதும், அதுவும் செய்வதில்லை . தமிழ்நாட்டில் உள்ள மருந்தாளுனர்கள் அப்பல்லோ , மெட் - பிளஸ் ல் வேலைக்கு செல்வதை நிறுத்தி கொண்டால் அந்நிறுவன மருந்தகங்களின் எண்ணிக்கை குறையலாம் . மருந்தாளுநர்களும் கடை வைத்து சுயமாய் வருமானம் ஈட்ட முடியும் , ஆனால் யோசிக்க மறுக்கின்றனர் . இந்த அவல நிலைக்கு மருந்தாளுநர்களும் ஒரு காரணம் . அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட பத்தாம் வகுப்பு படித்தவன் மருந்துகளை கையாள விட்டிருக்கும் இந்த அரசாங்கம் , எப்படி மருந்தகங்களில் வேலை பார்க்கும் 10, +2 முடித்தவர்களை தடுக்க இயலும். அனைத்திலும் கோட்டை விட்டு மக்களின் உயிர்களோடு விளையாடுகின்றனர் . இப்படியே தொடருமாயின் மருந்தாளுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி விடும் . மக்களும் discount கேட்பதை தவிர்த்து ஒத்துழைப்பை கொடுங்கள் , அரசாங்கமும் நல்ல முடிவை அளித்தல் நன்று .,,, pls save ,,,

மேலும்

மருந்தாளுனர்கள் ( pharmacist ) படும் பாடு ;  அனுபவம் இருந்தாலும் சரி !
இல்லை என்றாலும் சரி ! சம்பளம் என்னவோ பத்தாயிரம் மட்டும் தான். அதுவும்
பன்னிரண்டு மணி நேரம் அல்லது பத்து மணி நேரம் வேலை நேரம் . இது போக
வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை ! அதையும் தவிர்த்து விடுமுறை
என்றால் சம்பள பிடிப்பு ! இத்தனைக்கும் நாங்கள் படித்து வாங்கிய
சான்றிதழ்களை கொடுத்து விட வேண்டும் ! அதன் மூலம் அவர்கள் வேறு கிளையில்
மருந்தகத்தை திறந்து விடுவர் ! அதற்கென்று சில இடங்களில் 1500 கொடுப்பார் !
ஆனால் பல இடங்களில் அவ்வாறு தருவதில்லை ! சரி கிடைக்கும் அனுபவத்திற்காக வேலை பார்த்தால் அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் ஏராளம் !. அனைத்தையும் விட்டு புதியதாய் லோன் வாங்கி  மருந்தகம் வைத்தால் போட்டிகள் பல ! apollo , med plus இப்படி பெரிய pharmacy ஆளுங்க எல்லாம் discount  கொடுத்தே எங்களோட வியாபாரத்த பாதியா ஆக்கிடாங்க ! இதையும் தாண்டி ரொம்ப படிச்ச மேதாவிங்க சில பேரு அவன் discount கொடுக்கறான் ! நீ கொடுத்தா என்னபா னு சொல்லி இருக்கும் வியாபாரத்தை இன்னும் மோசம் பண்ணிடறாங்க ! இதனால வாங்கின லோன் அடைக்க முடியாம வந்த விலைக்கு மருந்த எல்லாம் வித்துட்டு சேல்ஸ் ரெப்பா அலையறாங்க பல படிச்ச மருந்தாளுனர்கள்! இப்ப ஜெனரல் goverment  இன்னும் ஒரு படி மேல போயி ஆன்லைன் ல மருந்துகள ஆர்டர் பண்ணி வாங்கிக்கலாம் னு சட்டம் கொண்டு வந்துருக்கு ! அவங்க அப்படி னா நம்ம ஸ்டேட் goverment  இருக்கற vacancy  ய இன்னும் fill -up பண்ணாம இழுத்தடிகறாங்க ! அப்படியே போட்டாலும் பணம் கொடுத்தவன் polachikaran , கொடுக்காதவன் அவதிபடறான் ! இப்படி இருந்தா எப்டி தான் எங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் வாழ்கையில முன்னேறது ?

மேலும்

தங்கள் வருகைக்கு நன்றி ஐயா! ஆனால் போராட்டங்கள் வெற்றியை தர வில்லை ! சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து போராடினோம் ! நாடு முழுவதும் மருந்தகங்களை மூடினோம் ! இருந்தும் பலன் இல்லை! சுயநல அரசியல் செய்யும் இவர்களுக்கு தங்கள் பணத்தை பெருக்கி கொள்ளவே நாளும் கிழமையும் போத வில்லை ! இதில் எங்கள் பிரச்சனை எங்கே தெரிய போகிறது ! 24-Oct-2015 3:54 pm
மருந்தாளுநர்கள் ஒற்றுமையுடன் போராடினால் தான் உங்கள் வருங்காலம் நன்றாக இருக்கும். கல்லூரிகளில் படித்த பலர் படித்தும் வேலை கிடைப்பது சிரமம்.மத்திய மாநில அரசுகளும் மருந்தாளுநர்கள் நலன் காக்க ஆவன செய்ய போராடவும்.மேனாட்டு மோகம். இந்திய பொருளாதாரம் எங்கோ போகிறது. விஞ்ஞான முன்னோடியாக மருந்தாளுனர்களும் காலத்துக்கு ஏற்ப மாறிக் கொள்ளவேண்டும்.உலகம் போற்றும் வண்ணம் நீங்கள் திக்கெட்டும் சென்று பணி புரிய முயற்சிக்கவும். காலம் கலியுகம். மருந்தாக்கியல் துறையோடு கலந்த வேறு துறை வியாபாரமும் பண்ணினால் தான் இனி வாழ முடியும்.கலந்துரையாடுங்கள். போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள் வே. ஆவுடையப்பன் மருந்தாக்கியல் துறை பட்டப் படிப்பு 1972 மதுரை மருத்துவ கல்லூரி மதுரை (இந்தியன் ரயில்வே மருந்தாக்கியல் துறை ) 24-Oct-2015 12:06 pm
ஆன்லைன் வர்த்தகம் பல வணிகங்களை பாதிக்கிறது.. இது ஆரம்பம் தான் இன்னும் உங்களை போன்ற வணிகர்கள் வரும் காலத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் . அரசு இதை பற்றி தெளிவான கொள்கையை அறிவிக்க வேண்டும் .. 24-Oct-2015 9:22 am

சாலை  விபத்தில் சிக்கிய வாலிபன் சொல்லிய கதை !! சாலையில் ஒழுங்காய் சென்று கொண்டிருந்தேன் . எதிரே இரண்டு காதல் ஜோடிகள் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர் . அவளின் அங்கங்கள் அவன் உடலோடு ஒட்டிய படி , ஆடை விலகியது தெரியாமல் சாலையில் செல்பவர்களை முகம் சுளிக்க செய்யும் வண்ணம் உலகை மறந்து சென்று கொண்டிருந்தனர் !, அதனை பார்த்த வண்ணம் சபலத்தில் சென்று கொண்டு இருந்ததில் எதிரில் போட்ட சிக்னலை கவனியாமல் விபத்தில் சிக்கி விட்டேன் என்று ! பார்ப்பதுவும் அதன் பால் ஈர்பதுவும் தான் இன்றைய காதலாய் மாறி விட்டதோ என்றே எண்ணுகிறேன் ! எனதருமை கவிதை தோழர்களே இன்றைய காதலை பற்றிய தங்களின்  எண்ணத்தை பகிர்ந்திடுங்கள் !

மேலும்

எதிர்பார்த்து வாழ்வதை நிறுத்தி கொள்ள மனம் மறுக்கிறது ! அன்பை எதிர்பார்ப்பது தவறா ? அன்பை மட்டும் எதிர்பார்த்ததால் இன்று தனிமையில் வாடுகிறேன் !

மேலும்


மேலே