எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் ஆசை
நொடிக்கு ஒரு முறை
நலம் கேட்க ஆசை..

நிமிடத்திற்கு ஒரு முறை
முத்தமிட ஆசை..

மணிக்கு ஒரு முறை
காதல் சொல்ல ஆசை..

நாளுக்கு ஒரு முறை
நானே ஊட்டிவிட ஆசை..

வாரத்தில் ஒரு முறை
கரம்கோர்த்து நிலா ரசிக்க ஆசை..

மாதத்தில் ஒரு முறை
விடுமுறை(உனக்காக) எடுக்க ஆசை..

ஆண்டிற்கு ஒரு முறை
மீண்டும் உன்னை மணம்முடிக்க ஆசை..

எனக்காக ஒரு உறவு
இதற்கெல்லாம் வேண்டும் என்று ஆசை..

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி. 22-Dec-2014 4:29 pm
எல்லாவற்றிற்கும் ஆசைபடு 22-Dec-2014 8:08 am
உங்களை என்றும் வாழ்த்த எனக்கும் ஆசை .... நன்று 22-Dec-2014 7:21 am

தினமும் பார்க்கிறேன் அவரை
உணவாக ஏதோ ஒன்றை மென்றபடி..
கடதாசி பெட்டிகளை போர்வையாய் சுற்றியபடி.
என்றாவது ஒருநாள் பளிச்சென்றபடி..
உழைக்கவில்லை..
உறவுகளில்லை..
உறைவிடமோ அந்த மரத்தடி-இருந்தும்
கையேந்தி கண்டதில்லை யாரும்
பனிமழை பூவாய் பெய்து
பாதைகளில் அரையடி படர்ந்து உறைந்தது பனிக்கட்டி..
வீதிகள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தது
என் மனக்கண்களில் அவர்
எப்படி போவது -ஆனாலும் போ என்றது
எத்தனை முறை பனிசறுக்கி விழுந்தேனோ நினைவிலில்லை..அந்த
மரத்தடியருகில் நான்
கைகள் மட்டுமே வெளியில் தெரிந்தது
அலறினேன் வாய்திறந்து
வார்த்தைகள் வந்ததா தெரியவில்லை
வயதானோர் சிலர் வந்தார்கள்..
வளவள என்று பேசிக்கொண (...)

மேலும்

கற்பனை அல்ல நிஐம்.வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி. 21-Dec-2014 12:39 am
அழகு ... நல்ல கற்பனை .... 20-Dec-2014 5:15 pm

பனிமழைக்காலம்
கம்பளி போர்வைக்குள் வெடவெடக்கும் உடல்கள்..
கையுறைக்குள் கனத்து போகும்
கரங்கள்..
கன்றிச் சிவந்து போகும்
காதுமடல்கள்..
மொத்தத்தில் பிணவறை பிணங்களாய் நாம் -இருந்தும்
எத்தனை விதமாய் புகைப்படங்கள்
இத்தனை தீரம் வேண்டுமாடா தமிழா நமக்கு...

மேலும்

பரிசு
உன்னை நான் மூலஸ்தானத்தில் வைத்து பார்க்க ஆசைப்பட்டேன்
நீயோ என்னை உன் வாசலில் இருக்கும்
பிச்சைக்காரியாய் பார்க்க ஆசைப்படுகிறாய்
வாழ்வு கொடுத்த எனக்கு
நீ கொடுத்த பரிசு...

மேலும்

எதற்காக தேடுகிறாய் என்னை...
அன்பை காட்டியபோது-அதை
குப்பையில் போடென்றாய்
ஆசையாக சமைத்தபோது-இது
சாப்பாடா என்றாய்...
அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றபோதும்
மலடி என்றாய்...
ஊனம் உடலில்தான் உள்ளத்தில் இல்லை
என்றார்கள்-அதை நம்பி
வாழ்வு கொடுத்தது என் தப்பா?
எனக்குள் இருந்த இலட்சியங்கள் கூட-நடை
பிணமாய் போனதே!
உன்னிடம்
பொன் கேட்கவில்லை..
பொருள் கேட்கவில்லை-அதனால்
என்னை பெண்ணே இல்லையென்றாய்..
நீ தந்த காயங்களும் வலிகளும்
ஆறவில்லை இன்னும் என்னுள்ளே..
எதற்காக தேடுகிறாய் என்னை
குற்றுயிராய் வாழும் என்னை
கொன்றுவிட்டு போகவா.




மேலும்

உண்மை. 24-Nov-2014 7:58 pm
மிகவும் அழுத்தமான வார்த்தைகள் ..... 24-Nov-2014 5:50 pm

காதலே உன்னை காதலித்தபின்
காணாமல் போனேன் நான்
காணாமல் போன என்னுள்ளே எப்படி
நிஐமாகி போனது உன் நினைவுகள் மட்டும்...

மேலும்

மாவீரர்கள்..
தாய் மடியில் பூவாய் மலர்ந்து
தாய் மண்ணில் விதையாய் வீழ்ந்தவர்களே...
தாய் மண்ணின் விடிவிற்காய்
தம் உயிரை துறந்த செல்வங்களே...
கல்லறை மீதினில் பூக்களை சொரிகையில் உம் முகம் பார்த்தோம்
கல்லறை முன்பு
தீப்பந்தம் ஏற்றுகையில் உம் இலட்சியம் கண்டோம்
உங்கள் பாடல் இசைக்கையில்
எங்கள் இலக்கு உணர்ந்தோம்
இன்று
எம் தெய்வங்கள் கல்லறை தேடி
எங்கே போவோம்
நினைவுச் சின்னங்களை அழித்தாலும்
அழியாத உங்கள் நினைவுகளோடு நாம்
.....மாவீரர் சுமந்த கனவுகளை இன்று
.....

மேலும்

மாவீரர்களை மனதில் நிறுத்திய தங்களுக்கு என் நன்றிகள். 17-Nov-2014 1:15 pm
உண்மைதான், மண்ணில் விதைக்கப்பட்டார்கள் விண்ணில் விதைக்கப்பட்டார்கள் - நம் மனதில் முளைத்துவிட்டார்கள். நினைவுச்சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டாலும் - எந்த திட்டமிடளாலும் அழித்துவிட முடியாது, நம் மனதில் தாங்கி நிற்கும் அந்த வரலாற்று சின்னங்களை. மாவீர்கள் நம் மனதில் கலந்துவிட்டவர்கள், மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், இன்றும் என்றும் நம்மை இயக்கிக்கொண்டே இருக்கும் இயக்கவிசைகள் அவர்கள். 17-Nov-2014 11:34 am

உன் நினைவுகளால் கருத்தரித்த என் பேனா
பிரசவித்த வார்த்தைகளே
என் கவிதைகள்...
பாலா

மேலும்

நீ என்னுடனும்
நான் உன்னுடனும்
சண்டை பிடிக்கும் போதெல்லாம்
கண்ணாடி துகள்களாய் சிதறிப்போகிறது
இதயம்
மீண்டும் சந்திக்கும் போது
புதிய கண்ணாடியாய் நம் இதயங்கள்.

மேலும்


மேலே