எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொஞ்சம் படிக்கத் தெரிந்திருந்தால் கிராமத்தை விட்டு போய்விடுவோம்

நிறைய படிக்கத் தெரிந்திருந்தால் நாட்டை விட்டே போய்விடுவோம்

மேலும்

ஒன்றுமே படிக்கவில்லையென்றால் உலகத்தை விட்டே போய்விடுவோம் நன்றி அய்யா 29-Apr-2016 8:26 am
ஆம் யதார்த்த உண்மை ! ஒன்றுமே படிக்கவில்லையென்றால் .....? வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 28-Apr-2016 10:05 pm

எண்ணம் எழுத்துப் போட்டி

மேலும்

மிக்க நன்றி மகிழ்ச்சி 19-Apr-2016 12:37 pm
கோபுர கட்டட கலையாகட்டும், சிற்பக்க்லையாகட்டும், எழுத்தாற்றலாகட்டும் எதிலும் முன்னோடி தமிழன் என்பதில் நாம் பெருமை கொள்வோம். 19-Apr-2016 8:03 am
நன்றி சர்பான் 18-Apr-2016 9:19 am
தமிழின் மகிமையை காட்சியளிக்கும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 17-Apr-2016 10:14 pm

அழகு வண்ண மலர் மரக் கன்று நட்டு தெருவை,

நகரை ,நாட்டை அழகுபடுத்துவோமே  நாம் ஒவ்வொருவரும்

மேலும்

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு
S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. 
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம். 

ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். 

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R  அதாவது, SMILE (சிரிக்க சொல்வது), TALK (பேச சொல்வது), RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது) போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம். மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள். 

இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது. அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும், அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம். அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம். 

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர்களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன். 

மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

மேலும்

நல்ல விடயம் பகிர்வோமே

மேலும்

மகிழ்ச்சி நன்றி ஐய்யா 01-Apr-2016 11:10 pm
ஜூன் மாதம்;-10-ம் தேதி-தேசிய பேருந்து ஓட்டுனர் தினம்,- ,ஜூலை மாதம்;-07-ம் தேதி-தேசிய பேருந்து ஓட்டுனர் தினம்,- அனைவரும் ஜூன் மாதம்;-தேசிய பேருந்து ஓட்டுனர் தினம்,-தேசிய பேருந்து ஓட்டுனர் தினம்,-கொண்டாடுவோம். விழிப்பு உணர்வுப் படைப்புக்கு பாராட்டுகள். தமிழ் அன்னை ஆசிகள். தொடரட்டும் நம் இலக்கியப் பயணம். நன்றி 01-Apr-2016 9:52 pm

நல்லாருக்கு ...வாழ்த்துக்கள்...! என்று வாழ்த்திவிட்டு வந்தேன் என் படைப்பைத் திருடி பதிப்பிட்ட நல்ல மகநுடைய கணக்கில்

மேலும்

புத்திசாலிப் பையன் கணக்கை மாற்றிவிட்டான் எத்தனை கணக்குகளோ? 21-Dec-2015 9:05 am
அப்படியே என்னோட வாழ்த்தையும் பகிர்ந்துவிடுங்கள் - மு.ரா. 20-Dec-2015 7:55 pm
யார் என்று சொல்லுங்கள் - நானும் வாழ்த்துகிறேன்... 20-Dec-2015 10:56 am

     நல்ல யோசனை கைகண்ட மருந்து ஏலக்காயின் மகத்துவம்

இப்பொதெல்லாம் மழைகாலமாதலால் காய்ச்சல் அவதியில் வாந்திதான் எது சாப்பிட்டாலும்.. அது தீர சரியான கை வைத்தியம் ஏலக்காய்தான்..

தீரா காய்ச்சலின்போது கஞ்சி குடித்தால் வாந்திதான் ..என்ன செய்வது என்று யோசித்தேன்.
அரிசி கஞ்சியில் அல்லது ஓட்ச் கஞ்சியில் ஏலக்காய் தட்டி போட்டு  குடித்தேன் போய் விட்டது குமட்டல் வாந்தி 
நண்பர் களே !உங்களிடம் இந்த மகிமை   வைத்தியம் பகிர்ந்து கொண்டேன்...

மேலும்

ஏலரிசி என்றால் என்ன அது எப்படி இருக்கும் ஐயா, நன்றி - மு.ரா. 27-Nov-2015 4:28 pm
பயனுள்ள குறிப்பு, நன்றி - மு.ரா. 27-Nov-2015 4:27 pm
உண்மையாகவா ? அய்யா நல்ல தகவலுக்கு நன்றி 27-Nov-2015 4:18 pm
ஏலரிசி தொடர்ந்து ஒரு பத்து நாளைக்குச் சாப்பிட்டால், கண் நன்றாகத் தெரியுமாமே...! 26-Nov-2015 1:15 pm

மன்னியுங்கள் கண்மணி களே

வெள்ளம் தான் நாங்கள்
வெல்லம் என விழுங்க மாட்டோம்
நவீனம் வேண்டி நீங்கள் 
எங்களை மறந்து 
ஏரி குளங்கள் கால்வாய்கள் எல்லாவற்றையும் கொன்று புதைத்தீர்கள்.. 
நாங்கள் எங்கு செல்வோம்..?
எங்கள் மூதாதையர்கள்
சாபத்தால் நிகழ்ந்தது.
வழிதேடி அலைகிறோம் நாங்களும்
உங்களைப் போல...

மேலும்

கடவுளும் மனிதனும்

ஒரு குட்டிக் கதை... 
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். 

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன 
தெரியும்? நீ நினைத்தபோது மழையை 
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை 
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. 

பேசாமல், 
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” 
என்றான். 

கடவுள் உடனே, 
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் 
போய்விட்டார். 

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. 

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. 

”மழையே பெய்” என்றான். 

பெய்தது. 

நிறுத்தச் சொன்னபோது, 
மழை நின்றது. 

ஈரமான நிலத்தை உழுதான். 

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான். 

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. 

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. 

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. 

அறுவடைக் காலமும் வந்தது. 

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். 

அதிர்ந்தான். 

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. 

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை. 

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான். 

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான். 

கடவுள் புன்னகைத்தார்: 
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும். 

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும். 

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும். 

எல்லாமே வசதியாக 
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. 

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார். 

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி. 

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும். 

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. 

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது. 

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை.. 
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.ு 

இதை புரிந்து கொண்டு நம்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் பயணம் செய்வோம் 
வாழ்க வளமுடன்

மேலும்

ஆகா! 23-Nov-2015 10:19 am

ஹயாக்ஸ் நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

மேலும்

மேலும்...

மேலே