எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் ஆண்ராயிடில் கனெச்சன் ஸ்லோவா இருக்கு? எப்படி வேகம் அதிகரிப்பது?

மேலும்

என்னிதயத்தில் மலர்ந்த எழுத்துதள தோழமைகளே!
நீண்ட இடைவெளிக்கு பின்
சந்திப்பதில் மிக்கமகிழ்ச்சி!
புதிதாய் முளைத்த புதுகவிஞர்களே! இனி என் கருத்துகளையும் தங்கள் கவியில் காண முடியுமென்பதை மிக்கமகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறேன். வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்!!
என்றும் அன்புடன் கனகரத்தினம்

மேலும்

அதி அத்தியாவசிய வரவே !! வருக கருத்துக்குவியல்களை தருக !! 11-Mar-2016 6:30 pm
வாங்க! வணக்கம்! 11-Mar-2016 6:12 pm

ஆண்ட்ராய்டு உலாவியில் அடுத்தவரின் படைப்புகளுக்கு கருத்துரையோ அல்லது மதிப்பினை தந்திட வழிமுறை விளக்கிட வேண்டுகிறேன்!

மேலும்

அட கவிதைக்கு கருத்து போட மனமில்லாட்டியும் காணும் குறையையாவது சொல்லிபோங்க !இப்படி மௌனமாய் பார்த்தும் பார்க்காதது போல் நகர்ந்து போனால் நாங்க உங்களை என்னனு நினைக்கிறது .மௌனசாமியாருனா இல்லை பொறாமைகொண்ட மனிதரென்றா ? தலைகனம் பிடித்தவரென்றா? இப்படி தாங்க பல கவிஞர்கள் தனக்குள்ளே பொலம்புராங்க ! பார்வை நிறைய ஆனால் கருத்து 0 அதுக்கு என்னங்க அர்த்தம் ?அடமதிபெண்ணுனு ஒன்னு சொல்வாங்களே அது எதுக்குனே தெரியலைங்க ?நல்லகவிதைனா ?இல்லை பொழச்சி போங்கண்ணா ? கொஞ்சம் தலத்தில் உள்ள கவிதை பக்கத்தை திருப்பி பார்த்தால் உண்மை தானே தெரியுமுங்க !

மேலும்

அது இயல்பாக நடப்பதுதான் தோழரே.. அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை.. உங்கள் பணியை தொடர்ந்து செயுங்கள். அவர்களும் உங்களை ஒரு நாள் புரிந்து கொள்வார்கள்.. பூக்கள் மற்றவர்கள் தன்னை ரசிக்க வேண்டும் என்றே பூபதில்லை. அதன் அழகை உணர்ந்தவர்கள் மட்டுமே அதனை ரசிக்கிறார்கள் அது போல தான் இதுவும் 16-Feb-2015 9:00 am
என்னமோ போங்க நண்பா........!! எம்மட படைப்புக்கு நானும் வரமாட்டிங்கிறேன். நான் வரலனா நீங்களும் வரமாட்டிங்கிறீங்க.. பண்டமாற்று முறை மறந்துபோச்சா............... !! கருத்து எனும் மொய் வச்சி ...... காத்திருக்க சொல்லுங்க கருத்தாய் மொய்க்கும் கருத்துகள்..! // இதுதான் காலகாலமாய் நடக்கும் விசயம்.. அறியாத நண்பா.. நீங்கள் அறியாததா..?? 16-Feb-2015 12:05 am

நிலா பிம்பமாய் அவள்
அவளது ஒளியில் தவழும் மேகமாய் நான்
சிதறல்கள் அவள் சிரிப்பு-என்
பதறல் யாதெனின் அவள் வனப்பு
கடைவிழியில் காந்தம் வைத்தால்
இடைவழியே கட்டிவைத்தால்
நகர்வறியாது கிரகணத்தின் பிடியில்
வெண்கல உலக்கையாய் நான் !

மேலும்

https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t34.0-12/p296x100/10984726_611456578989971_1452009031_n.jpg?oh=e6adcbe2a6263db1ecd88f893c91c0c4&oe=54E12B08&__gda__=1423967031_d486dc3e099a8d3ba813d662092355f4

மேலும்

என்னமோ தெரியலை !எண்ணமே வரவில்லை
கண்ணமோ கவிதையோ ஒண்ணுமே புரியலை
கணினிக்கு முன் வருவதற்கு முன்வரை
சொல்லடை சிலேடையாக துள்ளும் மனதுக்குள்
ஒவ்வொன்றாய் செதுக்க நினைக்கையில் ஒண்ணுமே வரவில்லை
மொத்தமாய் வந்து ஸ்தம்பிக்குது! மனம் மட்டும் தும்பியாய் அலையுது
மாறிடும் பருவநிலை போல் காரிருள் சூழ்ந்தே காட்சியாய் தெரியுது !
ஆதலால் கவிதைக்கு சில மணித்துளிகள் ....மின்வெட்டு !

மேலும்

அழகான சொல்லாடல் அருமை தோழரே!! 07-Feb-2015 9:52 pm
அதுவும் சரிதான் அதுக்குள்ளே போட்டிக்கவிதை முடிவை அறிவிக்காமளிருக்கனுமே ! 07-Feb-2015 9:44 pm
வழுக்கள் என்பதின் ஒப்பனை தோழரே ! 07-Feb-2015 9:43 pm
சிறிது ஓய்வு கவிதைக்கு நல்லது தான்.... ஒரு ரவுண்டு கவிதை / எண்ணங்களுக்கு கருத்து போட்டுட்டு வாங்க.. 07-Feb-2015 8:30 am

குடியரசு நாடு
குடிமக்களுக்கில்லை வீடு?
குடிநீர் தீர நதியை இணைத்தாரா ?
குடிமக்கள் வாழ நல் வழிதான் வகுத்தாரா ?
குடியை பெருக்கி குடிலை மறந்தாரே !
கொடியை ஏற்றி குடியரசென்றால்
குடித்தனம் விளங்குமா ?
குட்டிதூக்கம் போடும் கூட்டம் விழிக்குமா ?
குள்ளநரித்தனம் செய்யும் அரசியல் சாயம் வெளுக்குமா ?
குணமில்லை பணமென்ற இழிநிலை மாறுமா ?
குறட்டை விடும் குடிமக்கள் விழித்தால் விடியும்
கொடியும் கம்பத்தில் ஏறி பட்டொளி வீசி பறக்கும்
அந்நாளே பாட்டாளிகளின் குடியரசாகும் !

மேலும்

கருத்திற்கு நன்றி ! 26-Jan-2015 10:20 pm
நியாயமான கோபம் தான் தோழரே ... 26-Jan-2015 12:33 pm

பிறர் கருத்தை ஏற்காத போது
பின் வாழ்வில் கேட்காது -காது

முன்வந்து முடம் நின்றால்
முன்வந்து கருதுரைப்பவனும் ஜடமே !

காதல் வைரஸ் பரவிய கணினி
துடிக்குது கிடந்து இதயத்துள் !

அறிவுள்ளவன் பிறர் சொல்லை மூளையில் பதிப்பான்
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் மூலையில் கிடப்பான்

மேலும்

கருத்திற்கு நன்றி ! 26-Jan-2015 10:19 pm
நல்லா இருக்கு தோழரே .. 26-Jan-2015 12:36 pm

நான் ரசித்ததில் பிடித்த பாடல் ...

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு … .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ….

கருணை பொங்கும் … உள்ளங்கள் உண்டு ..
கண்ணிற் துடைக்கும் கைகளும் உண்டு …
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு .. …
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்க்கையே நம்பி வாழ்ந்து விடைப்பெருவோம் …
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு …

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கென்றும் குறைகள் கிடையாது .
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ .. ஒ . (...)

மேலும்

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ ….. அது வரை நாமும் சென்றுவிடுவோம் விடைபெறும் … நேரம் .வரும் போதும் …….. சிரிப்பினில் … நன்றி சொல்லிவிடுவோம் பரவசம் இந்த பரவசம் .. எந்நாளும் நெஞ்சில் தீராமல் வாழுமே ............ இப்படி வாழ்ந்துவிட்டால் போதும்.. வேறென்ன வேண்டும்.... அழகான ஆழமான கருத்துகள் கொண்ட பாடல்.. பகிர்ந்தமைக்கு நன்றி.... 24-Jan-2015 6:30 pm
மேலும்...

மேலே