எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ்  மொழியின் பெருமை :


உலகில் எந்த ஒரு மொழிக்கும் இல்லாத,
எந்த ஒரு மொழியும் கொண்டிராத,
பல தனிச்சிறப்புகளை, தன்னகத்தே கொண்டது,
நம் தாய் தமிழ் மொழி என்றால் மிகையல்ல !
அவற்றுள் சிறப்பானதொன்று, 
" ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் " .
பாருங்கள் நண்பர்களே,
ஒரெழுத்தில்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்,
நம் தாய் தமிழ் மொழியில் !

அவற்றுள் சில :

- சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
- சிவன், ஆச்சரியம், சுட்டெழுத்து 
கோ - அரசன், தந்தை, இறைவன் 

" வானமளந்த தனைத்தும் அளந்திடும்
   வண்மொழி வாழிய வே "

#பாரதி 

மேலும்

தமிழ் மொழியின் பெருமை :


தமிழில் கவி வடித்த புலவர்களுக்கு, தங்கள் கவித்திறன் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை வரும் வரிகளில் காணலாம் ..

"இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் 
 அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ - சும்மா  
 இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம் 
 பொழிந்தால் கவிகாள மேகம் "

#வரதன் என்ற காளமேக புலவர்

இவர் மோகனாங்கி என்ற பெண்ணை மணம்முடிக்க,வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .  

மேலும்

ரசித்தேன் 14-Apr-2016 2:51 pm

தமிழ் மொழியின் பெருமை :

இல்லறம் தொடாத ஒரு சமணத்துறவி,
எட்டு மனைவியரை மணமுடித்த சீவகனைப் பற்றி,
காதல் ததும்ப இயற்றிய காப்பியம் சீவகசிந்தாமணி என்பதை 
மறக்க முடியுமா ? 
இந்த ஆற்றல் தமிழ்ப் புலவனுக்கே உரித்தானது என்பதை,
மறுக்க முடியுமா ?  

#திருத்தக்கதேவர்  

மேலும்

சிலப்பதிகாரம் தந்த இளங்கோ சமண அடிகளா மணிமேகலை சாத்தனார் புத்த அனுதாபியா அல்லது சீவக சிந்தாமணியின் திருத் தக்க தேவர் சமண முனிவரா என்பதில் நமக்கு அக்கறை இல்லை . அவர்கள் மதம் அவர்களை வானுலகிற்கு இட்டுச் சென்றிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் இலக்கியம் என்றும் நம்மைத் தமிழ்த் தேனுலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் . இவர்கள் தமிழர் என்பதிலும் இவர்கள் தமிழிலும்தான் நமக்குப் பெருமை. அன்புடன்,கவின் சாரலன் 28-Apr-2016 5:40 pm
தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்ச்சி நண்பரே ! 28-Apr-2016 11:13 am
உண்மை தான் சார் ! புலவர்கள், மதுரை தமிழ்ச் சங்கத்தில், திருத்தக்கதேவரை தூண்டிப் பார்க்க, கிடைத்தது ஒரு காப்பியம் ! தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்ச்சி சார் ! 28-Apr-2016 11:13 am
உண்மை தான் நண்பரே ! சீவக சிந்தாமணி, கத்திய சிந்தாமணி, சந்திர புராணம், பதி புராணம் முதலிய வடமொழி நூல்களை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட காப்பியமே .. தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்ச்சி ! 28-Apr-2016 11:09 am

எழுத்து தளத்தார் கவனத்திற்கு!!


நம் தளத்தில் பதியப்படும் பல படைப்புகள் ,
படைப்பாளிகளின் அனுமதியின்றி ,,
' வானமே எல்லை " = என்ற முகநூல் பக்கத்தில் 
அதன் அட்மின் ( திருட்டு நாய் ) - Vijay Vijay என்ற பெயரால் பதியப்பட்டுள்ளது ..

எழுத்து தளத்தார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ,
இந்த பதிவு ..

  - கற்குவேல் .பா 

மேலும்

மீசைக்குள் 
அடங்கிப் போயிருந்த 
கனவுகள் - மீண்டெழும் 
நொடிகளிளெல்லாம் 
உயிர்த்து விடுகிறான் - அந்த 
முண்டாசுக்காரன் !

#அப்பனுக்கு 

மேலும்

நம் கைதனில் !

மேலும்

சிறப்பான எண்ணம் அதிசிறப்பான அஞ்சலி! 31-Jul-2015 7:40 am

** உடல்நிலை காரணமாக தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை என முதலவர் ஜெயலலிதா - செய்தி

தமிழ்க் குடிமகனில் ,
முதல் குடிமகனுக்கே இந்த மரியாதை ???
இவர்களை நம்பி ,
இங்கே நாமும் !!

எரிச்சலுடன் ,
- தமிழன் .

மேலும்

நம்ம முதல் - அமைச்சர் வெயில்ல அதிக நேரம் இருக்க மாட்டாங்க ... அடிக்கடி கொடநாடு போயிருவாங்க ..தேர்தல் பிரச்சாரம் கூட மாலை நேரத்தில் தான் பண்ணுவாங்க .. ஆனா தொண்டர்கள் என சொல்லப்படும் முட்டாள்கள் மதியம் முதலே கூடி விடுவார்கள் .. இவர்களுக்கு வெயில் பட்டாலே உடல் நிலை மோசம் ஆகிவிடும் ... 30-Jul-2015 9:32 pm
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள் தோழரே .. 30-Jul-2015 9:17 pm
நியாயமான ஆதங்கம் தான் ....... 30-Jul-2015 8:58 pm
அதுவும் ஒரு வகையில் உண்மையே தோழரே . மேலும் , இவர்கள் வருவது தெரிந்தால் " கலாமுக்கு இறுதி மரியாதை செய்ய வரும் ............. ................. என்று குப்பை போஸ்டர் ஒட்டி இன்னும் அசிங்கப்படுத்திவிடுவார்கள் ! 30-Jul-2015 8:13 pm

ஆழ்ந்த வருத்தத்துடன் ..

மேலும்

கண்ணீர்த்துளிகள் சமர்ப்பணம் ..

மேலும்

வணக்கம் ,
நம் தளத்திலுள்ள தோழர் தோழமைகள் இதுவரை வெளியுட்டுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல் அறிய ஆவல் . புத்தகம் வெளியிட்டோர் , வெளியிட்டோர் பற்றிய விபரம் அறிந்தோர் கருத்துக்களைப் பதிவிடவும் . இது நம் தளத்திலுள்ள படைப்பாளிகளை , அவர்களின் படைப்புக்களை மேலும் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்றே நம்புகிறேன் . என்னுடைய புத்தக அலமாரியில் தோழர்களின் புத்தகங்களுக்கு முதல் இடம் கொடுக்க சிறியதொரு ஆசை !நன்றிகள் !

நட்புடன் ,
கற்குவேல் .பா

மேலும்

நம் தளத்தில் திரு.பழனி குமார் அவர்கள் "உணர்வலைகள் " என்னும் நூலை வெளியிட்டுள்ளார்கள் . புத்தகம் வேண்டுமானால் கவிஞரை தொடர்பு கொள்ளவும் . 25-Jul-2015 8:04 pm
மேலும்...

மேலே