எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்களே...
உங்கள் மீது நான் பெரிதும் மதிப்பு கொண்டவன்
உங்கள் கருத்துகளுக்காக என் கவிதைகள் காத்துக்கிடக்கும்
நானும் தான்
ஆனால்
என்னிடம் கணினியும் இணையவசதியும் இல்லாத காரணத்தால் உங்கள் கருத்துக்களை
படிக்கவோ பதிலளிக்கவோ இயலவில்லை
இந்த காரணத்தால் என்னால் தொடர்ந்து என் கவிதைகளையும் தட்டச்சு செய்து வெளியிட முடியவில்லை
இருந்தாலும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களின் கவிதைகளுக்கு கருத்து தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
எனவே
உங்கள் ஆதரவு எனக்கு முக்கியம்!
உங்கள் நட்பு மிகமிக முக்கியம்!

நன்றி!!!

தோழமையோடு

கவி (...)

மேலும்

வாரம் ஒரு மணி நேரம் மட்டும் இதற்கு ஒதுக்குங்கள் போதும் ... தொடர்ந்து வாருங்கள் எழுதுங்கள் வாழ்த்துக்கள் ...! 02-Oct-2014 8:57 am
உங்கள் நிலைமையை நீங்கள் வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள் நாங்கள் சொல்ல வில்லை அவ்வளவு தான்,,,பல்வேறு சமூக மற்றும் தனி வேலைகள் அதிகம் இருப்பதால் இணையதிர்க்கே வர இயலவில்லை,,எனவே என்னுடைய பங்கு இல்லையெனில் கவலை வேண்டாம் நண்பரே 15-Sep-2014 7:05 pm
நாங்கள் இருக்கோம் கவலை வேண்டாம் 12-Sep-2014 6:08 pm
விரைவாய் வாருங்கள் காத்திருக்கிறோம் கவிக்காகவும் கருத்திற்காகவும் தோழமையே ..! 12-Sep-2014 6:01 pm

காதல்

எட்டாம் வகுப்பு
படிக்கும் வயது!
பட்டாம்பூச்சி
பிடிக்கும் மனது!

கைகளுக்குள் சிக்காத
பட்டம்பூச்சிபோல
அறிவுரைக்குள்
சிக்காத மனது!

உன்
பார்வைத் தீக்குச்சி
என் கண்களில்
உரச பற்றிக்கொண்டது
காதல் தீ!

தொட்டவுடன்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்
ஒட்டிக்கொண்டது
உயிரில் உன் முகம்!

அன்றுமுதல்
துன்பங்கள்
என்னும் மாயை
எனை
துரத்தும்போதெல்லாம்
நான் அவற்றை
துரத்தப் பயன்படுத்துவது
உன்
பருவமுகம்தான்!

அன்றுமுதல்
உறக்கத்தில்
என் உதடுகள்
உச்சரித்த வார்த்தை
உன் பெயர்தான்!

சின்னச் சின்ன
கதைகள் பேசி
சிரித்துக்கொண்டோம்!
சொன்ன பொய்களுக்கெல்லம்
போன்சிரிப்பையே
பரிசாய் தந்தா (...)

மேலும்

http://eluthu.com/kavithai/204165.html

மேலும்

காதல் காற்று
இதய மேகத்தை குளிர்வித்த
இந்த சோக ராகத்திற்கு
என் உணர்ச்சியின் கண்ணீர், வார்த்தைகளாய்

திரை;வெள்ளித்திரை
பாடல்;உயிரிலே
ராகத்தோடு தாகத்துடன் வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!

மாற்று வரிகள் ...

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

என் வானில் விண்மீன்கள்
எனைப் பார்த்து சிரிக்குதோ!-அடி
எந்தன் சோகம் தாங்காமல்
குளிர் மேகம் உருகுதோ!

தனிமையே தனிமையே
துணையென ஆனது!
காரணம் நீயின்றிப்போனது!

விழிகளின் துயிலது
கனவென ஆனது!
காரணம் இமையின்றிப்போனது!

என் உயிராய் உனை நின (...)

மேலும்

Arputham nanri 03-Feb-2014 9:43 am

மேலே