எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேண்டும் !!! 


தீர தனிமையில் இருந்து மீட்டெடுக்க ஓர் குருட்டு காதலன்
சலிப்புகள் இன்றி சூறையாடும்
சலிக்காத காதல் 
என்றும் தீரா அட்சய பாத்திரமாய்
இடைவிடாத அன்பு
அழுதிடும் போது ஆறுதலாய் மங்காத அரவணைப்பு
ஊடல் இன்றி அடிமையென
பித்தாகும் பித்தன் 
மங்கிய விழிகளுக்குள் மரணம் தாண்டி கைதொடர நம்பிக்கை 
ஆர்பரித்து கொட்டும் மழைக்கு இதமாய் பருகும் தேநீர் போல உரையாடல்
மொத்தத்தில் - சல்லி சல்லியாய் நொறுங்கி போன மனதில் முழு பிரதிபலிப்பாய் என்னவன் எவனோ அவன் வேண்டும்.

 - கௌசல்யா சேகர்
     04-12-2023

மேலும்

உணர்வுகளைச் சிறப்பாக வெளியிட்டிருக்கிறீர்கள் 07-Dec-2023 4:58 pm
அருமை.... இப்படி எல்லாம் இப்போது யாரும் இல்லை 07-Dec-2023 4:23 am

அவள் கதாபாத்திரமே அப்படிதான்!!! 

மாயவலையில் சிக்குண்டதை போல் திக்கற்ற சிந்தனையில் சித்தார்த்தனை மிஞ்சிவிடுவாள். நத்தைக்கூட்டிற்குள் தன்னை முடக்கிகொண்டு ஓங்கார ஓலமிடுவாள் துயரத்தின் விளிம்பில் தத்தளிக்கும் போதெல்லாம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களை குறை சொல்லி முடங்கி கிடப்பவளோ அல்லது பழி வாங்குபவளோ கிடையாது!!! நடந்தவை கடந்தவையே என்று தன் கண்ணீர்துளிகளையும் வலிகளையும் வழிகளாய் அமைத்து வடுக்களை வலுவாய் மாற்றுபவள்! அவள் அப்படிதான் !! 

- கௌசல்யா சேகர் 

மேலும்

வெட்டியானின் முணுமுணுப்பு

ஊரே கருமேகம் சூழ்ந்திருந்த வேளையில், அள்ளி முடிந்த தலையில் மல்லிகைப்பூச்சுடி மகாலட்சுமி போல் அமர்ந்திருந்தாள் ... என்ன மசமசன்னு பார்த்துகிட்டு இருக்கிங்க.. அழுதது போதும் சட்டுபுட்டுன்னு ஆக வேண்டியத பாருங்க... என்று வெட்டியானின் முணுமுணுப்பு.... தலையில் வைத்த மல்லிகைப்பூ காயும் முன் அதை தகர்த்த வேண்டிய சூழல்... மாங்கல்யத்திற்கு பூசிய மஞ்சள் கூட நிறமாறவில்லை... மூதாட்டி ஒருத்தி அழுகுறலுடன் வந்தாள்... இந்த பிஞ்சு புள்ளைய வச்சுக்கிட்டு நீ என்ன பன்னப்போரியோ... இப்படி சின்ன வயசுலயே விட்டுட்டு போய்ட்டானே என்றவாறு... கண்ணீரில் மூழ்கி கிடக்கும் என்னவளை எழுப்பி தாலி அறுக்க அழைத்தாள்... காவிரி நீர் கண்களில் வழிந்தவாறு என்னவள் என் கண் முன்னே காட்சியளித்தாள் ... தவழ்ந்து சென்று ஆறுதல் கூற நினைத்தேன் அறியாத வயதில்.... அறியாத முகம் பார்த்து அறிந்து கொண்டாள்.. இனி உனக்காக என் பயணம்... என் உயிர் உள்ளவரை உனக்காக மட்டுமே துடிக்கும் என்று என்னை கட்டியணைத்து புரிய வைத்தாள்... அந்த தருணம் முதல் இந்த தருணம் வரை எனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறாள்....

 -கௌசல்யாசேகர்-

மேலும்

பேரலையோடு யுத்தம் செய்யும் என் நினைவலையும் சற்று மாயம்பெறும் உன்னிசை கேட்கையில்


- கௌசல்யா சேகர்

மேலும்

அவள் அப்படிதான் !!!

நடுஜாமத்தின் மீது அப்படி என்ன பிரியமோ! எந்நாளும் கூகைக்கு போட்டியாய் கண்விழித்துகொண்டு திக்கற்ற மனநிலையோடு உலாவுவாள் இந்த அமலா!!! பின்னர் என்ன சிதறிய மழைத்துளிகளோடு ஏகாந்த வாதமிடுவாள் - ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சிதறிய உன் மழைத்துளி மட்டும் அல்ல சிதறிய என் கண்ணீர் துளிகளும்தான் என்று !!  

- கௌசல்யா சேகர் 

மேலும்

அம்மாவின் புடவை!!


குளிருக்கு இதமாய் என்னதான் கம்பளி போர்வையை போர்த்தி கொண்டாலும் அம்மாவின் முந்தானையை போர்த்தி கொள்வதற்கு ஈடு எதுவும் இருக்காது!!!! 
அம்மாவின் முந்தானை சரிகையை கெட்டியமாக பிடித்து கொண்டு வீதியில் உலா வந்த காலம் அது...இன்றும் நினைவிருக்கிறது!!! குளுறிய போது, மழையில் நினைந்த போது, கண்ணில் பட்ட தூசியை அம்மாவின் மூச்சு காற்றால் புடவையில் ஊதி ஒத்தடம் கொடுத்த போது என வாழ்வில் அத்தனைக்கும் துணையாய் அம்மாவின் புடவை அங்கம்!!! தொட்டிலில் தொடங்கி இன்று வரை அம்மாவின் புடவை என்றால் எனக்கு அதிக பரிட்சயம் !!!
அவ்வாறு தொடர்பு கொண்ட புடவை ஒன்றில் அம்மா ஆசையுடன் தன் கற்பனைக்கே தைத்து கொடுத்த உடைதான் இது 😊

- கௌசல்யா சேகர் 

மேலும்

என்ன புதிதாக சிந்திக்க போகிறேன்!!!

எப்போதும் போல் திக்கற்று திரிகிறேன் திக்கற்ற மனதோடு!!! அனைத்தையும் இழந்தாலும் சிந்தனை என்னவோ உன்னை அடைவதில் இருந்து பின் வாங்குவதாய் இல்லை !!!! யாசகியோ சந்நியாசியோ யாதும் ஆவேன் (சினிமா) உனக்காக... இப்போது கவிஞனாக மாறிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையின் விரக்தியில்

- கௌசல்யா சேகர்




மேலும்

நித்திரையில் நிதானித்து கொண்டு எழுந்தாள் அமலா...!!

ஆம் நல்ல கனா அதே வினா ??சித்தாந்தமாக எடுத்து கொள்ளாட்டியும் சற்று சிந்திக்க தூண்டுபவையே!!! என்று கூறியவாறு கனாபொழுது தோன்றி மறைந்த கதையை நோட்டில் கிறுக்க தயாரானாள்.


- கௌசல்யா சேகர்




மேலும்

பெதும்மையின் போராட்டம்


யாக்கையை துய்க்க நினைக்கும் பிணம் திண்ணி கழுகுகள் மத்தியில் போர் நடத்தும் பெதும்பை !!!

- கௌசல்யா சேகர்

மேலும்

உண்மை உயிர்ப்பிணம் யாக்கை இவளது கொத்தும் சமூக கழுகினங் கள் சமூக அவலத்தை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் பெதும்பை இலக்கியச் சொல் அழகு தருகிறது பழைய இலக்கியங்கள் படித்திருக்கிறீர்கள் 09-Jun-2022 3:05 pm
பேதை , பெதும்பை , அரிவை, தெரிவை ,, மங்கை, மடந்தை, இளம்பெண், பேரிளம் பெண், என்று எட்டு பருவம் பெண்ணிற்கு குறித்துள்ளார்கள். பேதை நான்கு அல்லது ஐந்து வயது பெண்ணை பேதை என்றும் ---6 அல்லது யேழு வயது பெண்ணை பெதும்பை என்பார்கள். பிறகே அரிவை, தெரிவை யாகும் --- மங்கை என்பவளுக்கு பதினாறு வயது பருவம் பதினெட்டு வரை மடந்தை. பின்னே இளம்பெண் பெதும்பைக்கு போராட்டம் என்பது விநோதமான ஒன்று. தமிழில் எழுத்துக்களை மட்டும் படித்து எழுத சரியாகுமா? இலக்கியங்களை படியுங்கள். இலக்கணப் பாட்டு எழுதுங்கள். -. காதலையும் கற்பழிப்புமா எழுதுவது.நல்ல எண்ணம் எண்ணுங்கள் 09-Jun-2022 7:11 am

காக்கையே என்னை உறங்க விடு!!

இரவு மொத்தத்தையும் எழுத்துகளில் சேகரித்த பின், சற்று நேரம் துயிலுணர்ந்தவளாய் அமலா இருக்க, காக்கை கரையும் சத்தம் கேட்டு சிறிது நேரத்திலேயே கண் விழித்துகொண்டாள் !!!! இளங்காலைப் பொழுது
செங்கொண்டைச் சேவல் குரல் கொடுக்க பரிதி கிழக்கில் தென்பாட்டான் !!! 

அடடே அதற்குள்ளாகவே கதிரவன் வேலைக்கு புறப்பட்டு விட்டான் போல் !! இருக்கட்டும் எனக்கு இப்போதுதான் ராத்திரி, கரையாமல் செல் நான் உறங்க செல்கிறேன் என்று காக்கையிடம் கரைந்தவளாய் அமலா உறங்க சென்றால் !!!

- கௌசல்யா சேகர் 

மேலும்

மேலும்...

மேலே