எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்கள் மீது அன்பானவர்கள் உங்களை ஏமாற்ற முற்படுகையில், ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும் கூட, ஏமாந்துதான் போங்களேன்!!! அவர்களின் மகிழ்ச்சிதான் எவ்வளவு பெரிய ஆனந்தமான விஷயம் நமக்கு...

ஹாப்பி ஏப்ரல் ஃபூல்ஸ் டே!!

மேலும்

ஆமாம் நட்பே. இங்கே பல பேரு ஏமாந்து போய்விட்டார்கள். பாவம் 01-Apr-2015 2:43 pm

"அருவி" ஆண்டு மலரில் வெளி வந்திருக்கும் என் கவிதைகள்! :)

மேலும்

"மணல் மீது வாழும் கடல்" பற்றி அருவி ஆண்டு மலரில் வந்துள்ள நூல் அறிமுகம்!

மேலும்

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மார்ச் பதினைந்தாம் தேதி நடந்த என் புத்தகத்தின் அறிமுகவுரையை தொடர்ந்து ஏற்புரை நடத்தும் படம்! :)

மேலும்

http://www.inmmai.com/2015/03/blog-post_18.html

மேலும்

பாராட்டு சோறு போடுமா?

அழ முடியாத
அழ வேண்டிய தருணத்தில்
வீங்கி நிரம்புகிறது
சொற்களை கருத்தரித்த மௌனம்
சில்லரைகளால் நிரம்பிய
உண்டியல் முன் நின்று
பசிக்கு பிச்சையெடுக்கும்
குழந்தையின் கைகளாக மாறியிருந்த நாவை
சுமந்த உடலின் எடை அப்போது
குறைந்திருந்தது
கூண்டில் வாழ பழகிய
ஒற்றை சிங்கம் காட்டில்
புணர தெரியாமல் விழித்ததை போன்ற
அந்த அவமானம்
இதை வடிகட்டி துணியில் முடிந்து
எடுத்து செல்கிற என் காதுபடவேதான்
சொல்கிறார்கள் டீ நன்றாக இருப்பதாக.
"நான் இல்லையே!"
என்று சொல்லியழ ஆளில்லாத
இத்தருணத்தில்தான் என் மனம் பிணமாகவும்
இவ்வுடல் பாடையாகவும் மாறியிருந்தது

குரு

மேலும்

மிக்க நன்றி... நான் கரூர் குமார் குரு இல்லை சார், நான் சென்னையை சேர்ந்தவன்! அன்புடன், குமரகுரு அன்பு 27-Feb-2015 11:53 am
தேயிலையிலிருந்து மனிதனுக்கு உருவகப்படுத்தும் புனைவுகளை மிகவும் ரசித்தேன் ............. அருமை தோழரே............வாழ்த்துகள் 27-Feb-2015 8:26 am
நன்றி சுஜெய் ரகு மற்றும் ராஜன் சார். 26-Feb-2015 1:52 pm
//அழ முடியாத அழ வேண்டிய தருணத்தில் வீங்கி நிரம்புகிறது சொற்களை கருத்தரித்த மௌனம்// //சில்லரைகளால் நிரம்பிய உண்டியல் முன் நின்று பசிக்கு பிச்சையெடுக்கும் குழந்தையின் கைகளாக// அற்புதமான வரிகள் மிகமிக ரசித்தேன் தொடருங்கள் ! 26-Feb-2015 11:37 am

பகிர்ந்த நாளை எப்படி
தூக்கி போட முடியாமல் போகும்
பகிர்ந்தவை எல்லாம் முடுக்கில் ஒளிந்து கொண்டு
தேட வைக்கின்றன
தேடும் நாளில் நிழல்
இருளுக்குள் பதுங்கிய படி
உறுமுகிற நாயாக இருக்கிறது.
நாளொன்றில் 5CM மழை பெய்தாக வேண்டும்
என்றாசை படுகிறவன் எல்லாம் மனிதனா?
பகிர்ந்த உலகம்
நம்மை தூக்கி போட்டு விடுகிற போது
பகிர்ந்த நாளை எப்படி
தூக்கி போட முடியாமல் போகும்

குரு

மேலும்

வீசியெறிப்பட்ட நெகிழி பைக்குள்
மாற்றப்பட்டிருந்தது
கர்ப்ப பையிலிருந்து

குரு

மேலும்

அன்பு நண்பர்களே,
புத்தக கண்காட்சியில் என் புத்தகத்தை சில நண்பர்கள் கேட்டு வாங்கி செல்வது எனக்கு பேருவகை அளிக்கிறது.

இது வரை வாங்காதவர்களும் இனி வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் துளிர்த்து இருக்கிறது,

அனைவருக்கும் மிகுந்த நன்றி.

அகநாழிகை-304 மற்றும் புலம் - 601-602 ஆகிய இடங்களில் என் புத்தகம் கிடைக்கும். :)

அன்புடன்,
குமரகுரு அன்பு

மேலும்

அன்பு நண்பர்களே,

என் புத்தகம் "மணல் மீது வாழும் கடல்" இப்போது அகநாழிகை அங்காடி எண் 304 (மற்றும் 601-602) இல் பத்து சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி,
குமரகுரு அன்பு

மேலும்

வாழ்த்துக்கள். 12-Jan-2015 8:41 pm
கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன் தோழரே .. கருது கூற பின் வருகிறேன் ... 12-Jan-2015 2:58 pm
இன்று அகநாழிகை இணையத்தில் ஆர்டர் செய்து விடுகிறேன் . படித்து விட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன் தோழரே . உங்கள் கவி நடைகள் எனக்கு பிடித்தவை .... தொடருங்கள் . 12-Jan-2015 1:01 pm
மேலும்...

மேலே