எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலகின் ஒட்டுமொத்த
நீதி நூல்களையும்
ஒரே வார்த்தையில்
மொழி பெயர்த்தால்
அதன் பெயர் 
" கொரோனா"....

ஆறறிவு மனிதனுக்கு
ஒரு செல் கூட அற்ற
நுண்ணுயிர் ஒன்று
உபதேசம் செய்கிறது...

மனித இனத்தின்
மீதான இந்த
எச்சரிக்கை மணி
உலக அசரீரியாக
ஒரு சேர ஒலிக்கிறது...

தலைகனத்தின்
உச்சத்தில்
உலகினை ஆட்டிப்படைத்திட்ட
வல்லரசுகளின் உச்சந்தலையில்
இயற்கை கொடுத்த
சம்மட்டி அடியிது...

செவ்வாய் கிரகத்தில்
புகுந்து
வீடு கட்ட திட்டமிட்டவனின்
நுரையீரலில் புகுந்து
கூடு கட்டிக் கொண்டிருக்கிறது
ஒரு சிறு கிருமி....

கடவுள் துகள்
கண்டுபிடித்தவனின்
கண்ணுக்குள்
விரலை விட்டு
ஆட்டிக்கொண்டிருக்கிறது
கண்ணுக்குத் தெரியா
நுண்ணுயிரொன்று...

கிரீடத்தையும் 
பிச்சைப் பாத்திரத்தையும்
தனது நோயென்னும்
துலாக்கோலில்
சமமாக எடைபோடுகிறது 
இந்த ஆச்சரியக் கிருமி..

பணம் பணமென்று
எதைப் பற்றியும்
கவலைப் படாது
ஓடியவனை
பிணம் பிணமாய்
சாலையில் சாய்த்திருக்கிறது
இந்த
(அ) சாதாரண நோய்..

இயற்கைக்கு எதிராக
தறிகெட்டு ஓடிய
மனித வர்க்கத்தின்
சுய நலத்தேரின்
அச்சாணியைப் பிடுங்கி
தீர்ப்பு எழுதிக் கொண்டிருக்கிறது
தீய நோயொன்று....

இன்றும்
அதே வானம்...
அதே சூரியன்...
அதே நிலா...
அதே கடல்...
அதே காற்று...
அதே மலை...
ஆனால் மனிதன்
நேற்று ஆடாத ஆட்டம் போட்டவன்...
இன்று அழுது புலம்புகிறான்...
நாளை...???

இயற்கை மட்டுமே
இங்கு மாறாதது...
இந்த உலகம் இயற்கையினுடையது..
நாமெல்லாம்
தற்காலிக ஒப்பந்தக்காரர்கள்
இங்கு
எதையுமே
பங்கு போடவோ...
பாகம் பிரிக்கவோ...
பங்கம் விளைவிக்கவோ
உரிமையற்றவர்கள்...
இதைப் பின்பற்றாததன்
விளைவு...
அழிந்து கொண்டிருக்கிறோமென்று
அழுது கொண்டிருக்கிறோம்...

விமானங்களற்ற உச்சிவானம்...
கப்பல்களற்ற நடுக்கடல்...
வாகனங்களற்ற சாலை...
புகைமண்டலமற்ற வாயுமண்டலம்...
தொலைவில் கேட்கும்
பறவையின் ஒலி...
காற்றோடு பேசும்
இலைகளின் மொழி..
இத்தனை சோகத்திலும்
அனுபவித்திட
எத்தனையோ இருக்கத்தான் செய்கிறது...

இனி 
இந்த உலகத்தை இயற்கையிடம்
ஒப்படைப்பதைத் தவிர
வேறு வழியில்லை...

இயற்கையே விஞ்ஞானி...
இயற்கையே ஆசான்...
இயற்கையே இறைவன்...

மேலும்

வேறு  நிலாக்கள் 28 பாலா 
பார்வையற்றவனும் ஓவியமும்ஒரு நாள் பரிசுபெற்ற 
ஓவியமொன்று 
பார்வையற்ற ஒருவனைக் காண 
அவனில்லம் தேடி வந்தது 
குனிந்த படி 
ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த 
அவன் 
கதவோரம் நின்றுகொண்டிருந்த 
தன்னை அடையாளம் 
காண முடியாததால் 
தொண்டையை செருமியது ... 
செருமிய ஓவியத்தின் 
குரல் கேட்டு 
விசாரிக்கலானான் ... 
ஓவியம் சொல்லிற்று .. 

வண்ணங்களின் கலவையில் 
உதிரம் பெற்று 
தூரிகையின் ஸ்பரிசத்தால் 
உருவம் பெற்று 
விரல்களின் விளையாடலால் 
உயிர் பெற்று 
கண்களால் மோட்சம் பெற்று 
சாகாவரம் பெற்ற 
சுவர்கப்பொன்னோவியம் என்றது ... 

பார்வையற்றவன் சொன்னான் 
விழியுணர முடியா 
செவிப் பிரதேசத்தின் 
ஒலிப் பிரஜைநான் 
என் ஆலாபனைகள் 
காற்றில் விரல் கோதும் போது 
ஆத்மாவின் 
எல்லாத் துளைகளிலும் 
மயிற்பீலி மதுரமிசைக்கும் 
புவிபுலர 
புல்லாங்குழலில் நான் நுழைந்தால் 
விழி மயிலிரண்டும் 
தானாய் நடனமாடுமென்றான் .... 

உடனே ஓவியமுருகி 
இசையாய் ஓடி 
ஆர்மோனியத்திற்குள் பாய்ந்தது 
வண்ணங்களனைத்தும் 
ஸ்ருதியை தந்திகளின் 
கம்பிகளில் கலந்தது 
செவியிரண்டும் விழிகளாய் 
திறந்திட 
பார்வையற்றவன் ஓவியத்தை 
ருசித்துப் பருகியபடி 
ஆர்மோனியத்தின் தாளக்கட்டைகளை 
தூரிகையாக்கி 
தனதிசையாலொரு 
புதிய ஓவியத்தை 
ஒலிகளால் வரையத்தொடங்கினான்... 
அது ஒளியோவியமாய் 
ஒரு நிலவென மாறி 
ஓடும் நதிநீரினில் 
தனது ஒளியினை கரைத்தது ... 

ஓவியம் பார்வையற்றவனின் 
இசைமேவும் விரல்களைபிடித்து 
நதி நீரில் அமிழ்த்தியது 
அவன் நீரின் சில்லிடலில் 
நிலவோவியத்தின் வண்ணமுணர 
நிலவு பெருமிதத்தின் 
வெட்கத்தினால் 
மேகங்களுக்குள் ஒளிந்தோடிட 
பார்வையற்றவன் ஓவியனானான் 
ஓவியம் இசையாகியது .

மேலும்

போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் கற்பனை புது யுகம் வாழ்வியல் தத்துவம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:25 am
ஓவியமும் பார்வையற்றவனும் முன்ஜென்மத்தில் காதலர்களாக இருந்திருப்பார்களோ..! லம்பாடி அவர்களே நீர்தான் அவர்களின் தூரிகையாகவும் ஆர்மோனியமாகவும் இருந்திருப்பீரோ..! என்னொவொரு வர்ணஜாலம் உங்கள் கவிதையில் ...! 05-Mar-2016 7:37 pm

வேறு நிலா. ...வித்தியாசமான நிலவாக  ஒளிவீசி கவிதை வானத்தில் ஜொலித்திட நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்  நண்பரே.....

மேலும்

அதற்கு லம்பாடி நிலா வேண்டும் 20-Jan-2016 11:04 pm
பாலா.. ! வாங்க வாங்க.. இத்தனை நாளா உங்களை காண இயலவில்லையே. இனி தொடர்ந்து தளத்தில் படைப்புக்கள் தாருங்கள். வாழ்த்துக்கள். 20-Jan-2016 8:14 pm

கையாலாகாத பத்து கோடி மானங்கெட்ட தமிழர்களில் ஒருவன்

உன்னுடைய வாழ்வாதாரம் அழிந்து உன் மக்கள் செத்தாலும் பரவாயில்லை .ஆனால் நீ அணுமின் நிலையம் மூலம் கேரளாவுக்கு மின்சாரம் கொடுக்கணும் . ஏன்னா அவன் இந்தியன் ... ஆனால் அவன் உனக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் தரமாட்டான் ஏன்னா நீ தமிழன் ....

உன்னுடைய சகோதரனின் உழைப்பைக்கொண்டு உனக்கு மின்சாரம் இல்லைஎன்றாலும் கர்நாடகாவுக்கு மின்சாரம் கொடுக்கணும் ஏன்னா அவன் இந்தியன் அதுக்கு மேல் அவன் திராவிடன் ....ஆனால் அவன் உனக்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரமாட்டான் ஏன்னா நீ தமிழன் .....

ஆந்திரா எதிர்த்த நியூட்ரினோ , மீத்தேன் திட்டத்தை நீ செத்தால (...)

மேலும்

முதலில் உங்களிடம் ஒரு கேள்வி இவ்வளவு நாளும் நட்பு லிஸ்டில் இருந்த நான் எப்பொழுது சகோதரி உறவில் சேர்ந்தேன்? சேர்த்துக் கொண்டமைக்கு நன்றி................!!!!!!!!!!!!! கவிதையாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை. கவிதையென்பது அவரவர் மனதிலுள்ள எண்ணங்களை வெளிக்கொணரும் வடிகால் தான். யாருடைய எழுத்துக்களையும் கவிதைகளையும் படித்து யாரும் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அவரவர் மனம் விதிக்கும் கட்டளைப் படி வாழ்வதே உகந்தது. யாருக்காகவும் யாரையும் மாற்றிக் கொள்ள வேண்டிய avasiyamillai. இன்னொருவரின் கவிதைக்காவோ எழுத்துக்காகவோ ஒருவர் தன்னை மாற்றிக் கொள்வாராயின் அது போலியே.... அப்புறம் இன்னொரு விஷயம் நான் இந்த எழுத்து தளத்திலோ இல்லை இணையத்திலோ யாரையும் என் சகோதரன் என்று பெருமை படுத்திக் கொள்ளவில்லை ஏனென்றால் இன்று அண்ணன் தங்கை அக்கா தங்கை என்று பழகி விட்டு வீணான பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை ...... என்னால் கடைசிவரை நல்ல நட்பாகவும் அந்த நட்பு முறையில் உண்மையான நட்புறவையும் பாராட்ட முடியுமென்று நம்புகிறேன்.... ஆல் தி பெஸ்ட் பாலா................ 17-Apr-2015 1:33 pm
இது குறைகூறல் அல்ல தோழனே ! இலாமையின் ஆதங்கம் 11-Apr-2015 10:26 pm
ஆக்ரோஷத்தால் ஆவதென்ன ? .....எனில் கவிதையால் ஆவதென்ன சகோதரி ? ரௌத்ரம் கொள்ளச் சொன்னவனும் ஒரு கவிஞன் தான் . 11-Apr-2015 10:25 pm
என்ன தான் முயன்றாலும் சில விஷயங்களில் உணர்வுகளின் கொந்தளிப்பினை கட்டுப்படுத்த முடியவில்லை ஐயா ! --- மிக்க நன்றி . 11-Apr-2015 10:23 pm

மேலே