எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் தோழமைகளே...
எனக்கு தெரிந்து இதுவரையிலும் கவிதைகளுக்கான போட்டிகளே நடந்தேறி வருகின்ற பட்சத்தில்...

இது சிறுகதைகளுக்கான திறனாய்வு போட்டி, அதிலும் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை மதிப்பிற்குரிய தோழர் திரு.பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளென தன்னுள்ளே மிக பெரிய சிறப்பம்சங்களை பொதிந்து வைத்துக் கொண்டும்கூட எவ்வித மினுக்கலும் இல்லாமல் நிமிரும்.....

"பொள்ளாச்சி அபி-திறனாய்வு போட்டி" நாம் அனைவரும் சிரம் தாழ்த்தி வரவேற்று பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறுகதை திறனாய்வு என்பது அவருக்கு வரும்.. இவருக்கு வரும்.. உனக்கு வரும்.. எனக்கு வராது.. தெரியாது... அனுபவமில்லை என்றெண்ணி ஒதுங்க (...)

மேலும்

குறைந்தபட்சம் ஒரு கதையையாவது திறனாய்வு செய்து எனது பங்களிப்பையும் செய்ய நினைக்கிறேன் ஆவலுடன் ...........! 26-May-2015 10:32 pm
என் பதிவு நிச்சயம் இருக்கும் என முதல் நாள் அறிவிப்பை பார்த்த உடனே முடிவுசெய்துவிட்டேன்.... !!!!! 26-May-2015 3:45 pm
நிச்சயம் முயற்சிக்கலாம்..! 26-May-2015 1:50 pm

கோலம் போட்டு
முடித்த பிறகு...

சிறுது நேரம்
அதையே உற்று பார்த்தவள்..

கோலத்தை கலைத்துவிட்டு
அழுதாளாம்..

--குழந்தை இல்லை...

மேலும்

என்னங்க நீங்க, குழந்தைகளா இல்லை உலகத்தில்.. மனசு தங்க இல்லை.. எவ்ளோ குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள்.. மனமிருந்தால் மார்க்கம் உண்டு... 23-May-2015 12:56 pm
வேதனை...!! 23-May-2015 12:48 pm
மழலை கலைக்கும் கோலமே அழகு... கவிதை வேதனை ... 23-May-2015 12:20 pm

தாய்பாலை மறப்பதற்காக
அன்னையை பிரிந்த
நாள் முதலாய் உன்
போர்வைக்குள்தான்
என் தூக்கம்...

மதிய பொழுதுகளில்
ஏத்தம் தடக்கம்
விளையாடியது..

நீ வாய்பாடு கேட்டு
நான் பாதியிலேயே
விழித்தது..

திருவிழாவிற்கு சென்று
சேரும் முன்பே..
பாதி வழியிலேயே
உன் தோளில் தூங்கியது..
பாட்டுக் கச்சேரியை
பார்க்க சொல்லி
தூங்கிய என்னை
நீ எழுப்பியது...

கொலுசை தொலைத்ததால்
எல்லோருமே திட்டி தீர்க்க
வாங்கிக்கலாம் என்று
என் அழுகையை
நீ அடக்கியதென..

நான் எதையுமே
மறக்கவில்லை...

உன் போர்வையைவிட்டு
வெளியேறிய நாள் மட்டும்
நினைவிலில்லையே என்று
உன்னை அணைத்துக் கொள்ள
தோன்றுகிறது அப்பா...

மேலும்

அப்ப்பப்பா... காட்சிகளாய் விரிகிறது கொலுசு தொலைத்த மகளின் அழுகையை அடக்க அப்பா சொன்ன "வாங்கிக்கலாம்"... உன் போர்வையைவிட்டு வெளியேறிய நாள் மட்டும் நினைவில்லையே..//// அருமைங்க.. 23-May-2015 12:35 am
தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள அற்புதமான உறவை அழகாக கூறுகிறது படைப்பு..வாழ்த்துக்கள் தோழமையே.. 22-May-2015 11:05 pm

பள்ளி சீருடையில்
எடுத்த உறுதிமொழி
பொய்க்கிறது கேளுங்கள்...

பழகிபோன மனிதமற்ற
செயலாய்...

எவ்வித நெருடலுமின்றி...
மீண்டும் உலாவருகிறது..

இன்னொரு உடன்பிறவா
சகோதரியின் அந்தரங்க
உரையாடல்...

மேலும்

அட கடவுளே...!!
நான் "தமிழ் பித்தன்" ஆனது உண்மை தானா...??
இல்லை இது என் மன பிராந்தியா....!!
ராமா நீ வேற இங்க இல்லையே...!!
நான் என்ன செய்வேன்...??
ஏது செய்வேன்...??

மேலும்

நன்றிங்கோ... அக்கா... 09-May-2015 12:07 pm
நல்ல மவ. விளங்கும் வீடு. 09-May-2015 11:48 am
ஹஹஹா.... சரிங்க அக்கா... நான் தான் அவுட்... அப்பா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு.. (ஆனா என்ன பார்ட்டிக்கு தான் அடிக்கடி போயிட்டு வருவாரு.. ) கருத்துகளுக்கு மிக்க நன்றி... 09-May-2015 11:46 am
அண்ணாத்த யா. அவரு அப்டி பன்ன மாடாரே. கெடுத்து உற்றாதம்மா. 09-May-2015 11:38 am

நீங்கள் விரும்பும்
விருப்பமான சேனலை
வைப்பதற்கு
என்னிடம் ரிமோட்
இருப்பதின் அவசியம்
என்ன..??

மேலும்

மண் பயனுற வேண்டும்- கவிதை போட்டி
போட்டி விவரங்கள்
இனிய தோழமைகளே ....

"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .

இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற (...)

மேலும்

வாழ்த்தில் மிகுந்த மகிழ்ச்சி.. நன்றி தோழியே..!! 28-Jan-2015 11:36 pm
வாழ்த்தில் மிகுந்த மகிழ்ச்சி... தோழமைகள் அனைவரின் பங்கேற்ப்பையும் பேராதரவையும் எதிர்பார்க்கிறோம்... நன்றி தோழமையே..!! 28-Jan-2015 11:34 pm
என் தோழிகளின் கன்னி முயற்சியில் கலந்துகொள்வோம் வாருங்கள் .பரிசு அல்ல பெறுமதி ...பங்களிப்பே வெகுமதி . பங்கேற்கும் வெற்றிபெறும் அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் .... அன்புத தோழிகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் 27-Jan-2015 7:33 am
மிக்க மகிழ்ச்சி தோழமைகளே... மிக்க மகிழ்ந்தேன்,.,, அனைவரும் படியுங்கள் பயனுறுங்கள்... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Jan-2015 11:50 pm

நீ தான் எமார்ந்திருக்க கூடாது என்ற
வார்த்தைகளுக்கு முன்பாகவே துளிரிலேயே கிள்ளி எறிந்தேன்
எனது சிறு காதலையும்

தோளின் ஈர்ப்பால் வரும் சிலரின் ஆசை போதைகளை
துரத்திவிட்டேன் இருந்தும்கூட ஆசிட் வீச்சுக்கு பயந்து தான் செல்கிறேன்
அவர்கள் இருக்கும் வீதிகளில்

தந்தையின் பேச்சை தட்டாது கேட்டு வந்தேன்
விரைவிலேயே மணம் முடிப்பார் என்ற அக்காவின்
அனுபவ வாழ்க்கையை வேடிக்கை பார்த்தவர்களுல் ஒருத்தியாய்

பெண்ணுரிமையை பிச்சையாய் போடும் சில வள்ளல்களுக்கு
எனது நன்றிகளற்ற அமைதி மட்டுமே தலைவணங்கி நின்றது
பெண் சுதந்திரம் பேசும் பெண்ணாதிக்கவாதி என்ற
முத்திரையை விரும்பாதவளாய்

பார்வையாலேயே என் (...)

மேலும்

புரிதலில் மகிழ்ச்சி நண்பரே 14-Oct-2014 11:47 pm
வெட்கமாய் இருக்கிறது ! இப்படிப்பட்ட ஈனர்களுக்கு மத்தியில் நானும் ஆனாய் பிறந்ததற்கு ! உங்கள் கோபத்தில் விளைந்த கவி கொன்று குவிக்கட்டும் இந்த ஈனர்களை ! 14-Oct-2014 11:41 pm
நிஜம்..... நன்றி தோழி 07-Oct-2014 7:30 pm
வாசிக்கும் போதே சில ஈனபிறவிகள் என்கண் முன்னும் வந்து நிற்கிறது, பெண்கள் பலருக்கும் நடக்கும் நிலை தான் நீங்கள் தங்கள் கவியில் தெளிவாய் உணர்த்திவிட்டிர்கள் சாட்டையடிதோழி புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி...... 07-Oct-2014 1:40 pm

தகவலை பகிருங்கள் தோழமைகளே
++++++++++++++++++++++++++++++++++

உங்கள் வீட்டில் நடக்கும் விஷேசங்களில்
உணவு மீதமாகிவிட்டால்
1098 -க்கு அழையுங்கள்...
அவர்கள் பசியால் வாடும்
குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பார்கள்.

தகவலை பகிருங்கள் தோழமைகளே அனைவரும் அறியட்டும்....
வீணாவது இந்த தகவல் மட்டுமல்ல
அதிகப்படியான உணவும்தான் மறவாதீர்..!!

இப்படிக்கு
ரெண்டும்- கெட்டவர்கள் சங்கம்

மேலும்

மிக்க நன்றி நண்பரே 14-Oct-2014 11:34 pm
நற்பதிவிட்ட தோழிக்கு நன்றி ! 14-Oct-2014 11:32 pm
வாங்க தோழி... ஒரு கை கொடுங்க... சிறப்பா செஞ்சிடுவோம்.. 04-Sep-2014 6:55 am
அருமையான பதிவு ...இது போன்ற நற்பணிகள் சங்கத்தின் சார்பாக தொடரட்டும்....வாழ்த்துக்கள் கொ.ப.செ.... 27-Aug-2014 4:40 pm

சிதறினால் தானே சேர்க்க முடியும்..
தொலைத்தால் தானே தேட முடியும்..
விதைத்தால் தானே அறுவடை செய்ய முடியும்..
விழுந்தால் தானே எழுந்து நிற்க முடியும்..
கொடுத்தால் தானே கேட்க முடியும்...
அழுதால் தானே சிரிக்க முடியும்...
இழந்தால் தானே பெற முடியும்...

மேலும்

மதிப்பளித்தமைக்கு நன்றி தோழி 08-Aug-2014 4:45 pm
தங்களுக்கு இந்த வரி புரியாமல் போனதற்கு மனம் வருந்துகிறேன் தோழரே அது என் தவறுதான்.. நாம் புரிந்துக் கொள்வதுதானே பொருள்... நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளலாம்... நான் கருத்தில் கொண்டது----> நாம் முதலில் சிரித்துக் கொண்டு பிறக்கவில்லையே... அழுதுக்கொண்டுத்தானே பிறந்தோம்.. அதனால்தான் "...அழுதால்தானே சிரிக்க முடியும்...." என்றுக் கூறி இருக்கிறேன்.. மதிப்பளித்தமைக்கு நன்றி தோழரே 08-Aug-2014 4:45 pm
மதிப்பளித்தமைக்கு நன்றி தோழரே 08-Aug-2014 4:38 pm
உண்மை 08-Aug-2014 4:19 pm
மேலும்...

மேலே