எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அழுகுதான் அஸ்திவாரம்
அழுகுதான் அஸ்திவாரம்

அன்பே - உன்
அழகுதான் காதலின் அஸ்திவாரம்!
என் கவிதைகள் தான்
அதன் மூலதனம்!
==================
என்னை
காதலில் விழவைத்த- உன்
முதல் பார்வைக்கு 'விழா'
எடுக்க போகிறேன் என் இதயத்தில்....
======================
உன் புருவங்கள் நீளத்தில் கூட
நான் பயணம் செய்ய விரும்புகிறேன்
காதல் ரசனையில் - உன்
காது மடல்கள் கூட என்னை
காணிக்கை இட சொல்கிறது கண் மணியே!
===========================
உன் மவுனம் எனக்காக எனும் போது
என் மறு ஜென்மம் உணர்கிறேன் !
உன் இதழில் என் இருப்பிடம் எனும் போது
என் சொர்க்கத்தின் பதிவு சீட்டினை காண்கிறேன்!
========================= (...)

மேலும்

நல்ல கவிதை.. தலைப்பில் எழுத்துப் பிழை இருக்கிறது சகோதரரே.. 18-Jul-2015 9:10 am
சூப்பர் தோழரே..வாழ்த்துகள் 17-Jul-2015 5:15 pm
பதியப்பட்டது 17-Jul-2015 4:43 pm
கவிதைப் பகுதியில் பதிவிடுங்களேன்! 16-Jul-2015 8:21 am

இசை
இசை
அன்பே
காதலின் இசை கருவி
உன் கண்கள் என்றால்
மெல்லிசை!

உன் இதயம் என்றால்
இன்னிசை !

உன் இதழ்கள் என்றால்
என்னுள் கலக்கும்
அமைதியான அலை ஓசை ..............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

புதிய காந்தி
புதிய காந்தி
சுட்டெரிக்கும்
சூரியனை நன் பார்க்கிறேன்!
அதையும் நான் சுகமாக
எடுத்துகொள்கிறேன் ---------சூர்ய(காந்தி).........

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

காதலை பதியவைக்க
காதலை பதியவைக்க
பெண்ணே
உன்னில் காதலை பதியவைக்க
காலம் கருதாமல் என்
கண்கள் சுழன்று கொண்டிருந்தது.........

விழிகளில் வேறு பிம்பம் இல்லை,
பல மொழிகளில் ஒரு வார்த்தை தேடினேன்,
என்
பாதங்கள் கூட வேர்வை சிந்தியது
உன் வரவிற்கு நான் காத்திருந்தபோது.........

நீ எதை நேசிக்கிறாய்
என யோசித்து, யோசித்து
சுவாசித்தேன்
உன்னில் என் காதலை பதியவைக்க...............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

ஒரு மணி துளி
ஒரு மணி துளி
உன் கண்ணில்
நான் கண்ட எதிர்காலம்!
உன் கரம் பற்றும் போது
கிடைத்த நிகழ்காலம்!
நம்மில்
இறந்த காலம் என்பது இல்லை,
அப்படி ஒருவேளை இருக்குமானால்
அது
என் இதயம் தன துடிப்பை
நிறுத்தும் ஒரு 'மணி துளிதான்'........................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

கிளியே
கிளியே
மரத்தடி நிழலில்
நீ எடுக்கும் ஒரு சீட்டில்
என் வாழ்க்கை மாறிவிடுமா கிளியே!

உன் பச்சை நிறம் என்
வாழ்வை
பசுமையாக மாற்றிவிடுமா கிளியே!

கூண்டுக்குள் அடைபட்டு
குறி சொல்கிறாய் நீ!
உன் நிகழ்காலம் கண்ட நான்
என் எதிர்காலம் அறிந்தேன் - ஆம்
சிறைபட்டால் வாழ்க்கை வயிற்றிக்காக
சிறகு விரித்தால்தான் வாழ்க்கை வாழ்வதற்காக........................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை மனிதர்கள்
அதிகாலை தேநீர் ஆனந்தம்,
அது
முடித்து இசை குளியல் ஆனந்தம்,
அமைதி தரும் இறை வழிபாடு,
அதற்கடுத்து
இனிய சாப்பாடு..............

இவை முடித்து வேலைக்கு சென்றான்
அங்குதான் பல வேடிக்கை மனிதர்கள்
வேடிக்கை மனிதர்களோடுதான் - அவன்
வாழ்க்கை வாடிக்கையாகிறது ..............

அவனுக்காக வாழ்வது
காலை உணவு வரை மட்டுமே..........................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

கல்லறையும் கருவறைதான்
கல்லறையும் கருவறைதான்
உன்
நினைவலைகள் என்னை
சிறகடிக்க செய்தன!
உன்னை
பிரிந்த நொடிகள்
என்னை சிலையாக்கிவிட்ட்ன ................

நீ நிசம் என்று நினைத்தபோது
என் காதல் வெற்றிபெற்றது !
நீ மட்டுமே நிசம் என்று நினைக்கும்போது
என் கல்லறையும் கருவறை போல் தோன்றுகிறது ...............

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

பணம்
பணம்
காகிதத்தில் அச்சடிக்கும்
பணம் பேசுகிறது !
கருவறையில் பிறந்த
மனிதன் மௌனமாகிறான் .......

சாதிக்க துடிப்பவனிடம்
சோதிக்க நினைக்கிறது பணம்!
சோதிக்க வேண்டியவனிடம்
தேதி சொல்லாமல் போய் சேர்கிறது பணம்..............

இன்று
மனம் சொல்லும் பாதை மறந்து
பணம் சொல்லும் பாதை செல்கிறது பாழ் மனம்.................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

பச்சை குத்திவிடு
பச்சை குத்திவிடு
அன்பே
உனக்காக நான் எழுதிய
கடிதத்தில் கவிதை வரிகள் இல்லை....

ஆனால்
அதில் நீ
உன் விரல் நுனியால் தடவிப்பார்
உன்னை அறியாமலேயே - உன்
இதழ்கள் உச்சரிக்க தொடங்கிவிடும்!

உச்சரித்த உன் இதழ்களை அதில்
பச்சை குத்தி அதை அப்படியே
திருப்பி அனுப்பிவிடு எனக்கு.......................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

மேலும்

மேலும்...

மேலே