எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணியம் நோக்கி பெண்கள் புனிதயாத்திரை சென்றார்கள்..
வழியில் ஒரு ஆசாமி.. கண்கள் பிதுக்கி.. தலை மயிர் சுருட்டி.. தொப்பை குவித்து.. கறுத்த உதடுகளில் சுருட்டுப் புகைத்து.. 

ஒருவள் சொன்னாள்.. 'இவனிடம் வழி கேட்போமா?'.. 
'முழியே சரியில்லை' என்றாள் கோமதி.. 
'நமக்கு தைரியம் வேண்டும்' என்றாள் சுவாதி..
ஒருவாறாக அவர்கள் அவனை நெருங்கினார்கள்..
சுருட்டு வாசம் மூக்கை குடைந்தது.. 
அறியாமல் தும்மிவிட்டால் பரீதா..
பதிலுக்கு அவனும் முறைத்துக்கொண்டான்..

'நாங்கள் பெண்ணியம் செல்கிறோம், எங்களுக்கு வழி தெரியவேண்டும்' என்கிறாள் ஜெஸ்ஸி..
'பெண்ணியமா? அப்படியென்றால்?' என்கிறான் கரகரத்த குரலில்..

'அது ஒரு முடிவில்லாப் புனித பிரபஞ்சம்.. அதன் வெளிகள் மிகவும் மென்மையானது.. அதில் நாங்கள் பூக்களின் மகரந்தங்களாய் உறங்க முடியும்.. அதன் காற்று எங்கள் சுவாசத்தில் இனிக்கும்.. அதன் அமைதி எங்களை ஆராதித்துக்கொண்டிருக்கிறது..' கோரஸாக பாடினார்கள்..

'ஓ.. அப்படியா??' வயிறு குழுங்க சிரித்தான்..
'அப்படியென்றால் அதற்கு இப்படித்தான் செல்ல வேண்டும்'..

அவன் காட்டிய வழியில் தொடர்ந்தது யாத்திரை..

வழியில் கடவுளைக் கண்டார்கள்.. கடவுள்... அவர் கடவுள்தான்...
'பெண்களே.. கூட்டமாக எங்கே செல்கிறீர்கள்'..
'கடவுளே நாங்கள் உனது படைப்புதானா?'..
'அதில் என்ன சந்தேகம்?' கடவுள் புன்முறுவினார்..
'எங்களை இந்த உலகம் கொடுமைப்படுத்துகிறது.. அடிமையாய் பார்க்கிறது.. 
எங்களுக்கு அங்கு வாழப்பிடிப்பில்லை.. 
சில நேரம் உன்மீதும் எங்களுக்கு கடுங்கோபம் வருகிறது.. 
அதனால் நாங்கள் பெண்ணியத்துக்கு போய்க்கொண்டிருக்கிறோம்'..

'அப்படியா? ஆதற்கு ஏன் இந்த வழியால் செல்கிறீர்கள்?..'
'வரும் வழியில் ஒரு ஆசாமிதான் எங்களுக்கு வழிகாட்டினான்'..
கடவுள் சிரித்தார்.. வயிறு குழுங்க சிரித்தார்..
'அப்படியென்றால் உலகம் உங்களைக் கொடுமைப்படுத்துவது நியாயமே.. பெண்ணியத்துக்கான வழி இதுவல்ல.. நீங்கள் வந்த அதே பாதையால் இன்னும் பலஆயிரம் மைல்கள் சென்றிருக்கவேண்டும்'..

கோமதிக்கு தலையில் அரித்தது..
'என்னை என் வீட்டார் சமயலறையின் இடுக்குகளில் தேடிக்கொண்டிருப்பார்கள் நான் வீடு செல்கிறேன்' என்றாள்..
'சரி வாங்கடி.. எல்லோரும் திரும்பி உலகத்திற்கே போவோம், அங்கு பாரதி நமது விடுதலைக்காக பாடுவான், நாம் குனிந்து கும்மியடிப்போம்'..

அவர்கள் திரும்பினார்கள்.. கடவுள் சிரித்துக்கொண்டே இருந்தார்..

மேலும்

அவள் என்னைப் பார்த்தாள் என்ற ஒரே காரணத்துக்காகவும் காதல் வரும் தெரியுமா?? அது ஒரு அற்புதமான வயது. யாருக்கும் சொல்லாமல் மெளனமாய் காதலிப்பதில் உள்ள இன்பங்கள் எத்தனை சுகம்.. எத்தனை அக்காக்கள்.. எத்தனை டீச்சர்கள்.. ஐந்தில் இருந்து ஆறாம் வகுப்புக்கு மாறியபோது நம்மைவிட்டு பிரிந்த பனிமலர்கள் எத்தனை..
பக்குவமான பின்னரும் பக்குவமில்லாமல் ஒரு காதல் வரும், நாம் தேடுகின்ற தேவதைகள் நமது கண்களுக்கு எட்டவே மாட்டார்கள்.. காய்ந்து கருகிப்போன நாட்களில் அவளுடய தரிசனம் கிடைக்கும்..
காதலைச் சொல்வதற்குள் கண்ட கருமாந்தரங்கள் எல்லாம் வந்து தொலையும்..
மூச்சு முட்டும்.. தொண்டை அடைக்கும்.. நெஞ்சுக்குள் ஹிட்லர் வந்து குடியிருப்பதுபோல் இருக்கும்.. ஒற்றைத்தலையணையில் எத்தனை ஆனந்தக் கண்ணீர் துகள்கள்.. கட்டிலில் கட்டிய கோட்டைகளுக்குத்தான் அளவிருக்குமா?.. இளையராஜாவை முத்தமிடாத குறைகள் தீருமா??
சுக்விந்தர் சிங் போல "உலக அழகி யாரும் உன் அழகில் பாதி இல்லை" என்று மூக்கால் கனைத்துக்கொண்டு அழைந்திருப்போம்..
எல்லாமாகி
நொந்து நூலாகி, அந்து அவலாகி, சோகப்பாடல்களில் மெய் மறந்து, (அப்போதும் அதே இளையராஜாதான்) வாழ்கையே போச்சு என்று குப்புற படுத்து, கடவுளை வஞ்சித்து, தலையணைகளை ஈரமாக்கி, சொல்லமுடியாமல், மெல்லமுடியாமல் சோகமாய் வதைபட்டது எவ்வளவு பேரானந்தம்..
காதல் ஒரு கடல் மச்சான் என்று சொல்லி திரும்பும் போதே ஒரு பாட்டி தாத்தாவுக்கு மூக்கு கண்ணாடி சொருகி விடுகிறார்..
இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒரு தாத்தா எப்போதும் பளிச்சென்ற வெள்ளை ஆடையோடு சதா பழைய காதல் பாடல்களையே பாடிக்கொண்டிருப்பார், பாட்டி இறந்த பின்னும், காடு வா வா என்றழைக்கின்ற வயதில் அவருக்குள் இருப்பது எந்தவகைக்காதல்??.. அவர்தான் குசும்புக்கார தாத்தா..
நமது அம்மாக்களின் காதலை நாம் யாராவது உணர்ந்ததுண்டா??.. நமது அப்பாக்களின் காதல்??.. எத்தனை ஆறுதல்கள் அவர்களுக்குள் அவர்களை இணைத்திருக்க வேண்டும்? ஒரு வாரமாய் சண்டையில் அழுதுகொண்டு ஆக்கிப்போடும் அம்மாக்களினதும், கோபம் கலைக்க துடிக்கும் அப்பாக்களினதும் மன நிலைகளை நாம் உணர்ந்ததுண்டா??..
அம்மாக்களும் அப்பாக்களின் பனிமலர்கள்தானே..
இதைவிட நமக்கு வேறு ஏது காதல் காவியம்..

மேலும்

காதல் புரிந்தால் சுகம்... புரியாதவரை சுமை... 09-Sep-2017 9:20 pm

பெண் சுதந்திரம் என்றால் என்னவென்று பெண்களுக்கு புரியாத வரை பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கப்போவதில்லை.. ஆயிரம் குட்டி ரேவதிகளை கூட்டிவந்து வாய்க்கு வக்கினையா நாக்கப்புடுங்கிறமாறி ஆண்கள் செய்கின்ற தவறை வாய் கிழிய பேசுவதன் மூலம் நாங்கள் சுதந்திரப்பறவைகள், பெண்களின் முன்னேற்றத்துக்காக தங்களை சர்வபரித்தியாகம் செய்து கொண்டவர்கள் போன்ற என்னத்தை ஏற்படுத்தவே இப்படி பேசுகிறார்கள் என்று என்னத்தோண்றுகிறது.. ஆண்-பெண் போட்டியொன்றைத்தான் இவர்கள் பெண் சுதந்திரம் என்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.. //ஆண்கள் செய்கின்ற தவறை போட்டி போட்டுக்கொண்டு செய்வதற்கு பெயர் பெண் சுதந்திரமல்ல அது வேற.. -தனி ஒருவன்// ஒரு சில வக்கிரன்களைத்தான்டி எல்லா ஆண்களும் ஏதோ ஒரு வகையில் தாயுமானவன்தான்..

DON'T TELL ME HOW TO DRESS... பெண் சுதந்திரப் போராட்டங்களில் பரவலாய் பார்க்கூடிய பேனர் இதுதான்.. இந்த நிலையில் பெண்கள் இருப்பது சரியா? தவறா? என்கின்ற விவாத்துக்கு நான் வரவில்லை, எல்லோருக்கும் மதம்,கலாச்சாரம், பன்பாடு, பக்குவம், சட்டம் இருகின்றது என்கின்ற போது, எதற்கெடுத்தாலும் முதலில் "பெண் என்பவள் இப்படித்தான் நடக்கவேண்டும், இப்படித்தான் உடுக்கவேண்டும்" என்று பெண்களை மட்டும் குறிகாட்டி தாக்குவதோடு, கிடைக்கும் கெப்பில் எல்லாம் பெண்களை பக்குவப்படுத்த முனைந்து தனது ஆன்மீக பய பக்தியை காட்டிக்கொள்ள முனைவது என்பதோடு ஆண்கள் நின்றுகொள்வது ஆண்களின் குருகிய ஆணாதிக்க மனநிலையைத்தான் காட்டுகிறது. ஏனென்றால் "பெண் என்று தெறிந்ததும் ஆற்றில் வீசி விடுவோம், தவறி உயிர் பிழைத்துவிட்டால் கல்வியை தரமாட்டோம், பின் இள வயதில் திருமணம்செய்துவைத்து ஏழு எட்டு உருப்படிகளுக்கு தாயாக்கி விடுவோம், தப்பி தவறி படித்துவிட்டால் திருமணத்தின் போது நாம் போடும் முதல் நிபந்தனயே வேலையை விடவேண்டும் என்பதுதான்.." இப்படித்தான் வாழ்திருக்கிறோம்.. வாழ்கிறோம்..

மேலும்

பெண்ணியம் காப்பற்றப் படவேண்டும். பெண்கள் கல்வி தொழில் போன்ற ஆய கலைகள் பல கற்று பெண்மையின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். பெண்ணின் பெருமை அனைத்து தரப்பினரும் போற்றும்படி நம் கலாச்சாரம், கல்வி மூலம் நம் நாட்டுக்கு பயன் அளிக்கக் கூடிய நபர்களாக வளர வேண்டும். வாழ்த்துகள். 15-Oct-2015 10:20 am
எல்லாமே நாசமாப் போச்சு. இனியாவது எண்ணங்கள் மாறட்டும். நல்லவை மலரட்டும். 15-Oct-2015 8:31 am

ஓரு நாள் ராத்திரி நல்ல நிலா. அவள் மூங்கில் போட்டு கட்டிய பழைய பக்கட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தாள். அப்போது மூங்கில் உடைந்து பக்கட்டின் அடிப்பாகம் சட்டென்று விழுந்துவிட்டது. இதை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறாள்...
"இப்படியும் அப்படியும் நான் பழைய பாத்திரதைக் காப்பாற்ற முயற்சித்தேன் திடீரென்று அடிப்பாகம் விழுந்தது.
இனி...
பாத்திரத்தில் தண்ணீரும் இல்லை தண்ணீரில் இனி நிலவும் இல்லை"
உ.து: சுஜாதாவின் "ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து"

மேலும்

தாயின் புலம்பல் இது....? முத்தம் தந்த பிறை முந்தாணி விழுந்தபிறை பொத்தி வளர்த்தபிறை பொல்லாப்பை எதிர்த்தபிறை எத்திப் புரண்டபிறை என்னிடுப்பில் இருந்தபிறை இத்து விழுந்ததும்,ஏன்? என்,குடமும் உடைந்ததும்,ஏன்? 25-May-2015 6:43 am

படித்ததில் பிடித்தது...
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய் (...)

மேலும்

ரொம்ப யோசித்து, ஒற்றைக் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த பாதையில் வண்டியைத் திருப்பிவிட்டேன்.ஐயகோ! வண்டி வரும் பாதையில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள் அனைவரும் வண்டி வராது என்று னியாநித்த பாதைக்கித் தடம் மாறிட, பத்தோடு பதினொன்றாய் அத்தனை குழந்தைகளும் இறந்தன.. யார் தவறு..? நான் மட்டும் யோசிப்பவன் என்று நினைத்துச் செயல்பட்ட நானா? அல்லது நல்லதைத் தான் செய்கிறோம் என்று நினைத்துச் செயல்பட்ட குழந்தைகளா? மற்றவர்களுக்கும் யோசிக்க வரும் மொத்தத்தில் எது எல்லோருக்கும் நல்லது என்று யோசித்துச் செயல்படுவதே சிறப்பன்றோ? 25-May-2015 8:47 am

பகுத்தறிவாளன்...

தமிழ் எழுத்து வடிவங்களில் என்னை வெகுவாக கவர்ந்தவர் சுஜாதா. அதபோல் நவீன விஞ்ஞான அறிவியல் சிந்னைகளின் தேடலில் என்னால்பெரிதும் கவரப்பட்டவர் இயற்பியலாளர் “ஸ்டீபன் ஹோக்கிங்”​ இவருடைய படைப்புகளை விளங்கிங்கிக்கொள்வதே நான் விரும்பும் ஒருவகையான சவாலான பொழுதுபோக்கு. இவருடைய படைபுகளான “ The Brief History of Time”, “Black Holes and Baby Universes”, “The Theory of Everything” போன்ற புத்தகங்கள் தொடர்ச்சியாக நவீன விஞ்ஞானத்தின் தேடலில் ஆர்வமிகுதியைத்தூன்டிக்கொண்டுதான் இருக்கிறது.
பொறுமை இருந்தால்மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்....
இதபோல் பிரபஞ்ஞத்தின் தோற்றம் பெருவெடிப்பையும் தான்டி பிளாங் (...)

மேலும்

“விஞ்ஞானத்தால் உலகின் கடைசிக்கேள்விவரை எப்படி என்பதற்கு விளக்கத்தைக் கூறமுடியும் ஆனால் ஏன் என்பதை விளக்க முடியாது” ஆகவே இதனை விளக்குவதற்கு வேறு வழிமுறை அவசியமாகின்றது.​ ஐன்ஸ்டின் இதனை Cosmic Religious feeling என்கிறார். இது மனிதனுடைய மனநிலையை கடவுளின் பால் ஒருங்கனைத்து வினாக்களுக்கு பூரனமான விடைகளை விளங்கிக்கொள்வது. பகுத்தறுவாளன் என்று இருமாப்போடுசொல்லுபவர்கள் சற்று விஞ்ஞானத்தை பகுத்தறிந்தகொள்ள வேன்டுகறேன்... நல்ல விளக்கம் .. நல்ல பகிர்வு தோழரே .. தொடருங்கள் 20-Jan-2015 3:52 pm

மேலே