எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயிரே.... உறவே..... 💜💓💙


உன்னை நான் தொலைக்கவில்லை
ஆனாலும் தேடுகின்றேன்......🌺🌺🌺

உன்னை விட்டு விலகவில்லை
ஆனாலும் ஏங்குகிறேன்......🌹🌹🌹

உன்னை ஒருபோதும் பிரிந்ததில்லை
ஆனாலும் வாடுகிறேன்......🌷🌷🌷

உன்னை நொடி கூட மறக்கவில்லை
ஆனாலும் நினைக்கிறேன்.....🌸🌸🌸

உன்னை என்னில் புதைத்து
உனக்காகவே உயிர் வாழ்கிறேன்....💐💐💐

மேலும்

உன் உதடுகள் பட்டு உதிர்ந்த திராட்சை 

எச்சில் பட்ட தேநீர் கோப்பை

நீ ஊட்டிவிட்ட ஒரு வாய் சாதம்

கை கழுவியதும் நீட்டிய முந்தானை 

கண்ணீர் துடைத்த கருணை உள்ளம்

எனக்காய் துடிக்கும் இன்னொரு இதயம் 

யாவையும் நீ  செய்தால் சுகம்தான்...

பசி மறக்கும் பால் விழிகள்

கருமை நிறைந்த மேகக் கூந்தல்

முத்துச்சிதரும் முதன்மை புன்னகை

பெயரை சொன்னால் மலரும் பூக்கள் 

 என்ன சொன்னாலும் நீயே மிகைதான்....

மேலும்

உயர்ந்த....... உள்ளம்.....

வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தினத்தன்று பள்ளிவாசலில் பயான் நடந்து கொண்டிருந்தது, ஊரில் புதிதாக கட்டிட வேலை நடக்கும் பள்ளிவாசலுக்கு நன்கொடை திரட்டும் விதமாக சிறப்பு பேச்சாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார் , அவர் அல்லாஹ்வின் பள்ளிக்கு நீங்கள் ஒரு செங்கல் வாங்கும் அளவிற்கு உதவி செய்தால்கூட அல்லாஹ் உங்களுக்கு சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டிவைப்பான், மேலும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதால் அவன் நமக்களிக்கும் நன்மைகளை பற்றியும் அந்த ஆலிம் மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

உரை முடிந்ததும் பள்ளிவாசல் தலைவர் உதவும் நல்ல உள்ளங்கள் எழுந்து உங்கள் பெயரை சொல்லுங்கள் என்றதும், (...)

மேலும்

சம்பவம்

நேற்று வடகரை புதுக்குளத்தில் இரண்டு காளை மாடுகளை குளிப்பாட்டுவதற்காக ஒருவர் கொண்டு சென்றிருக்கிறார்..
அதில் ஒரு மாடு குளிப்பாட்டும்போது காலால் எத்தும் பழக்கம் இருப்பதால் முன்னங்கால் ஒன்றையும் பின்னங்கால் ஒன்றையும் கட்டிவிட்டு குளிப்பாட்டி இருக்கிறார், அது முடிந்ததும் இரண்டாவது மாடை குளிப்பாட்டும்போது அதுவும் முரண்டு பிடித்து தண்ணீரில் நீந்தி கரையை கடந்து அடுத்த இடத்தில் உள்ள காட்டு பூசரைக்குள் சென்றிருக்கிறது....
இவருக்கோ நீச்சல் தெரியாது என்பதால் அந்த மாடை பிடிப்பதற்காக சுற்றி சென்றிருக்கிறார், அதற்குள் மாறு கால்களை கட்டி வைத்திருந்த மாடு அதே ஆழமான தண்ணீர் நிறைந்திருக்கும் கிடங்க (...)

மேலும்

அனுபவமே மிகச் சிறந்த ஆசான்......

கடந்தமுறை நான் மஸ்கட் செல்லும்போது, புதிய அனுபவம் (பாடம்) ஒன்று கிடைத்தது, அந்த நிகழ்வுகளை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.......

அதாவது AIR INDIA EXPRESS விமானத்தில் எனக்கு அதிகாலை 7 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து மஸ்கட்டிற்கு பயணம். ஆதலால் நான் 5:30 மணிக்கு உள்ளே சென்றேன், அப்போது என்னிடம் விசா ( original copy ) ஒரிஜினல் காப்பி கேட்டார்கள், நான் சொன்னேன் அதை மஸ்கட் ஏர்போட்டில் submit செய்துவிட்டார்கள் என்றேன், அப்படியென்றால் ஒரிஜினல் விசா submit செய்த visa submission confirmation letter எங்கே என்றார்கள்...? நான் என்னிடமில்லை என்றேன்....! அப (...)

மேலும்

தன்னுடைய தவறிலிருந்து பாடம் படிப்பவன் அறிவாளி என்றும்.... மற்றவர்களுடைய அனுபவத்தை கேட்டு பாடம் படிப்பவன் புத்திசாலி என்றும்... எங்கோ படித்த ஞாபகம்.... என்னால் சிலபேர் பயனடைந்தாலும் அது எனக்கு போதும். உங்கள் வாழ்த்துக்களும், பாராட்டுக்களுமே எனக்கு நீங்கள் தரும் பரிசு.... மிக்க நன்றி 26-Jul-2015 12:09 pm
பயனுள்ள தகவல் நண்பரே... பகிர்ந்தமைக்கு நன்றிகள்...!! 19-Jul-2015 10:30 pm
வெளி நாடு செல்லும் பலருக்கும் பயன் தரும் அனுபவத் தகவல் . மொழிகள் தெரிந்து வைத்திருப்பது இந்தமாதிரி சமயங்களில் எவ்வளவு பயனுள்ளது என்பதை எல்லோரும் குறிப்பாக இளைஞர்கள் கவனத்தில் வைக்கவேண்டும். வாழ்த்துக்கள் யாசீன் சிறப்பான அனுபவப் பதிவு. வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 19-Jul-2015 9:40 pm

முடிவில்லாத பயணம்.....


இக்கரை வந்த பின்பு அக்கரை பச்சை என்று..... அறிந்தாலும் பயனில்லை.... அயல்தேசம் நமதில்லை....
வெகு சீக்கிரம் வேலை முடிந்தும்..... ஒரு முறையேனும் ஊருக்கு பேசாமல், உறக்கம் வந்ததில்லை..... உறங்கினாலும் இன்பமில்லை.....
பணம் என்ற ஒன்றை தேடி பாசத்தை தொலைத்துவிட்டேன்...... பாசத்தை பங்குபோட்டு பார்சலிலே அனுப்பிவிட்டேன்...
ராத்திரியில் உறக்கம் தொலைத்து...... உள்ளத்தில் உணர்ச்சியை மறைத்து....
ராத்திரி பகல் பாராமால் உழைத்து.....
ராத்திபை அனுப்பிவிட்டேன்.....
கடைக்குட்டியாய் பிறந்த எனக்கு கண்ணீரே வந்ததில்லை.... காரணமே இல்லாமல் கைநீட்டும் காட்டரபியை, கேட்க இங்கே நாதி இல்லை... (...)

மேலும்

அலட்சியம் வேண்டாம்......

நான் அஜ்மானுக்கு வந்து ஒருமாதம் ஆகின்றது. அலாஹ்வின் கிருபையால் நலமாக உள்ளேன்.
என்னுடைய கம்பெனியில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரின் தாயார் இறந்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது......
நண்பர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், அவரின் ஊரோ மிகவும் சிறிய கிராமம் மொத்தமே 30 க்கும் குறைவான வீடுகளே உள்ளனவாம். வீட்டில் அம்மாவைத்தவிர வேறு யாருமில்லை. தாய் மட்டும் தனியாக இருப்பதால், இன்னும் இரண்டுமாதத்தில் ஊருக்கு சென்று கல்யாணம் முடித்து மனைவியை தாய்க்கு துணையாக வைத்துவிட்டு வந்தால்தான், தனக்கு நிம்மதி என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.
இரண்டு நாட்களுக் (...)

மேலும்

முரளி அவர்களுக்கு நன்றி 26-Jul-2015 12:11 pm
நல்ல பயனுள்ள பகிர்வு 19-Jul-2015 8:03 pm

இனிய ரமழானே......

ரமழானே... ரமழானே...
ரஹ்மத்தின் ரமழானே ...
நன்மைகளின் மாதம் நீயே...
நல்லோர்களின் தேட்டம் நீயே...
புனிதமான நோன்பு நோற்றோம்...
புதுமையான உணர்வு பெற்றோம்...
நோய்கள் பல நீ களைந்தாய்...
நோன்பின் மாண்பை புரியவைத்தாய்...
பசித்தாலும் புசிக்கவில்லை...
தாகம் எடுத்தாலும் குடிக்கவில்லை...
சுட்டெரிக்கும் சூரியனும்...
சுள்ளென்று தாக்கினாலும்...
உயிரைக்கூட விட்டுவிடுவோம்...
உயிர் நோன்பை மட்டும் விடமாட்டோம்...
மறுமைநாளில் நீயே சாட்சி...
மாந்தர்களுக்கு நீயே மீட்சி...
இன்றோடு உன்னை பிரிந்தோம்...
இனி என்றுன்னை சந்திப்போம்...
வருடமெல்லாம் நீ வருவாய்...
வள்ளலைப்போல் நன்மை தரு (...)

மேலும்


மேலே