எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பயத்தைத் தொலைத்துவிடுங்கள் நண்பர்களே !
உங்கள் பயணத் தடைகளில் பாதி குறைந்துவிடும் !

மேலும்

mikka nandri natpae ! 02-Feb-2015 11:30 pm
உங்கள் ஆலோசனை மிகவும் பயனுள்ளது , கடுகு சிறிது காரம் பெரிது நன்று முகில் 02-Feb-2015 8:57 am
நன்றி தோழா ! 02-Feb-2015 6:53 am
நன்றி தங்கையே ! 02-Feb-2015 6:53 am

அன்பு நண்பர்களே !

பல்கலைக்கழக தரமதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. நான் பல்கலைக்கழக அளவில் நான்காவது மாணவனாக தேர்ச்சியடைந்துள்ளேன் !

இந்த மகிழ்ச்சியான செய்தியை தங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் !

மேலும்

மிக்க நன்றி தோழா ! 01-Nov-2014 8:47 am
மிக்க நன்றி பிரியரே ! 01-Nov-2014 8:47 am
வாழ்த்துக்கள் தோழரே 01-Nov-2014 3:55 am
வாழ்த்துக்கள் தோழா. 01-Nov-2014 1:07 am

காயத்தைக் காட்டும் கண்ணீரை விட அந்தக் கண்ணீரை மறைக்கும் புன்னகைக்கு வலி அதிகம் !

அனுபவத்தில் கண்டது !

மேலும்

உண்மைதான் தம்பி ! 30-Oct-2014 10:16 pm
மதிப்பும் அதிகம் 29-Oct-2014 10:38 pm

அன்பு நண்பர்களே !

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் !

எனது எண்ணம் வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி அறிந்தேன் !

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது !
நான் தளத்தில் தவழத் தொடங்கிய நாள் முதல் எனக்கு அன்பும் ஆதரவும் ஊக்குவிப்பும் அளித்து நான் தடுமாறும்போது தாங்கி நின்று எனக்கு நடை பழக்கிய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் !


மேலும் நான் எழுத நல்லதொரு தளம் அமைத்ததோடு என் எண்ணத்தைப் பாராட்டி பரிசளித்து ஊக்குவிக்கும் தள நிர்வாகத்திற்கும் எனது நன்றிகளைத் தெறிவித்துக்கொள்கிரேன்

மேலும்

மிக்க நன்றி அக்கா ! தங்களின் ஆசி இந்த தம்பிக்கு என்றும் தேவை ! 29-Oct-2014 7:23 am
சரி தம்பி நன்றி 27-Oct-2014 7:57 pm
தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ! நான் தங்களுக்கு அப்பா ? அத்துனை வயதானவன் அல்ல நான் ! உங்களைவிட சிறியவன் நான் தம்பி என்று அழைத்தால் மகிழ்வேன் ! வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ! 26-Oct-2014 9:09 pm
வாழ்த்துக்கள் அப்பா 26-Oct-2014 4:47 pm

முகநூளில் நண்பர் ஒருவர் பதிவிட்டது என்னை மிகவும் பாதித்தது !
அதை இங்கு தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பி பதிவிடுகிறேன் நண்பர்களே !


தமிழ்நாட்டு தொலைகாட்சிகளின் வக்கிர பத்தி - Kindly Read it.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களும் , சன் டீவியின் நெடுந்தொடர்களையும் நிறுத்தினால் தமிழ்நாடு உருப்படும் .
1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், "உன் குரல்ல இன்னும் ஃபீல் பத் (...)

மேலும்

உண்மைதான் ! நாமாவது அக்கறையோடு இருப்போமே ! 24-Oct-2014 11:08 pm
மிக்க நன்றி நட்பே ! 24-Oct-2014 11:07 pm
நியாயமான சமூக கவலை பெற்றோர்களே ஒத்துழைக்கும் போது மற்றவர்கள் என்ன செய்யமுடியும் ? இவைகளை எப்படித் தடுப்பது ? யாருக்கும் சமூக பிரஞையுமில்லை அக்கறையுமில்லை 24-Oct-2014 8:02 pm
சரியான நேரத்தில் நல்ல தகவல் 24-Oct-2014 7:56 pm

அன்பு நண்பர்களே !
ஒருவரை ஒருவர் அறியாத நாம் இந்த தளத்தில் நண்பர்களாகவும் உடன்பிறபுகளாகவும் ஒரு குடும்பத்தினராக வாழ்ந்து வருகின்றோம் !
இங்கு நம் நட்பை முறிக்கு எதற்கும் நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது !

இன்று தளத்தில் தோழர் செந்தேள் அவர்கள் வருத்தத்துடன் பதிவிட்ட எண்ணம் என்னை பாதித்தது !

நண்பர் அருண்வாலி அவர்கள் பேசிய விதம்
வருத்தம் அளிக்கிறது நண்பர்களே !

நடிகை இரசிப்பதும் இரசிக்காமல் இருப்பதும் அவரவர் சொந்த விருப்பம், அதில் நான் ஒருபோது தலை இடப்போவதில்லை.

ஆனால் நண்பர் அருண்வாலி அவர்களே தாங்கள் பேசி இருக்கும் விதம் அநாகரிகமானது ! அதற்காக நீங்கள் நிச்சயம் நண்பர் செந்தேள் அவர்களிடம (...)

மேலும்

மிக்க நன்றி தோழி ! 22-Oct-2014 9:52 pm
அன்பு தோழா ! மிக்க நன்றி, இந்த அன்பனின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து மன்னிப்புக் கொரியதர்க்காகவும் நன்றி ! தங்களைப் போலத்தான் அவரும் உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன் ! நிச்சயம் அவர் புரிந்துகொள்வார் ! என்னவாகினும் அவரும் நம் நண்பர்தானே ! ஒருபோதும் அவரை நாம் ஒதுக்கிவிடல் ஆகாது, உண்மையில் நான் தங்கள் இருவரின் தீவிர இரசிகன் ! தங்கள் இருவருக்குள்ளும் பிரச்சனையை எழுந்தது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது ! இந்த சிறு சஞ்சலம் தங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்திவிடக்கூடாது ! என்றும் நாம் ஒன்றாய் இருப்போம் நண்பர்களாக ! என்றும் நட்புடன் தங்கள் நண்பன் நான் ... 22-Oct-2014 9:52 pm
மிகவும் சிறப்பான அணுகுமுறை பரிந்துரை வாழ்த்துக்கள் 22-Oct-2014 6:54 pm
நன்றி முகில் அவர்களே.. செந்தேள் மீது எனக்கு விரோதம் கிடையாது.நான் பதிவிட்டது அவருக்கு பிடிக்கவில்லை அதற்கு அவர் பிடிக்கவில்லை என்று கருத்து சொல்லிருக்கலாம் அல்லது கருத்து கூறாமல் சென்றிருக்கலாம் ..அவர் இப்படி செய்வது நியாயம் இல்லை.. இப்பொழுதும் அவர் மீது வெறுப்பு இல்லை .. நான் உணர்ச்சிவசப்பட்டு அப்படி ஒரு விடுகை அனுப்பியது தவறு தான் ஒப்புகொள்கிறேன்.. 22-Oct-2014 6:16 pm

அன்பு நண்பர்களே !

அனைவருக்கும் எனது மனமார்ந்த தீப ஒளித்-திருநாள் நல்வாழ்த்துக்கள் !

ஏனோ தெரியவில்லை தீபஒளி தீப-ஒலியாகி தீபா-வலியாகிவிட்டது !

அன்பு நண்பர்களே இந்த நாள் முழுவதும் அன்பையும் பாசத்தையும் நம் உறவுகளுடனும் நண்பர்களுடனும் இனிப்பும் பலகாரமும் தந்து பகிர்ந்து மகிழ்கிறோம் !

ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் நாம் நம்மோடு வாழும் உறவுகளைமட்டும் மறந்து அவர்களுக்கு சங்கடத்தை மட்டுமே தருகிறோம் !

ஆம் நண்பர்களே !

நம்மோடு கூடவே வாழும் பறவைகளும் விலங்குகளும் இந்த ஒரு நாளில் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றன !

சற்று சிந்தித்துப் பாருங்களேன் !
சில நேரங்களில் ஒற்றை வெடி வெடிக்கும்போது நமக்கே (...)

மேலும்

வாழ்த்துக்களுக்கு நன்றி நட்பே ! தங்களைப போன்ற தள உறவுகளின் அன்பும் ஆதரவுமே இதற்கு காரணம் ! தங்கள் ஆதரவு என்றும் எனக்கு வேண்டும் ! 29-Oct-2014 7:21 am
சிறந்த எண்ணம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ! அழகான,அருமையான ,விழிப்புணர்வுள்ள கருத்து முகில் .... 27-Oct-2014 11:03 am
வாழ்த்துக்களுக்கு நன்றி நட்பே ! தங்களைப போன்ற தள உறவுகளின் அன்பும் ஆதரவுமே இதற்கு காரணம் ! தங்கள் ஆதரவு என்றும் எனக்கு வேண்டும் ! 26-Oct-2014 10:27 am
வாழ்த்துக்களுக்கு நன்றி நட்பே ! தங்களைப போன்ற தள உறவுகளின் அன்பும் ஆதரவுமே இதற்கு காரணம் ! தங்கள் ஆதரவு என்றும் எனக்கு வேண்டும் ! 26-Oct-2014 10:26 am

நண்பர்களே !
புன்னகை ஒரு அழகான மொழி ! படிப்பது மிகவும் கடினம் ! படிக்க முடிந்தாலும் புரிந்துகொள்வது கடினம் !

மேலும்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் முகிலின் வணக்கங்கள் !

நாளை நான் என் நண்பர்களோடு கொடைக்கானல் சுற்றுலா செல்கிறேன். எனவே என்னால் 3 நாட்கள் தளத்திற்கு வர இயலாது.
இந்த 3 நாட்கள் தாங்கள் பதிவிடும் படைப்புகளை என்னால் படிக்க இயலாது. 3 நாட்களுக்கு பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து படிப்பது சற்று கடினமானதே, ஆகவே அன்பு நண்பர்களே இந்த சிறியவன் மீது இறக்கம் கொண்டு இந்த 3 நாட்களில் தாங்கள் பதிவிடும் படைப்புகளின் தலைப்பையோ அல்லது html முகவரியையோ எனக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் !

மேலும்

மிக்க நன்றி நண்பரே ! நான் வீடு திரும்பிவிட்டேன் ! 05-Oct-2014 9:04 pm
அத கூட பண்ணலேன்னா நான் என்ன புரட்சிக் காரன். கவிதை எல்லாம் எழுதறேன். அயகோ. வாழ்த்துக்கள். இந்த சிறியவன் மீது இறக்கம் கொண்டேன்.. பொய் வாருங்கள். 3 நாட்கள் தளத்தை பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன். 03-Oct-2014 8:21 pm
நன்றி பிரியரே ! 03-Oct-2014 8:23 am
என்ஜாய். 02-Oct-2014 11:19 pm

என் அன்பு நண்பர் சந்தோஷ்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல வாழ்த்துக்கள் !

சொற்கோ அவர்களே பிறந்தநாள் விருந்து எப்போ?

மேலும்

பயமா ! அது அவர் அகராதியிலேயே கிடையாது பிரியரே ! எப்படியோ நம்ம 2 பேருக்கும் பிரியாணி ready 01-Oct-2014 8:33 pm
ஜி, திருப்பூர் வர வேண்டிய வேலை இருக்கு (டிரஸ் நிறைய அள்ள). எப்போ வேண்டுமானாலும் வருவேன் முகிலுடல், (செலவு வைப்பானுங்கலேன்னு பயத்தோட) ரெடியா இருங்க. 30-Sep-2014 3:10 pm
திருப்பூர்தானே வந்துட்ட போது ! நீங்க எத்தனதடவ திருப்புனாலும் நாங்க விருந்து வாங்காம திரும்ப மாட்டோம் மன்னா ! 30-Sep-2014 7:06 am
அப்போ சரி . திருப்பூருக்கு வாங்க. பிரபல ஹோட்டல் ஒன்றில் விருந்து வைத்துவிடலாம். ஹா ஹா 30-Sep-2014 7:01 am
மேலும்...

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே