எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்கான மகளிர்தின பூங்கொத்து தயாராய்.....
மகிழ்ச்சியில் ஓடோடிப் பெற்றால் அலைகிறாய் என்பாய்.....
ஒரு சென்டிமீட்டர் அதிகமாய் சிரித்துப்பெற்றால் வழிகிறாய் என்பாய்......
கைகொடுத்து சின்னதாய்அணைத்தாலும் 'அவள் ஒரு மாதிரி' யென ஒரு மாதிரி சொல்வாய்.....
உணர்வை வெளிப்படுத்தாமல் நன்றிமட்டும் சொன்னால் திமிர் என்பாய்......
பூங்கொத்தே வேண்டாம் வாழ்த்துக்கள் போதுமென்றால் தலைக்கணம் என்பாய்....
என்செய
என் சமூகமே......

மேலும்

தந்தை பெரியார்


யாம்......
ஆத்திகனோ....
நாத்திகனோ...
பகுத்தறிவு தந்த
பகலவன் நீ
யாதலால் எமக்கு
தந்தை யானாய்......

தந்தையை மதிக்கும்
தனயர்களுக்குத்தான்
துடிக்கும் - வீண்
விளம்பரத்திற்காய்
வார்த்தை உதிர்க்கும்
வீணர்களுக்கா
உரைக்கும்????

உழுத நிலத்தில்கூட
பயிரிடை களைகளும்
வளரக்கூடும் - களைகள்
தழைத்தோங்கினாலும்
நற்பயிராகக் கூடுமோ????

சிலையகற்ற
எண்ணுவோரே.... - அவர்
சிந்தனை அகற்ற
ஏதுவீரோ....?????


மேலும்

மனிதாபிமா(கண்தா)னம்


மீண்டெழா நெடுந்துயில்
யாருக்கும் உண்டென்ப
நியதியெனில்....
நியதியை நிர்மூலமாக்கி
உறங்கா விழிகள் செய்து
உலகுகொள் அழகு காணல்
மதிகொள் மனிதனழகே.....

மேலும்


மேலே