எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

றிசா - லொஇ


இப்பொழுதெல்லாம் எந்த பெயர்ச்செற்களை பார்த்தாலும் அந்த பெயர்களின் எழுத்துகளினூடே சில மாற்றங்கள் செய்து வித்தியாசமாக எழுதிப்பார்க்க மனம் எத்தனிக்கிறது.

காரணம் ஒரு ஃபேஸ்புக் நண்பர், அவர் பெயர் ‘றிசா’. இஸ்லாமியக்கல்லூரியில் படித்து வந்தமையால் ரிசுவான், ரியாஸ் போன்ற பெயர் கொண்ட நண்பர்கள் உண்டு, ஒரு கணம் கூட அவர்களின் பெயர்களை ‘றிசுவான்’, ‘றியாஸ்’ என்றும் கூட எழுதலாமே என்று நினைத்தது இல்லை. இவ்வாறு எழுதலாமா என்றெல்லாம் தெறியவில்லை ஆனால் ‘றிசா’ என்பது மிகவும் பிடித்திருந்தது, அதில் ஒரு ஈர்ப்பும் இருப்பதாகவே தோன்றுகின்றது. பேஸ்புக் வெரிஃபிகேஷன் தொல்லையால் நண்பரின் பெயர் 'Riza Hassen' என மாறியதில் அவருக்கு இணையாக எனக்கும் வருத்தம் இருந்தது. 

சென்ஐ வந்த பிறகு, சில வெஸ்டர்ன் ஸ்டைல் ஹோட்டல்கள் மற்றும் கடைகள் லோகலைசேஷனுக்காக ஆங்கிலப்பெயர்களின் கூடவே தமிழிழும் அவற்றின் பெயர்களை முகப்பு பேனர்களில் உபயோகப்படுத்தியிருப்பதை காணமுடிந்தது, அதிலும் சிலவற்றின் பெயர்கள் சற்று ஈர்ப்பாக இருக்கும். ‘LOIEE’ எனும் கடைக்கு, ‘லொஇ’ என தமிழில் எழுதியிறுந்தனர். இவற்றையெல்லாம் தினமும் பார்த்து வருவதால் தினமும் நண்பர்களின் பெயர்களையும் அவ்வாறு எதாவது மாற்றம் செய்து எழுதிப்பார்க்க தோன்றுகின்றது.

பள்ளியில் படிக்கும் போது கடிதம் எழுதும் பயிற்சிகளில் “மதிப்பிற்குறிய ஐயா,” என்று எழுத வேண்டாம் “மதிப்பிற்குறிய அய்யா,” என்றே எழுதுமாறு தமிழாசிரியர் தெளிவுபடுத்தியிருந்தார், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெறியவில்லை. இவற்றை நீங்களும் உபயோகித்து பார்க்க போகிறீர்கள் என்றால், பெயர்ச்சொற்களை மற்றும் முயற்சி செய்து பார்க்கவும், மற்ற சொற்களினிடத்தே வேண்டாம். அதாவது வாழ்க்கை, நண்பன் போன்றவற்றை வாழ்க்ஐ, னண்பன் என்றெல்லாம் எழுதி பார்க்க வேண்டாம் அது நாராசமாக இருக்கும்.

மேலும்

பென்சில் ஓவியம் 

மேலும்

நன்றி :) 24-Sep-2015 10:30 am
நன்றி :) 24-Sep-2015 10:30 am
நன்றி சகோ :) 24-Sep-2015 10:29 am
நன்றி :) 24-Sep-2015 10:29 am

சார்சோல் ஓவியம் 

மேலும்

:) 24-Sep-2015 10:31 am
அற்புதங்கள் செய்கின்றன தங்களின் ஓவியங்கள்... வாழ்த்துக்கள் .. 23-Sep-2015 4:50 pm

பென்சில் ஓவியம்

மேலும்

நன்றி :) 28-Sep-2015 10:44 am
நன்றி :) ஓவியங்கள் தான் இவை. மேலும் விவரங்களுக்கு.. முகப்புத்தகத்தில் naga2hands சொடுக்கிபார்க்கவும். 28-Sep-2015 10:43 am
நான் நம்பவில்லை, ஓவியமென்று. நான் நம்புகிறேன். கலைக்கு முற்றுபுள்ளி இல்லைஎன்று. எவ்வளவுதா அறிவியல் முன்னேற்றம் கண்டாலும், உங்களை போன்ற கலைஞர்கள் வீழ்வதில்லை. மிகவும் நன்று . தொடர்க. 27-Sep-2015 10:45 am
ஓவியம் போலவே இல்லை , மிக தத்ரூபமான வரைதல் ,அருமை தோழரே ! 27-Sep-2015 7:29 am

மேலே