எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவும் வரும் .

அன்பிற்குரிய தோழர் / தோழியரே ,

பிரியத்துடன் இணைந்திருந்த இந்தத் தமிழ் தளத்தில் இருந்து நான் பிரிந்து போகும் நேரமும் வந்தது .

இணைந்திருந்த நேரம் இனிமையான கவிதைகள் படைத்த , படித்த,கருத்துக்கள் பரிமாறிய,பாராட்டி மகிழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

இந்தத் தளத்தை அருமையான முறையில் வழி நடத்தி சிறந்த தமிழ்ப் பணி ஆற்றிடும் தோழர் அகன் அவர்களுக்கு என் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும் . தளம் மேலும் மேலும் வளர்ந்தோங்க என் மனமுருகும் பிரார்த்தனைகள் .

நான் உறுப்பினராக இல்லாதபோதும் ஒரு வாசகனாக தளத்தை வலம் வருவேன் (...)

மேலும்

நன்றி வித்யா . பார்ப்போம். 02-Aug-2014 11:12 am
என்ன ஆச்சு சார்.......! எதுவா இருந்தாலும் பரவா இல்ல....... எழுதாம இருக்க வேண்டாம். ப்ளீஸ்....! 01-Aug-2014 11:42 pm
அனைவருக்கும் நன்றி. காலம் ஒரு நாள் மாறும் கவிதைகள் தளத்தில் ஏறும் என்றே நம்பிக்கை கொள்வோம் . எங்கே நடக்கும் , எது நடக்கும் என்பதை இங்கே யாரறிவார் ? மீண்டும் நன்றிகளுடன் . 30-Jul-2014 3:30 pm
பிரிய நினைக்கும் எண்ணத்தை மாற்றி அமையுங்கள் சகோதரரே. இதனைப் படித்து மனம் சங்கடப் படுகிறது. நிறைய படைப்பினை தாங்கள் இத்தளத்திற்கு வழங்கிட வேண்டுகிறேன். தோழி சியாமளா அவர்களின் கருத்தே என் கருத்தும். மீண்டும் சிந்தியுங்கள். முடிவினை மாற்றுவீர்கள் என்கிற எதிர்பார்ப்பினில்... சகோதரி, சாந்தி. 30-Jul-2014 12:17 pm

போட்டி நாள் அறிவித்துவிட்டு பதிவேற்றும் நாள் பிறகு வருவதில் ஒரு அனுகூலம் . மீண்டும் மீண்டும் மெருகேற்றிக் கொள்ளலாம் படைப்பை . ஆனால் அதுவே ஒரு அவஸ்தையும் கூட . மனதிற்குள் எப்போதும் குதியாட்டம் போட்டுக்கொண்டே இருக்கும் . குரங்காட்டியின் செல்லப் பிள்ளை போல !இறக்கிவைத்துவிட்டால் அக்கடா என்று அடுத்த கவிதை எழுதப் போகலாம் !!

மேலும்

கண்களைக் கவர்ந்திழுக்கிற மாதிரி கவர்ச்சிப் படங்கள் கருத்து பகுதியில் அரங்கேறுவது அதிகமாகிக் கொண்டிருக்கிறது .
தமிழ் கவிதைகள் , கதைகள் , கட்டுரைகள் , சிந்திக்க வைக்கின்ற கருத்துக்கள் அரங்கேறும் பகுதியாக இதை வைத்திருக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.அது ஒன்றே நாம் தளத்துக்கு செய்யும் பிரதி பலன் .
சுய கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம் அழிவுப் பாதைக்கு அடி கோலும் . தளத் தோழர்கள் அனைவரும் இந்தக் கருத்தை ஒரு குறை சொல்பவனின் முறையீடாகக் கொள்ளாமல் கரிசனம் கொண்ட தோழனின் கருத்துரையாகக் கொள்க. நன்றி .

மேலும்

இது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம் தான் தோழரே 29-Jul-2014 12:14 pm
இஸ்மாயில் G .... நான் சந்தோஷமா, மகிழ்ச்சியா இருக்க நினைப்பது சுயநலமெனில், நான் சுயனலகாரன்தான். (எழுத்தில் வரும் ஏடாகூட படங்களை நான் காணும்போது, அதாவது எழுத்தை படிக்கும்போது, கவிதை படிக்கிற மாதிரி தெரியலயேன்னு பார்வை ஒன்றை வீசி செல்கிறாள் என் மனைவி. இது தேவையா எனக்கு.) அதனாலதான் நல்ல படமா போடுங்கப்பான்னு சொல்றேன். 29-Jul-2014 10:49 am
பார்ப்பதெல்லாம் பழுதாய் தெரியலகாதே தோழரே . உங்கள் விருப்பம் . நன்றி . 29-Jul-2014 10:39 am
வரவிற்கு நன்றி தோழரே . 29-Jul-2014 10:33 am

தளத்தில் 'தமிழ் படி ' தலைப்பில் எழுத்துக்கள் மற்றும் எண்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. தளத்தில் எழுதுமளவு தமிழ் கற்றவர்களுக்கு உபயோகமாகும் வண்ணம் சீர், அசை மற்றும் கவிதை இலக்கணம் சேர்த்தால் மரபுக் கவிதை எழுதும் ஆர்வம் அதிகமாகுமே ? நம் தளத்தில் இருக்கும் தேர்ந்த மரபுக் கவிஜர்களே இதற்கு உதவலாம் .

மேலும்


மேலே