எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஐந்து பெரிதா ?  ஆறு பெரிதா ?  -  வைரமுத்து 


“சீ மிருகமே!”
என்று மனிதனைத் திட்டாதே

மனிதனே  
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை 
எங்கேனும் தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?

**

எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை
தெரியுமோ?

**

இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை

**

எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை

**

எந்த விலங்கும்
தேவையற்ற
நிலம் திருடுவதில்லை

**

கவனி மனிதனே 
கூட்டு வாழ்க்கை
இன்னும் குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்

**

அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை
உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை

**

மனிதா
இதை மனங்கொள் 
கர்ப்பவாசனை கண்டு கொண்டால்
காளை பசுவைச் சேர்வதில்லை

**

ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை 
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை

**

பூகம்பம்
வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள் 
அடிவயிற்றில் சிறகடிக்கும் பறவைகள் 

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?

**

மரணம் நிஜம்
மரணம்
வாழ்வின் பரிசு 
மாண்டால்
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி 
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்

**

நீ மாண்டால் … 
சிலரை நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்

**

“சீ மிருகமே !”
என்று மனிதனைத் திட்டாதே மனிதனே

**

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் … 
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை ஏசுகிறது

” சீ மனிதனே !”

**

 -கவிஞர் வைரமுத்து

மேலும்

பஞ்ச பாத்திரம் (எ) பஞ்ச பத்திரம்

 துளசி, அருகு, வேம்பு, வன்னி, வில்வம், இந்த ஐந்தும் பஞ்ச பத்திரம் ஆகும்.
இந்த ஐந்தும் மூலிகைகளில் மிகச்சிறந்தவை. தேய்வீகமானவை. பூஜைக்கு
சிறந்தவை. இவைகளை அர்ப்பனித்து தீர்த்தம் விடும் பாத்திரத்திற்கு பஞ்ச
பத்திரம் எனப்பெயர். இதுவே நாளடைவில் பஞ்ச பாத்திரம் என்று
அழைக்கப்படுகிறது.

மேலும்

அயல் நாடு (Ayal Naadu) ஆத்திசூடி

 அயல் நாட்டுக்கு போகாத

டு மெய்க விடுவாயங்க

ந்திய நாட்டுலயே வேல பாரு

சியா இருக்கும்

ண்மையாதான் சொலுறேன்

ற விட்டு போகாத

ப்படா ஊருக்கு வருவேன்னு நெனப்ப

ண்டா வந்தோம்னு நெனப்ப

யோ விடுங்கடானு சொல்லுவ

ப்பாரி வெச்சு அழுவ

லமிட்டு கத்துவ

ஒளவளவுதான் சொல்லிபுட்டேன்

அஃகடானு இங்கயே இரு.



மேலும்

பஞ்ச பாத்திரம்:

பஞ்ச பாத்திரம் என்பது இந்து சமயம் சார்ந்த ஒரு பொருளாகும். இதை கோவில்களிலும் வீடுகளிலும் பூஜையின் பொது பயன்படுத்துவர்.
இதை பஞ்ச பத்ர பாத்திரம் எனவும் அழைப்பர். இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அதாவது , ஐவகை இலைகளை, இப்பதரத்தில் நீரில் இட்டு, அந்நீரை குறிப்பிட்ட ஒரு பாத்திரத்தில் விட்டு, உத்திரிணி என்ற சிறு கரண்டியால் நீரை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்துவதால் அப்பெயர். அந்த ஐந்து இலைகள் பின்வருவனவாகும்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலை
திருமாலுக்கு உகந்த துளசி இலை
அம்மனுக்கு  உகந்த வேப்ப இலை
விநாயகருக்கு உகந்த அருகம்புல்
மற்றும் வன்னி இலை
ஆகியவை.



மேலும்

பாபர் மசூதி (Babri Mosque)

 முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவரின் கட்டளையின் பேரில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்ட ஒரு மசூதி ஆகும். பாபர் மசூதி டிசம்பர் 6, 1992 அன்று இடிக்கப்பட்டது. இந்தியாவின் உத்திர பிரதேசத்திலுள்ள அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை இராமர் பிறந்த இடத்தைக் கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததாகும்.

மேலும்

கோழி பற்றி ஐந்து வசனம்

  1. உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட காட்டுக் கோழியில் (Red Jungle Fowl) இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
  2. கோழி ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும்.
  3. இதில் பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது.
  4. கோழிகள் அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைத் தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன.
  5. கோழிகளின் எச்சம் மண்ணுக்கு ஒரு சிறந்த உரமாகும்.

மேலும்

சோகமான காதல் கவிதை

நீ + நான் = காதல் - பிரிவு = சோகம் 

https://lkarthikeyan.files.wordpress.com/2012/08/25e025ae25a825e025ae25bf25e025ae25a925e025af258825e025ae25b525e025af258125e025ae259525e025ae25b325e025af258d_25e025af25a8.jpg

மேலும்

விரல் இல்லாமலே ஒரு கை அது என்ன?

மேலும்

அவனைப்புரட்டினால் அர்த்தங்கள் ஆயிரம் – அது என்ன?

மேலும்

மொழி அகராதி நான் சொன்னது சரியா? 20-Aug-2015 7:44 am

காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)


சரணங்கள்

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி

மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)

ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)*

மேலும்

ஆஹா மிக அருமை .பாரதியின் ஆரம்ப வரிகளைக் கொண்டு எழுதிய சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 14-Aug-2015 6:59 pm
மேலும்...

மேலே