எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வரும் ஞாயிறன்று பொள்ளாச்சியில் நமது எழுத்து நண்பர்களின் நூல்கள் அறிமுக விழா. வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!

மேலும்

 வரவேற்கிறோம்.!  வாய்ப்புள்ள தோழர்கள் பங்கு பெறலாமே ..! 

அன்புடன் 
பொள்ளாச்சி அபி 

மேலும்

அனைவருக்கும் வணக்கம் .! 

சர்வதேச  மகளிர் தினத்தை முன்னிட்டு, வரும்  சனிக்கிழமையன்று -5.3.2016-மாலை-5 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெறும் இலக்கிய சந்திப்பில் நேரில் வந்து கவிதை வாசிக்க விருப்பம் எனில் தோழர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் 
பொள்ளாச்சி அபி -9894602948-  
இதனைக் கண்ணுறும் தோழர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்தால் மகிழ்ச்சி.! 

மேலும்

வணக்கம் அழைப்புக்கு நன்றி விழா சிறப்புற பாராட்டுக்கள். நல் வாழ்த்துக்கள் 01-Mar-2016 12:13 am

வணக்கம் தோழர்களே..!வரும் ஞாயிறன்று [  14.02.2016 ]-பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக் கடவு-தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்,காதலர் தின சிறப்பு இலக்கிய சந்திப்பு -வாய்ப்புள்ள தோழர்கள் வருக.!

அன்புடன் 
பொள்ளாச்சி அபி  
https://www.facebook.com/photo.php?fbid=1561562454164305&set=a.1388211561499396.1073741827.100009316962520&type=3&theater

மேலும்

இலக்கிய அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி 13-Feb-2016 11:23 pm

இலக்கிய சந்திப்பு தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் சங்கம் -பொள்ளாச்சி 


வாய்ப்புள்ள தோழர்கள் வரலாம்.
கவிதை வாசிக்கலாம்,
கருத்துகளைப் பரிமாறலாம்,.!
-அன்புடன் 
பொள்ளாச்சிி அபி 

மேலும்

கே எ கே உடனான என் உறவு இப்போது கண்களில் காட்சிகளாய் . எளிமையான மனிதர் . ஆழமான கலைஞர் . உயர வேண்டும் , உயர்த்த வேண்டும் எனும் தீராத் தாகம் கொண்டவர் .குழந்தைகளுக்கான பட்டறையில் பங்கேற்று ' மேலே பறக்குதுப் பார் ஏரோப்பிளேன் ' எனும் பாடல் பயிற்சியளித்தவர் . ஒலித்தகடும் உருவாக்கிட பந்தா இன்றி ஒத்துழைப்பு அளித்தவர் .அழகி . பாரதியார் போன்ற படங்களில் இவர் பங்களிப்பு போற்றத்தக்கது . தோழர் ஜெயமூர்த்தியின் குரலில் ராஜ்கிரண் படத்தில் வரும் ஒப்பாரிப் பாடல் இன்னும் காதுகளுக்குள் .... உச்ச குரலில் பாடியவர் சப்தமின்றி மறைந்ததுதான் ஒலியை ஊமையாக்கி விட்டது ... 06-Feb-2016 7:56 am



தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.!   


கடந்த இருமாதங்களாக நம் தோழர்கள் அனைவரையும் தளத்தினுள் ஏறக்குறையக் கட்டிவைத்திருந்த ஒரு வெற்றிகரமான தொடராக “காட்சிப்பிழைகள்..” எனும் கஜல் தொடர் அமைந்திருந்தது என்பதில்,உங்களைப் போலவே நானும் மகிழ்ச்சி கொண்டிருந்தேன்.இந்த மகிழ்ச்சியை புத்துணர்வுடன் துவக்கி வைத்த தம்பி ஜின்னா,நன்றிக்குரியவர். உங்கள் அனைவரின் சார்பிலும், காட்சிப்பிழைகளின் வரிசையில் முத்தாய்ப்பாக நீங்கள்தான் எழுத வேண்டும் என்று ஜின்னாவால் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கும் சேர்த்து எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!கடந்த சில நாட்களாக நம்தோழர்கள் அனைவரும் எழுதிய கஜல் கவிதைகளை நான் அவ்வப்போது வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். கருத்து எதுவும் பதிவு செய்யமுடியவில்லை. காரணம்..பிறகு சொல்கிறேன்.!

தோழர்கள் எழுதிய கவிதையில்..இன்னாரென்று குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.எழுதிய எல்லோரும் அவரவர் நாளில்,அபாரமாக எழுதியிருந்தனர்.வரிகளில் தெறித்த சிந்தனைகள் சிலநேரம் என்னை வாயடைக்க வைத்தது.வரிகளிலேயே என்னை சுழன்று கொண்டிருக்கப் பணித்தது.உவமைகள்,வார்த்தையில் மிளிர்ந்த ஜாலங்கள் வாண வேடிக்கையை நிகழ்த்தியிருந்தன.!.கஜல் தொடரினை பயிற்சிக்களமாக கொள்ள வந்தவர்களெல்லாம் அதில் அற்புதமான முறையில் ஜெயித்துக் கொண்டே போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.அனைவருக்கும் மனமுவந்த எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி..மிக்க மகிழ்ச்சி..!

கூடவே..தோழர் அகன் அவர்களும்,திரு.கவின்சாரலன் அவர்களும் தோழர்கள் எழுதப்போகும் கவிதைகளின் போக்கை செழுமைப்படுத்தும் விதத்தில் தங்கள் கருத்துக்களையும்,உதாரணங்களையும் அழகாக அடுக்கிக் கொண்டுபோனது நல்ல வழிகாட்டுதலாகவும் இருந்தது.அவர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துக்களும்..!


தோழர் டி.என்.முரளி அவர்களுக்கு பிரத்தியேகமாக எனது நன்றியையும் வாழ்த்தையும் சொல்லவேண்டும்.காரணம்..வழக்கமாக “தம்பி உடையான் படைக்கஞ்சான்..”என்பதுதான் பழமொழி.ஆனால்..அண்ணன் இருக்கிறேன் அஞ்சேல்..என்று,தம்பி ஜின்னாவின் பளுவைத் தாங்கிப் பிடித்ததில் புதுமொழியை சொல்ல அல்ல..செய்தே காட்டிவிட்டார். “முரளி சார்..மிக்க நன்றி சார்.!”
அப்புறம்..தோழர்களே..கஜல் கவிதைகளோடான உங்களது ருசிகர அனுபவத்தை எப்போதேனும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.! எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமா..?

நானும் இத்தொடரில் எழுத வேண்டுமே..என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.எந்த இலக்கணத்திற்குள்ளும் சிக்காமல் வந்ததையெல்லாம் எழுதிக் கொண்டிருந்தவன் பேசாமல் அப்படியே இருந்திருக்கலாம்.

ஆனால்,சும்மா இருக்காமல் வலியப் போய் (ஒரு ஆர்வக் கோளாறில்தான் ) ஜின்னாவிடம் வாய்ப்பு கேட்டு மாட்டிக் கொண்டோமா..என்று கூட கேள்வி வந்தது.

சரி..கஜலுக்கான இலக்கணத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் தேடிப்பார்த்ததில் நிறைய நிறைய வரைமுறைகள், வரம்புகள்..என கண்ணைக்கட்டியது. அதுவும் கஜல்கள், அடிப்படையில் உருது மொழியிலிருந்து வந்தது என்பதால் ராபியா என்றும்,ஷேர் என்றும், மத்லா, அப்புறம் மஃதா என்றும் இருந்த வார்த்தைகளை நினைவிலிருத்தவும் சிரமமாக இருந்தது.(இலக்கணத்தில் சிக்கல் இல்லை..வரும் பிப்ரவரி.18.ஆம் தேதியில் 50 வயதை தொட இருக்கிறேன்.ஒருவேளை அதுவும ;காரணமாக இருக்கலாம்) இதனால் கூடவே கவலையும் தொற்றிக் கொண்டது.எல்லாவற்றையும் விட பெரிய கவலை..கஜல் கவிதைகள் பெரும்பாலும் காதலையும்,அதன் பின்னனியில் இயங்கும் ஒரு சொகத்தையும்.. இல்லையில்லை.. ஒரு சோகத்தையும் பாடிக் கொண்டிருப்பதாக இருக்கவேண்டும் என்பது ஒரு விதியாக வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. அடக்கஷ்டமே..இத்தனை வயசுக்கப்புறம்..காதல் என்ற மூடுக்குப் போய்..அதை அடிப்படையா வெச்சு கவிதை..அதுவும் கஜல் கவிதை எழுதணுமாமே..!..ஊம்..இது நடக்குமா..? என்று எனக்கு சந்தேகமும் வந்துவிட்டது.

எனக்கு இருந்த வேலைப்பளுவும், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளுக்கான நெருக்கடியும் தொடர்ந்து சுமையாய் அழுத்த.. ஸ்..ஸ்..அப்பாடா..அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம்..இன்னும் நாள் இருக்கிறதே..! என்று நாட்களை ஓட்டிவிட்டேன். திடுமென்று தம்பி ஜின்னாவின் அழைப்பு..நாளை உங்கள் கவிதையைப் பதிக்க வேண்டும்.நினைவிருக்கிறதா..? என்று.ஷ்..அப்போதே காற்றுப் போய்விட்டது. 

நல்லவேளை..தோழர் அகன் அவர்கள் உடனடியாக தமிழன்பன் அவர்களின் கஜல்பிறைகள் புத்தகத்தை அனுப்பிவைத்து பெரும் உதவி செய்தார். இலக்கணத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கவிதையின் போக்குகளை மட்டும் பார்த்தேன்.லேசாகவொரு நம்பிக்கை வந்தது.மேலும் ஜின்னா ஒருமுறை பேசும்போது,கஜல் கவிதையை நூறு சதவீதம் இலக்கண வரம்புக்குட்பட்டு எழுதவேண்டும் என்ற மரபுகள் எல்லாம் எப்போதோ உடைக்கப்பட்டு விட்டது சார்..” என்று சொன்னது நினைவுக்கு வர.. அப்பாடா.. நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொண்டது போல.. ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

காரணம்..சகல அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை என்ற வாசகம் மிகவும் பிடித்தமானது.என்னைப் பொறுத்த வரை இப்போதைக்கு இலக்கணத்திலிருந்தும்தான்.!

எழுதவேண்டும் என்று துவங்கியதிலிருந்து..மூன்று கவிதைகள்(?.),எழுதி விட்டேன்.எனக்கு அளிக்கப்பட்ட காட்சிப்பிழைகள்.50 என்ற எண்ணின் தொடர்ச்சியாக 51 மற்றும் 52.என வரிசை எண்ணும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.-ஜின்னா மன்னிப்பாராக..-50,51,52-என வரிசையாக கவிதைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தாலும் 52 என்ற எண்ணுள்ள கவிதை மட்டும் கூடுதலாக,கஜல் பாடகர் ஃபரிகா பர்வேஷின் பாடல் பின்னனியில் ஒலிக்க,அந்த ராகத்திற்காக எனது வரிகளை எழுதி,(மொழியாக்கம் அல்ல சொந்த வரிகள்தான்..) -எண்ணம் பகுதியில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன்.

எனது வரிகள் பிடிக்கா விட்டாலும் அந்தப்பாடலை உங்கள் கண்களை மூடிக்கொண்டு ரசிக்கலாம்.அற்புதமான பாடல்.நேரம் இருப்பவர்கள் அதனையும் பார்க்கலாம். -என்னடா..இவ்வளவு நேரமாக எழுதிக் கொண்டிருக்கிறானே..என்று யோசிக்காதீர்கள்.இரவு 12 மணியாக வேண்டும்.இதனை மறுநாள் கணக்கில் சேர்க்கவேண்டுமே.அதுதான் உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

 மேலும்..உங்கள் கவிதைகளுக்கு கருத்து பதியாதற்கு காரணம் அப்புறம் சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா..அதை இப்போது சொல்லிவிடுகிறேனே..பெரிய விஷயமெல்லாம் ஒன்றும் இல்லை..,

எனது இடது கை கடந்த சில நாட்களாக ஒழுங்காக வேலை செய்யமாட்டேன் என்கிறது.குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தூக்கவும் முடிவதில்லை.கணிணியின் முன்பாக அமர்ந்து தட்டச்சு செய்வதற்கு குறிப்பிட்ட ஒரேமாதிரி கையை வைத்திருக்க வேண்டுமல்லவா..? அதுவும் முடிய மாட்டேங்குது. பயங்கர வலி.மூன்று மருத்துவர்களிடம் சென்று பார்த்துவந்து விட்டேன்.அறுவைக்கு நிகரான சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.அதற்காகக் காத்திருக்கிறேன். அதனால்தான், ஆதாமின் அப்துல்லா தொடரும் பாதியில் நிற்கிறது.

அப்புறம் எப்படி இவ்வளவு நேரம் எழுதினாய் என்றுதானே கேட்கிறீர்கள்..? ஒரே கை..ஒரே விரல் டொக்கு டொக்கென்று ரொம்ப நேரமாய்த் தட்டித்தான் எல்லாம் எழுத முடிந்தது.!  அப்படியேனும் எழுத முடிந்ததே.. என்று இப்போதைக்கு மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன்.மீண்டும் பேசுவோம் தோழர்களே..!

உங்களுக்காக காட்சிப் பிழைகள் .52


 e>


மேலும்

மலரும் நினைவலைகள் 18-Mar-2018 1:59 pm
விரைவில் இடது கை வலி இம்சையிலிருந்து மீள வேண்டுமென அன்போடு வாழ்த்துகிறேன் அபி சார். காணொளி இணைப்பும் மிக அருமை. எனக்கு ஒன்று தோன்றுகிறது. இந்த காணொளியும். உங்கள் கஸல் படைப்புகளும் கஸல் தொடரின் ஆரம்பித்திலிருந்திருந்தால்.. தொடரில் எழுதிய ஒரு சில கவிஞர்களின் ஆளுமையில் இன்னும் கூட வசீகரம் கூடியிருக்கலாம். வித்தியாச பாணி மெருகேறியிருக்கலாம் என நினைக்கிறேன். எவ்வாறினும்.. நீங்கள் பூரண நலம் பெற்று தொடர்கதை மீண்டும் உலா வர வேண்டும். என விரும்புகிறேன். 31-Jan-2016 5:31 pm
இசையின் மிதமான குரலில் பாடல் அருமை , உங்கள் முயற்சிக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 30-Jan-2016 10:20 pm
ஆஹா அருமை ஐயா .இன்னும் தங்கள் பதிவுகள் படிக்கவில்லை ...நாளை தான் நிம்மதியாக படிக்க வேண்டும் . ஐயா தாங்கள் உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். தங்கள் நலனுக்காய் இறைவனை பிராத்திக்கின்றேன் . Get we'll soon 30-Jan-2016 9:21 pm

புதுவை மாநில முதல்வரும்,சபாநாயகரும்..!  - வேற  ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லே..இதுவும்  நம்ம இந்தியாதான்  நம்புங்க..!

மேலும்

யார் வேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் எந்த தடையுமின்றி புதுவை முதல்வரை சந்தித்து தங்கள் குறைகளை சொல்லும் எளிய முதல்வர் . அவர் மீண்டும் முதல்வராக வாழ்த்துக்கள் 31-Dec-2015 8:17 am
தமிழகம் இப்படி ஒரு எளிய அற்புத மனிதரை காணப்போவதில்லை என்பதில் வருத்தம் .. ஆனால் இவர் தமிழர் என்பதில் பெருமிதம் . 30-Dec-2015 11:39 am


 "ஆதாமின்  அப்துல்லா.." புதிய நாவல்.!
------------------------------     -------------------------------        ---------------------

வணக்கம் தோழர்களே..!

உங்களுக்கு நேரமிருந்தால்..,உங்களோடு கொஞ்சம் பேசலாமா..?

வெகுநாட்களாக மனதிற்குள் உறுத்திக்கொண்டிருந்த ஒரு மனிதரின் வரலாற்றை,ஒரு நாவல் வடிவத்தில் எழுதிவிடவேண்டும் என்ற உந்துதல் இருந்துகொண்டே இருந்தது. 

முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு இங்கு பதிவு செய்யலாம் என்றுதான் இருந்தேன். ஆனால், அதனை எழுதிமுடிக்கும் வரை நேரம் காலம் குறித்து எந்த நிர்ப்பந்தமும் இல்லையாதலால் எழுதுவது  அவ்வப்போது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. நல்லவேளை..தோழர்.அகன் அவர்களிடமும், தோழர்.ராம்வசந்த் கே.எஸ்.கலை,நிலாசூரியன் உட்பட சிலரிடம் இந்த நாவல் எழுதும் திட்டத்தை சொல்லி வைத்திருந்தேன். அவர்களும் என்னிடம் எப்போது பேசினாலும் ஏன் இன்னும் எழுதவில்லை..? என்பதையே முதல் கேள்வியாக கேட்கத் துவங்கிவிட்டனர்.  இனியும் கால தாமதத்திற்காக சொல்வதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இப்போது என்னிடம் இல்லையென்பதால்…இதனை எழுதிப் பதித்துவிட முடிவு செய்துவிட்டேன்.. ஹஹ்;ஹா.. ஹஹ்ஹா..!

ஒரே ஒரு அத்தியாயத்தையாவது முதலில் பதித்துவிட்டால், தொடர்ந்து ஓரு குறிப்பிட்ட கால இடைவெளியிலாவது அடுத்ததை எழுதிவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் தானாக உருவாகிவிடும் என்பதாலும் ..இதனைத் துவங்கிவிட்டேன் என்றும் சொல்லலாம்..!

. “ஆதலினால் காதலித்தேன்..!” என்ற எனது நாவலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தத் தளத்தில் அப்படித்தான். உருவானது. அதில் உங்கள் கருத்துக்களால்,வளர்ந்துவரும் ஒரு சிறிய எழுத்தாளனாக எனக்கும் அடையாளமும் கிட்டியது. அதற்காக உங்கள் எல்லோருக்கும் இன்னுமொரு முறை நன்றி..!


“இந்தக் கதையெல்லாம் எங்களுக்கெதுக்கப்பா..?” என்று நீங்கள் ஒருவேளை சலித்துக் கொள்ளவும் கூடும்..!  பரவாயில்லை..நான் சங்கடப்படமாட்டேன். ஏனெனில்,எனது எழுத்துக்களை வாசிக்க நீங்கள்தான் உங்கள் நேரத்தையும், கருத்தையும் செலவிடப்போகிறீர்கள்..அதை எப்போது செலவிடுவது..? என நீங்கள்தான் முடிவு செய்யமுடியும்..! 

இப்போது இதனை வாசிக்க நீங்கள் வந்த இந்த சிலநொடிகளில்,நான் உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு சிறிய செய்தி என்னவெனில்,இரண்டாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் துவங்குகின்ற,இந்த நாவல் ஒரு சாமானிய மனிதனின் ஒளிவு மறைவற்ற சரித்திரத்தைத்தான் பேசப்போகிறது.!

எனது வீட்டில் இப்போது இருக்கும் அந்த மனிதர்,சற்றே தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, நாளை உங்கள் வீட்டிலும் இருக்கலாம்..! 

நாவலைக்குறித்த செய்திகள் அவ்வளவுதான் தோழரே..! முதல் அத்தியாயத்துடன்-எனது கவிதைப் பகுதியில்- நாளை முதல் தொடர்ந்து சந்திப்போம்..! 

அப்புறம்..தற்போது தளத்தில் தோழர் பழனிக்குமார் அவர்களின் வாழ்க்கைத் தொடர், தோழர் கவிஜியின் ஊக்கத்தால் நம் தோழர்கள் பலரும் எழுதும் “ தேவதைகள் தூங்குகிறார்கள் “ தொடர்கதை, தோழர். சரவணா எழுதிவரும் நடைவண்டி எனும் தொடர், தோழர் ஜின்னாவின் முயற்சியால் நிறையத் தோழர்கள் பங்கேற்றுவரும் காட்சிப்பிழை எனும் கஜல் தொடர் ஆகியவை வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கின்றன. நீங்களும் அவற்றை ஆர்வமுடன் வாசித்து கருத்துக்களால் அவற்றை செழுமைப்படுத்தும் பணியில் பங்கேற்று வருகிறீர்கள்.!

 அதேபோல்..வாய்ப்பிருக்கும்போது,எனக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நிறை குறைகளைச் சுட்டினால் நானும் மகிழ்வேன்.  

இந்த நாவலின் பெயர் "ஆதாமின்  அப்துல்லா.." 

மீண்டும் பேசுவோம்..!  

அன்புடன் 
பொள்ளாச்சி அபி

மேலும்

"தங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் 2011 முதல் உங்களது தளத்தில் படிக்கவும் ஆவலாய் உள்ளது. அமெரிக்கா தமிழ் நண்பர்களும் உங்கள் படைப்புக்களை ஆவலுடன் படிக்கிறோம். இனியும் படிப்போம். ! " உங்கள் நண்பர்களும் இந்த வாசிப்பில் இணைந்தது மிக்க மகிழ்ச்சி தோழரே..அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவியுங்கள்.! 29-Dec-2015 11:04 am
வாருங்கள்..வாருங்கள் நிலா..! இந்த எழுத்துக்கள் இங்கேயேதான் கிடக்கும்.நேரம் இருக்கும்போது மெதுவாய்ப் படித்துக் கொள்ளலாம்.ஒன்றும் அவசரமில்லை.உங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி பொங்கல் கவிதைப் போட்டி குறித்து வருத்தப் படவேண்டாம்.சூழல்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.உங்கள் கடமைகளை முடித்துவிட்டு வாருங்கள்.தோழர்களின் ஒத்துழைப்போடு அடுத்த வருடம் நல்லபடியாக நடத்துவோம். 29-Dec-2015 11:03 am
வணக்கம். தங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் 2011 முதல் உங்களது தளத்தில் படிக்கவும் ஆவலாய் உள்ளது. அமெரிக்கா தமிழ் நண்பர்களும் உங்கள் படைப்புக்களை ஆவலுடன் படிக்கிறோம். இனியும் படிப்போம். தமிழ் அன்னை ஆசிகள் வேண்டி பாராட்டுகிறோம் நன்றி. 28-Dec-2015 11:26 pm
இன்னும் சில முக்கியமான எனது சொந்த வேளைகளில் இருந்து நான் மீளவில்லை, ஓய்வு என்பது குறைந்து குறைந்து வந்து, மிகவும் குறைந்துவிட்ட காலமாகவே இக்காலம் எனக்கு காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றது, இந்த வருட பொங்கல் கவிதைபோட்டிகூட நடத்த இயலா சூழலே தொடருகின்றது, நிச்சயம் ''ஆதாமின் அப்துல்லா'' வை வாசிக்காமல் விடமாட்டேன். இன்னும் கொஞ்ச காலங்களில் மீண்டும் பழைய நிலாசூரியனாகவே தளத்தில் நிச்சயம் வருவேன், தோழர்களின் படைப்புகளை வாசித்து மகிழ்வேன். வெற்றிகரமாக எழுதுங்கள் அண்ணா, எழுத்துக்களையும் எண்ணங்களையும் செதுக்குகின்ற சிற்பி நீங்கள், காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் பொறுமையாகவே எழுதுங்கள். அன்புடன் நிலாசூரியன். 28-Dec-2015 11:15 am

05.12.2015 -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் -.பொள்ளாச்சி இலக்கிய சந்திப்பு .
தலைமை -கவிஞர் பானுமதி,
வரவேற்பு-பொள்ளாச்சி அபி 
-நூல் அறிமுகம்-  எழுத்தாளர் ஜெயராணி எழுதிய -" ஜாதியற்றவளின் குரல்"  நூல் அறிமுகம்- 
அறிமுக உரை -த.ஜீவலட்சுமி -
ஏற்புரை -ஜெயராணி
நன்றியுரை-சி.சூரியப் பிரகாஷ்.
வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும் வருக...!
-இந்த பதிவைப் பார்க்க விரும்பும் தோழர்கள் அகண்ட திரையிலும்,முழு சப்தத்திலும் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.  
அன்புடன் 
பொள்ளாச்சி அபி 

மேலும்

கிணவை – தமுஎகச வின்.....ஓராண்டு நிறைவு / இரண்டாம் ஆண்டு துவக்க விழா

சிறப்பு கருத்தரங்கம் / கவியரங்கம்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
கிணத்துக்கடவு கிளை – கோவை மாவட்டம்

நாள் : 22-11-2015 ( ஞாயிற்றுக் கிழமை ) நேரம் : காலை 9.30 மணி
இடம் : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - கிணத்துக்கடவு .
( பேரூராட்சி அலுவலகம் அருகில் )

சிறப்பு கருத்தரங்கம்

தலைமை : புலவர் இரா. பானுமதி , தலைவர் – தமுஎகச கிணத்துக்கடவு

முன்னிலை : இர.பாலசுப்ரமணியன் , செயற்குழு - தமுஎகச கிணத்துக்கடவு

வரவேற்புரை : ம. ஜென்னிஸ் , செயலாளர் – தமுஎகச கிணத்துக்கடவு

முற்போக்கு இசை மனக்கும் பாடல்கள்----
தோழர் இ.வெ.வீரமணி - 
              தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர்

தோழர் தமிழ்வாணன் - கிராமிய , நாட்டுப்புற பாடகர்

உரை வீச்சு :

” கவிதைகள் பேசும் பெண்னெழுத்து “

வழக்குரைஞர் மு. ஆனந்தன்
( மாவட்ட செயலாளர் – தமுஎகச , கோவை )

நையாண்டி தர்பார்--
சிரிப்போம் ! சிந்திப்போம் !
தொலைக்காட்சி – ” கலக்க போவதுயாரு “ புகழ்
கோவை மகேஸ்

சிறப்புரை :  --“ காலத்தை வென்ற கவிதைகள் ”

-----கவிஞர் மீ. உமா மகேஸ்வரி --( மாநில செயற்குழு உறுப்பினர் – தமுஎகச )


சிறப்பு கவியரங்கம் :

தலைமை : பொள்ளாச்சி அபி

பங்கேற்கும் கவிஞர்கள் : பானுமதி , கோவிந்தராஜன் , ஜென்னிஸ் , ஆனந்தன் சின்னச்சாமி , கார்த்திகேயன் , புஷ்பராஜ் , மணிமாறன் , வள்ளிநாயகம் , ஹரிதா , ஜெய்சதீஸ் , பிரபாகர் , விஷ்னு , வெள்ளியங்கிரி , சண்முகம் .... மற்றும்
நீங்களும் !

நன்றியுரை : K.M.மணிமாறன் - தமுஎகச கிணத்துக்கடவு

இசைந்து இலக்கியம் பருக ! 
மகிழ்ந்து மனமகிழ்வைப் பெற ! 
பங்கேற்க வாரீர் ! 

மேலும்

தங்கு தடையின்றி தொடரட்டும் தங்கள் இலக்கியப் பணி. வாழ்த்துக்கள். 18-Nov-2015 10:59 am
உங்களின் தொடர் பயணம் என்றும் வெற்றிப் பெற , விழா இனிதே நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் . 18-Nov-2015 7:14 am
நல்ல விஷயம் சார்... பயணியுங்கள்... இப்படி பட்ட நகர்தல் ஒரு எழுத்தாளர்களுக்கு தேவை... ஒரு சமூகத்தை உருவாக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் தேவை... வாழ்த்துக்கள் தொடருங்கள் சார்... 17-Nov-2015 11:27 pm
மேலும்...

மேலே