எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு ஹைக்கூ ஒன்றை  என் எண்ணமாக  சமர்ப்பிக்கிறேன் 


நான் வாயடைத்து போகையில்  
எனக்காக பேசுவது - பேனா

மேலும்

ஒருவர்  எப்படி தன்னை பற்றி  உயர்வாக  தாழ்வாக  நினைத்து  செயல் படுகிறார்கள்  என்பதை கூறுகிறது . அய்யா . தங்களின் கருத்துக்கு நன்றி 

மேலும்

உணவளிப்பவன் நிலையைக் காப்பாற்றுவோம்
நேற்று உணவில்லை
இன்று உடையில்லை  
நாளை .. நாளை  நம் சந்ததியுமில்லை
நமக்கெல்லாம் உயிருமில்லை
இன்றோ நமக்கொரு நாதியில்லை
நம் விவசாயிகளோ தலைநகர வீதியிலே
சிந்தித்துப்பாருங்கள் ...
நமக்கே இந்த கதி என்றால்
நம் சந்ததிகளுக்கு ?
தமிழின உழைக்கும் வர்க்கமே
ஒன்றுபடு நம் குரல் ஓங்கட்டும்
நாம் ஒன்று பட்டால் ஊருக்கெல்லாம் சோறு போடுவோம்....
பல கோடி உயிர்களைக் காப்போம்.
ஆனால், இன்றோ...
நம் விவசாயிகள்  நாளை
நம் பெறப்போகும் நிலையை உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்
உணர்வோம் ....
நேற்று உணவை இழந்தோம்
இன்று உடை இழந்தோம்
நாளை உணர்வை இழக்காமல்  நமக்கான
உறைவிட உலகைக் காத்து
பலகோடி உய்ரிகளை காக்க
ஒன்று பட்டு ஒரே மனதாய் ஓங்கி நிற்போம்
நம் விவசாயம் நம் போராட்டம்
விரைவோம் விளை நிலம் காப்போம் .
               கி. புஷ்பம்

மேலும்


மேலே