எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உயர்வு தரும் வியர்வை
உழைக்க மறந்தவன் ஏழை -ஆனால் 
பிறர் உழைப்பில் வாழ்பவன் கோழை
உழைக்கப் பிறந்தவன் மனிதன் -பிறர் உழைப்பில் 
தழைக்க நினைப்பவன் பித்தன் 
கடின உழைப்பே  வெற்றி -அது 
உச்சத்தில் வைக்கும் போற்றி
உழைத்தால் தொலையும் சனி -உள்ளத்தில் 
விளையும் மகிழ்ச்சிக் கனி
ஓயாமல் உழைக்கும் ஞாயிறு -உழைப்பாளி 
ஓய்வெடுக்கும் நாளோ வாரத்தின் ஞாயிறு
விடுப்பின்றி    உழை - வந்துவிடும்
வருவாய்     திங்களில்
ஊதியம் கிடைத்தால் சிரிப்புத்தான் செவ்வாயில்
சரியாக உழைப்பவனுக்கே -புதன் புத்தி 
உழைப்பவனுக்கே உலகம் -அவன் வாழ்வில்
 வெள்ளி முளைக்கும்
உழைப்பு இருந்தால் படைப்பு
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்  உழைப்பே சிறப்பு 
இயலாமை முயலாமை உழைப்பைச் சுரண்டும் 
உழைக்கும் வரை மனிதன் 
உழைப்பை மதிப்பவன் புனிதன்
உழைப்பின் எச்சில் வியர்வை -என்றும் 
அதுவே போக்கும் சோர்வை -இனி 
உயர்வைத் தரும் வியர்வை
அதுவே உழைப்பவன் போர்வை

மேலும்

எது கவிதை
உள்ளத்து உணர்வே  கவிதை 
வார்த்தை  தொடர்ச்சியே எழுச்சியே  கவிதை
சிந்தை நுழைந்து 
வந்துவிழும் சொல்லே கவிதை 
வாழ்க்கை தத்துவத்தை 
இயற்கை வனப்பை காதல் உணர்வை 
காதில் உரைப்பது  கவிதை
இளமை அழகை 
முதுமை  உயர்வை 
அழுகை சிரிப்பை  
கவலை   அவலம் 
எல்லாம் கலந்து உரைப்பது கவிதை
எண்ணம் கரைவது கவிதை 
வண்ணம்  குழைப்பது கவிதை
விதையில் உறங்கும் விருட்சம் கவிதை
வார்த்தை உடைத்து 
சலசலத்து ஓடும் நீரில்  வீழ்ச்சி கொள்வது கவிதை 
எவரையும் உறங்க விடாது 
கிறங்க வைக்கும் ஒற்றை வார்த்தையும் கவிதை
வார்த்தைகளின்றி அசைவது கவிதை 
இன்பம் தந்தாய் தனிமையும்கவிதை
மொழியில்  விழியில் வழியும்  உணர்வே கவிதை
எழுத்தும் கவிதை 
எழுத்தை கோர்த்து 
நிமிர்ந்து படிப்பதும் கவிதை 
அடித்தும் இடித்தும்  சொல்வது கவிதை
அசையும் சீரும் கவிதையில் சீறும்
கேட்கவே ஆசை  ஊரும்
தூக்கம் விரட்டி 
ஏக்கம்  விளைவிக்கும் கவிதை
வார்த்தைகள் இன்றி அசைவதும் கவிதை
உஷ் என்பதும் கவிதை 
மௌனமாக இருங்கள் 
ஓ ..இதுவும் கவிதை 

மேலும்

                     தமிழ்த் தொண்டன் பாரதி 
தமிழ்த் தொண்டன் பாரதியே காதல் கொண்டான் 
       தமிழ்மீதே! தமிழ் வளர்க்க எளிய சொல்லால் 
தமிழ் கவிதை அவன் தொடுத்தான்! தமிழே வாழ, 
தமிழுக்கு முண்டாசு கட்டியவன்! 
தமிழுக்கே தன் தமிழால் எழுச்சி தந்தான் 
தன்நாடு தன்மக்கள் என்றே  எண்ணி 
தமிழ்நாட்டில் தாலாட்டு  படாதவன் 
தனல்ச்சொல்லால்  தடையுடைத்து அவனே வென்றான்!

நாட்டுக்கு விடுதலையை வேண்டி அன்று 
நாட்டமுடன் பாட்டெழுதி இசைத்தான் பாரீர்!
வீட்டுக்குள் விடுதலையின் உணர்வு தன்னை 
வீரியமாய் பெண்களுக்குள் ஏற்றி வைத்தான் 
நாட்டுக்காய்  கவியெழுதி அன்னியரை 
நாடுவிட்டு நாடுவிட்டு டேய் ஓட்டுதற்கே கொண்டான் நாட்டம்  
பாட்டாலே பாரதியே வேட்டு வைத்தான் 
        பாராள  நினைத்தவன்மேல் உமிழ்ந்து   நின்றான் 



தோட்டா போல் தமிழாலே இயங்க வைத்தான் 
தோல்விகண்டு பாரதியே எழுச்சி கொண்டான் 
காட்டாற்று வெள்ளம்போல் வெள்ளம்போல் புனைந்தான் கவிதை 
கதிரவன்போல் ஆக்கி வைத்தான் நிலவை அன்றே 
சட்டமிட்ட போதிலுமே  திட்டமிட்டு 
      சந்தனமாய் தமிழ்வளர்த்த  மணக்க எங்கும் 
எட்டுதிசை எங்குமவன் புகழே தங்கும் !
       என்றென்றும் அவன் பெருமை உலகம் சொல்லும்

மேலும்

இனியாவது செய்வோம் 
தமிழா தமிழா எழுச்சிகொள் !
     தங்கம் போலத் தமிழ்ப்பாவே 
தமிழன் நாவில் எழுந்திடுவாய்! 
    தள்ளா வயதில் தமிழ்ப் பற்று 
தமிழன் பெற்றே பயனில்லை !
    தமிழ்ப்பால் குடித்தே வளர்ந்திடனும் 
தமிழன் என்றே மொழிந்திடனும் 
   தரணி ஆளப் பறந்திடனும் !
இல்லம் முழுதும் தமிழ்மணக்க 
          இனியத் தமிழைப் படித்திடனும் 
சொல்லும் சொல்லைத் தெளிவாய் நீ 
சொல்லிப் பழகிட கற்றிடணும் 
நல்ல முறையில் ழகரத்தை 
        நாக்கை மடக்கிச் சொல்லிடுவாய் 
செல்லும் இடத்திஇல் தமிழ் பேசு 
       செல்லாக் காசாய் பிறராவார்
எழுதம் தமிழைப் பிழையின்றி 
       எழுதிக் கற்க வேண்டும் நீ 
பொழுதைப் போக்க கணினியிலே 
       பொங்கும் தமிழில் தட்டச்சு 
எழுப்பும் ஒலியால் செய்வாய் நீ 
     எழுதிப் பழகா நிலையினிலே 
எழுத்துப் பிழைகள் வந்திடுமே 
எதுதான் விளையும் ஆங்கிலத்தால் ?

தமிழை தெளிவாக் கற்ப பாய் நீ 
         தரணி ஆளப் புறப்பட்டுநீ 
தமிழில் புலமைப் பெற்றிட்டால் 
       தருமே புலமை பன்மொழியில் 
பூமியில் ஆட்சி தமிழர் மரபால் 
பூத்துக் குலுங்கள் பார்க்காயோ? 
தமிழன் என்றே சொல்லடாநீ 
       தரணி முழுதும் வெல்லடாநீ 

மேலும்

தகரை ஓரங்கட்ட ஊரில் பேச்சு 
ஓய்வே பணியானதால் 
ஓய்வுக்கு ஏங்கிய நாட்களுண்டு! அன்று 
ஓய்ந்திருக்க நேரமில்லை! இனிப்பாய் ஓய்வு !
சாய்வின்றி கொடிமரமாய் முயற்சி சேர்த்து 
சாதிக்கும் துணிவோடு எல்லாம் செய்தேன் 
செய்தசெயல் அத்தனையும் இன்பம் சேர்க்க 
செய்தொழிலில் தோல்வியின்றி வெற்றி கண்டேன் 

பாய்விரித்துப் படுத்தாலும் உழைப்பின் எண்ணம் 
பாராட்டே வேண்டுமென்று இதயம் சொல்லும் 
தொய்வின்றி பணிசெய்து முடித்தபோதும் 
தொடர்பணிகள் பட்டியலாய் நீண்டு நிற்கும் 
நோய்வந்து படுத்ததில்லை, கடமை நேர்மை 
நோக்கமென்று முடிந்ததுவே செயல்கள் நாளும் 
மெய்யாகவே பலபேர்கள் புகழ்ச்சி செய்தார் 
மென்மையாக இடிதுரைப்பே சிலரும் செய்தார்
தோய்ந்த நல்ல இனிப்புபோல நண்பர் கூட்டம் 
தோள்கொடுத்து உதவிவந்த தோழர் நாட்டம் 

வந்ததுபார் அந்தநாளும் மெல்ல மெல்ல 
வடிந்ததுபார் ஞாபகங்கள் சொல்லச் சொல்ல 
தந்தார்கள் எல்லோரும் அனுபவத்தை 
தற்புகழ்ச்சி இன்றியேஎன் பெருமை பேசி 
சாந்தமுடன் பணிநிறைவைப்  பாராட்டியே 
சந்தமுடன் கவிபடைத்து மகிழ்ந்தார் வாழ்த்தி!
நந்தவனப் பூக்கள்போல வீட்டில் கூட்டம் 
நடந்ததுவே முடிந்ததுபார் பனியின் ஓய்வு. 

மேலும்

பள்ளிக் கூடம் எங்கள் கல்விக்கூடம் 
கரும்பலகை போலவரே இருந்தார்!  வெள்ளை
கட்டிச் சுண்ணம் போல உடையே கொண்டார்! 
விரும்புகின்ற பலபேர்கள் கல்வி யின்றி 
விருப்பமில்லா பணிசெய்து வருதல் கண்டார்!
அரும்புகளில் சிலபேர்கள் மாடே மேய்த்து 
அறிவற்ற நிலைதனிலே இருத்தல் பார்த்தார் 
கருத்துகேட்க களமதிலே அவரே நின்றார்!
கண்டதொரு சிறுவனிடம் வினவல் செய்தார்!
வறுமையினை கேட்டவரே சிறுமை கொண்டார்
வளம்செழிக்க, கல்விதர வகுத்தார் திட்டம்! 
மறுவாழ்வு தந்திடவே, உணவு கல்வி 
மறுக்காது வழங்க வைத்தார்! செய்தார் நன்மை!
சிறுவருக்கே ஒவ்வொன்றாய்த் தொடக்கப் பள்ளி 
சிறப்பாகத் தொடங்கி வைத்தார்!  தொடக்கக்கல்வி 
பெறுவதற்கே இருக்கின்ற தடையை நீக்கி, 
பெருமளவில் குழந்தைகளை படிக்கச்சொல்லி, 
நறுமலராம் கல்வியினை நுகரச் செய்தார்!
நற்கல்வி வழங்கிடவே தேர்வுசெய்து, 
வீறுகொண்ட ஆசானை அனுப்பிவைத்தார் 
வீண் செலவு செய்யாத அவரும் கல்வி 
பெருகிடவே செலவு பல செய்தார் காணீர்! 
பெருமளவில் முன்னேற்றம் அன்றே  கண்டார் 
வேறுபட்ட சிந்தனையால்  மாறுபட்டே 
வேழமென அவர் நின்றார் வெற்றி கண்டார்! 

மேலும்

தாத்தாவும் நானும்

மனித ஆயுள்
காற்று வெளியேறி
சுருங்கிப்போனது.

உத்தரவு கேட்காமல்
உள் நுழையும் காற்று
சொல்லிக்கொள்ளாமல் போவதில்
வியப்பொன்றும் இல்லை

தாத்தாக்கள்
மார்கண்டேயர்களா என்ன?

தாதாக்களால்
தன் மகன்களின் முனேற்றம்
அறியப்படுவதே இல்லை

அவைகள்
முயற்சி மொடுக்களாகவே
இருந்துவிடுகிறது

மனிதனின்
ஒவ்வொரு எதிர்பார்ப்பும்
இரண்டாம் தலைமுறையில்தான்
பூத்து குலுங்குகிறது

அப்பாக்கள் எல்லாம்
தாதாக்களாகும்போதுதான்
வாழ்க்கை புரிதலுருகிறது
பேரன்களுக்குதான்
பேரறிவு கிடைக்கிறது .

தாத்தாவும் பாட்டியும்
கதைப்பவர்கள் இல்லை
அறிவை விதைப்பவர்கள்

தாதாக்க (...)

மேலும்

//மனிதனின் ஒவ்வொரு எதிர்பார்ப்பும் இரண்டாம் தலைமுறையில்தான் பூத்து குலுங்குகிறது// உண்மை வரிகள் ! தென்றலாய் ஒரு படைப்பு... வாழ்த்துக்கள் ! 05-Apr-2015 9:56 am
இன்னும் எழுதுங்கள் . வாழ்த்துக்கள் 04-Apr-2015 11:45 am

உன் ஓர விழி பார்வையே கவிதைதான்

மேலும்

ஹைக்கூ

தமிழில் பேசினால் தண்டனை/
தமிழ் பேச்சுப் போட்டியில்/
பேசச் சொல்கிறார்கள்///

பறவையில்லா வானம்
கீழே
துப்பாக்கி சூடு

தண்ணீர் லாரி வந்தது
மோதிக்கொண்டன
காலிக் குடங்கள்

நாய்க்கு செல்லப் பெயர்
மகனை அழைத்தார்
நாயே

இந்திய மரம்
காய்த்துத் தொங்குகிறது
தொட்டில்கள்

மலையானபோது தெரியாத மானம்
சிலையானபோது
தெரிந்தது

வெற்றியில் நண்பன்
என் தோல்வியும்
இனித்தது


மருந்தாய் தங்க பஸ்பம்
போதும் போதும் என்றது
மனம்

ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்

மேலும்


மேலே