எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குரங்கு குட்டி

கெமரா பொருத்தப்பட்ட ரோபோ குட்டி குரங்கை பார்த்து உயிரிழந்த குரங்கு என நினைத்து, குரங்குகள் கண்ணீர் விடும் நெகிழ்ச்சியான காட்சியை சர்வதேச ஊடகம் காணொளியாக பதிவு செய்துள்ளது.

ரோபோ குரங்கு குட்டி இறந்து விட்டது என நினைக்கும் குரங்குகள் அதற்கு உயிர் இருக்கின்றதா என சோதனை செய்து பார்ப்பதும் குரங்கை அங்கும் இங்குமாக பயத்துடன் தூக்கி கொண்டு செல்வதும் காணொளியில் பதிவாகியுள்ளது. பின்னர் குட்டி குரங்கை தடவி பார்த்து, கட்டியணைத்து, குரங்குகள் தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றன.  பின்னர் தனது இன குரங்குகளை ஒன்றை ஒன்று கட்டிக்கொண்டு வருந்துகின்றன.

மேலும்

அன்பின் வெளிப்பாடு..... 23-Mar-2018 6:50 pm

தூய்மையான இந்தியாவை உருவாக்கு வதில் மாணவர்களின் பங்கு

தூய்மை இந்தியா திட்டத்தை மக்கள் இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த திட்டம் நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  

தூய்மை இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஏற்று நாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்துவது, குப்பைகளை அகற்றுவது, சுற்றுப்புற தூய்மையை காப்பது போன்ற பணிகளில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை தனியார் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.

மேலும்

தமிழா தமிழை மறக்கலாமா

மறக்கலாமா நீ
 தமிழா
 உனக்கு இங்கிலீசு நன்றாகக்
கதைக்கத் தெரிந்து
விட்டால் நீ என்ன
வெள்ளைக் காரன் ஆகிவிட முடியுமா..???
அல்லது திராவிடர் தோற்றம் தான்
உன்னை விட்டுப் போய்விடுமா????
வெள்ளையர் கூட நம்மைக் கண்டு விட்டால்
தம் மொழியில் ஹாய் சொல்லி
சிரித்து விட்டு செல்கின்றனர்
உனக்கு என்ன செருக்கா...???
தமிழனைக் கண்டு விட்டால்
எதிரியைக் கண்டது போல்
முகத்தை திருப்பி வைத்துப் போகின்றாயே.....
தமிழனுடன் தமிழில் கதைக்க
உனக்கு என்ன கேவலமா..????
நன்றி கெட்டவர்களே
உமக்கு நம் மொழி இழக்காரமாகிவிட்டதா????
வெள்ளையரைத் தாண்டிச் செல்லும் போது
கதைக்காமல் போகின்றாய் நீயும்
தமிழரைத் தாண்டிச் செல்லும் போது
ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டு
ஒரு வித இழு பட்ட நடையுடன் போகின்றாயே....
உனக்குத்தான் இங்கிலீசு தெரியும்
என்று பெருமை சேர்க்கின்றாயோ ..
உனக்கு நீயே தற்ப்புகழ் சேர்க்கின்றாயோ...
அட அறிவு கெட்டவர்களே
தற்புகழ் தேடுவது நற்ப்புகழ் அல்ல
என்று சொல்லக் கேட்டு நீயும் அறிந்ததுண்டா..???
இதற்கு விளக்கம் நீயும் தெரிந்து கொண்டதுண்டா...?????
இங்கு பிறந்த தமிழ்க் குழந்தைகள் கூட
இனிமையுடன் நம் மொழியைப் பேசும் போது
நீ இங்கு வந்த கொஞ்சக் காலத்திலே
தமிழ் கதைக்கத் தெரியாமல்
விழிக்கின்றாயே நீயும் செருக்குடன் திரிகின்றாயே...
உனத் தாங்கி வளர்த்துவிட்ட
உன் தாய் மொழியை நீதான் மறக்கலாமா..
அட நன்றி கெட்டு நீயும் உந்தன் நாட்டு
தாய்த் தமிழ் மொழியை மறக்கலாமா...????

மேலும்

சில மின் பாதுகாப்பு குறிப்புகள்

* மின் ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர் மூலம் செய்ய வேண்டும்.
* ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற மின் சாதனங்களை மட்டுமே, பயன் படுத்த வேண்டும்.
* மின் பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னும், எடுப்பதற்கு முன்னும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்
* ப்ரிட்ஜ் , கிரைண்டர் போன்றவற்றிற்கு நிலைஇணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ளமின், ’ப்ளக்’குகளை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
* ஈ.எல்.சி.பி.,யை வீடுகளில், மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தினால், மின் கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.
* உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதுபட்ட மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது.
* ‘டிவி’ ஆண்டனாக்களை மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகே கட்டக் கூடாது. ‘டிவி’ ஆண்டனாவின் ஸ்டே ஒயரை மின் கம்பத்தில் கட்டக் கூடாது.
* ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான, ‘எர்த் பைப்’ போடுவதுடன், அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து, பராமரிக்க வேண்டும்.
* சுவிட்சுகள், ’பிளக்’குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
* ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை சோதனை செய்து, தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ள வெண்டும்.
* மின் கம்பத்திற்காக போடப்பட்ட ஸ்டே ஒயரின் மீது அல்லது மின் கம்பத்தில் கயிறு கட்டி துணி காயவைக்கக் கூடாது.
* குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. சுவரின் உள் பகுதியில் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் ஒயர்களுடன் கூடிய பி.வி.சி., பைப்புகள் பதிக்கப்பட்டிருந்தால் அப்பகுதிகளில் ஆணி அடிக்கக் கூடாது.
* மின் இணைப்பிற்கு எக்ஸ்டென்ஷன் கார்டுகள் உபயோகிக்கும் போது, அவைகளில் பழுதுகள் இருக்கக் கூடாது.
* மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக் கூடாது. மின் கம்பங்களை பந்தல்களாக பயன் படுத்தக் கூடாது. அவற்றின் மீது விளம்பரபலகைகளை கட்டக் கூடாது.
* மழைக் காலங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் அருகே செல்லக் கூடாது. அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்லக் கூடாது. எங்கேனும் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தால், உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகே போதுமான இடைவெளி விட்டு கட்டடங்களை கட்ட வேண்டும்.
* டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.
* உயர் மின் அழுத்த கம்பிகளை ஒட்டிச் செல்லும் மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவர்களை அணுக வேண்டும்.
* அவசர நேரங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் வகையில், மின் கருவிகளின் சுவிட்சுகள் இருக்க வேண்டும். உபயோகிக்காத நேரங்களில் சுவிட்சை ஆப் செய்து வைக்க வேண்டும்.
* மின் தீ விபத்துகளுக்கு உரிய தீயணைப்பான்களை மட்டுமே அதற்கு பயன் படுத்த வேண்டும். தண்ணீர் கொண்டு அணைக்கக் கூடாது. உலர்ந்த மணல், கம்பளிப் போர்வை,உலர்ந்த ரசாயனப் பொடி, கார்பன் டை ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம்.
* மின்சாரத்தால் தீவிபத்து நேர்ந்திருந்தால், உடனே மெயின் சுவிட்சை நிறுத்த வேண்டும்.
* எந்த மின் சர்க்யூட்டிலும் பளு ஏற்றக் கூடாது. ஸ்விட்ச் மற்றும் பியூஸ் போன்றவைகளை மாற்றும் போது, சரியான அதே அளவு திறன் கொண்டவைகளையே பொருத்த வேண்டும்.
* இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் இருக்காமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடங்கள், வீடுகள், பஸ்கள், கார், வேன் போன்றவற்றில் தஞ்சமடைய வேண்டும்.
* மேலும், குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகக் கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். அருகில் உரிய இடம் இல்லை எனில், மின் கம்பிகள், மின் கம்பங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
* இடி, மின்னலின் போது, ‘டிவி’, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசியை பயன் படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக் கூடாது.மேலும்

நல்ல பதிவு....வாழ்த்துக்கள் 23-Mar-2018 6:50 pm

கைபேசியின் நன்மைகள் தீமைகள்

நவீன விஞ்ஞான வளர்ச்சியில் ஒன்று செல்போன் என அழைக்கப் படும் கைத்தொலைபேசி ஆகும்.ஒருவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இன்னொரு இடத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகத்தில் எங்கிருந்தாலும் எந் நேரத்திலும் பேச முடியும்.ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இன்று எல்லோரும் கைத்தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.

இதன் மூலம் கதைப்பது மட்டுமல்லாமல் செய்திகள் அனுப்பவும் ஒளிப்படங்கள் எடுக்கவும் அதை இன்னொருவருக்கு அனுப்பவும் பாடல்கள்,செய்திகள் கேட்பதற்கும் விளையாட்டுக்களை விளையாடுவதற்கும் கூடப் பயன் படுத்தலாம்.

அவசர தேவைகளின் போது,உதாரணமாக விபத்துக்கள் ஏற்படும் போது பொலிஸையோ அம்புலன்ஸையோ அழைப்பதற்கு இது முக்கியமாக உதவுகிறது.மற்றும் உறவினர்களதும் முக்கியமானவர்களதும் விலாசங்கள்,தொலைபேசி இலக்கங்கள்,அவர்களது பிறந்த நாள் மற்றும் முக்கியமான நாட்களையும் இலகுவாக இதில் பதிவு செய்து வைக்கலாம்.

இவற்றை விட சமூக விரோத செயல்கள் நடைபெறும் போது அவற்றைக் கைத் தொலைபேசியில் பதிவு பண்ணி பொலிஸில் ஒப்படைப்பதன் மூலம் குற்றச் செயல்களைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தியாவில் கைத்தொலைபேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 70 கோடி.ஆனால் தங்களுக்கென்று தனிக் கழிவறைகளை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 36 கோடியே 60 லட்சம்.

இவ்வாறான நன்மைகள் இருந்தாலும் கைத்தொலைபேசியால் தீமைகளும் ஏற்படுகின்றன. அதிகமாகக் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களுக்கு  அதிலிருந்து வரும் கதிரியக்கத்தால் (electronic waves) மூளை சம்பந்தமான நோய்கள், மூளைப் புற்று நோய், காது கேட்டலில் பிரச்சினைகள்,உறக்கம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.

வாகனம் ஓட்டும் போது பலர் கைத்தொலைபேசியில் பேசிய வணணம் செல்வதால் அதிகமான விபத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்படுகின்றன.இளைஞர்களும் யுவதிகளும் இதனை அதிகளவில் பாவிப்பதால் அவர்கள் கைத்தொலைபேசி இல்லாமல் வாழமுடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப் படுகிறார்கள்.

எனது கருத்தில் கைத்தொலைபேசி இன்றய வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.ஆனால் ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் அதிகளவில் கைத்தொலைபேசிகளைப் பாவிப்பதால் பல தீய விளைவுகளையும் எதிர் கொள்ள வேண்டி வரும்.

அவற்றில் இருந்து நீங்கள் கைத்தொலைபேசியின் நன்மை தீமைகளை விளங்கிக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

மேலும்

சுஜாதா வெண்பாக்கள்

லஸ் கார்னர் பிளாட்ஃபாரக் கடைல பழைய கணையாழி இஷ்யூ ஒண்ணு பார்த்தேன்.  சுஜாதா அதுல ஒரு வெண்பா எழுதி இருக்கார்.
விண் நெடுகப் பரவி, பாரிஸ் வனிதையர் போல்  கண்ணடிக்கும் தாரகை யெல்லாம் எண்ணி வைத்த  முட்டாள் ஒருவர் இருக்கார்; அவர் நமக்கு  எட்டாத கடவுளப்பா!
சங்க கால, தங்க காலத்துக்காரங்கதான் வெண்பா, என்பா, உன்பாவெல்லாம் எழுதணுமா என்ன ? இப்படி லேசான ஹ்யூமரை சுருக்கமாக வெளிப்படுத்த வெண்பா ஸ்டைல் ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு பட்டுது.  சின்னதா நானும் ஒண்ணு ட்ரை பண்ணிப் பார்த்தேன்.  (இலக்கணமெல்லாம் பார்க்காதீங்க

மசாலா தோசையென்றும் மாம்பழத்து ஜூஸ் என்றும் குஷாலாயிருக்குமென்று குல்ஃபியும் — மஜாவா  ஸாட்டர்டே சாயங்காலம் சக்கைப்போடு போட்டதனால்  ‘வாட்டரா’கப் போச்சே பணம்!

மேலும்

நான் கண்ட சாலை விபத்து

வேலை விஷயமாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ரவுண்டபவுட்டில் (நம்மூர் ரவுண்டானா) யூ டர்ன் அடிக்கக் காத்திருக்கிறேன்.. எனது வண்டியின் பின்னாலிருந்து டயர் அதிக பட்ச சத்தத்துடன் ரோட்டில் உராயும் சத்தம் கேட்கிறது. என்ன நடக்கிறது என திரும்பிப் பார்த்தால் ஒரு லேண்ட்க்ரூசர் ( டொயோட்டா) வண்டி முழுக்கட்டுப்பாட்டையும் இழந்து பக்கவாட்டில் நான்கு சக்கரங்கள் தேய அதிக பட்ச வேகத்தில் வந்து ரண்டபௌட்டின் கர்பில் மோதி தலைகீழாய் கவிழ்ந்து ரவுண்டானாவில் வைத்திருந்த கைகாட்டி மரத்தை கீழே சாய்த்து, அதன் விசையில் அப்படியே காற்றில் பறந்து, பறக்கும்போதே நேராகி, மீண்டும் தலைகீழாகி அதிக பட்ச சப்தத்துடன் தரையில் தலைகீழாய் மோதியது.

உள்ளே எத்தனைபேர் இருந்தனரோ.. நான் எனது காருக்குள்ளேயே அதிகபட்ச படபடப்புடன் ஹசார்டு லைட் அல்லது பார்க்கிங் லைட் எனப்படும் விளக்கை இட்டுவிட்டு ஒரு நிமிடம் கிட்டத்தட்ட என்ன செய்வதெனத் தெரியாமல் அமர்ந்திருந்தேன்.. அதற்குள் மூன்று, நான்கு வாகனங்கள் வந்து அவர்களுக்கு உதவ ஆரம்பித்து விட்டனர்.

அந்த அதிர்ச்சி வீடு திரும்பும் வரையிலும் விலகவேயில்லை.

மத்திய கிழக்கில் இதுபோன்ற விபத்துகள் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு சாலையில் தினமும் நடந்துகொண்டுதானிருக்கிறது. இருப்பினும் இதுபோன்ற விபத்துகள் பற்றிய செய்திகளை போக்குவரத்து துறை ஒவ்வொரு சாலை நிறுத்தங்களிலும், வணிக வளாகங்களிலும், படங்களாகவும், வீடியோக்களாகவும் பொதுமக்களுக்கு காட்டினாலும் திருந்தியபாடில்லை.

நான் இந்தவிபத்திலிருந்து தப்பித்தது ஒரு அதிசய நிகழ்வு. அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஓடிவரும்போது அருகில் இருந்த சாலையில் எனது வாகனம் இருந்தது. ( அது ஒரு இருவழிப்பாதை) அதிர்ஷ்டவசமாக மட்டுமே எனது வாகனத்தின்மீது மோதவில்லை. மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்கவும் விரும்பவில்லை. எனது கண்முன்னாலேயே எப்படிப்போய் உருண்டது? எவ்வளவு விசையுடன் அது சென்றது என்பதெல்லாம் நேரிலேயே கண்டிருந்ததால் யோசிக்க விரும்பவில்லை.

நரி இடம்போனால் என்ன வலம்போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காத வரை சரிதான்....இல்லையா?

மேலும்

சுதந்திரத்திற்குப் பின் இந்தியா

சாலை

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை விட சுதந்திரம் அடைந்த பிறகே நம் நாட்டில் சாலை வசதி பல மடங்கு அதிகரித்தது.

சுதந்திரத்திற்கு முன் வெறும் 36 ஆயிரம் கிலோ மீட்டர் நீள சாலைகள் மட்டுமே இருந்த இந்தியாவில், இப்போது 30 லட்சம் கி.மீ. நீளத்துக்கு சாலைகள் இருக்கின்றன! அதாவது, சுதந்திரத்துக்குப் பிறகு சாலை வசதிகள் மட்டும் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

ஏழாவது இடம்


நம்நாடு சுதந்திரம் பெற்றபோது நாட்டின் மொத்த ரயில்வே இருப்புப்பாதையின் நீளம் 53 ஆயிரம் கிலோ மீட்டர். சுதந்திரமடைந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 63 ஆயிரத்து 140 கிலோ மீட்டர் நீளம்.

அதாவது, சுதந்திரம் அடைந்த பிறகு நம் நாட்டில் உருவாக்கப்பட்ட இருப்புப் பாதைகளின் மொத்த நீளம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் மட்டுமே. என்றாலும், உலகிலேயே நீண்ட ரயில்வே நெட்வொர்க் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!

விமான நிலையங்கள்

சுதந்திரத்துக்குப் பின் கொல்கத்தா, மும்பை, டில்லி, சென்னை விமான நிலையங்கள் மட்டுமே சர்வதேச விமான நிலையங்களாக இருந்தன. ஆனால், இப்போது நிலமை மாறிவிட்டது.

20 சர்வதேச விமான நிலையங்கள் இந்தியாவில் இருக்கின்றன. தென்னிந்தியாவில் மட்டும் பெங்களுரூ, சென்னை, ஹைதராபாத், கொச்சின், திருவனந்தபுரம் ஆகியவை சர்வதேச விமான நிலையங்களாக உள்ளன. திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களும் இந்த பட்டியலில் இடம் பெற உள்ளன.

அதேநேரம், இந்தியாவிலுள்ள உள்நாட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை மட்டும் 123. இவற்றில் விமானப் படை தளங்களும் அடங்கும்.

துறைமுகம்

இந்தியாவின் அரபிக்கடலில் குஜராத் மாநிலத்திலிருந்து, கிழக்கே வங்காள விரிகுடாவில் மேற்கு வங்கம் வரை இந்திய கடல் பரப்பு விரிந்துள்ளது.

கடல் பரப்பின் மொத்த நீளம் 7 ஆயிரத்து 517 கி.மீ. கடல் பரப்பளவுக்கு தகுந்தால் போல் துறைமுகங்களும் நம் நாட்டில் உள்ளன. இந்தியாவில் இப்போதுள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை 38.

தமிழகத்தில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரியில் பெரிய துறைமுகங்கள் உள்ளன. இதுதவிர 187 சிறு துறைமுகங்களும், சரக்குகளை கையாளும் 43 துறைமுகங்களும், 23 மீன்பிடித் துறைமுகங்களும், கடலோரப் பகுதிகளில் 93 மீன்பிடி மையங்களும் இந்தியாவில் உள்ளன.

மேலும்

செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.


கலைஞர் மு.கருணாநிதி உரை:
வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

மு.வரதராசனார் உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்திஇல் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் , அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவை கூறலின்பின் வைக்கப்பட்டது. )

செய்யாமல் செய்த உதவிக்கு - தனக்கு முன் ஓர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு; வையகமும், வானகமும் ஆற்றல் அரிது - மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது. (கைம்மாறுகள் எல்லாம் காரணமுடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின. 'செய்யாமைச் செய்த உதவி' என்று பாடம் ஓதி 'மறித்து உதவமாட்டாமையுள்ள இடத்துச் செய்த உதவி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை:
முன்னோருதவி செய்யாதார்க்கு ஒருவன் செய்த வுதவிக்கு உலகமுஞ் சுவர்க்கமும் நிறையாற்றுத லரிது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு, முன்பு ஓர் உதவியும் செய்யாதிருக்க ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இவ்வுலகத்தினையும் வானுலகத்தினையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஈடாகா.

மேலும்

தொலைபேசியின் பாவனை

கையடக்க தொலைபேசியின் பாவனை 13.8 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இணையத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் 55 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 26.5 சதவீத அதிகரிப்பென குறிப்பிடப்படுகின்றது.இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப்பகுதியில் 2 கோடி 80 இலட்சம் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்

மேலும்...

மேலே