எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.காமம்

 பகலென்றும் புரியாது 
 இரவென்றும் தெரியாது அ
றநெறிதனை புறம் தள்ளும் 
 அரசனையும் அறிவிழக்கச் செய்யும் 
 அவர் தம் நிலை மறந்து 
 அங்கம் கண்டு ரசிக்கச் சொல்லும் 
 கொடுங்கோலரையும் கெஞ்சிடச் செய்யும் 
 முற்றும் துறந்த முனிவரையும் 
 சித்தம் கலங்கிடச் செய்யும் 
 கொற்றவனையும் கொல்லும் 
 கல்வி கற்றவனையும் வெல்லும் 
 வீரனையும் மண்டியிடச் செய்யும்  
 பண்பாளரையும் படுகுழியில் தள்ளும் 
 பகுத்தறிவாளரையும் பாதை மாறிடச் செய்யும் 
 தொட்டவரை கள்வனாக்கும் 
 விட்டவரை ஞானியாக்கும்         

மேலும்

சிறப்பு 23-Aug-2018 5:04 pm
காதல் 


மனம் என்னும் குளத்தில்
எறியப்பட்ட கல்
அதன் நினைவலைகள்
தளும்பிகொண்டே யிருக்கும்
கரை சேரும் வரைமேலும்

  
வைகறையின்  விடியல்  

கீழ் வானத்தின் சிவப்பு
சிட்டு குருவிகளின் சிற்றின்ப ராகம் 
அடுப்படியில் அம்மா 
விதவிதமான சமையல 
உடலெங்கும்வியர்வை வெள்ளம் 
உற்சாகத்துடன் உடன்பிறந்தோர்


கடிகாரம் பார்த்தபடி 
ஆளுக்கோர் திசையில் அள்ளித் தின்றபடி 
அவசரமாய் ஓடுகின்றனர் 
படுக்கையறையில் பயந்தபடி நான் 

எதிரே வந்தால் எமனாம் 
எள்ளிநகையாடி வார்த்தையால் எரிக்கின்றனர்
கதவு கட்டில் கடிகாரம் போல 
வீட்டிலிருக்கும் (முதிர் கன்னி) அக்ஹ்ரினை  நான்              

மேலும்

புது யுகம் காண பாரதி கண்ட புரட்சிப் பெண்ணாய் , பகுத்தறிவுப் பெண்ணாய் மாறு ! உற்றார் உறவினர் வேண்டாம் உன் உணர்ச்சிக்குரல் ஓங்கட்டும் பழமை ஒழியட்டும் புரட்சி வெடிக்கட்டும் 07-Feb-2018 4:52 am

சங்கொலி கேட்கவில்லை
சடங்குகள்  நடக்கவில்லை
உற்றார் உறவினர் அழவில்லை
உடன்பிறந்தார் யாரும்இல்லை
மண்குடம் உடைக்கவில்லை
மயானம் செல்லவில்லை
ஈமச் சடங்கு நடக்கவில்லை
தினந்தினம் எனக்கு நானே
வைக்கின்றேன் ( தீயை  )கொள்ளி 
என் இறுதியாத்திரைக்கு  

மேலும்


மேலே