எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கால தாமதமாக பார்த்துள்ளேன். வருந்துகிறேன். கால தாமதமாக பார்த்தமைக்கு., தாய்க்கு நிகரான தமிழின் சிறப்பை அழகாக கவிதைப் படைத்திருக்கிறீர்கள்.ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. சாவது நாமாக இருக்குமேத் தவிர தமிழ் என்றுமே சாவதில்லை. மெல்ல மெல்ல சாவது தமிழ் மொழி அல்ல. தமிழனின் நாகரிகமற்ற சொல்லும் செயலும்தான். உழைக்கத் தெரியாத சில தமிழன் கட்சி ஆரம்பித்து தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என்று அரசியல் ரீதியாக அவர்கள் தமிழை வர்ணிக்கிறார்கள் . ஆனால் கவிஞர்கள் தான் தமிழை வாழ வைக்க தமிழால் தானும் வாழ வழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறோமே அதுவே பரம சந்தோசம். கவிதைக்கு என் கோடி கோடி வணக்கங்கள். கவிதையைப் படைத்த தங்களுக்கும் (...)

மேலும்

பட்ஜெட் 2015-2016 சாமான்ய மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. மைய அரசின் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்-2015-206 -இல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் மீது எனது மற்றும் ஒட்டு மொத்த இந்தியரின் ஆழ்ந்த இரங்கலைத் தெருவித்துக் கொள்கிறேன். மைய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியக் கூடிய ஊழியர்களுக்கு வருமான வரியில் திருத்தம் செய்யாதது வேதனையாக இருக்கிறது. ஏனெனில் அரசு ஊழியர்கள் வாங்கக் கூடிய ஒரு மாத சம்பளம் நிதி ஆண்டின் இறுதியில் முழுவதுமாக அரசுக்கே செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தானா இந்த பி.ஜே.பி. அரசு மைய அரசாக அங்கம் வகிக்கிறது. சென் (...)

மேலும்

இனி நான் இணையதள எழுத்து பகுதிகளில் தொடர விரும்பவில்லை.ஏனெனில் எனது உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்து எழுதப்பட்ட கவிதைகள் மற்றும் கருத்துக்கள் எவ்வித உபயோகமும் இல்லாமல் போய்விட்டது. பைத்தியக்காரனைப் போல் எந்நேரமும் எழுத்து டாட் காமில் உணர்ச்சிகளின் விளிம்புகளை கவிதையாக படைத்தும் பார்த்துவிட்டேன் ஏக்கம் தான் மிச்சமாக துளிர்ந்துவிட்டது. எனக்குள் இருந்த நம்பிக்கை அறவே அறந்துவிட்டது. என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல் தான் இந்த இணையதள குழுமும் ஆக்கிவிட்டது. இதுவரையில் எனது படைப்புகளுக்கு கருத்து நல்கிய தோழர்களுக்கு மிக மிக நன்றி விடைபெறுகிறேன். என்னை மறந்து விடுங்கள்.........................சு. சங (...)

மேலும்

என் மீது அன்பு உள்ளம் கொண்டிட்ட இணைய தள தோழர்களுக்கு என் முடிவினை மாற்றிக் கொள்கின்றேன்.உங்களது நினைவுகள் உள்ளவரை இனி நான் எழுதி கொண்டே இருப்பேன். மன வேதனையை திசை திருப்பிய உங்கள் அனைவருக்கும் நன்றி ............நன்றி..............நன்றி.................தொடர்கிறேன். ............சு.சங்கு சுப்ரமணியன். 03-Mar-2015 5:50 am
உங்கள் வலிகளை உணர முடிகிறது...அங்கீகாரம் மட்டும்தான் உத்வேகத்தின் தூண்டுகோல்.....உங்களுக்கு கிடைக்காத ஒன்றை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலமாகவே பெற முடியும்...!! 02-Mar-2015 7:51 am
இன்றுதான் தங்கள் சுயவிவரப் பக்கம் பார்த்தேன் ........கிட்டத்தட்ட நூற்றியம்பது கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள இப்படிச்சொல்வது வருத்தம் தருகிறது ! // இதுவரையில் எனது படைப்புகளுக்கு கருத்து நல்கிய தோழர்களுக்கு மிக மிக நன்றி விடைபெறுகிறேன் // என்று நீங்களே குறிப்பிட்டு உள்ளீர்களே சார் ! உங்களைப் படிக்கும் அந்த நான்கு பேருக்காக எழுதலாமே .....! ஒரு கோடி என்றாலும் அது ஒன்றிலிருந்துதானே ஆரம்பிக்கிறது சார் ! 02-Mar-2015 3:54 am
இதே தளத்தில் தோழர் ஒருவர் எழுதிய கவிதை. (மன்னிக்கவும் ... பெயர் நினைவில் இல்லை) பிறந்ததும் கவனிப்பை யாசிக்கும் குழந்தை கவிதை. ---------------- எத்தனை அழகாக நம் மனவோட்டத்தை எடுத்துச் சொன்ன கவிதை இது..இன்றும் நினைவு கூற தோன்றுகிறதே. எழுதுங்கள் தோழா. 28-Feb-2015 4:35 pm

மேலே